Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல மில்லியன் ரூபா மோசடி செய்த நபர் தலைமறைவு! நீர்கொழும்பில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீர்கொழும்பு விமான விற்பனை முகவராகவும் வாகனங்களை விற்பனை மற்றும் வாடகைக்கு விடுவதிலும் ஈடுபட்ட வர்த்தகர் பல மில்லியன் ரூபா மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இவரிடம் சுமார் 35 பேர் வரை ஏமாந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இவர்கள் நீர்கொழும்பு, பேலியகொடை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர். சுமார் 150 மில்லியன் ரூபா முதல் 200 மில்லியன் ரூபா வரை மோசடி செய்துள்ளதாக அறியவருகின்றது.

விதானகங்கானகே பியங்கா கருணாரத்ன என்பவரே மோசடியில் ஈடுபட்டவராவார். இவர் தனது மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து குழுவாக இயங்கியே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர் நீர்கொழும்பு கொப்பராசந்தியில் தனது அலுவலகத்தை நடத்திவந்தார். வாகனங்களை அதன் பெறுமதியிலும் பார்க்க 5,6 இலட்சம் ரூபா குறைவாக விற்பனை செய்துள்ளதுடன் ஒரே வாகனத்தைக் காண்பித்து பலரிடம் முற்பணம் பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.

இவர் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தொழிலுக்காக ஆட்களை அனுப்புவதாகக் கூறியும் மோசடி செய்துள்ளார். ஆரம்பத்தில் ஒரு சிலரை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதுடன், பெரும் காணிகளை வாங்கி தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு மக்களிடம் நம்பிக்கையை வளர்த்துள்ளார்.

காலப்போக்கில் இவரிடம் பலர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். டாக்டர்கள், சட்டத்தரணிகள், பிரபல வர்த்தகர்கள் என 35 பேர் வரை பல இலட்சம் ரூபாவை இவரிடம் கொடுத்துவிட்டு அங்கலாய்க்கின்றனர்.

கந்தானையை வசிப்பிடமாகக் கொண்ட இவர் நீர்கொழும்பு, கந்தான பகுதியில் இரண்டு வாகனங்களை விட்டுவிட்டு காரியாலயத்தை மூடிவிட்டு தலைமைறைவாகியுள்ளார். இவரைக் கண்டுபிடிப்பதற்காகப் பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

நீர்கொழும்பில் இவ்வாறான கோடிக்கணக்கில் மோசடியில் ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுவதாகத் தெரியவருவதாகவும் குறைந்த விலைக்கு சொகுசு வாகனங்களை விலைக்கு வாங்கும் போது மக்கள் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

http://www.saritham.com/?p=36727

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.