Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடபகுதி காணிப் பதிவு சர்ச்சை நீதிமன்றே தீர்மானிக்க வேண்டும்

Featured Replies

வடபகுதி காணிப் பதிவு சர்ச்சை நீதிமன்றே தீர்மானிக்க வேண்டும் நீதியரசர் ஸ்ரீபவன் கருத்து

வடக்கு,கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணிப் பதிவு நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் பட்சத்திலேயே அவ்விடயம் குறித்த உண்மைகளும் அதற்குரிய சட்ட அங்கீகாரம் உள்ளதா போன்ற விடயங்களும் வெளிவருமென உயர் நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்தார்.

அத்துடன் காணிகளை பதிவு செய்யுமாறு கோரும் அதிகாரம் அரச அதிகாரிகளுக்கு உள்ளதா என்பதனையும் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டுமெனவும் நீதியரசர் கே.ஸ்ரீபவன் சுட்டிக்காட்டினார்.

வடக்கு,கிழக்கிலுள்ள உள்ளூராட்சி சபை அதிகாரிகளுக்கும் உறுப்பினர்களுக்குமான

சட்ட அறிவூட்டல் கருத்தரங்கின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது அடிப்படை உரிமைகளும் சர்வதேச சட்டங்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகையிலேயே நீதியரசர் ஸ்ரீபவன் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

வடக்கு,கிழக்கிலுள்ள காணிகளை பதிவு செய்யுமாறு பிரதேச செயலகங்கள்,கிராம அலுவலர்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு அதற்குரிய விண்ணப்பப் படிவங்களும் விநியோகிக்கப்பட்டு பதிவு நடவடிக்கைகள் தொடர்வதாக அறிந்துள்ளேன்.

இவ் விடயம் தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள பலர் என்னை அணுகியும் தொலைபேசி மூலமாகவும் வினவிய தன் பின்னர் இவ்விடயம் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வினவியபோது அவர்கள் அதுகுறித்த சரியான பதிலை அளிக்கவில்லை.

காணிகளைப் பதிவு செய்வதற்கு சட்ட அங்கீகாரம் இருந்தால் அது சட்டத்தின் எத்தனையாம் சரத்தில் உள்ளது என்பதனை மேற்கோள்காட்டியே காணிகளை பதிவு செய்யுமாறு கோரும் அறிவித்தல்கள் வெளியிடப்பட வேண்டும். இந்நிலையில் காணிகளை குறித்த திகதிக்குள் பதிவு செய்யுமாறு கோருவது பிரச்சினைக் குரிய விடயமாகும். அதேவேளை காணிகளை பதிவு செய்யுமாறு சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருந்தால் அந்தச் சுற்றுநிருபம் எந்தச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது? அந்தச் சுற்று நிருபத்தை வெளியிடுவதற்குரிய அதிகாரத்தை குறித்த அதிகாரிக்கு வழங்கியது யார்? அதற்குரிய அதிகாரம் அவருக்கு உள்ளதா என்பவற்றினை நீதிமன்றமே ஆராய வேண்டும்.

அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமக்குரிய அதிகாரங்களை வேறு அதிகாரிகளுக்கு வழங்குவதற்கு சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளதா போன்ற விடயங்களும் நீதிமன்றத்தினாலேயே ஆராயப்பட வேண்டியதாகும். இதேவேளை குறித்த ஒரு காணி குறித்து சர்ச்சைகள் இருக்குமாயின் அக் காணிக்குரிய படத்தினை எல்லைகளுடன் வரைந்து காணிப் பதிவாளர் நாயகம், நில அளவைத்திணைக்களத் தலைமை அதிகாரி போன்றோர் அக்காணிக்குரியவர்கள் பதிவுகளென குறித்த திகதிக்குள் மேற்கொள்ளுமாறு கோரமுடியும்.

இந்நிலையில் குறித்த ஒரு பிராந்தியத்தினுள்ள காணிகளை பதிவு செய்யுமாறு கோருவதற்கு சட்ட அங்கீகாரம் உள்ளதா என்பதனை நீதிமன்றமே ஆராய வேண்டும்.இவ்வாறான நிலையில் எந்த ஒரு அதிகாரியும் சட்ட வரம்பிற்கு அப்பால் சென்று செயற்படுவாராயின் அது அடிப்படை மனித உரிமை மீறலாகும் எனத் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/all-news/jaffna/9245-2011-10-12-01-05-07.html

Edited by akootha

அநீதி மன்றத்தின் தீர்ப்பு எப்படியிருக்குமென்பது தெரியாதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.