Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய பிரதமர் ஹார்பர், ஜனாதிபதி மஹிந்தவை சந்திக்கத் திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய பிரதமர் ஹார்பர், ஜனாதிபதி மஹிந்தவை சந்திக்கத் திட்டம்

12 அக்டோபர் 2011

கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டு;ள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பேர்;த் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கை ஜனாதிபதியை, பிரதமர் ஹார்பர் சந்திக்க எதிர்பார்ப்பதாக கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் 2013ம் ஆண்டு இலங்கையின் ஹம்பாந்தொட்டையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை கனேடிய பிரதமர் பகிஷ்கரிக்க மாட்டார் என கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் விருத்தி ஏற்படாவிட்டால் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என கனேடிய பிரதமர் ஹார்பர் அறிவித்திருந்ததாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படாமை மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாமை போன்ற பிரச்சினைகள் நீடித்தால் இலங்கை மாநாட்டில் கலந்து கொள்வதில் நெருக்கடி நிலை ஏற்படும் என்றே பிரதமர் ஹார்பர் தெரிவித்ததாகவும், மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக அறிவிக்கவில்லை எனவும் புருஸ் லெவி குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை என்பதே கனடாவின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச்சாட்டுக்களுக்கு சர்வதேச ரீதியான விசாரணைகள் மூலம் தீர்வு காண்பது பொருத்தமாக அமையும் எனினும், அதனை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுயாதீன விசாரணைகள் அவசியமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்களுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்களை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா, ஈரான் போன்ற நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உறவுகள் காரணமாக பழைய நட்பு நாடுகளிடமிருந்து இலங்கை விலகிச் செல்லக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்த நாட்டுடன் உறவுகளைப் பேண வேண்டுமென்பது குறித்து அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை, யாருடன் நட்பு பாராட்ட வேண்டும் என்பதனை இலங்கையே தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்டை நாடான அமெரிக்காவுடன் மிக நெருக்கமான உறவுகளை பேணி வரும் கனடா, கியூபாவுடனும் உறவுகளைப் பேணி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/68532/language/ta-IN/article.aspx

அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து, மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் நேரில் பேசுவார் என்று நம்பப்படுகிறது.

பேர்த் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள கனேடியப் பிரதமர் இந்த விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபருடன் நேரில் கலந்துரையாடுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புவதாக சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் புரூஸ் லெவி தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்களில் கூறப்படுவது போல, 2013ம் ஆண்டில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டை கனேடியப் பிரதமர் புறக்கணிக்கமாட்டார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கனேடியப் பிரதமர் சிறிலங்காவில் நடைபெறும் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறவில்லை என்றும், போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பான விவகாரங்கள் மற்றும் அரசியல் நல்லிணக்கம் ஆகியவற்றில் முன்னேற்றம் எட்டப்படாதவிடத்து இந்த மாநாட்டில் கலந்து கொள்வது நெருக்கடியானது என்றே அவர் குறிப்பிட்டதாகவும் புரூஸ் லெவி மேலும் விளக்களித்துள்ளார்.

சிறிலங்காவில் இந்த மாநாடு நடப்பதற்கு இன்னமும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான அனைத்துலக விசாரணைகள் பயன்மிக்க தாக இருக்கக் கூடும் என்று கூறியுள்ள அவர், ஆனால் அதனை சிறிலங்காவே முடிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவின் எதிர்காலத்துக்கு இந்த விசாரணைகள் மிகவும் அவசியம் என்று தாம் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனா, ஈரான் போன்ற நாடுகளுடன் சிறிலங்காவின் உறவுகள் நெருக்கமடைந்து வரும் நிலையில் பழைய நண்பர்களிடம் இருந்து அது விலகிச் செல்வதை சுட்டிக்காட்டத் தேவையில்லை என்றும் கனேடியத் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாரை நண்பராக வைத்திருக்க வேண்டும் என்று முடிவுகளை எடுக்கின்ற எல்லா உரிமைளையும் முதிர்ச்சி பெற்ற நாடான சிறிலங்கா கொண்டிருக்கிறது என்று கூறியுள்ள கனேடியத் தூதுவர், ஆனால் ஏதாவது ஒன்று தான் என்ற விளையாட்டு இங்கு தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20111012104848

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.