Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டமளிப்பில் காசுக்குக் கையேந்தும் பண்பாடு பாடை ஏறாதோ!

Featured Replies

பட்டமளிப்பில் காசுக்குக் கையேந்தும் பண்பாடு பாடை ஏறாதோ!

பங்களாதேஷை சேர்ந்த ஒரு பேராசிரியர் ஏழை மக்களுக்கு உதவும் பொருட்டு அவர்களுக்கு வங்கிகளில் கடன் பெற்றுக் கொடுக்க முயற்சித்தார். எனினும் கடன் வழங்குவதற்கு வங்கிகள் தயாராக இல்லை. இந்த விடயம் அந்த பேராசிரியரை கவலை கொள்ள வைத்தது. படித்து பேராசிரியராகப் பதவி பெற்ற போதிலும் ஏழை மக்களுக்கு உதவ முடியவில்லை என்ற கவலை அவரை வாட்ட, ஏழை மக்களுக்கு உதவக் கூடிய நிதி அமைப்பொன்றை தானே உருவாக்கினார்.

அந்த அமைப்பு ஏழை மக்களுக்கு நிபந்தனைகள் இன்றி நிதியுதவி வழங்கியது. அவரின் இந்த முயற்சி பங்களாதே´லுள்ள ஏழை மக்களின் பொருளாதார தேடுதலுக்கு பேருதவி புரிந்து வருகின்றது. அந்த பேராசிரியரின் பணியை உலகம் போற்றியதுடன் அது போன்ற திட்டங்களை, வறிய நாடுகள் அமுல்படுத்தவும் தலைப்பட்டன. இவை பற்றி இங்கு பிரஸ்தாபிப்பதற்கு காரணம் உண்டு. எங்கள் தமிழ் மண்ணில் யுத்தத்திற்கு பின்பான நிலைமை எங்ஙனம் உள்ளது? இளைஞர் சமூகத்தின் பயணிப்பு- அவர்களது பொறுப்புக்கள் எந்நிலையில் உள்ளன?

க.பொ.த. உயர் தரத்தில் மிகவும் ஊக்கமாக படித்து நிறைந்த போட்டிகளின் மத்தியில் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்று பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர்கள் - தமிழ் இனத்தின் - தமிழ் மக்களின் எதிர்கால நிலைமை குறித்து, அரசியல் குறித்து, எங்கள் அரசியல் தலைமைகள் குறித்து காத்திரமான சிந்தனைகளைக் கொண்டுள்ளனரா? அது பற்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடுகின்றனரா? அவ்வாறானதொரு கலந்துரையாடல் நடைபெறுவதற்கான களநிலைமையை விரிவுரையாளர்கள் ஏற்படுத்தியுள்ளனரா? இதுபற்றி இவ்விடத்தில் நாம் பொறுப்போடு சிந்திப்பது மிகவும் அவசியம்.

தமிழ் மக்களின் கல்விக் கலாபீடமாக இருக்கக்கூடிய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிந்தனை தமிழ்ப் புலத்தில் பொறுப்புள்ள; இனப்பற்றுள்ள; ஆரோக்கியமான இளம் சமூகத்தை உருவாக்கக்கூடிய வகையில் நெறிப்படுத்தப்பட்டுள்ளதா? பட்டமளிப்பில் கையேந்தி காசு பெற்று சாராயக் கடையில் அதைக் கொடுப்பதுதான் மரபு என்று நம் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றும் சிந்தித்துச் செயற்படுகின்ற போது, கசிப்புக் காய்ச்சுதலும் களவெடுத்தலும் எங்ஙனம் தீய செயலாகும்?

அன்புக்குரிய அறிஞர் பெரியோரே! எங்கள் இளம் சந்ததியை வழிப்படுத்த ஏதேனும் செய்யுங்கள்.அது தமிழினத்தை தலை நிமிரச் செய்யும். இதற்கு சிறியன சிந்தியா பெருந்தகையாளராக நாம் மாற வேண்டும். நடக்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.