Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசாங்கம் எனது நிபுணர் குழு அறிக்கைக்கு சாதகமான பதிலை தரும் என்று நீண்ட நெடும்காலம் காத்திருந்தேன்- பான் கி மூன்(வீடியோ இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ban-2-150x150.jpg

இலங்கை அரசின் நடவடிக்கையிலும் இலங்கையில் இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்களிலும் நான் பொறுமை இழந்துள்ளேன் என்று ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்தார்

நோர்வேயில் திங்கள் கிழமை ஆரம்பமான உலகில் அனைவருக்கும் 2030ஆம் ஆண்டுக்கிடையில் மின்சாரம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வந்தபோது விசேடமாக தெரிவு செய்யப்பட்ட சர்வதேச பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் போது இலங்கை தொடர்பாக நீண்ட நெடு நேரம் கருத்து தெரிவித்த ஜ.நா பொதுச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை விடயத்தில் நான் ஒரு விசேட நிபுணர் குழுவை அமைத்திருந்தேன்.

http://youtu.be/OxNNnO_FeFw

அது உங்களுக்கு நினைவிருக்கும். அவர்கள் அனைத்தையும் நன்கு கவனத்தில் எடுத்து பல பரிந்துரைகளை தெரிவித்திருந்தார்கள். எனது நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ள விடயங்கள் நிச்சயமாக இலங்கை மக்களால் அமுல்படுத்தபட்டிருக்க வேண்டும்.

நான், இலங்கை அரசாங்கம் எனது நிபுணர் குழு அறிக்கைக்கு சாதகமான பதிலை தரும் என்று நீண்ட நெடும்காலம் காத்திருந்தேன். அதுபோல் அவர்கள் எனது நிபுணர் குழு அறிக்கையை அமுல்படுத்துவார்கள் என்வும் காத்திருந்தேன்.

சில வாரங்களுக்கு முதல் நான் எனது நிபுணர் குழு அறிக்கையை மனித உரிமை கவுன்சிலுக்கும் ஜ.நாவின் மனித உரிமை செயலாளர் நாயகத்திற்கும் பரிசீலினைக்கு உட்படுத்துமாறு அனுப்பி வைத்திருந்தேன்.

இலங்கை நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை 02 வாரங்களுக்கு முதல் ஜ.நா கூட்டத்தொடருக்கு அவர் வந்த போது, நான் சந்தித்து கலந்துரையாடி இருந்தேன்.

இவ்விடயங்கள் தொடர்பாகவும் அவருடன் கலந்துரையாடி இருந்தேன். அவர் எனக்கு, இலங்கை தமிழ் மக்களையும் அவர்களின் மனித உரிமைகளையும் பாதுகாப்பதாகவும் அதற்கு இலங்கைக்குள் அனைத்து நடவடிக்கையையும் எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார் என ஜ.நாவின் செயலாளர் நாயகம் மிகவும் விரக்தியுடன் தெரிவித்திருந்தார்

http://mykathiravan....a-news/?p=16447

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவரை இந்த களத்தில் கூட யாருமே கணக்கெடுக்கிறதில்லை இப்போது <_<

இவரின் திருதாளம் புதிதல்ல. கூட்டம் முடிந்தவுடன், தண்ணியைக் குடிக்கும் விதத்திலும், வெளிக்கிட்டு ஓடும் விதத்திலும் லியாம் பொக்சை நினைத்து தன்ரை கடவுளையும் கும்பிடுகிறார் போலிருக்கு. பாவம் வெறும் பச்சைத்தண்ணியை விழுங்கேக்கெ கூட தொண்டைக்குள் விக்குது போலிருக்கு. முண்டி விழுங்க வேண்டியிருக்கு.

முள்ளி வாய்க்காளை விமானத்தில் சுற்றி பார்த்தவுடன் இப்படி ஒரு அழிவை நான் நிஜத்தில் பார்த்தது கிடையாது என்ற பாவி, தலதா மாளிகைக்குள் போய் வந்தவுடன் எல்லாவற்றையும் ராச பக்கசா பார்த்துக்கொள்ளுவார் என்று கூறியவர். ஆனால் ராசபக்சா காலைவாரிவிட வேறு வழியின்றி நிபுணர்குழுவை அமைத்தவர். நிபுணர் குழு அறிக்கைக்கும் ராச பக்கசா அசையவில்லை. ராசபக்கசா தான் அசைந்து கொடுப்பதற்காக இவரை தலதா மாளிகைக்கு அழைத்து போகவில்லை. இவர்தான் அசைந்து போகவேண்டும். தேர்தலிற்கு பிறகு இலங்கை விடயம் சூடு பிடிக்க தொடங்குகிறது. மெல்ல மெல்ல லியாம் பொக்சின் தர்ம சங்கடத்திற்குள் சறுக்கி விழுந்துகொண்டு போகிறார்.

நிபுணர் குழு அறிக்கையை இலங்கை மக்கள்தான் நடை முறைப்படுத்த வேண்டும் என்று தன்னையும் ராசபக்சாவையும் ஒரேகல்லிலேயே விழுந்து விடாமல் இருவரையும் தாங்கி பிடித்துவிட்டார். ராசபக்சா இவரை இந்தமுறையும் சந்தித்ததால் திரும்பவும் ராசபக்சா எல்லவற்றையும் பார்த்து கொள்வார் என்று கதையை முடிக்கிறார் (அதில் மட்டும் இலங்கை மக்களுக்கு பங்கில்லை). இவர் முன்னர் ராசா பக்கசா பார்த்து கொள்ளூவார் என்றார். அது நடைபெறாமல்த்தானே நிபுணர் குழு அமைத்தார். அதையும் ராச பக்சா பார்த்துகொள்வாராகில் இவர் ஏன் நிபுணர்குழு அமைத்தார்? , ரணிலுக்கு அந்த ஆவணம் ஐ.நா.வில் எங்கும் தொலைந்து போய்விடாது என்று கூறியவர், இந்தமுறையும் இவரை ராசபக்சா சந்தித்ததின்பின் கதையை மாற்றுவதிலிருந்து தெரிகிறது, இவர் சொல்லுமாப்போல் ராசபக்சா எதையாவது பார்த்துகொள்வாரோ இல்லையோ, இவரை மட்டும் நன்கு கவனித்து கொள்கிறார் என்பது.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.