Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதுவரை மஹிந்தவைச்சந்திக்காத ஹிலாரி.. கூட்டமைப்பினரைச் சந்திக்கவா போகிறா! அவசர அவசரமாக கட்டை போடுகிறது சிறிலங்கா அரசு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[saturday, 2011-10-22 11:23:46]

Hillary_clinton.2011_150.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கா சென்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்ரனைச் சந்தித்துப் பேசுவதைத் தடுக்க அரசு, இராஜதந்திர ரீதியிலான காய் நகர்த்தல்களை அவசர அவசரமாக மேற்கொண்டுள்ளது என கொழும்பிலுள்ள ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் அடுத்த வாரம் அமெரிக்காவிற்குச் செல்லவுள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்ரனையும் வெளியுறவுத்துறை அமைச்சின் உயரதிகாரிகளையும் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ளனர் எனச் செய்திகள் வெளிவந்திருந்தன.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பது தொடர்பில் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் இலங்கை அரசு ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது எனத் தெரியவருகிறது. இது தொடர்பான அதிருப்தியை அமெரிக்காவிலுள்ள இலங்கை ராஜதந்திரிகள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகளுக்கு கோடிகாட்டியிருக்கின்றனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக ஹிலாரி கிளிங்ரன் பதவியேற்ற பின் இலங்கை அரச தலைவரைக்கூடச் சந்திக்காத ஒரு சூழ்நிலையில் அரசியற்கட்சியொன்றை சந்திப்பது இராஜதந்திர நடைமுறைகளை (protocol) மீறும் செயல் என்று இலங்கை ராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தப் பின்னணியில் தமிழ்க் கூட்டமைப்பிற்கும், அமெரிக்க வெளியுறவுச் செயலருக்குமிடையில் நேரடி சந்திப்பு இடம்பெறுமா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அரச தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கை அரசினது இராஜதந்திர காய் நகர்த்தல்களை முறியடித்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தனது இலக்கை அடையுமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

http://www.seithy.com/breifNews.php?newsID=51156&category=TamilNews&language=tamil

கில்லாரியை பார்க்க முடியாவிட்டலும் சம்பந்தர் அமெரிக்கா வருவது தமிழரின் அரசியல் பாதையில் பெரிய மாற்றம். வெறும் அமெரிக்க தூதுவர்களே இவரை காலம் காலமாக பார்க்க மறுத்தவர்கள். ஏதும் முடிவுகள் இந்த சந்தர்ப்பத்தில் எடுக்க படாவிட்டாலும் இது இலங்கை அரசை சுயாதீனமாக தனது பாதையில் செல்லவிடாது நிர்ப்பந்திக்கும்.

எதோ தேவையான கவனங்களை எடுத்து அமெரிக்கா சென்று அவர்களை சந்தித்து தமிழ் மக்கள் இவரை தமது தலைவனாக இதுவரை காலுமும் வரித்திருந்தத்திற்கு பிரதியுபகாரம் காட்டுவராக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

" தடுக்க அரசு, இராஜதந்திர ரீதியிலான காய் நகர்த்தல்களை அவசர அவசரமாக மேற்கொண்டுள்ளது என கொழும்பிலுள்ள ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. "

சும்மா சிங்கள வெடியங்கள் எடுத்து போடுறாங்கள் என்றால் பயப்பட தேவை இல்லை. சவெந்திர சில்வாவுக்கு கதைவை திறக்கவே பயம்.

அமெரிக்காவில் உள்ள ஈழ ஆதரவு இயக்கங்களை சும்மா ஸ்ரீ லங்கா அரசியல் டப்பாக்கள் எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.