Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடிய இலங்கை இராஜதந்திர உறவுகளை பலப்படுத்த சிறீலங்கா தூதுவர் சித்திராங்கனிக்கு உதவ விசேட குழு தயார்!

Featured Replies

Chitranganee_wakiswara_seithy150.jpg

[Tuesday, 2011-10-11 21:28:31]

கனடாவில் தற்போது எழுந்துள்ள தமிழர்களிற்கு ஆதரவான நிலைமை குறித்த விவகாரத்தில் ஆலோசனை வழங்கவும் கனடியத்தமிழர்களது எழுச்சிகளை கட்டுப்படுத்தவும் கனடாவிலுள்ள தூதுவருக்கு உதவவுவதற்காகா சிறப்பக் குழு ஒன்று கனடாவிற்கு விரைவில் செல்லவுள்ளதாக தெரியவருகிறது. கனடாவில் தற்போது கடமையிலிருக்கும் சிறீலங்காவிற்கான தூதுவர் சித்திராங்கனி வாகிஸ்வராவிற்கு உதவுவதற்கென அமைக்கப்பட்டுள்ள இக் குழுவில் கொழும்பிலுள்ள பெரும்பாண்மை இன ஊடகவியலாளர் ஒருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதேவேளை, மேற்படி ஊடகவியலாளரே கருணா விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்த போது முதலில் கருணாவைப் பேட்டி கண்டவர் என்பதோடு அவரே கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனையும் முதலில் பேட்டி கண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக் குழுவில் கனடாவில் வதிந்து தற்போது இலங்கையில் வதியும் கனடாவின் பிரசைகளான தமிழர்கள் சிலரும் இடம்பெற்றுள்ளதாகவும், இவர்கள் கனடாவில் இடம்பெற்ற சில சிறீலங்கா எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களில் நன்கு பரிச்சயமுள்ளவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இக்குழுவினால் எதிர்வரும்காலங்களில் கனடாவில் எழக்கூடிய எதிர்பலைகளை கட்டுப்படுத்தி கனடிய இலங்கை இராஜதந்திர உறவுகளை பலப்படுத்தமுடியுமென இலங்கை வெளிவிவகாரத்துறை நம்புவதாக அறியப்படகிறது.

இவர்களது விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, சிறீலங்கா இராஜதந்திர சேவையில் மூத்த அதிகாரியாக இருக்கும் பெண்மணி ஒருவர் தனிப்பட்ட விஜயமொன்றாக கனடா சென்று உண்மை நிலவரங்களைத் தெரிவிக்கவுள்ளதாகவும், இவரே கனடாவில் புலிகள் தடை செய்யப்பட்ட போது தூதுவராக இருந்தவர் என்பதால் தற்போது கனடாவிலுள்ள அரசுடன் மிகவும் பரிச்சயமானவர் என்பதும் தெரியவருகிறது .

http://www.seithy.com/breifNews.php?newsID=50710&category=TamilNews&language=tamil

Edited by மல்லையூரான்

அட கனடாவில் இருந்து ஊருக்கு ஒருமுறை போய்வரும் என்றால் பயமாக இருக்கிறதே :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.