Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசின் தற்போதைய போக்குக் காரணமாக தமிழருக்கு இந்தியா மீதும் அவநம்பிக்கை ஏற்படலாம்; மாத்தாயிடம் கூட்டமைப்பினர் கருத்துரைப்பு

Featured Replies

மக்களுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாத நிலைக்கு அரசு எங்களைத் தள்ளிக்கொண்டு செல்கின்றது அரசு பேச்சுவார்த்தை என்று ஒருபுறம் கூறிக்கொண்டாலும் மறுபுறம் செய்கின்ற வேலைகள் தமிழ் மக்களுக்கு அச்சத்தையே ஏற்படுத்துகின்றது. அதுமட்டுமன்றி கூட்டமைப்பு மீதும் ஏன் இந்தியாவின் மீதும் கூட நம்பிக்கையீனம் ஏற்படும்.

இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலர் ரஞ்சன் மாத்தாயிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எடுத்துக் கூறப்பட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன்மாத்தாய்க்கும் இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு:

இலங்கை அரசு பேச்சுவார்த்தை என்று கூறிக்கொண்டு பிழையான செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றது. அரசு பேச்சுக்களில் எவ்வகை விருப்புடன் செயற்படுகின்றது என்ற கேள்வியும் எழுகின்றது.

பேச்சு மேசைக்கு வெளியில், அரசு தமிழர் பகுதிகளில் அவசர அவசரமாக காணிகளை மீள்பதிவு செய்கின்றது. இது இப்போதைக்கு தேவையற்றவிடயம்.

இந்தச் செயற்பாடு மக்களை குழப்புகின்றது. யுத்தத்தால் இடம் பெயர்ந்த மக்கள் இன்னும் நமது இடங்களில் மீளக்குடியமரவில்லை. இந்தியாவில் 2 லட்சம் பேர் வரையில் இருக்கின்றனர். அத்துடன் யுத்தத்தால் மக்களின் உறுதிகளும் பறிபோய்விட்டன. இவ்வாறானதொரு நிலையில் காணி மீள்பதிவு என்பது தேவையற்றவிடயம்.

இதற்கு மேலதிகமாக தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்களை பறிக்கும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டு வருகின்றது. முல்லைத்தீவில் தமிழர்களின் காணிகளை அரசு பறித்து சிங்கள கிராமங்களுடன் இணைத்து சிங்கள பிரதேச செயலர் பிரிவையும் உருவாக்கியுள்ளது.

இவற்றைவிட பல இடங்களில் மக்களை இன்னும் மீள் குடியமர்த்தவில்லை.சம்பூர் மற்றும் முள்ளிவாய்க்காலின் சில பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர இன்னும் அனுமதிக்கப்படவில்லை.

அரசு செயற்டும் முறையைப் பார்த்தால் அது இனவாதத்தோடு செயற்படுவது போன்றே எண்ணத் தோன்றுகின்றது. அரசு உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டால் மாத்திரமே பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

இதன் மூலம் மக்களுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாத நிலைக்கு அரசு எம்மை தள்ளிக் கொண்டு செல்கின்றது.

இது தொடருமானால் மக்களுக்கு பேச்சு மீது நம்பிக்கையீனம் ஏற்படும். அத்துடன் இந்தியாமீதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் மக்களுக்கு நம்பிக்கையீனம் ஏற்படும்.

எனவே பிரச்சினையை தீர்ப்பதுடன் அதற்கான உரிய முறையில் கௌரவமான தீர்வும் எட்டப்பட வேண்டும் என்றும் எம்மால் தெரிவிக்கப்பட்டது.

இவையனைத்தையும் செவிமடுத்த ரஞ்சன் மாத்தாய் தான் அரச தரப்பினருடன் இது தொடர்பாக எடுத்துரைப்பதாக தெரிவித்ததாக அவர் கூறினார்.

http://184.107.230.170/News_More.php?id=47195600112130775

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.