Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளைஞர்களது உயிர்த்தியாகங்களைப் பேரம்பேசும் விதமாக கூட்டமைப்பினர் கையாள முற்படக் கூடாது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் பயணம் வெற்றிகரமாக அமைய எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள், போர்க் குற்ற விசாரணையை சமரசம் செய்ய இடமளிக்கக் கூடாது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமையையும் தமிழ் தேசத்தின் தனித்துவமான இறைமையையும் ஆணித் தரமாக வலியுறுத்த வேண்டும். தமிழ் மக்களும் இளைஞர்களும் செய்த உயிர்த்தியாகங்களை பேரம்பேசும் வகையில் போர்க் குற்ற விசாரணையை சமரசம் செய்ய இடமளிக்கக் கூடாது என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் அவர்களது பயணம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் பத்திரிகையாளார் மகாநாடு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர்களில் ஒருவரும் வெளிவிவகாரக் குழு தலைவருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின், இல்லத்தில் இன்று நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்களால் தமது பிரதி நிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உத்தியோக பூர்வ அழைப்பு விடுத்து அமெரிக்காவுக்கு அழைத்துள்ளமை தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரியதொரு அங்கீகாரமாகும். அவ்வாறு அழைக்கப்பட்டமை ஆனது தமிழர் தரப்பை ஓர் தனித்தரப்பாக அங்கீகரிக்கும் செயற்பாடாகவும் அமைந்துள்ளது.

அவ்வாறு அழைக்கப்பட்டமையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மனப்பூர்வமாக வரவேற்பதுடன் கூட்டமைப்பின் பயணம் வெற்றிகரமாக அமைய எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். கிடைத்துள்ள இச்சந்தந்தர்ப்பத்தினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான இனம் என்பதையும், இறைமை கொண்ட தேசம் என்பதனையும், தமிழர்களது சுயநிர்ணய உரிமை சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் பேச்சுக்கள் இடம்பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்த சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்தி கூட்டமைப்பினர் அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும்.

முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னரும் உயிர் கொடுத்த மக்களது இளைஞர்களது உயிர்த்தியாகங்களைப் பேரம்பேசும் விதமாக கூட்டமைப்பினர் போர்க்குற்றச் சாட்டு விடயங்களை கையாள முற்படக் கூடாது. பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதனை கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அங்கு கருத்துத் தெரிவித்த செல்வராசா கஜேந்திரன் சர்வதேச சமூகம் தமிழ் மக்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து தமது நலன்களை அடைய முற்சி செய்யும் இந்த நேரத்தில் தமிழ்ர் தரப்பு தமிழ் மக்களது இறைமை சுயநிர்ணய உரிமை ஆகிய விடயங்களில் உறுதியாக இருந்தால் நிச்சயம் அதற்கான அங்கீகாரங்களை தமிழ் மக்கள் பெற்று நிம்மதியாக வாழக் கூடிய சூழல் உருவாகும் என்றும் அதனை விளங்கிக் கொண்டு கூட்டமைப்பு செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், உபபொருளாளர் கிருஸ்ணகுமார் கட்சியின் இளைஞர் அணியின் இணைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilthai.com/?p=28925

தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான இனம் என்பதையும், இறைமை கொண்ட தேசம் என்பதனையும், தமிழர்களது சுயநிர்ணய உரிமை சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் பேச்சுக்கள் இடம்பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்த சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்தி கூட்டமைப்பினர் அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும்.

முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னரும் உயிர் கொடுத்த மக்களது இளைஞர்களது உயிர்த்தியாகங்களைப் பேரம்பேசும் விதமாக கூட்டமைப்பினர் போர்க்குற்றச் சாட்டு விடயங்களை கையாள முற்படக் கூடாது. பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதனை கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயங்களில் கூட்டமைப்பினர் இதய சுத்தியுடன் நடப்பதையே தமிழ் மக்கள் விரும்புகின்றனர்

இப்படிக் கூறுவதோடு நின்றுவிடாது, கூட்டமிப்புக்குப் பதிலாக வேறு யாரையாவது தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அனுப்பியிருக்க வேண்டும். அப்படி அனுப்பப்படுபவர்கள் மேற்கை சந்திக்கக் கூடியவர்களாக இருக்கவேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் மேற்கு அவர்களை அழைக்கவேண்டும்.

அல்லது அறிக்கைவிட்டு அந்நியப்படாது கூட்டமைப்போடு இதைபற்றி பேசவேண்டும். இதைப்பற்றி ஒன்றுகூடி பேசுமளவுக்கு எம்மினத்தின் காலத்தின் தேவையறிந்து கூட்டமைப்பும் ஏனைய நீதியான அமைப்புகளுடன் உறவை பேணவேண்டும்.

இதெல்லாம் சரிவர நடந்தால் நாம் இவ்வளவுக்கு வருத்தப் படவேண்டியதில்லை.

இப்போதெல்லாம் இதுதான் வேண்டுமேன்றிலாமல் ஏதாவது வந்தால் சரி என்ற நிலைக்கு அதிகமான மக்கள் வரத்தொடங்கி விட்டார்கள்.

இன்னும் சிலர் இதுவே போதுமென்ற நிலைக்கும் வந்து விட்டனர். போட்டிக்கு அறிக்கைகளை விடுவது நிலைமையின் பாரதூரத்தை உணர மறைக்குமே தவிர உதவப்போவது கொஞ்சமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.