Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற தெரிவுக்குழு யோசனைகளை மீளப் பெறுவதற்கு அரசாங்கம் முடிபு

Featured Replies

பாராளுமன்ற தெரிவுக்குழு யோசனைகளை மீளப் பெறுவதற்கு அரசாங்கம் முடிபு

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைகளை மீளப்பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்குப் பதிலாக புதிய யோசனைகளை உள்ளடக்கவுள்ளதாகவும் அத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திப் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது, அரசியல் தீர்வுத்திட்டமொன்றை முன்வைத்தல் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதே இந்தப் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பிரதான பணிகளாக முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டது. இந் நிலையில் பாராளுமன்றில் முன்னர் சமர்ப்பித்த யோசனைகளை மீளப்பெற்று அதற்குப் பதிலாக புதிய யோசனைகளை உள்ளடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்புச் செய்திகள் மேலும் தெரிவித்தன.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=23811

  • தொடங்கியவர்

அரசியல் தீர்வு குறித்து இணக்கம் ஏற்படும்வரை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்காதென அறிவிக்கப்படுகிறது

அரசியல் தீர்வை எட்டுவது தொடர்பாக உறுதியான இணக்கம் ஒன்று எட்டப்படுவதற்கு முன்னதாக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்கப்போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசிடம் தெளிவுபடுத்தியுள்ளதெனச் செய்தி வெளியாகியுள்ளது.

தெரிவுக்குழு யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக தீர்வு விடயத்தில் உறுதியான முடிவுகளை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் நல்லிணக்கத்துடன் தீர்வை எட்டுவது; அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது; அதற்கேற்ப அரசமைப்பை மாற்றுவது போன்ற விடயங்களை ஆராய்ந்து உரிய சிபாரிசுகளைச் செய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்படவேண்டுமெனவும், அந்த நிலையில், அதில் அங்கம் வகிப்பது குறித்து சாதகமாகப் பரிசீலிக்கலாமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்தது.

ஆனால், பேச்சுக்களில் தீர்க்கமான முடிவொன்று எட்டப்பட்ட பின்னர்தான், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் கூட்டமைப்பு அங்கம் வகிக்குமெனக் கடந்த வாரம் இலங்கை அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெளிவுபடுத்தியதெனத் தெரிவிக்கப்படுகிறது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9611

அமெரிக்க, இந்திய தேர்தல்கள் முடியும் வரை பாராளுமன்ற தெரிவுக்குழு யோசனைகளை பின்போட்டு பார்க்கலாம என்று யோசிக்கிறார்கள் போலுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.