Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சன் மத்தாயின் இராஜதந்திர வருகையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பும்

Featured Replies

ரஞ்சன் மத்தாயின் இராஜதந்திர வருகையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பும்

கடந்த வார இறுதி நாட்களில் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. அவற்றின் எதிரொலிகள் இந்த வாரம் முழுவதும் பேச்சிலும் எழுத்திலும் வந்து கொண்டே இருந்தன.

ஒன்று உள்ளூராட்சி சபைகளில் எஞ்சியிருந்த 23 சபைகளுக்கான மூன்றாவது கட்டத் தேர்தல்.

இரண்டாவது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரபலங்களிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையும் படுகொலை படுகாயங்கள் பட்டமை.

மூன்றாவது இவற்றின் மத்தியில் இந்தியாவின் புதிய வெளி விவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாயின் மூன்று நாள் இலங்கைக்கான ராஜதந்திரப் பயணம். இவை மூன்றும் நமது சூழலின் அரசியல் களத்தில் வைத்து அலசிப் பார்க்கப்பட வேண்டியவைகளாகும்.

உள்ளூராட்சி சபைகளில் எஞ்சியிருந்த 23 சபைகளுக்கான தேர்தல் கடந்த 8 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. ஜனநாயகம் என்று புனையப்பட்ட மகுடத்தின் கீழ் எவ்வாறு தேர்தல்கள் இடம்பெற்று வந்தன என்பதும் இன்றும் அதேபாதையில் தான் பயணிக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை.

பதவி, பணம், அதிகாரம், சாதிமதம் பிரதேசம் போன்றன வாக்குச் சேகரிப்பில் முக்கிய கூறுகளாகத் திகழ்கின்றன. இவற்றையும் விட பெரும் தேசியவாதம் குறுந்தேசியவாதம் என்பன அலை அலையாகக் கிளப்பிவிடப்படுகின்றன. மேலே குறிப்பிட்ட அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைக்கப்பட்ட நிலையில் மக்களின் புள்ளடி போடும் உரிமை அபகரிக்கப்பட்டு வெற்றி என்பதாகக் காட்டிக்கொண்டாடப்படுகிறது. இந்த வெற்றி கீழே உள்ளூராட்சி சபைகளில் தொடங்கி பாராளுமன்றம் வரை தகுந்த முதலீடாக வைப்புச் செய்யப்பட்டு பதவிக் காலத்தில் முதல் வட்டி மட்டுமன்றி அடுத்த தேர்தலுக்கான மூலதனமும் சேகரிக்கப்படுகிறது. இவை திரைக்குப் பின்னால் நடைபெறுபவைகளாகும். பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமன்றி ஒரே கட்சியில் விருப்பு வாக்குப் பெறுவதற்காக இலட்சங்கள் கோடிகளில் செலவிடுகிறார்கள். அவற்றைத் தமது பதவிக்காலத்தில் மீட்டுக் கொள்ளும் நம்பிக்கையிலேயேயாகும்.

வெற்றிபெறுவோர் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்பது கோரப்படும் ஒன்றாகும். ஆனால், 1991 ஆம் ஆண்டுக்குப் பின் அவ்வாறான சொத்து விபரம் வெளிப்படுத்தும் முறை நடைமுறையில் இல்லை என்பதைத் தேர்தல் ஆணையாளரே குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியதாகும்.

இத்தகைய இலட்சணத்திலேயே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மூன்றுகட்டங்களாக இடம்பெற்றன. மொத்தம் 322 சபைகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 271 சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 10 சபைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 சபைகளையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 5 சபைகளையும் ஆட்சி செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஆளும் கட்சியும் அதன் தலைவருமான ஜனாதிபதியும் மிகப் பெரும் மகிழ்ச்சியில் மிதக்கின்றனர். அடுத்த ஐந்து வருடங்களுக்கு மட்டுமன்றி அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பின்பு கூடத் தங்களை யாருமே எதுவும் செய்யமுடியாது என்ற இறுமாப்பில் உள்ளனர். அதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரிய வெற்றிக் கோட்டையாக இருந்து வந்த கண்டி மாநகரசபையைக் கைப்பற்றியமை ஆளும் கட்சி இறுமாப்பை இரட்டிப்பு மடங்காக்கியுள்ளது.

அதேவேளை தலையால் மண்கிண்டிப்பார்த்தும் கூட கொழும்பு மாநகர சபையை ஆட்சித்தரப்பால் வென்றெடுக்க முடியவில்லை. அதிலும் தனது பதவி வழியிலான எல்லையைத் தாண்டி வந்து மக்களுக்கு ஒருவகை அச்சுறுத்தல் தொனியில் பாதுகாப்புச் செயலர் விடுத்த வேண்டுகோளை கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட மக்கள் புறந்தள்ளி விட்டமை அரசு சார்பினருக்கு ஆழ்ந்த வருத்தமும் கசப்புமாகவே உள்ளது. இதன் மூலம் மாநகரசபை அதிகாரத்திற்கும் அரசிற்குமான முறுகல் நிலை பல தளங்களில் தொடரவே செய்யும். பழிவாங்கல்களுக்கு மக்கள் குறிப்பாக முஸ்லிம்களும் தமிழ் மக்களும் ஆளாக்கப்படுவார்களோ என்ற சந்தேகமும் அச்சமும் நிலவவே செய்கின்றன. எவ்வாறாயினும் தேர்தல்களில் இன, மொழி, மத அடிப்படையிலான குறுகிய நிலைப்பாடுகளே மேலோங்கி இருந்தன என்பதும் பேரினவாதமும் குறுந்தேசியவாதப் பிரசாரங்களும் மக்களின் மனங்களில் பதிய வைக்கப்பட்டு வாக்கு வங்கிகளாக மாற்றப்பட்டன என்பதும் மறுக்க முடியாது. இவை யாவும் தேர்தலுக்கு முன்பாகும்.

ஆனால், தேர்தலுக்குப் பின்பு பணம் சுருட்டும் வழிவகைகள் இன, மொழி, மதம் பாராது தாராளமாக முன்னெடுக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது. பௌத்த சிங்களத் தேசியம், தமிழ்த் தேசியம், முஸ்லிம் தேசியம் என்ற பெயர்களின் மறைவில் வர்த்தகம், வியாபாரம் மற்றும் குறுக்கு வழிகளில் சந்தர்ப்பவாத அரசியல் தொடரும் என்பதில் ஐயம் இருக்க முடியாது. அதற்கான சகல நிலை முயற்சிகளும் வேகமாகத் தொடரும் அதேவேளை வாக்களித்த மக்கள் கைவிடப்பட்டவர்களாக அன்றாடம் தமது துன்ப துயர வாழ்வைத் தொடர்வர். வாழ்க பாராளுமன்ற ஜனநாயகமும் அதன் கீழான தேர்தல்களும் என்று கூறுவதை விட வேறு எப்படித்தான் கூற முடியும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

இத்தகைய சூழலில் தான் தேர்தல் தினத்தன்று கொழும்பின் புறநகர்ப் பகுதியான முல்லேரியாவாவில் ஆளும் கட்சியின் இரண்டு அரசியல் பிரமுகர்கள் மத்தியில் அவர்களது மெய்ப் பாதுகாப்பாளர்கள் ஆயுதங்களுடன் நின்றிருக்க மோதல் சம்பவம் இடம்பெற்றது. துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகளில் இருந்து சரமாரியான வெடிகள் வெளிவந்து அந்த இடத்திலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் உயிர் பறிக்கப்பட்டது. அவருடன் இரு மெய்ப் பாதுகாப்பாளர் இருவரும் கொல்லப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தும் வருகின்றார். மகிந்த சிந்தனையின் கீழான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இணைந்து நின்ற இரண்டு பிரபலங்களுக்கிடையிலான பகையும் முறுகலுமே அன்று மோதலாக வெடித்துள்ளது.

இவர்கள் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வு பற்றி அவர்களது ஆதரவாளர்கள், மக்கள் நன்கு அறிந்திருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய பாராளுமன்ற அரசியலில் எந்தளவிற்கு ஆயுதக் கலாசாரமும் பாதாள உலகக் குண்டர்களிடம் அட்டகாசங்களும் இருந்து வருகின்றமைக்கு மேற்படி சம்பவம் அப்பட்டமான எடுத்துக்காட்டாகும். இவ்வாறு தான் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளைச் சுற்றி அடிதடிக் கூட்டங்கள் ஆயுதங்களுடன் இருந்து வருகின்றன. புலிகளை ஒழித்தோம். பயங்கரவாதிகளை அழித்தோம், பாதாள உலகத்தவரை துடைத்தெநறிந்தோம் என்றெல்லாம் மார் தட்டி நிற்கும் ஆளும் தரப்பின் அரசியல்வாதிகளே தங்களுக்குள் பயங்கரமான துப்பாக்கிகள் கொண்டு மோதி இருக்கிறார்கள். வேறு கட்சிகள் என்றும் வேறு பிரபலங்கள் என்றும் இவ்வாறான ஒரு மோதல் நடந்திருப்பின் இப்போது அரச தரப்பின் பிரசாரங்களும் பரப்புரைகளும் எங்கோ சென்றிருக்கும்.

இது அவ்வாறு இல்லாது ஒரே ஆளும் தரப்பிற்குள் அல்லவா இடம் பெற்றிருக்கிறது. அதாவது பாம்புகளுக்கும் கருடன்களுக்கும் ஏற்பட்ட பகையால் இவை நிகழவில்லை. பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்புகளே ஒன்றை ஒன்று கொத்திக் கொண்டதன் விளைவே.முல்லேரியாவால் மோதல் சம்பவமாகும். எனவே ஜனநாயகம் மனித உரிமை சட்டவாட்சி என்பவையாவும் போலித்தனமான வெறும் உச்சரிப்புகள் என்பதை நாட்டில் நடப்பவை தொடர்ந்து அம்பலமாக்கி வருகின்றன.

Edited by akootha

  • தொடங்கியவர்

மேற்படி சம்பவங்களுக்கு மத்தியிலேயே இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் மூன்று நாள் ராஜதந்திரப் பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார்.

அவரது பயணம் இலங்கைக்கான கன்னிப்பயணமாக இருப்பினும் சுமார் நாற்பது வருடகால வெளிவிவகாரம் பற்றிய அனுபவம் மிக்க ஒருவராவார். இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களில் அவரும் ஒருவர். அவர் கடுமை நிறைந்த ஒருவரா மென்மையானவரா என்பதை இலங்கை விவகாரத்தில் அவரது நடத்தை விரைவாகவே எடுத்துக்காட்டும்.

இவரைப் போன்ற முன்னைய வெளிவிவகாரச் செயலாளர்கள் பலர் இலங்கை விவகாரங்களையும் குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர் பிரச்சினைகளையும் கையாண்டு வந்திருக்கிறார்கள்.

அவ்வாறே இலங்கைக்கான இந்தியத் தூதுவர்களும் கையாண்டு வந்திருக்கிறார்கள். 1983 இன் இலங்கை கண்ட பேரினவாத வன்முறையுடன் இந்திய உயர் அதிகாரிகள் இலங்கைக்கு பயணித்திருக்கிறார்கள். ஜீ.பார்த்தசாரதி ரொமேஷ் பண்டாரி, ஜே.என்.டிக்சிங்,நாராயணன், சிவ்சங்கர் மேனன்,நிரூபமாராவ் என்ற வரிசையில் இப்போது வந்திருப்பவர்தான் ரஞ்சன் மத்தாய். அவர் இலங்கைக்கு வந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஜனாதிபதி உட்பட பலரையும் சந்தித்துள்ளார்.

வழமைபோன்று ஜனாதிபதி பேச்சில் சமாளிப்பும் செயலில் தனது பேரினவாத நிலைப்பாடும் என்பதை மாத்தாயிடமும் காட்டி நிற்கத்தவறியிருக்கமாட்டார். மாத்தாயிடம் ஜனாதிபதி அரசியல் தீர்வு பற்றிப்பேசியதாகத் தமிழ் ஊடகங்கள் ஊதிப்பெருக்கி எழுதின.ஆனால் ஆங்கில சிங்கள ஏடுகள் அவரது பயணத்தைப் பெரிதாகக் கொள்ளவில்லை. விரைவில் ஜனாதிபதி வடக்கிற்கான மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக தம்மிடம் கூறியதாக இந்திய வெளிவிவகார செயலாளர் கூறியுள்ளார்.

இத்தகைய மாகாணசபைத் தேர்தல் தான் அரசியல் தீர்வு என இந்தியா நம்புவதையே மாத்தாயின் கூற்றில் இருந்து காணமுடிகிறது.

இந்திய ராஜதந்திரிகளும் உயர் அதிகாரிகளும் இலங்கைக்கு அடிக்கடி வருவது சந்திக்கவேண்டியவர்களைச் சந்தித்துச் செல்வது தங்களது உள்ளார்ந்த நோக்கங்களுக்காகவே அன்றி இலங்கையினதோ அன்றி தமிழர்களிளதோ நலன்கள் கருதி அல்லவென்பது புரிந்துகொள்ளப்படவேண்டும். இன்றைய இலங்கைத் தமிழர்களின் அவலநிலை உலகறிந்தவையாகும். அவற்றிற்கு ஒன்றன்பின் ஒன்றாகத் தீர்வுகள் காணப்படுவது அவசியம். அதில் அதிமுக்கியமாக இருப்பது அரசியல் தீர்வாகும்.அதுபற்றி ஜனாதிபதியானவர் வாய்திறப்பதாக இல்லை.

அதேவேளை வடக்கு, கிழக்கில் ஜனாதிபதியும் அரசாங்கமும் தமது உள்ளார்ந்த திட்டங்களை மிகவும் நாசூக்காகவும் நச்சுத்தனமாகவும் அபிவிருத்தி என்ற பெயரில் நிறைவேற்றி வருகிறார்கள்.யுத்தத்தின் பேரில் வடக்கு, கிழக்கை அழித்து சின்னாபின்னப்படுத்தியதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாகும்.அதற்கு பாவவிமோசனம் செய்வது போன்றே ஐம்பதினாயிரம் வீட்டுத்திட்டம் என்று கூறிய இந்தியா அதனை வெறும் கண்துடைப்பாகவே செய்துள்ளது.

பளைப் பகுதியில் ஏ9 நெடுஞ்சாலையில் சில வீடுகளைக் கட்டி கண்காட்சி காட்டுகிறார்களே தவிர வன்னி நிலப்பரப்பில் அழிக்கப்பட்ட வீடுகள் மீளக்கட்டப்படுவதற்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை.இப்போது வடக்கில் 79 பாடசாலைகளைப் புனரமைத்துக் கட்டிக்கொடுக்க 160 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாகத் தனது வடபகுதிப் பயணத்தில் ரஞ்சன் மாத்தாய் வாக்குறுதி அளித்துள்ளார்.

அதேவேளை, தமது உள்நோக்கத்திட்டங்களில் மிகக் கவனமாக இருந்தும் வருவதில் இந்தியா முன்நிற்கின்றது.காங்கேசன்துறைமுகம் கட்டுவதில் மும்மரமாகி உள்ளது. அதேபோன்று திருகோணமலையில் சம்பூரில் அனல்மின்நிலையம் கட்டுவதற்கு ஒப்பந்தம் கடந்த மாதத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.இந்த அனல் மின் நிலையத்திற்கு 500 ஏக்கர் நிலமே தேவைப்படுகிறது.ஆனால், அதே அனல் மின்சார உற்பத்தி நிலையத்தின் சாட்டில் 8000 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலயத்தின் பெயரில் கைப்பற்றி வைத்திருக்கிறது.இதில் வளமான விவசாய,குடியிருப்பு நிலங்கள் உள்ளன.

அந்த நிலத்தின் சொத்தக்காரர்களான தமிழ், முஸ்லிம் மக்கள் யுத்தத்தின் பேரால் ஏற்கனவே அகதிகளாகி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ரஞ்சன் மாத்தாயிடம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் முறையிட்டும் உள்ளனர்.அந்த முறையீடு வெறும் காதில் ஊதிய சங்கேயாகும்.ஏனெனில் இந்தியாவால் இலங்கை அரசை தமது வழிக்குக் கொண்டு வருவது இலகுவான ஒன்றல்ல. அந்தளவிற்கு இந்தியக் காய்நகர்தலை மேவித்திசை திருப்பும் வகையில் இலங்கையின் ஜனாதிபதியும் அரசாங்கமும் வெகு சாமர்த்தியமாகவே நடந்து கொள்கிறார்கள்.இதனால் விழுங்கவும் முடியாது கக்கவும் முடியாது இந்தியத் தரப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ் மக்களை மேலே மேலே பார்த்து நம்பிக்கை வைக்குமாறு தமிழ்த் தலைமைகள் கூறி வருகின்றன.ஆனால், சாதாரண தமிழ் மக்களுக்கு இந்தியாவின் சுயரூபம் அன்றிலிருந்து இன்றுவரை தெளிவாகவே புரியக்கூடியதாகவே இருந்து வருகிறது.இந்தியாவிடமே சர்வதேசம் எனப்படும் அமெரிக்க மேற்குலகிடமே எதிர்பார்ப்பதற்கு பெரிதாக எதுவுமே இல்லை என்பது தமிழ் மக்களுக்கு விளங்கிய அளவுக்கு தமிழ்த் தலைமைகளுக்கு விளங்கப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் யாவற்றையும் விளங்கியே செய்து வருகிறார்கள்.

இந்தியா, அமெரிக்கா, மேற்குலகம் கடந்த முப்பது வருடங்களிலும் இறுதி யுத்த காலத்திலும் எவ்வாறு தமிழ் மக்களது அழிவுகளில் அவலங்களில் நடந்து கொண்டன என்பதை உண்மையும் மனச்சாட்சியும் கொண்ட எந்தவொரு தமிழர்களும் மறக்கமாட்டார்கள். அரசியல் அறணைத்தனம் கொண்ட ஆதிக்க அரசியல் தலைமைகளைவிட தமிழ் மக்கள் யதார்த்தத்தையும் உண்மைகளையும் புரிந்து கொள்ளப் பின் நிற்கக்கூடாது.

மூலம்: தினக்குரல் - ஐப்பசி 15, 2011

Edited by akootha

பிச்சைக்காரரிடம் பிச்சை கேட்கும் வலு சம்பந்தனுக்கும் ஆனந்தசங்கரிக்கும் நிறையவுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

நன்ற அகூதா பகிர்வுக்கு,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.