Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடாபியின் மகனுக்கு மகிந்த ராஜபக்ச எழுதியுள்ள இரங்கல் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MR-Gaddafi.jpg

[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 07:42 GMT ] [ நித்தியபாரதி ]

சிறிலங்கா அதிபர் ராஜபக்ச மற்றும் அவருடைய குடும்பத்தினர், கேணல் கடாபியின் மறைவு தொடர்பான தமது இரங்கல் செய்தியையும், தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவரது மகனான கன்னிபல் கடாபிக்கு தெரிவித்துள்ளனர்.

ஒக்ரோபர் 21,2011 அன்று மிஸ்றற்றாவின் புறநகர்ப் பகுதியிலுள்ள மசூதி ஒன்றின் அருகில் உள்ள மரக்கறிச் சந்தையின் அறையொன்றுக்குள் இருந்த மெத்தை மீது லிபிய நாட்டின் பலம்மிக்க ஆட்சியாளரான முகமர் கடாபியின் இறந்த உடல் வைக்கப்பட்டிருந்தது.

கடாபி கொல்லப்பட்டமை தொடர்பாக பல்வேறு குழப்பகரமான சூழல் நிலவுகின்ற போதிலும் கூட, லிபியத் தலைவர்கள் தமது நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதிலும், ஜனநாயக ஆட்சியை இங்கு மேற்கொள்ள வேண்டும் என்பதில் பல்வேறு பாரிய அழுத்தங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் கேணல் கடாபி கொல்லப்பட்டது தொடர்பாக சிறிலங்கா அதிபர் ராஜபக்சவால் கன்னிபல்லுக்கு எழுதப்பட்ட இரங்கல் கடிதத்தின் மூலப் பிரதி வருமாறு:

அன்பிற்குரிய மகன் கன்னிபல்,

தயவுடன் எமது அனுதாபங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களது அப்பாவிற்கு என்ன நடந்ததென்பது தொடர்பாக முற்றிலும் நாம் மிகவும் குழப்பமடைந்துள்ளோம்.

சிறிலங்காவில் இது போன்ற சம்பவங்கள் பல தடவைகள் இடம்பெற்றுள்ளதை நாம் பார்த்துள்ளோம். கடந்த வாரம் கூட, எனக்கு நெருக்கமானவர்கள், மற்றும் சில மக்கள் இங்கே கொல்லப்பட்டுள்ளனர்.

எமது நாட்டிலுள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என எல்லா வகையான மக்களையும் பாதுகாக்க முயற்சிப்பதுடன், அவர்களுக்கு நல்லவற்றைச் செய்ய முயற்சிக்கும் போது இவ்வாறான சம்பவங்களை நாம் ஒவ்வொருநாளும் சந்திக்கின்றோம்.

இவ்வாறான நன்றி கெட்ட விதத்தில் எமது நாட்டில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் சம்பவங்களுக்கு மத்தியில் இந்நாட்டைக் கட்டுப்படுத்தி ஆட்சி செய்வதற்காக நாம் மிகப் பிரயத்தனப்படுகின்றோம். எங்களை விளங்கிக் கொள்ளாதவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அன்பிற்குரிய கன்னிபல், நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களது அப்பா பல மில்லியன் கணக்கானவர்களுக்கு கதாநாயகராகவும், மாவீரராகவும் இருந்துள்ளார்.

உங்களது அப்பா அவருடைய நண்பர்களால் எப்போதும் அன்புடனும், நேசிப்புடனும், நன்றியுணர்வுடனும் எப்போதும் நினைவு கூரப்படுவார்.

உங்களது நேசிப்பிற்குரிய தந்தையாரின் இறப்பை நினைவு கூர்ந்து அவருக்கு பிரித் ஓதும் நிகழ்வு நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நுகேகொடவில் உள்ள கங்காராம விகாரையில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. 'அவர் nibbana அடைவார்' என பௌத்தர்களாகிய நாம் சொல்கின்றோம்.

மகனே கன்னிபல், உங்களுக்கு ஓய்வு எடுப்பதற்கு ஒரு இடம் தேவைப்படுமானால் தயவு செய்து கொழும்பிற்கு வரவும். நாங்கள் உங்களுக்கு ஒரு அறையைத் தயாராக வைத்துள்ளோம். உங்களது கவலைகளை மறப்பதற்கான பல்வேறு களியாட்ட நிகழ்வுகளை நாம் இங்கு கொண்டிருக்கின்றோம்.

உங்களது அப்பா தனது குடும்பத்தவர்களை எவ்வாறு நேசித்தார் என்பது எங்களுக்குத் தெரியும். உங்களது தாயார், சகோதரர்கள், சகோதரிகளுக்கும் தயவுசெய்து எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளவும்.

அவருடைய செவிலிப் பெண்களைப் பராமரிப்பதையும் மறக்க வேண்டாம். உங்களின் தந்தையார் பின்பற்றிய சிலவற்றை தொடர்ந்தும் செய்ய வேண்டிய கடப்பாட்டை நீங்கள் கொண்டுள்ளீர்கள்.

இவ்வாறான ஒரு கடினமான சூழலில் உங்களையும் உங்களது குடும்பத்தவர்களையும் கடவுள் காத்தருள்வார்.

எந்தவழியில் நீங்கள் இது தொடர்பாகப் பார்த்தாலும் கூட, பிரபாகரன் மற்றும் பின்லேடன் போன்றவர்களின் மரணத்தைப் போன்று சிலிர்க்க வைக்கும் சம்பவமல்ல.

தங்களின் ஏனைய நேசிப்பிற்குரிய குடும்பத்தவர்களான,

மாமா மகி, அன்ரி சிராந்தி, மல்லிலா ( தம்பிகள்)

செய்தி வழிமூலம்: Sri Lanka Guardian

http://www.puthinapp...?20111023104921

பல மகன்கள் இருந்தாலும் இவருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த மகன் அல்ஜீரியாவில் உள்ளார். இவர்தான் லிபியாவின் கடல்சார் வர்த்தகதுறைகளை கவனித்துவந்திருக்கிறார். இவருடன் சிங்களம் வர்த்தக தொடர்புகளை பேணி வந்துள்ளது போல உள்ளது.

Hannibal, 33 or 34 : Head of Libya’s General National Maritime Transport Company, Hannibal was embroiled in high-profile domestic disputes in 2005 and 2008. The latter, after he was arrested in Switzerland for beating his servants, led to Libya’s boycott of Swiss goods. He fled to Algeria in August.

2009 ஆம் ஆண்டடில் கடாபி கொடுத்த 500 மில்லியன்கள் ( இது ஒரு பாரிய உதவியே) கடனையும் சிங்களம் திருப்பி கொடுக்காமல் விட எண்ணியுள்ளது போல உள்ளது.

A word needs to be said about the death of Muammar Gaddafi the long term dictator of Libya. If not for Gaddafi, Sri Lanka may have been in serious financial trouble just as the war entered its most crucial phase between March-May 2009. When the western powers were delaying the IMF standby facility to Sri Lanka, it was Gaddafi who came to Sri Lanka’s aid, by pledging to give Sri Lanka a $500 million loan. If not for this pledge, the financial system in Sri Lanka may have collapsed because of the fear that the country may not be able to meet its commitments. What finally defeated the western attempt to politicize the IMF was the strong support extended by India, which insisted that Sri Lanka be given her due. The $500 million loan was never taken from Libya, but the ready pledge of assistance averted a financial crisis in Sri Lanka which would have brought the war to a grinding halt and all those who have benefited from the end of the war should mourn the passing of a friend.

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=37464

வெகு விரைவில் உனக்கும் தகப்பனின் இறப்புக்கு பலர் இரங்கல் கடிதம் எழுதுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மகன் கன்னியல்,

உங்கள் அப்பாவிடம் நிரம்பக் கடன் வாங்கியுள்ளேன்! இது உங்கள் அப்பாவுடையதா. அல்லது லிபிய மக்களுடையதா என்பது அந்த அல்லாவுக்கே வெளிச்சம்! என்ன செய்வது? அவர் தான் போய் விட்டார்! இந்தக் கடன் ஒரு அன்பளிப்பு என்றே, எங்கள் அரசு கருதுகின்றது! நாங்கள் எவருக்கும், வாங்கின கடனைத் திருப்பிக் கொடுத்துப் பழக்கம் இல்லை. கடன் தந்தவர்களே களைத்துப் போய், அதனை விலக்கி விடுவதே, எமது தேச வழமை!

வேறு என்ன? கோத்தா சிரித்தபடி, வாசலில் நிற்கிறான் போல் உள்ளது! மீண்டும் எழுதுவேன், மேலும் கடன் தருவீர்களானால்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகன் கன்னியல்,

உங்கள் அப்பாவிடம் நிரம்பக் கடன் வாங்கியுள்ளேன்! இது உங்கள் அப்பாவுடையதா. அல்லது லிபிய மக்களுடையதா என்பது அந்த அல்லாவுக்கே வெளிச்சம்! என்ன செய்வது? அவர் தான் போய் விட்டார்! இந்தக் கடன் ஒரு அன்பளிப்பு என்றே, எங்கள் அரசு கருதுகின்றது! நாங்கள் எவருக்கும், வாங்கின கடனைத் திருப்பிக் கொடுத்துப் பழக்கம் இல்லை. கடன் தந்தவர்களே களைத்துப் போய், அதனை விலக்கி விடுவதே, எமது தேச வழமை!

வேறு என்ன? கோத்தா சிரித்தபடி, வாசலில் நிற்கிறான் போல் உள்ளது! மீண்டும் எழுதுவேன், மேலும் கடன் தருவீர்களானால்!

உண்மை. ஹீ ஹீ ......

இந்த கடிதத்தை வெளிநாட்டு ஆங்கில தினசரிகளில் பிரசுரிக்க வேண்டும்.

குறிப்பிட்ட தளத்தில் இப்படியொரு பதிவே இல்லை யாரும் கிடைத்தால் அதை இணைத்துவிடவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.