Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரச சார்பற்ற நிறுவனங்கள் கடும் கண்டனம்

Featured Replies

இலங்கையில் சிறிலங்கா அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 6 சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Interfaith International, Switzerland; International Movement Against All Forms of Discrimination and Racism – IMADR, Japan; International League for the Rights and Liberation of Peoples – LIDLIP, Switzerland; Liberation- United Kingdom; International Educational Development IED, USA; International Association of Democratic Lawyers – IADL, Switzerland ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் நத்தார் நாளில் புனித மரியாள் ஆலயத்தில் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை காப்பாளருமான ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட செய்தி எம்மை அதிர்ச்சியடைய வைத்தது. இந்தக் கொடூரப் படுகொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அந்த புனிதமான நிகழ்வில் பங்கேற்றிருந்த ஜோசப் பராராஜசிங்கத்தின் துணைவியாரும் துப்பாக்கிக் குண்டுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார். ஜோசப் பரராஜசிங்கத்தின் துணைவியார் சுகுணம் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாரிய அச்சுறுத்தல்கள் இருந்த போதும் அமைதிக்காகவும் நீதிக்காகவும் எதுவித அச்சமுன்றி போராடியவர் 71 வயது நிரம்பிய ஜோசப் பராஜசிங்கம். இலங்கை இனப்பிரச்சனைக்கு அமைதி வழித் தீர்வு காண்பதில் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு செயற்பட்டவர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் மனித உரிமை மீறல்களை ஆவணங்களோடு நாடாளுமன்ற அமர்வுகளில் அம்பலப்படுத்தியவர். இலங்கையின் கிழக்குப் பகுதியில் சிறிலங்கா அரச படைகளால் நடத்தப்பட்ட படுகொலைகளைக் கண்டு அவர் வாய்மூடி மவுனியாக இருக்கவில்லை. அந்தப் பகுதிதான் அவரது வாழ்விடம் ஆகும்.

தமிழ் மக்களுக்கு எதிராகவே சிறிலங்கா அரசாங்கத்தின் நீதித்துறையும் விசாரணைகளும் இருப்பதால் சிறிலங்கா அரசாங்கத்தின் வன்முறைகளை சர்வதேச மனித உரிமைகள் பேராயத்திற்கு கொண்டு வந்தவர் ஜோசப் பரராஜசிங்கம். பொதுநலவாய அமைப்பு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினரும் தெற்காசிய நாடுகள் அமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பிலும் பணியாற்றியவர் ஜோசப் பரராஜசிங்கம். வடக்கு கிழக்கில் சர்வதேசப் பிரதிநிதிகள் பயணம் மேற்கொள்கிறபோது அந்தப் பயணங்களில் பங்கேற்றவர் ஜோசப் பரராஜசிங்கம்.

அவரது சிறந்த ஆங்கிலப் புலமை மூலம் சர்வதேச சமூகத்தின் கண்களைத் திறக்கச் செய்தவர்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட புனித மரியாள் தேவாலயம், சிறிலங்கா இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ளது. சிறிலங்கா அரச படைகளின் சேர்ந்தியங்குகிற "அடையாளம் தெரியாத ஆயுததாரிகள்" எனப்படுவோர் கிழக்குப் பகுதின் பல இடங்களிலும் இயங்கி வருவது இலங்கை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 1.8ஆம் சரத்தை மீறுகிற செயலாகும்.

இந்த சரத்தின் படி வடக்கு கிழக்கில் உள்ள ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனத்தினராகிய நாம் இந்த விடயத்தை ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் கொண்டு செல்வோம்.

சிறிலங்கா அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் காட்டுமிராண்டித்தனமான அட்டூழியங்கள், தமிழ் மக்களுக்கு எதிரான நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள், சித்திரவதைகள் தொடர்பில் நாங்கள் கடும் வருத்தமடைகிறோம்.

மிகச் சிறந்த சட்டத்தரணியும் மனித உரிமைகள் பாதுகாப்பாளருமான குமார் பொன்னம்பலத்தை சிறிலங்கா அரச தலைவரின் பாதுகாப்புப் பிரிவின் உறுப்பினர்கள் 2000ஆம் ஆண்டு சனவரி 5ஆம் நாள் பகலில் சுட்டுக்கொன்றனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, ஊடகவியலாளர்கள் மயில்வாகனம் நிமலராஜன், ஐயாத்துரை நடேசன், தர்மரெட்ணம் சிவராம் ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரது படுகொலைகளும் ஒரே முறையில் நடத்தப்பட்டுள்ளன.

இந்தப் படுகொலை வழக்குகளில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு குற்றவாளி கூட சிறிலங்காவின் நீதித்துறை முன் நிறுத்தப்படவில்லை. படுகொலை செய்யப்பட்ட அனைவருமே மனித உரிமைப் பாதுகாவலர்கள்.

சர்வதே மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அனைத்து சர்வதேச அமைப்புகளும் ஜோசப் பராஜசிங்கம் படுகொலையைக் கண்டிக்க வேண்டும்; ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை குறித்து சுயாதீன ஆணைக் குழு விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுகோள் விடுக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.