Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் விடையத்தில் இந்தியா தனது தார்மீக கடமையில் இருந்து விலகக் கூடாது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா அவர்களுடன் யேர்மனியில் ஈழத்தமிழர் பிரதிநிதிகள் சந்திப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[saturday, 2011-10-22 21:43:44]

D_rajahGermany221011_434_150.jpg

இவ்வார நடுப்பகுதியில் யேர்மனி தலைநகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா அவர்களுடன் யேர்மன் ஈழத்தமிழர் பிரதிநிதிகள் சந்தித்து அவர்களுடன் தமிழீழ மக்களின் நிலைகுறித்து ஆராயப்பட்டதுடன் , அவ் விடையத்தில் இந்தியாவின் நிலைகுறித்தும் உரையாடப்பட்டது .

கடந்த காலங்களாக ஈழத்தமிழர்கள் உரிமைக்காக இந்தியாவில் தேசிய ரீதியில் பல கவனயீர்ப்பு நிகழ்வுகளையும், அமைதி வழிப் போராட்டங்களையும் நாடத்தியது மட்டும் அல்ல,இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் அங்கு இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஏற்படவில்லை மற்றும் அவர்கள் மீது ஸ்ரீலங்கா அரசு இனப்படுகொலை மேற்கொண்டதை கண்டித்து இலங்கை பிரச்சினையில் சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் இந்தியா இன்றும் மவுனமாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டி , இலங்கை பிரச்சினை என்பது தமிழக மக்களின் பிரச்சினை மட்டுமல்லாது தேசிய அளவிலான பிரச்சினை ஆகும் என்பதை வலியுறுத்தி இந்தியா பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பியதும் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாஅவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .

குறிகிய நாட்கள் மட்டும் டி .ராஜா அவர்கள் தனது யேர்மனி பயணத்தை மேற்கொண்டாலும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் சந்திப்பதற்கு தனது நேரத்தை ஒதிக்கி தமிழீழ மக்களின் விடையத்தில் கவனம் காட்டியது பாராட்டுதலுக்குரியது . ஈழத்தமிழர்கள் சார்பாக வித்தியா ஜெயசங்கர் அவர்கள் மதிப்புக்குரிய டி.ராஜா அவர்களுக்கு மலர் வழங்கி நன்றி தெரிவித்ததுடன் தொடர்ந்து சர்வதேச மனித உரிமை அமைப்பின் பொறுப்பாளர் திரு விராஜ் மென்டிஸ் அவர்கள் டி .ராஜாவுடன் நேர்காணலை மேற்கொண்டார்.

நன்றி

தகவல் ஈழத்தமிழர் மக்கள் அவை

D_rajahGermany221011_434_003.jpg

D_rajahGermany221011_002.jpg

D_rajahGermany221011_001.jpg

http://www.seithy.co...&language=tamil

உண்மையில் டி.ராஜா எமக்காக குரல் கொடுத்துக்கொண்டு டெல்லியில் இருப்பவர். இவரை இவ்வாறு சந்தித்தமை ஆரோக்கியமான பரப்புரை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர் மீதான இந்தியாவின் தார்மீகக்கடமை என்ன என்பது விளங்காத புதிர். சுதந்திரத்தின் பின் இந்திய அரசு தமிழர்களுக்குச்செய்தது என்ன என்பது சொல்லித் தெரியத்தேவை இல்லை. தமிழர்களைத்தங்கள் தேவைக்கேற்பப்பாவித்து தமிழர்களைக்கொன்ற குவித்தது தான். இது தான் தார்மீகக்கடமை என்று நினைக்கத்தோன்றுகின்றது, இப்படியான தார்மீகக்கடமை தேவையில்லை. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். என்பது ஒளவையின் பொன்மொழி. பின்பற்றுங்கள். சிலவேளை ராஜாவிற்கு இன்னும் இந்திய மத்திய அரசின் கொள்கை விளங்கவில்லைப்போலும். ராஜா தமிழர்களில் கருணை இருந்தால் இப்படி எல்லாம் பேசக்கூடாது. பதிலாக எங்கள் நியாயமான கேள்விகளுக்கு இந்தியா எப்படிப் பதிலளித்துள்ளது. தமிழ்நாட்டை ஒரு இந்தியாவின் மாநிலமாக நினைத்து எங்கள் நீதியான கேள்விகளுக்குச் செவிசாய்த்துள்ளதா? என்று எண்ணிப்பார்க்கவேண்டும். மீண்டும் அந்திய மதிதிய அரசிடம் ஈழத்தமிழர்கள் மண்டியிட்டால் இதைப்போல் ஒரு கேவலம் வேறு ஒன்றும் கிடையாது. குனியக்குனிய குட்டுறவனும் மடையன் குட்டகுட்டக் குனியிறவனும் மடையன். தமிழக் மீண்டும் மடையன் ஆகக்கூடாது. இனியும் தமிழக் இந்திய மத்திய அரசிடம் கேட்க ஒன்றும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.