Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புடன் தொடர்ந்து பேசி விரைவில் தீர்வைக் காணுங்கள்;

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுக்களின் மூலமும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாகவும், இனப்பிரச்சினைக்கு பொருத்த மான அரசியல் தீர்வு ஒன்று விரைவாக எட்டப்பட வேண்டும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மாத்தாய் இலங்கை அரசிடம் வலியுறுத் திக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்திக் கூறியுள்ள தாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப் புடன் தொடர்ந்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு தீர்வு ஒன்று எட் டப்பட வேண்டும் என்பதில் இந்தியா அக்கறையுடன் இருப் பதாகவும், ரஞ்சன் மாத்தாய் இலங்கை அரசிடம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்திய அரசின் உதவியுடன் மேற்கொள் ளப்பட்டு வரும் வீடமைப்புப் பணிகள் மந்தகதியில் இடம் பெறுவது குறித்து ரஞ்சன் மத்தாய் அதிருப்தி வெளியிட்டுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு 50,000 வீடு களை அமைத்துக் கொடுப்பதற் கான பணிகள் ஆரம்பித்து ஓர் ஆண்டுக்கு மேலாகியும், இது வரை 52 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னோடியாக 1000 வீடு களை அமைக்கும் திட்டத்தில் 600 வீடுகள் இன்னமும் கட்டி முடிக்கப்படாத நிலையில் இருப் பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் 200 வீடுகளை அமைப்பதற்கான காணிகள் இன்னமும் தெரிவு செய்யப்படவில்லை என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். பளைப் பகுதியில் கட்டிமுடிக் கப்பட்ட வீடுகளைச் சென்று பார்வையிட்டுள்ள ரஞ்சன் மாத்தாய், அந்த வீடுகளை பெறுவ தற்குத் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுடனும் கலந்துரையாடினார். அப்போது கட்டப் பட்ட வீடுகளில் சமையலறைப் புகைபோக்கிகள் அமைக்கப்படாத குறைபாட்டை பயனாளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை, வடக்கில் இந் தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் காங்கேசன்துறைத் துறைமுக புனரமைப்பு மற்றும் ரயில்வே பாதை புனரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டுள்ள அவர் அந்தத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து திருப்தி வெளியிட்டுள்ளார்.

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மாத்தாய், இது இரு நாடுகளின் மீனவர்களினதும் வாழ்வாதாரப் பிரச்சினை என் றும், இருநாடுகளின் மீனவர் அமைப்புகள் இணைந்து பேசி முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மீனவர்களை தமது கடற்படை தாக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை அரசு நிராகரித்த தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://184.107.230.170/News_More.php?id=71710601312840716

அரசியல் தீர்வை எட்டுவது தொடர்பான பேச்சில் காத்திரமான இணக்கம் ஒன்று எட்டப்படுவதற்கு முன்னதாக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தாம் ஒருபோதும் அங்கம் வகிக்கப்போவதில்லை என்று அரசிடம் ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. எனவே தெரிவுக்குழு யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக தீர்வு விடயத்தில் காத்திரமான முடிவுகளை எடுக்குமாறும் அது அரசிடம் வலியுறுத்தி உள்ளது.

முன்னதாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கான நோக்கம் பற்றிய கருத்துரையை (Terms of Reference) மாற்றியமைப்பதற்கு அரசு தலைமை இணங்குமானால் தெரிவுக்குழுவில் பங்குபற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாகப் பரிசீலிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்திருந்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த இணக்கம் எட்டப்பட்டிருந்தது. போர் முடிந்து விட்டது; சமாதானம் பிறந்துவிட்டது. நாட்டை அபிவிருத்தி செய்வது எப்படி என ஆலோசித்து உரிய சிபாரிசுகளைச் செய்வதற்கு இந்தக் தெரிவுக் குழுவை அமைப்பதாகவே நாடாளுமன்றப் பத்திரத்தில் அரசு முன்னர் குறிப்பிட்டிருந்தது. அதற்கு தமிழ்க் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் நல்லிணக்கத்துடன் தீர்வை எட்டுவது; அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது; அதற்கேற்ப அரசமைப்பை மாற்றுவது போன்ற விடயங்களை ஆராய்ந்து உரிய சிபாரிசுகளைச் செய்வதற்கு இந்த நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்படுவதாக அதன் கருத்துரை மாற்றப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி இருந்தது. அப்படி மாற்றப்பட்டால் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்பது குறித்துக் கட்சி சாதகமாகப் பரிசீலிக்கும் என்றும் அது தெரிவித்திருந்தது. இதனை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கேட்டபடி அது விரும்பியபடி நாடாளுமன்றத் தெரிவுக்குழு பற்றியதான கருத்துரையைத் தாம் மாற்றியமைத்திருப்பதாக அரசுத் தரப்பு அறிவித்திருக்கிறது. கடந்த வாரத்தில் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அழைத்துப் பேசிய அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் அரச பேச்சுக் குழுவின் செயலருமான சஜின்வாஸ் குணவர்த்தன இந்தத் தகவலைத் தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பு விரும்பியபடி நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் நோக்கம் பற்றிய கருத்துரை மாற்றப்பட்டிருப்பதால் அதில் அங்கம் வகிப்பதில் இனிமேல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பிரச்சினைகள் இருக்காது என்ற சாரப்பட சஜின் வாஸ் குணவர்த்தன கருத்துத் தெரிவித்துள்ளார். திட்டவட்டமாக இதனை மறுத்துள்ள கூட்டமைப்பு, தம்முடனான பேச்சுக்களில் அரசு ஏதாவது ஒரு காத்திரமான அடைவை எட்டிய பின்னரே தெரிவுக் குழு பற்றிக் கவனம் செலுத்த முடியும் என்பதை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டியுள்ளது. குதிரைக்கு முன்பாகக் கரட் கட்டுவது போன்று தெரிவுக் குழு விவகாரத்தை பேச்சுக்கான ஊக்கியாக அரசு பயன்படுத்துவது தவறு என்பதையும் கூட்டமைப்பு அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் பேச்சில் காத்திரமான எந்த முடிவோ தீர்வுக்கான வரையறையோ எட்டப்படாத வரையில் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சேர்ந்து கொள்ளும் என்று அரசு எதிர்பார்க்கக் கூடாது என்றும் அரசுக்குக் கூறப்பட்டுள்ளது என்று உதயனுக்கு அறிய வந்தது.

http://184.107.230.170/News_More.php?id=18503600412279877

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.