Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து பில்லியன் டொலர்களிற்காக மஹிந்தவிற்கு உதவுப்போகுதா இந்தியா?

Featured Replies

2018 பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியினை சிறிலங்காவில் நடத்த ஒத்துழைத்தால் அது இந்தியாவிற்கு ஐந்து பில்லியன் டொலர்கள் வரையான கட்டுமான முதலீட்டினைப்பெற்றுக்கொடுக்கும் என சிறிலங்கா பேரம் பேசுகின்றது..

கடந்த வாரம் பிரசாத் காரியவாசம் இதனைத்தெரிவித்துள்ளார். அதாவது மறுவளமாக பார்க்கப்போனால் இந்தியா சிறிலங்காவிற்கு 2018 விளையாட்டுப்போட்டி நடத்துவதனை பெற்றுத்தர உதவினால் ஐந்து பில்லியன் டொலர் கட்டுமானப்பணிகளை ஒப்படைப்போம் என்பதுதான்..

இந்த விடயத்தில் இந்திய வியாபார முதலைகள் ஐந்து பில்லியன் டொலர்களை எப்படி எப்பம் விடலாம் எனத்தான் நினைக்குமே தவிர தமிழர்கள் மீதான கரிசனைகளையோ அல்லது போர்க்குற்றவாளிகளை காப்பாற்றப்போகின்றோமா என்பதோ அல்ல..

ஏனென்றால் டில்லியில் 2010 இல் நடந்த பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப்போடியில் இந்திய வியாபார முதலைகள் தாராளமாக பணத்தினை எப்பம் விட்டன. இதனால் இந்தியாவின் மரியாதையே காற்றில் பறந்தது நினைவிருக்கலாம். டில்லி விளையாட்டுப்போட்டியில் சோனியாவின் மருமகன் உட்பட பல்வேறு வியாபாரிகள் கோடிக்கணக்கில் பணத்தினை சுருட்டினர்.

.

இப்போது 2018 இல் இன்னொரு சந்தர்ப்பம் வருகின்றது என்றால் அவர்கள் சும்மா இருப்பார்களா? அதுவும் ஊழலில் திழைத்து நிற்கும் மஹிந்த சகோதரர்களிடம் வியாபாரம் செய்வது எவ்வளவு இலகுவாக அவர்களுக்கு இருக்கும்..

ஆனால் சிறிலங்காவை கண்ணை மூடிக்கொண்டு காப்பாற்றவோ அல்லது சிறிலங்காவிற்கு பொது நலவாய நாடுகளின் விளையாட்டினை நடத்த ஆதரவு தெரிவிப்பதோ இந்தியாவிற்கு தற்போது சங்கடமனதொன்றாகவும் இருக்கலாம் காரணம் சிறிலங்காவிற்கு எதிரான மேற்குலகத்தின் அழுத்தம்,ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகள் என்பன ஆகும். இன்னொரு காரணமும் உள்ளது; இந்தியா ஒரு பெரிய நாடு அது கடந்த போட்டியினை சரியாக செய்யவில்லை என உலக அளவில் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஆகவே சிறிலங்காவிற்கு இந்த முறை அந்த சந்தர்ப்பத்தினைக்கொடுத்தால் அவர்கள் அதனை சிலவேளை சரியாகச்செய்தால் தமது மானம் காற்றில் பறக்கலாம். .

அல்லது 2018 இல் சிறிலங்கா பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியினை நடத்தினால் அது சிறிலங்காவிற்கு மேலும் செல்வாக்கினை அதிகரிக்கும் என்ற கவலையும் இருக்கலாம்..

எல்லாவற்றுக்கும் மேலாக சிறிலங்காவின் நிழலாக இருந்து பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியினை நடத்த இந்தியாவிற்கு சிறிலங்கா அனுமதி கொடுத்தால் இந்தியா சிறிலங்காவிற்காக பாடுபடும் எனலாம். அதாவது போரின்போது சிறிலங்காவின் நிழலாக இந்தியா இருந்தது போல.

.Robert%20wadera.jpg

Sonia son in Law's ventures

எப்படிப்பார்த்தாலும் இந்தியாவின் முதன்மையான தெரிவு ஐந்து பில்லியன் டொலர் ஒப்பந்தமாகவே இருக்கும். காரணம் இந்த விளையாட்டுப்போட்டி ஓபந்தங்களை பெறப்போவதில் முக்கியமானவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா என்பவரே.

ஈழநாதம்

Edited by உமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.