Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிணறுவெட்ட பூதம்வந்த கதையாக இந்தியாவின் வீடமைப்பு திட்டம்

Featured Replies

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இப்பொழுது மேலும் ஒரு புதிய பெயர் அறிகமாகியுள்ளது. ரஞ்சன் மாத்தாய். பதவி நிலையில் புதிதில்லை என்றாலும் ஆள் புதிது.

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மாத்தாய் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல சந்திப்புகளைச் செய்திருக்கிறார். மாத்தாயைச் சந்தித்ததில் சிலர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். சிலர் பெருமைப்பட்டிருக்கிறார்கள்.

சிலர் அதை ஒரு அங்கீகாரமாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள். மாத்தாயும் இந்தச் சந்திப்புகளைப் பற்றி எதிர்மறையாக எதுவும் சொல்லவில்லை. கடுமையான அறிவிப்புகளையோ மனத்தாங்கலுக்குரிய சங்கதிகளையோ அவர் வெளிப்படுத்தவுமில்லை. முன்னர் இருந்த இந்தியாவின் வெளியுறவுச் செயலர்களை விடவும் தான் சற்று வேறானவர் என்று காட்டுவதற்கு அவர் முயன்றிருக்கலாம். அல்லது அவசரப்படாமல் சற்று விட்டுப்பிடிக்கும் நோக்கோடு இந்த முதற் பயணத்தில் அவர் மென்மையாக நடந்திருக்கலாம். எப்படியோ இனி வருங்காலங்களில் மாத்தாய் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால், இவையெல்லாவற்றுக்கும் அப்பால் வேறொரு நிகழ்ச்சி நிரலில் சில காரியங்கள் நடந்தன. அதிலொன்று, இந்திய அரசின் உதவியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பை ரஞ்சன் மாத்தாய் நேரிற் சென்று பார்வையிட்டமை.

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் ஏ9 (கண்டி யாழ்ப்பாணம்) வீதியோரத்தில், இயக்கச்சிக்கு அண்மையில் உள்ள கரந்தாய் என்ற இடத்தில் இந்த வீட்டுத்திட்டம் அமைந்துள்ளது. இதில் ஐம்பது வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை இந்தியாவே தன்னுடைய நேரடிப் பொறுப்பில் கட்டியுள்ளது. வீடுகளை அமைப்பதற்கான காணிகளை வழங்கியமை மட்டுமே இலங்கை அரச அதிகாகளின் பொறுப்பு என்று சொல்லப்படுகிறது. ]

வீடுகளுக்கான பயனாளிகளைத் தெரிவு செய்வதும் இலங்கை அரச அதிகாரிகளின் பொறுப்பாகும். மற்றும்படி வீடுகளின் வடிவமைப்பு, அதை கட்டி முடிப்பது எல்லாமே இந்தியாவின் பொறுப்பு. இந்த வீடுகள் ஒவ்வொன்றும் இலங்கை ரூபாயில் 1.2 மில்லியன் பெறுமதியில் அமைக்கப்பட்டவை என்று சொல்லப்படுகிறது.

அதாவது பன்னிரண்டு லட்சம் ரூபாய் செலவில் ஒவ்வொரு வீடும் அமைக்கப்படுகிறது. இந்தச் செய்தியை மாத்தாய் வந்தபோதே தாம் அறியக்கூடியதாக இருந்ததாக இந்த நிகழ்வின்போது உடனிருந்த ஒரு அதிகாரி தெவிக்கிறார். ஆனால், இங்கே அதிசயம் ஆச்சயம் என்னவென்றால், இந்த வீடுகள் இப்போது அமைக்கப்பட்டிருப்பது சுமார் ஐந்து லட்சத்துக்கும் ஆறுலட்சத்துக்கும் இடைப்பட்ட இலங்கை ரூபாயின் பெறுமதியிலேயே. அப்படியென்றால் மீதிப்பணத்திற்கு என்ன நடந்தது? இடையில் யார் அதை வழிமாற்றியது? “ஊழல் செய்வதில் இந்தியர்கள் புகழ்பெற்றவர்கள், கூச்சமடையாதவர்கள்' என்று கூறப்படுவதுண்டு. இது உலகறிந்த விசயம் கூட. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவியிற்கூடவா இப்படிக் கொள்ளை? என்று நிலையை நேரிற் பார்த்த மாத்தாயே அதிர்ந்து போனாராம்.

இந்த நிகழ்வுக்கு யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் இருக்கும் மகாலிங்கம் என்பவரும் வந்திருந்தார். அவரிடம் இலங்கை அதிகாரிகளில் ஒருவர் “என்ன நடந்தது?' என்று விவரம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை என்று சொல்லப்படுகிறது. சரி, ஐந்தோ ஆறோலட்சம் ரூபாய்க்கு அமைக்கப்பட்ட வீடுகளாக இருந்தாற்கூடப் பரவாயில்லை. ஆனால், அவற்றை ஒழுங்காககத் தரமான முறையில் அமைத்திருக்கலாம். அப்படி அமைக்கப்படாததே இங்கே பிரச்சினை. அதிலும் அடிப்படைத் தகுதிகள் இல்லாதிருப்பதே இப்போது பிரச்சினை என்கின்றனர் இலங்கை அதிகாரிகளும் மக்களும். க்கியமாக சில வீடுகள் இப்போதே மக்கள் இன்னும் குடியேறுவதற்கு ன்பே பாதிப்படைந்துள்ளன. சில வீடுகள் வெடித்துள்ளன.

சில வீடுகளின் அத்திபாரக்கட்டுகளே உய றையில் அமைக்கப்படவில்லை என்பது வெளிப்படையாகவே தெகிறது. மலசலகூடங்கள் பாவிப்பதற்கு முன்னரே உடைந்துள்ளன. அவற்றை அயலவர்கள் ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த வீடுகள் ஒவ்வொன்றும் இரண்டு அறைகளும் ஒரு சிறிய உள்மண்டபம் கொண்டவை. சமையற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் புகைபோக்கி கிடையாது. இந்த நிலையில் தாம் எப்படிச் சமைப்பது? என்று கேட்கின்றனர் மக்கள். பிரதேசத்தின் அமைப்புக்கும் மக்களின் நிலைமைக்கும் இயல்புக்கும் ஏற்ற சமையற்கூடமாக அவை அமைக்கப்படவில்லை என்று இந்த வீடுகளுக்கு அண்மையில் வசிப்போர் கூறுகிறார்கள்.

இதுமட்டுமல்ல, வெட்டை வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த வீடுகளுக்கு இன்னும் தண்ணீர் வசதிகூடச் செய்யப்படவில்லை. கிணறுகளை அமைக்கும் நடவடிக்கைகள் எதுவும் நடைபெறுவதாகவும் இல்லை. “குடிநீர் விநியோகத்துக்கான வேறு ஏற்பாடுகள் கூட திட்டத்தில் இல்லை எனவும் வேண்டுமானால், அவர்கள் (மக்கள்) தங்களுக்குத் தேவையான நீரைச் சேமித்துக்கொள்வதற்கான கொள்கலன்களை வைத்திருக்கிறோம்' என்றும் கூறுகிறார் இந்த வீடுகளை அமைத்து வரும் ஒப்பந்தகாரர். மாத்தாய் இந்த வீடுகளைப் பார்த்ததும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அவர் முறைப்படி இந்த வீடுகளை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவே அந்த நிகழ்வில் கடந்த 09. 10. 2011 அன்று அங்கே கலந்து கொண்டிருந்தார்.

இதன்படி கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் திரு. த.முகுந்தன் உள்ளிட்ட பல அதிகாகளும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் மாத்தாய் இந்த வீடுகளை அரச அதிபரிடம் ஒப்படைத்தார். என்றபோதும் “மக்கள் குடியேறுவதற்கு முன்னர் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து விடவேணும்' என்று மாத்தாய் அறிவுறுத்தியிருக்கிறார். ஆனாலும் “இந்த அறிவிப்போ உத்தரவோ நடைறைப்படுத்தப்படும் என்று சொல்வதிற்கில்லை' என்கின்றனர் பிரதேச வாசிகள். காரணம், இந்த வீடுகளை அமைக்கும் காலத்திலிருந்தே தாம் அவதானித்து வருவதை வைத்துப் பார்த்தால், “போடுவது பிச்சை. அதாவது தருவது இலவசம். அதில் பிறகென்ன நிபந்தனைகளும் தரம் வேண்டும்' என்று கேட்டிருக்கிறார்கள் ஒப்பந்தகாரர்கள். இனியும் இதுதான் நடக்கப்போகிறது என்று சனங்கள் கூறுகின்றனர். “இதைக் கண்காணிப்பதற்கோ நடவடிக்கை எடுப்பதற்கோ தமக்குச் சொல்லப்படவில்லை. அதாவது அதிகாரமளிக்கப்படவில்லை' என்கின்றனர் இலங்கை அதிகாரிகள். மட்டுமல்ல, “இந்த விசயத்தில் தாம் எதையும் பேசவிரும்பவில்லை' என்றும் அவர்கள் சொல்கின்றனர்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் உண்டு. முதலில் இந்த ஒப்பந்தத்தை எடுத்தவர், ஒரு இந்தியர் என்றும் அவரிடமிருந்து பின்னர் பல கைகளுக்கு மாறி மாறி தற்போது இலங்கையர்களே வீடமைக்கும் வேலைகளைச் செய்கின்றனர் என்றும் தெவிக்கப்படுகிறது. இந்திய உதவித்திட்டம் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அதிகாரிகள் மட்டும் வாய்திறக்க மறுக்கிறார்கள் என்றில்லை.

அரசியல்வாதிகளும் இதைப்பற்றிப் பேசவில்லை. அதற்கு அவர்கள் தயாரும் இல்லை. ஆனால், இந்த முன்னோடித் திட்டத்திலேயே இத்தகைய குறைபாடுகள் என்றால் மொத்தமாக அமைக்கப்படவுள்ள ஐம்பதினாயிரம் வீடுகளின் கதியென்ன? என்ற கேள்வி எழுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் பல முன்னோடி வீடுகள் இவ்வாறு அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் நிலையும் ஏறக்குறைய இதுதான். இலங்கையில் அரசியற் பிரச்சினையில் இந்தியா ஒரு உருப்படியான தீர்வை வழங்க முயற்சிக்கவும் இல்லை. அதற்காக அது விசுவாசமாகச் செயற்படவும் இல்லை என்ற விமர்சனங்கள் பகிரங்கமானவை. இன்னும் மங்கலும் குழப்பம் கூடிய அணுகு முறைகளையே இலங்கை விவகாரத்தில் அது பின்பற்றி வருகிறது. இத்தகைய அணுகு முறையினால், இந்தியா முழு வெற்றியைப் பெற்றுள்ளது என்றில்லை.

இந்தியாவின் கைகளை மீறியே சென்று கொண்டிருக்கிறது நிலைமை. பிராந்திய ஆதிக்கத்தில் சீனா, தீர்மானகரமான சக்தியாகத் தனக்குரிய இடத்தைப் பெற்றுக் கொண்டு வருகிறது. ஆனால், இந்தியா இன்னும் நிதானத்துக்கே வரவில்லை. அதைப்போலவே “யுத்தத்தினாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பிலும் இந்தியா குறைபாட்டுடன்தான் நடந்து கொள்கிறது' என்ற சலிப்பு இந்தியாவைப் பற்றிய எதிர்மறைச் சித்திரத்தையே தமிழ் மக்களிடத்தில் மேலும் உருவாக்கும். “ஊரெச்சம் வீடு பட்டினி' என்றொரு வழக்கு மொழியொன்றுண்டு. அதைப்போல பேருக்கு இந்திய உதவியில் வீட்டுத்திட்டம். ஆனால், அது உரிய முறையில் மக்களுக்குக் கிட்டவில்லை என்பதே இன்றைய உண்மை நிலைவரம். இதைச் சீர்ப்படுத்துவது எப்படி? அல்லது அதைச் செய்வது யார்? போனாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய மக்களின் உதவிப் பொருட்கள் என்ற பேரில் வழங்கப்பட்ட உதவிகளில் பெறுமதி குறைந்த புடவைகள் இருந்தன. தரமற்ற பாத்திரங்கள் இருந்தன. அதையும் விட இலங்கையில் தயாரிக்கப்பட்ட மண்வெட்டிகளும் இந்திய உதவிப் பொருட்களின் பொதிகளில் இருந்தன. அதற்கு என்ன ஆதாரம் தெரியுமா? அந்த மண்வெட்டிகளில் உற்பத்தி செய்த நிறுவனத்தின் பெயர் சிங்களத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. அப்படியென்றால் உண்மையில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? என்று தெரியாத குழப்பத்தில் இருக்கிறார்கள் சனங்கள். அதிலும் பாதிக்கப்பட்ட சனங்கள். செய்யப்படும் உதவிகள், போடப்படும் பிச்சையாகவே மாறியுள்ளன.

http://akkinikkunchu.com/new/

சீனாவின் கதையோ கிணறு வெட்ட வெளிக்கிட்டு புதையல் எடுத்த கதை.

இந்தியாவின் கதையோ கிணறுவெட்ட பூதம்வந்த கதை.

இதில் மொத்தமாக ஏமாற்றப்படுவர்கள் தமிழர்கள்.

  • தொடங்கியவர்

உண்மைதான் ..அதேவேளை கிழக்கு கடற்கரை நிலங்களை பகுதியை அமெரிக்கனும், ரஸ்யனும் வாங்கிக் கொண்டு இருக்கிறானாம்...என்ன பிளானோ????

கிணறு வெட்ட போகிற இடத்தில் பூதத்தை ஒழித்து வைத்திருந்ததே இந்தியாதானே. வெளியே வந்த பூதத்தை சுகம் கேட்கதானே ரஞ்சன் மாத்தாய் வந்தவர். இதில் என்ன புதிசு ஒழிந்திருகிறது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.