Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்களுடைய மாநாடு இன்று ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்களுடைய மாநாடு இன்று ஆரம்பம்!

Published on October 28, 2011-10:24 am

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்களுடைய மாநாடு இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. தேசிய மற்றம் பூகோலமயமான மீள் மலர்ச்சி என்ற தொனிப்பொருளில் இன்றைய மாநாடு நடத்தப்படவுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்த மாநாடு ஆரம்பமாகிறது. பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவி, அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிள்ளர்ட்டுக்கு இன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

http://www.saritham.com/?p=39095

இலங்கை அரசு இணைந்து செயற்படுமாயின் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம்

பொதுநலவாய அமைப்பு தெரிவிப்பு

commonwelth-150x1282.jpg

இலங்கை அரசாங்கம் தொடர்ந்து தம்முடன் இணைந்து செயற்படுமாயின் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக பொதுநலவாய அமைப்பு தெரிவிக்கின்றது. கடந்த காலங் களில் பொதுநலவாய அமைப்பு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியு ள்ளதாக அதன் பொதுச் செயலாளர் கமலேஷ்ர்மா தெரிவித்தார்.

மனித உரிமைகளை பாதுகாப்பது பொது நலவாய அமைப்பின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று எனவும் அதனைப் பாதுகாப் பதற்காக இவ்வமைப்பின் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படு வதாகவும் மனித உரிமைகள் தொடர்பில் பல தடவைகள் வலியுறு த்திக் கூறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் பொதுநலவாய அமைப்பில் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவரை நியமிக்கும் பிரேரணைக்கு அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தியாவும் தென்னாபிரிக்காவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவிக்கின்றார்.

எனினும் இம்முறை பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டை நடத்தும் அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்புடன் அது தொடர்பிலான பிரேரணையொன்று மாநாட்டில் முன் வைக்கப்படவுள்ளது. மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை மீது சர்வதேச மட்டத்தில் விடுக்கப்படும் அழுத்தங்களை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.valampuri...ws.php?ID=24753

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

australian_flag01.jpg

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்களுடைய மாநாடு இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. தேசிய மற்றம் பூகோலமயமான மீள் மலர்ச்சி என்ற தொனிப்பொருளில் இன்றைய மாநாடு நடத்தப்படவுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்த மாநாடு ஆரம்பமாகிறது. பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவி, அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிள்ளர்ட்டுக்கு இன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

http://www.seithy.co...&language=tamil

பொதுநலவாய அமைப்பினால் இதுவரை வரலாற்றில் சொல்லுமளவுக்கு எதுவும் முடியவில்லை. ஏதோ தென்னாபிரிக்க விடுதலைக்கு பாடுபட்டதாக சலசல்களே தவிர அதற்கான முளுப் பொறுப்பும் அதற்குரியதல்ல.

ஆகக் குறைந்தது மனிதவுரிமைக் கவுன்சிலையாவது நிறுவ முடியாமல் போனால் இந்த அமைப்பால் வேரென பயன்?

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடி மக்களின் வரிப்பணத்தை விரயமாக்காமல் விடுவதே நல்லது.

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.