Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெலிஓயா முல்லைத் தீவுடன் இணைப்பு தமிழர் தரப்பு போராட்டத்திர்கு பதிலடியா?

Featured Replies

கோலியாத் என்ற மாபெரும் வீரனை வீழ்த்தியது தாவீது என்ற சிறுவனின் சாணக்கியமே. அதாவது அவன், புத்திசாலித்தனமாக வீசிய கல்லே கோலியாத்தைத் தோற்கடித்தது.

அதுவரையும் கோலியாத்தும் இருந்தான்.கல்லும் இருந்தது. ஆட்களும் இருந்தார்கள். ஆனால், புத்திசாதுரியத்தைப் பயன்படுத்திக் கல்லை எறியக்கூடிய ஒரு தாவீது வரும் வரைக்கும் கோலியாத்தே “கிங்'. மிகச் சிறிய வயதிலேயே சொல்லிக் கொடுக்கப்படும் இந்த விடயத்தைத் தமிழ் அரசியலாளர்களிற் பெரும்பாலானோர் இன்னும் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை.

என்றபடியாற்தான், இவர்கள் மலைகளை உடைத்துக் கற்களை வீசுகின்றபோதும் ஒரு கல்லுத்தானும் எதிர்த்தரப்பைச் சேதப்படுத்தாமல் இருக்கிறது. இப்போது இவர்கள் எறிந்த கற்களின் குவியலே மலைகளாகப் போகிறது.

“தமிழர்கள் காலத்துக்குக் காலம் சிங்கள அரசினால் ஏமாற்றப்பட்டார்கள்' என்று தமிழ் அரசியற் தலைவர்கள் பகிரங்கமாகவே சொல்லி வருகிறார்கள். இதன் மறு பக்கத்தைப் பார்த்தால், தமிழர்களைச் சிங்களத் தரப்பினர் தொடர்ச்சியாக ஏமாற்றும் அளவுக்கே தமிழர்களின் “கெட்டித்தனம்(?)' இருந்திருக்கிறது என்பது புரியும்.

இப்போதும் இதுதான் கதை. இதுதான் நிலைவரம். நிதானமாகச் சிந்தித்தால், எதற்காக இந்தப் பின்னடைவுகளும் தோல்விகளும் வெற்றியடைய முடியாத நிலையும் தொடர்கின்றன என்று தெரியும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வவுனியா நகர சபை மண்டபத்தில் சில கோரிக்கைகளை அறிவித்து ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

“வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இருந்து இராணுவம் விலக்கப்படவேண்டும். இராணுவ அச்சுறுத்தல் இல்லாதொழிக்கப்பட வேண்டும். மேலும் அந்தப் பகுதிகளில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பை நிறுத்த வேண்டும். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் காணிப் பதிவுகளை இரத்துச் செய்ய வேண்டும்.' எனப் பல கோரிக்கைகள் இந்த உண்ணாவிரதத்துக்காக முன் வைக்கப்பட்டிருந்தன. “இந்த உண்ணாவிரதத்தை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை என்றால், எதிர்காலத்தில் நாடு தமிழர் வாழும் பிரதேசங்களில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்குவோம், அரசாங்கம் அந்த நெருக்கடிகளுக்கு முகங் கொடுக்க வேண்டிவரும்' என்று எச்சரிக்கை வேறு.

இந்த எச்சக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்திருந்தனர். ஆனால், இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்த மறுநாள், இதுவரையும் அனுராதபுரம் மாவட்டத்துடன் இணைந்திருந்த “வெலி ஓயா' என்ற தனியான பிரதேச செயலர் பிரிவை முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைத்தது அரசாங்கம்.

இது அரசாங்கத்தின் பதிலடியா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போராட்டங்களை அது இப்படித்தான் பலவீனப் படுத்த முயற்சிக்கிறதா? அல்லது இனப் பிரச்சினையை இன்னும் தீவிர நிலைக்குக் கொண்டு போக முனைகிறதா? கடந்த காலங்களில் தமிழ்த்தரப்பின் ஆதரவை எதிர்பார்த்திருந்த அரசாங்கங்களே இந்த மாதிரியான நிலைமைகளில் சிங்கள மக்களைச் சந்தோஷப்படுத்தும் விதமாக நடந்துள்ளன.

சிங்கள அரசியல் மூலோபாயம் இப்படியே எதிர்த் திட்டங்களை வகுத்துக்கொள்கிறது.

என்ற படியாற் தான் தமிழர் தரப்பின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தமிழ் பேசும் மக்களுக்கெதிரான அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத்தடைச் சட்டம், வடக்குக் கிழக்குப் பிரிப்பு என எல்லாவற்றிலும் சிங்களத் தரப்பு, தமிழ்த் தரப்பை உதாசீனப்படுத்தும் விதமாகவே நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால், எதையும் தடுத்து நிறுத்திடத் தமிழர் தரப்பினால் முடியவில்லை. ஆயுதப் போராட்டம் நடந்த வேளையில் மட்டும் சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் விரிவு படுத்த முடியாத நிலையில் இருந்தன.

மற்றும்படி வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. உயர்பாதுகாப்பு வலயங்கள் அல்படுத்தப்பட்டன. கைதுகளும் யுத்தம் நடந்தது. பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்டன. இன்னும் என்னவெல்லாமோ...

இங்கே முன்னரே சுட்டிக் காட்டப்பட்டதைப்போல, சிங்கள அரசியல் மூலோபாயம் என்பது, தமிழ்த்தரப்பைப் புறக்கணிப்பது, பொருட்படுத்தாமல் விடுவது என்ற வகையிலேயே செயற்படுகிறது.

பதிலாக அதுதான் நினைத்ததையே செய்கிறது. இதைப் புரிந்துகொண்டே தமது பகிரங்க அறிவிப்புகளையும் எச்சக்கைகளையும் தமிழர்கள் விடுக்க வேண்டும். இந்த யதார்த்தத்தைக் கருத்திற் கொண்டே திட்டங்களை வகுக்க வேண்டும். இதற்கமையவே செயற்பாடுகளை மேற்கொள்வது அவசியம்.

இல்லையென்றால், மேலும் பலவீனங்களே நிகழும். மேலும் தோல்விகளே ஏற்படும். எறியப்பட்ட கற்கள் எல்லாமே வீணாகும்.இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அறிவிப்புக்கும் எச்சரிக்கைக்கும் எதிராக இந்த அரசாங்கம் செயற்படுமானால், அதற்கு மாறாக எத்தகைய போராட்டங்களை கூட்டமைப்பினால் மேற்கொள்ள முடியும்?

அந்தப் போராட்டங்கள் எத்தனை தூரம் சாத்தியமாகும்? அதைச் சாத்தியப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பான செயற்பாடுகளை யார் மேற்கொள்வது? அதற்கு எத்தனை பேர் தயார்? அதில் பங்கேற்கும் மக்களை, அவர்களுடைய உற்சாகம் குன்றாமல் முன்னே கொண்டு செல்வதற்கு என்ன அடிப்படைகள் உள்ளன?

இவையெல்லாம் கவனத்திற் கொள்ளப்படாமல் எழுந்தமானமாக அறிவிப்புகளை மேற்கொண்டால், அது வெறும் பேச்சு என்ற அளவிலேயே கொள்ளப்படும்.

இதைத் தமிழ் மக்களும் பொருட்படுத்தாத ஒரு நிலை காலப்போக்கில் நடக்கும். சிங்கள அரசியலுக்கும் இதுவொரு எள்ளலுக்குரிய விடயமாகவே ஆகும்.

இத்தகைய செயற்பாடுகளாற்தான் தமிழரசுக்கட்சி சிங்கள அரசியலிற் சலிப்படைந்தது. “கடவுள்தான் இனித் தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று அந்தக் கட்சியின் தலைவரான எஸ். ஜே. வி. செல்வநாயகம் சொல்லும் அளவுக்கு அதனுடைய அரசியல் அணுகுமுறைகள் அதற்குத் தோல்வியைத் தந்திருந்தன.

பிறகு வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் இதே மாதியைத்தான் பின்பற்றியது. மக்களை மாபெரும் இயக்கமாக்கிப் போராடக்கூடிய களங்களைத் திறப்பதற்குப் பதிலாக நாடாளுமன்றக் “கன்ஸார்ட்'களின் பக்கங்களை நிரப்புவதிலும் சனங்களின் மத்தியில் மேடையில் முழங்குவதிலும் கவனத்தைச் செலுத்தியது கூட்டணி.

ஏறக்குறைய இந்த நிலையிற்தான் இப்போதைய காயங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. பல தமிழ் ஊடங்களின் தலைப்புச் செய்திகளைப் பார்த்தால் அந்த நாட்களில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரன் பத்திகையில் வந்த தலைப்புகளைப் போலவும் செய்திகளைப் போலவுமே அமைந்திருக்கின்றன.

ஏனென்றால், தற்போதைய காரியங்களும் அந்த நாட்களில் நடந்ததைப்போல உள்ளன என்பதே இங்கே நாம் கவனிக்க வேண்டியது.

அதே கட்சி. அதே சின்னம். அதே பேச்சுகள். அதே நடவடிக்கைகள். அதே நம்பிக்கையீனங்கள்.

எந்தத் தேசியக் கொடியின் கீழே நிற்பதற்கு தம்மால் முடியாதென்று தமிழர்கள் கருதினார்களோ, அதே கொடிக்குக் கீழே வந்து நிற்கிறார்கள் இப்பொழுது. எந்தக் கொடியின் கீழே மன உடன்பாட்டுடன் நிற்க முடியாதிருக்கிறது என்று சொன்னார்களோ அதே உணர்வுடன்தான் இப்போதும் அந்தக் கொடியின் கீழே நிற்கிறார்கள்.

பாடமறுத்த அதே தேசிய கீதத்தையே இப்போது பாடுகிறார்கள். அல்லது அப்படி அதைப் பாடவேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இதையெல்லாம் யாரும் இலகுவிற் புறந்தள்ளி விட முடியாது. அது சிங்களவர்களாக இருந்தாலும் சரி, தமிழர்களாக இருந்தாலும் சரி. இதில் யாரும் வெற்றியடையவும் இல்லை. யாரும் மகிழ்ச்சியடையவும் முடியாது. எனவே, இந்த யதார்த்தத்திலிருந்தே நாம் விடயங்களை மதிப்பிட வேண்டும். எதையும் திட்டமிடுவதும் அவசியம்.

கட்சியின் இருப்பைப் பேணும் நடவடிக்கைகள் வேறு. மக்களின் விடுதலை, அவர்களுடைய முன்னேற்றம் ஆகியவற்றைப் பாதுகாக்கும், அதை முன்னகர்த்தும் நடவடிக்கைகள் வேறு. இங்கே மேற்கொள்ளப்படுபவை, ஏறக்குறையக் கட்சியின் இருப்பைக் குறித்த நடவடிக்கைகளே!

ஆனால், இந்த நடவடிக்கைகள் நிச்சயமாக ஒரு போது எதிர்மறையான நிலைமைகளின் மத்தியிலேயே கொண்டுவந்து விடும். ஒரு . காலத்தில் தமிழ் அரசியற் தலைவர்களை அதிகமாக நிராகரித்தவர்களும் எதிர்த்தவர்களும் தமிழ் இளைஞர்களே என்பதை இங்கே நாம் நினைவு கொள்வது அவசியம்.

இதற்கான காரணம், அவர்கள் கட்சியின் இருப்பைப் பேணும் உபாயங்களைப் பேணிக் கொண்டதாலேயே. மக்களின் பிரச்சினைகள் அதிகரித்து வந்த போதும் அவர்கள் அதைத் தீர்ப்பதை விடுத்து கட்சியின் இருப்பையே பிரதானமாக நோக்கினர். ஏனெனில், கட்சியின் இருப்பிலேயே அவர்களுடைய அரசியல் இருப்புத் தங்கியிருந்தது.

இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பங்கேற்பில்லாமல் அல்லது அவர்களுடைய ஆதரவில் தங்கிராத ஒன்று. எனவே, அது சிங்கள மக்களின் நலன்களைப் பேணுவதிலும் அவர்களுடைய ஆதரவைத் தக்க வைப்பதிலுமே அதிக அக்கறையைக் கொண்டிருக்கிறது. அப்படித்தான் அது கொள்ள வேண்டிய நிலையிலும் இருக்கிறது.

காரணம், எந்த மக்கள் தனக்கு ஆதரவைத் தந்தனரோ அவர்களுக்கே விசுவாசமாக இருப்பது என்றவகையில் அது செயற்படுகிறது. சிங்கள மக்களின் ஆதரவுத் தளமே இந்த அரசாங்கத்துக்கான பாதுகாப்புத்தளம் உயிர்ப்பரப்புமாகும்.

இது ஒரு பகிரங்கமான அனுபவம். எல்லோருக்கும் தெளிவான உண்மை. இந்த நிலையில் அது தமிழர்களுடைய குரலை அல்லது தமிழ்த்தரப்பின் குரலை எப்படி எதிர்கொள்ளும் என்று நாம் விளங்கியிருக்க வேண்டும்.

இல்லை, சர்வதேசத்தின் ஆதரவுச் சூழல் ஒன்று ஏற்பட்டிருக்கும் நிலையில் அதைப் பயன்படுத்தி நாம் உள்நாட்டில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம். அதன் மூலம் தமிழ் மக்களுடைய அரசியற் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நெருக்குவாரத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான சூழலை உருவாக்கலாம்.

ஆகவே அந்த இலக்கை நோக்கிய செயற்பாட்டின் முதலடியே இந்தப் போராட்டங்கள். இதை மேலும் நாம் விரிவுபடுத்தவுள்ளோம் என கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

இருக்கலாம். ஆனால், அதற்கான சாத்தியங்களைக் குறித்தே நாம் திரும்பவும் கேள்விகளை எழுப்பவேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கில் அண்மையில் கிறீஸ் பூதம் என்றொரு விவகாரம் முன்னணிப் பிரச்சினையாக இருந்தது. இதைத் தடுக்க முடியாத நிலையிற்தான் நமது அரசியற் கட்சிகள் இருந்தன. இப்பொழுது கிறீஸ் பூதம் தானாகவே களைத்துப் போய் அடங்கியிருக்கிறது.

அது நாளைக்கு மீண்டும் கிளம்பிவராது என்பதற்கு எந்த உத்தரவாதங்களும் இல்லை. தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவைத் தலைவர் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்குக் கண்டன அறிக்கைகள் விட்டதோடு தமது அரசியற் பணி முடிந்து விட்டதாக இந்தக் கட்சிகள் கருதிக் கொண்டிருக்கின்றன. அதற்கு மேல் இவை எதையும் செய்யவில்லை. எதையும் செய்ய முடியாத நிலையிலேயே இருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்னர் “உதயன்' பத்திரிகையின் செய்தி ஆசியர் குகநாதன் தாக்கப்பட்டிருந்தார். ஊடகசுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என ஒரேயொரு கண்டன ஊர்வலத்தை மட்டுமே இந்தத் தலைவர்கள் நடத்தினார்கள். அத்துடன் அந்தச் சம்பிரதாயம் முடிந்து விட்டது.

ஆனால், இன்னொரு சம்பவம் அதைப் போல நடக்காமற் தடுத்துவிட்டதாக யாரும் சொல்ல முடியாது. வன்னிப் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் போரின்போது கைவிட்ட பொருட்களைப் பெறடியாத நிலை நீடிக்கிறது. இதைப் பெற்றுக் கொடுப்பதற்கும் இந்தக் கட்சிகளால் முடியவில்லை. அவர்களுக்கான நட்ட ஈட்டைத்தானும் பெற முடியாதிருக்கின்றன.

இதைத் தவிர, அரசியற் கைதிகள் விவகாரம், மீனவர் விவகாரம், மீள்குடியேற்ற பிரச்சினைகள், அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்கேற்க முடியாமை, பொதுமக்களின் வாழ்விடங்களில் இருக்கின்ற இராணுவ வலயங்களை அகற்ற வேண்டியமை எனப் பல பிரச்சினைகள்.

ஆனால், இவை எதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலோ பிற தமிழ்த்தரப்பினராலோ உரிய தீர்வுகளைக் காணக்கூடிய நிலை இல்லை. ஆகவே, இந்த நிலையில் மேலும் அறிக்கைகளை விட்டு வாயைப் புண்படுத்திக் கொண்டிருப்பதை விடவும் பொருத்தமான வியூகங்களை வகுத்துக்கொண்டு களத்தில் இறங்குவதே பொருத்தமானதாகும்.

இல்லையெனில், புத்திசாதுயமற்ற முறையில் குருட்டு நம்பிக்கையில் எறியப்பட்ட கற்களைப்போலவே இந்தச் செயற்பாடுகளின் பெறுமதியும் இருக்கும்.எனவே, மீண்டும் தோல்விக்கும் பின்னடைவுக்கும் செல்லாத பொருத்தமான வழி முறைகளையும் அதற்கான மனநிலையையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.அவர்கள் தங்களுடைய வாழ்க்கையுடன் இனியும் விளையாடத்தயாரில்லை என்பதே யதார்த்தம்.

http://akkinikkunchu.com/new/

இவை எதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலோ பிற தமிழ்த்தரப்பினராலோ உரிய தீர்வுகளைக் காணக்கூடிய நிலை இல்லை. ஆகவே, இந்த நிலையில் மேலும் அறிக்கைகளை விட்டு வாயைப் புண்படுத்திக் கொண்டிருப்பதை விடவும் பொருத்தமான வியூகங்களை வகுத்துக்கொண்டு களத்தில் இறங்குவதே பொருத்தமானதாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"என்றபடியாற்தான், இவர்கள் மலைகளை உடைத்துக் கற்களை வீசுகின்றபோதும் ஒரு கல்லுத்தானும் எதிர்த்தரப்பைச் சேதப்படுத்தாமல் இருக்கிறது. இப்போது இவர்கள் எறிந்த கற்களின் குவியலே மலைகளாகப் போகிறது"

இது எறிவது போல் நடிப்பதால் வரும் குவியல்.

ஐந்து இலட்சம் ஆயுதந்தரித்த இனவெறியருக்கு எதிராக ஒன்றும் இவர்களால் அங்கிருந்து செய்ய முடியாது.

இணையத்தளங்களில் செய்தி வெளியிட்டு அரசியல் செய்ய வேண்டியது தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.