Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தர் கூறிய நல்வழியைப் பேணத் தெரியாத சிங்கள பௌத்த பேரினவாதிகள் தமக்கு வசதியானதை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழர்களையும், முஸ்லிம்களையும் கருவறுக்கப் பார்க்கின்றனர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sri%20lankas.jpg

வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று விட்டு, மனச்சாட்சியே இல்லாமல், ஒருவரைக் கூட தாம் கொல்லவில்லை என்று கூறும் சிங்கள அரசு, இப்போது ஆடு,மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளது. கடந்தவாரம் சிலாபம் முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வேள்விக்குத் தயாராக இருந்த ஆடுகள், கோழிகளை எல்லாம் சிங்கள அரசின் அமைச்சர் மேர்வின் சில்வாவும் அவரது அடியாட்களும் வாகனங்களில் அள்ளிக் கொண்டு போயினர். மேர்வின் சில்வா யார் என்றோ அவரது குணவியல்பு என்னவென்றோ யாருக்கும் விபரிக்கத் தேவையில்லை. மகிந்த ராஜபக்சவின் அரசில் உள்ள அடிதடி அமைச்சர் என்ற சிறியதொரு விளக்கமே போதுமானது.

அவரது அடாவடித்தனங்களை அறியாத யாரும் இருக்க முடியாது.

அதிகாரத்தில் இருக்கின்ற திமிரில் அடிப்பேன், உதைப்பேன், கையை வெட்டுவேன் சுட்டுத் தள்ளுவேன் என்றெல்லாம் அவர் எச்சரிக்கை விடுப்பார். ஆனால் அதையல்லாம் அவரைத் தனது அமைச்சராக வைத்துள்ள மகிந்த ராஜபக்ச கண்டு கொள்ளவே மாட்டார். அப்படியான மேர்வின் சில்வா கோவில் வழிபாட்டுக்காக வைத்திருந்த ஆடு, மாடுகளை அப்படியே அள்ளிக் கொண்டு போயுள்ளார். அவரது இந்த வீரச்செயலுக்காக பாராட்டு விழா நடத்தப்படுகிறது. அவருக்கு ஆசி வேண்டி 1500 பூசைகள் பெளத்த விகாரைகளில் நடத்தப்படுகின்றன. புத்தரின் காலத்தில் வாழ்ந்த பிம்பிசார மன்னனுக்குப் பின்னர் மிருகவதைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது தானே என்று மார்தட்டுகிறார் மேர்வின் சில்வா. யாராவது மிருகங்களைப் பலியிட்டால் அவரது கையை வெட்டுவேன் என்கிறார்.

சிறிலங்காவில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான மிருகங்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. அதைத் தடுக்க அவர் முனையவில்லை. கோவிலில் வேள்வி நடப்பது தான் அவருக்கு மிருகவதையாகத் தெரிகிறது.

மிருகவதையை நாம் ஆதரிக்கவோ ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுடுவதை ஆதரிக்கவோ இல்லை.

ஆனால் அது தமிழர்களில் ஒரு பகுதியினரின் வழக்கமாக, மத நம்பிக்கையாக உள்ளது. மேர்வின் சில்வா மிருகவதைக்கு எதிராக வேள்வியைத் தடுத்தாரா அல்லது தமிழரின் சமய நிகழ்வைக் குழப்பும் நோக்கில் அவ்வாறு நடந்து கொண்டாரா என்பதே கேள்வியாக உள்ளது.

மிருகவதைக்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற ஒருவராக அவர் இருந்து விட்டுப் போகட்டும். அப்படிப்பட்டவர் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போது அதற்கெதிராக குரல் கொடுக்காமல் எதற்காக வாயை மூடிக் கொண்டிருந்தார்?

தமிழர்கள் கொல்லப்பட்டால் பரவாயில்லை. அது உயிர்களை வதைக்கின்ற செயலாகாது என்று கருதும் ஒருவரிடத்தில், மிருகங்கள் வதைக்கப்படுவதற்கு எதிரான உணர்வு தோன்றியிருக்க வாய்ப்பில்லை.

மேர்வின் சில்வா இப்போது கையில் எடுத்துள்ளது தமிழர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதத்தை.

இம்முறை தமிழர்கள் வேள்வி நடத்துவதைத் தடுத்த மேர்வின் சில்வா, கடந்த ஆண்டு ஹஜ் பெருநாளின் போது குர்பான் கொடுக்க வைத்திருந்த ஆடு, மாடுகளை அள்ளிக் கொண்டு போன கதை பலருக்கும் தெரியாது.

அந்த விவகாரம் அப்போது அவ்வளவு சர்ச்சையை உருவாக்கவில்லை. ஏனென்றால் குர்பான் கொடுக்கப்படும் நாளுக்கு முன்னதாகவே அந்தச் சம்பவம் நடந்திருந்தது. ஆனால் முன்னேஸ்வரத்தில் வேள்வி நடக்க சற்று முன்னர் தான் மேர்வின் சில்வாவின் அடாவடித்தனங்கள் அரங்கேறியுள்ளன.

வேள்விக்காக வைத்திருந்த மிருகங்களை காப்பாற்றியதற்காக பௌத்த பிக்குகள் அவரை வாயாரப் புகழ்கிறார்கள். மிருகங்களைக் காப்பாற்றியதற்காக மேர்வின் சில்வாவை வாயாரப் புகழும் இந்த பௌத்த பிக்குகள் தான், தமிழர்களைக் கொன்று போட்டு வருமாறு சிங்களப் படையினருக்கு ஆசி கூறி அனுப்பி வைத்தவர்கள். இவர்கள் மிருகங்களைக் காப்பாற்றியதற்காக மேர்வினைப் புகழவில்லை. தமிழரின் திருவிழாவை – நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வைத் தடுத்து விட்டார் என்பதற்காகவே இந்தக் குதூகலம்.

இம்முறை ஹஜ் பெருநாளின் போது முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதையும் மேர்வின் சில்வா தடுப்பார் என்ற அச்சம் முஸ்லிம்களிடம் தோன்றியுள்ளது. அவ்வாறு தடுத்தால் பெரும் போராட்டம் நடத்துவோம் என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இது ஒன்றும் தனியே மேர்வின் சில்வாவின் விளையாட்டு அல்ல. சிங்கள பௌத்த பேரினவாதிகள் தமிழ்-முஸ்லிம்களுக்கு எதிராக நகர்த்தி வரும் ஒருவகை இன ஒதுக்கல் நடவடிக்கையே இது.

நாட்டில் தமிழர்கள், முஸ்லிம்கள் என்று சிறுபான்மையினர் யாரும் கிடையாது- எல்லோரும் சிறிலங்கர்களே என்று அண்மையில் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

இந்தக்கருத்து சிங்கள பௌத்த தேசியத்துக்குள் தமிழ், முஸ்லிம்களையும் அடக்கி விட வேண்டும் என்ற அவரது எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. இது தான் சிங்களப் பேரினவாதத்தின் உச்சக்கட்ட திட்டம்.தமிழரின் ஆயுதப் போராட்டம் காரணமாக சிங்கள, பௌத்த பேரினவாதிகளால் அதைச் செய்ய முடியாதிருந்தது. இப்போது அவர்களுக்கு அதைச் செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் கிடைத்துள்ளன.

வடக்கு,கிழக்கிலுள்ள தமிழர்களின் கோவில்கள் அழிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் உருப்பெறுகின்றன.

புதிய புதிய சிங்கள குடியிருப்புக்கள், கிராமங்கள் உருவாகின்றன.

எதிர்காலத்தில் தமிழர்,முஸ்லிம்கள் என்று யாரும் இருக்கக் கூடாது என்றளவுக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிங்கள பௌத்த பேரினவாதம் ஊழிக் கூத்தாடுகின்றது.

கிறீஸ் பூதங்கள் கூட, தமிழர், முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாதம் பிரசவித்து விட்டது தான். கிறீஸ் பூதங்கள் தமிழரையும் முஸ்லிம்களையும் மட்டும் தான் பதம் பார்த்தன என்பதை மறந்து விடலாகாது. இதிலிருந்தே இது ஒரு நிறுவன மயப்பத்தப்பட்ட இனஅழிப்பு என்பதை உணர முடியும்.

அனுராதபுரவில் பௌத்த விகாரைக்கு அருகே இருந்ததால், முஸ்லிம்களின் நூற்றாண்டு பழைமை வாய்ந்த தர்காவை இடித்துத் தள்ளியதும் இதே சிங்கள, பௌத்தப் பேரினவாத சக்திகள் தான்.

பிம்பிசார மன்னன் ஆயிரக்கணக்கான மிருகங்களைப் பலியிடத் தயாராக இருந்த போது புத்தபெருமான் அங்கு சென்று அந்த மன்னனுக்கு மிருகங்களைப் பலியிடுவது பாவம் என்று கூறி அதனை தடுத்ததாக மேர்வின் சில்வா கதை கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட புத்தர் முஸ்லிம்களின் வழிபாட்டு மையத்தை இடித்து விட்டு புத்த விகாரையின் புனிதத்தை பேணுமாறு எங்காவது கூறியுள்ளாரா?

அல்லது, தமிழர்களின் இனத்தை, வரலாற்றை அழித்து விடுமாறு எப்போதாவது பாடம் புகட்டினாரா?

புத்தர் கூறிய நல்வழியைப் பேணத் தெரியாத சிங்கள பௌத்த பேரினவாதிகள் தமக்கு வசதியானதை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழர்களையும், முஸ்லிம்களையும் கருவறுக்கப் பார்க்கின்றனர்.

போரில் வென்ற சிறிலங்கா அரசு சமாதானத்தை வெல்லத் தவறி விட்டதாக, அந்த முயற்சியில் தோற்றுப் போனவரான சந்திரிகா குமாரதுங்க அண்மையில் கூறியிருந்தார்.

சிங்கள அரசு தமிழ், முஸ்லிம்களின் மனங்களை வெல்வதற்கு முனையவில்லை. அவர்களின் மனங்களைப் புண்படுத்துவதிலும், அடக்கி ஆள்வதிலும் தான் குறியாக இருக்கிறது. இங்கே நல்லிணக்க என்பதெல்லாம் வெறும் போலிக் கோசம் தான். எப்படி நாய் வாலை நிமிர்த்த முடியாதோ அதுபோலத் தான் சிங்கள பௌத்த பேரினவாதிகளையும் மாற்ற முடியாது.

தொல்காப்பியன்

http://www.eeladhesa...ndex.php?option

அதற்க்கு பலநாடுகள் துணை நிக்கின்றதே அதுதான் கவலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.