Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சன் மாதாய் கொழும்பு செல்வதற்குள் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சன் மாதாய் கொழும்பு செல்வதற்குள் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள் -

12 அக்டோபர் 2011

கனிமொழி ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் - சிபிஐ

ரஞ்சன்மத்தாயின் இலங்கை பயணத்தின் முன்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து விட்டுதான் இலங்கை சென்றார். அவர் இலங்கைக்குச் சென்று விட்டு திரும்பி விட்டார். அவர் திரும்பிய பின்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு மீனவர்களை காக்க நடவடிக்கை எடுக்குமாறு விரிவான கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியிருக்கும் கடிதத்தின் சாரம் இதுதான் பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையாலும், சிங்கள மீனவர்களாலும் தொடர்ந்து தாக்கப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். தமிழக மீனவர்களுக்கு பாக் ஜலசந்தி பகுதிதான் வாழ்வாதாரமாக உள்ளது என்பதை nullங்கள் அறிவீர்கள். அங்கு தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமையை பாதுகாக்கவும், மீனவர்களை பாதுகாக்கவும் அரசு அதிக முன்னுரிமை கொடுக்கிறது. எனது தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்ற பிறகு இதுவரை 16 தடவை தமிழக மீனவர்கள், இலங்கையினரால் தாக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் உள்ளனர் என்பதை உங்களுக்குத் தெரிவித்து கொள்கிறேன். 7.6.2011 அன்று இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 4 ராமேஸ்வரம் மீனவர்கள், உங்களது கவனத்துக்கு என்மூலம் கொண்டு வரப்பட்ட பிறகு 17.6.2011 அன்று விடுவிக்கப்பட்டார்கள். அதுபோல மீண்டும் 23.6.2011 அன்று 5 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 23 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை வீரர்களால் கடத்திச் செல்லப்பட்டனர். இதுபற்றி நான் மீண்டும் உங்களுக்கு 21.6.2011 அன்று கடிதத்தின் மூலம் தெரிவித்தேன். என்றாலும் இலங்கை கடற்படையினராலும், சிங்கள மீனவர்களாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது, துன்புறுத்தப்படுவது நீnullடித்தப்படி உள்ளது. இத்தகைய தாக்குதலில் ஏராளமான மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன்களை, சிங்களர்கள் மிரட்டி திருடிச்சென்று விடுகிறார்கள். மேலும் தமிழக மீனவர்களின் படகுகள், வலைகள், திசை காட்டும் கருவிகள் போன்றவைகளை சேதப்படுத்தி நாசமாக்கி விடுகிறார்கள். இதனால் இந்திய மீனவர்கள் குறிப்பாக நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் அல்லது சிங்களர்களால் தாக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்ச உணர்வுடனே செல்கிறார்கள். இந்திய வெளியுறவு துறை செயலாளர் ரஞ்சன் மாதாய் கடந்த 8102011 அன்று என்னை சந்தித்துப்பேசினார். அப்போது அவரிடம் நான் தமிழக மீனவர்கள் கடலில் தாக்கப்படுவதை துன்புறுத்தப்படுவதை விளக்கமாக எடுத்துக் கூறினேன். இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால் அதே தினத்தன்று அதாவது 8102011 அன்று மாலையே, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மாதாய் கொழும்பு சென்று சேருவதற்குள் இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு, தமிழக மீனவர்களை விரட்டியுள்ளனர். இந்த சம்பவம் எல்லா தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியானது. தேசிய பிரச்சினை தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் இந்தியா உடனே தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவதற்கு இலங்கையிடம் இந்தியா கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை, இந்தியர்களுக்கு எதிரான தாக்குதலாக மத்திய அரசு கருதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்திய எல்லையில் பாகிஸ்தான், சீனா ராணுவம் அத்து மீறல் நடத்துவதை போல இலங்கை கடற்படையின் அத்துமீறல்களையும் இந்தியா பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்கள் கடலுக்குள் தாக்கப்படுவதை தமிழ்நாட்டின் பிரச்சினையாக கருதாமல், இதை ஒரு தேசியப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார். இக்கடிதத்தின் மூலம் அவர் ரஞ்சன் மத்தாயினுடனான தனது சந்திப்புக்கப்பால் இந்த விவகாரத்தhை எழுப்ப நினைக்கிறார்.

ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதம் குப்பைத் தொட்டிக்குச் சென்றிருக்கும் -ராமதாஸ்.

சிதம்பரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் பேசும் போது. நாங்கள் இனி தேசிய திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மட்டோம். தமிழகத்தின் பிரச்சனைகளில் தமிழர்களின் பிரச்சனைகளில் கடிதம் எழுதியே காலத்தை ஓட்டினார் கலைஞர்.இப்போது அதையே செய்கிறார் ஜெயலலிதா.

எனவே தமிழக அரசு கடுமையான நிலைப்பாடு எடுத்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். கூடங்குளம் அனுமின் நிலையத்தை மூட வேண்டும் என மீண்டும் அப்பகுதி மக்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். மாநில அரசு தலையிட்டு அனுமின் நிலைய பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்’’ என்று கூறினார்.

கனிமொழி ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.

கனிமொழி சிபிஐ சிறப்பு நீதிமனறத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமீன் மனுவுக்கு சிபிஐ எதிர்ப்புத் தெரிவிக்காது என்று சிபிஐ தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. இச்செயல் தங்களை வியப்பில் ஆழ்த்தியதாக உச்சநந்திமன்ற நீதிபதிகள் வியப்புத் தெரிவித்தனர். நீதிபதிகளின் இந்தக் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சிபிஐ கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் போது சிபிஐ எதிர்ப்புத் தெரிவிக்கும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இதனால் 17-ஆம் தேதி அன்று விசாரணைக்கு வரும் கனிமொழியின் ஜாமீன் மனு குறித்து எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது.

பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை இனி தனித்தே போட்டி- சொல்கிறார் தங்கபாலு.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியோடு எந்தக் கட்சியும் கூட்டணி வைக்கத் தயங்கிய நிலையில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி்த் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிருக்கிறது. இந்நிலையில் இன்று சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடையே பேசிய தங்கபாலு, ராஜீவ்காந்தி கொண்டு வந்த பஞ்சாயத்துராஜ் சட்டம் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். அதற்காக காங்கிரஸ் போராடும். மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு அமைச்சருக்குரிய அந்தஸ்து உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அதிகாரங்களை அதிகாரிகளே வைத்து இருக்கிறார்கள். அடிப்படை உரிமைகளை வழங்கவில்லை. மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோம். இனி தமிழ்நாட்டில் காங்கிரஸ் பஞ்சாயத்து முதல் பாராளுமன்ற வரை தனித்தே போட்டியிடும். பல ஆண்டுகளாக காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினார்கள். இப்போது அது நிறைவேறி இருக்கிறது.திருச்சி இடைத்தேர்தலில் கூட்டணி தர்மத்தை காப்பாற்றுவதற்காகவே, காங்கிரஸ் போட்டியிடவில்லை. மத்திய தேர்தல் ஆணையத்தைப் போல மாநில தேர்தல் கமிஷனும் தனி அமைப்பாக செயல்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக, சுதந்திரமாக நடைபெற வேண்டும். மாநில தேர்தல் ஆணையம் இதை செயல்படுத்தும் என்று நம்புகிறோம். நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/68563/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை இனி தனித்தே போட்டி- சொல்கிறார் தங்கபாலு.

முதலியார் டம்பம் வெளக்கெண்ணைக்கு கேடு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.