Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்லரசு நாடுகளிலும் இனவாதம் தலை தூக்கியுள்ளதாம் – பிரதமர் கவலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

d-m-jeyaradna-150x150.jpg

நாட்டில் அசுர வேகத்தில் ஏற்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளில் இளைஞர், யுவதிகளையும் இணைத்துக் கொள்வதே அரசின் முக்கிய இலக்காகும். அரசின் இந்த இலக்கை அடைந்திட இளைஞர் விவகார அமைச்சு அதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவது என பிரதமர் தி.மு.ஜயரட்ன தெரிவித்தார்.

இளைஞர்களுக்கான விருது வழங்கும் வைபவம் மாத்தளை மாநகர மண்டபத்தில் இடம்பெற்ற போதே பிரதமர் தி.மு.ஜயரட்ண மேல்கண்டவாறு தெரிவித்தார்.

இளைஞர் விவகார அமைச்சு ஏற்பாடு செய்த மேற்படி வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் தி.மு.ஜயரட்ன.

நாட்டின் நாலாதிசைகளிலும் இருக்கும் இளைஞர், யுவதிகளின் திறமைகளை இனங்கண்டு அவர்களை உற்சாகமூட்டி அவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டுவது இன்றைய காலகட்டத்தின் முக்கிய அச்சாணியாகும்.

கடந்த காலங்களிலெல்லாம் இளைஞர்களின் திறமைகளை இனங்காண்பது விருதுகள் வழங்குவது எப்படி இருந்தாலும் இன்றைய தினத்தை போலஒன்றாக இருந்து பேசி கதைக்கும், பழகும் வாய்ப்புகள் அன்று போல இருக்கவில்லை. நம்மில் ஒருவரை ஒருவர் சந்தேகக்கண்கொண்டு நோக்கும் ஒரு மோசமான யுகத்தையே நாம் இன்று கடந்து வந்துள்ளோம்.

இந்நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எப்போது ஏற்றுக்கொண்டாரோ அன்று தொடக்கம் அந்த நிலை கட்டம் கட்டமாக மங்க ஆரம்பித்து முழு நாடே ஒரு சகஜ நிலைக்கு மாறிவிட்டது. மகிந்த சிந்தனையில் இளைஞர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளது போல இளைஞர்கள் விவகார அமைச்சு அதனை நடைமுறைப்படுத்திவருவது மாத்திரமன்றி இளைஞர், யுவதிகளை உற்சாகமூட்டிவருவதும் காலத்தின் தேவையாக மாறிவிட்டது.

இளைஞர்களை இனங்காணவும் அவர்களுக்கு தலைமைத்துவத்துக்கான பயிற்சிகளை வழங்குவது அவர்களை நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் பங்காளிகளாக மாற்றி சிறந்ததொரு இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதே அரசின் முக்கிய இலக்காகும். நாட்டின் தலைமைத்துவப் பயிற்சி என்பது ஜனாதிபதிகளையும் பிரதமர்களையும் அமைச்சர்களையும் உருவாக்கும் பயிற்சி என்று அர்த்தமல்ல. நாடும் சமூகமும் முன்னேற்ற மடைவதெல்லாம் நல்ல தலைமைத்துவத்தின் கீழ் என்பதை உறுதிப்படுத்திடுவதாகும்.

இன்று நம் நாட்டில் சில கிராமப்புறங்களில் இவ்வாறான தலைமைத்துவ பயிற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இக்கிராமப் புறங்களில் சில அமைப்புகளின் மூலம் ஒரு தலைமைத்துவம் உருவாகாது. அதன் மூலம் அக்கிராமங்கள் முன்னேற்றப்பாதையை நோக்கி செல்கின்றன. கிராம மட்டத்தில் தலை நிமிர்ந்துவரும் இந்த தலைமைத்துவர்களுக்கு அரசியல்வாதிகள் என்ற வகையில் எம்மால் சில கருத்துகளையும் வழிகாட்டல்களையும் அவர்களுக்கு வழங்க முடியும். அவை பொதுமக்களுக்கு மிகவும் தேவைப்பட்டவைகளாகவும் இருக்கலாம்.

இன்று நாட்டின் சில அரச அதிகாரிகள் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றுகின்றார்களா? என்பதே ஒரு கேள்விக்குறி. இது சம்பந்தமாக நான் பாராளுமன்றத்தில் பல தடவைகள் பேசியும் உள்ளேன். அரச அதிகாரிகளில் பலர் தம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகளை சரிவர நிறைவேற்றாததன் காரணமாக பாதிக்கப்படுகின்ற பொதுமக்கள் அரசியல்வாதிகளின் மீது கைவிரல்களை நீட்டும் துர்ப்பாக்கிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

எனவே! அரச அதிகாரிகள் தமது கடமைகளை சரிவர புரிந்து மக்களின் தேவைகளை அறிந்து சேவைகளைப் புரிவதுமட்டுமல்லாமல் அபிவிருத்திப் பாதையில் வேகமாக செல்லும் போது தாம் எவ்வாறு எமது பங்களிப்புகளை வழங்குவது எவ்வாறு என நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

அதேபோன்று நம் இளைஞர்யுவதிகள் சரியான, நேரான தவறில்லாத பாதைகளில் தமது பயணத்தை மேற்கொள்ள அவர்களுக்கு சிறந்த கல்வியும் தெளிவான அறிவோடு சரியான மத அனுட்டானங்களும் தேவைப்படுகின்றன. நமது நாட்டில் இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் தர்க்கங்கள், மோதல்கள் கிடையாது. எமது நாட்டு முன்னேற்றத்துக்கு சிறந்த படிக்கல் என்பதும் சாலப் பொருந்தும்.

இன்று உலகில் 50 சதவீத நாடுகளில் உள்ள கலவரங்களும் தேவையற்ற பூசல்களும் அந்நாடுகளை ஆட்டிப்படைக்கின்றன. இவைகளில் அனேகமானவை இனரீதியாகவும் மத ரீதியாகவும் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளாகவே இருக்கின்றன. என்றாலும் நம் நாட்டில் அவ்வாறான ஒரு சூழ்நிலைகிடையாது. நமது நாட்டில் சகல இன மக்களும் சமாதானமாகவும் சகோரத மனப்பான்மையுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஒரு சூழ்நிலையே நமது நாடு முன்னேற்ற மடைந்திட நல்லதொரு இலட்சணமாகும்.

நமது நாட்டின் ஒவ்வொருவரும் அவர்களின் மதங்களுக்குக் கொடுக்கின்றன. கௌரவத்தையும் மரியாதையும் ஏனைய மதங்களுக்கு வழங்குகின்ற ஒரு நல்ல மனித சமூகம் எமது நாட்டில் இருக்கின்றது. இதுவும் நம் நாட்டு முன்னேற்றத்துக்கு சிறந்த படிக்கல்லாகும். இந்த நல்ல நிலைமைகளை உலகின் வேறு எந்த நாடுகளிலும் காண முடியாது.

நாம் இன்று சகல வழிகளிலும் முன்னேற்றமடைந்துள்ளோம். நம் நாடும் எல்லாத்துறைகளிலும் முன்னேற்றமடைந்துவருகின்றது என மார்தட்டிக்கொள்ளும் நாடுகளில் கூட வல்லரசுகள் என தம்மைப் புகழ்ந்து கொள்ளும் நாடுகளில் கூட இனவாதங்களும் பிரிவினைவாதங்களும் தலைதூக்காதிருப்பதை அவதானிக்கின்றோம். இது தான் இன்றைய உலக நிலைவரம். எனவே எதுவாக இருந்தாலும் ஒற்றுமையாக சமாதானமாக சகோதர வாஞ்சையுடன் வாழும் எமக்கு மத்தியில் எமக்குள்ளேயே பிரிவினைகளை ஏற்படுத்திட சில முயற்சிகள் முனைப்புடன் செயல்படுத்தப்படுவதாக அறிகிறோம். எனவே இவ்வாறான சக்திகளுக்கு நாம் சோரம் போய்விடாமல் நாம் அனைவரும் இந்நாட்டு மக்கள் என் ஒரே குரலுடன் விழிப்புடன் செயற்படுவது காலத்தின் தேவையாகும் என்றனர்.

அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பிரதியமைச்சர்களான ரோஹண திஸாநாயக, நந்தாமித்ர ஏக்கநாயக, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மாத்தளை மாநகர முதல்வர் அல்ஹாஜ் ஹில்மி முஹமத் கரீம் ஆகியோரும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.

http://www.saritham.com/?p=39135

Edited by தமிழ் அரசு

இவரின் முகத்தின் படத்தையும் போட்டு,

இவ்வளவு பெருசா பந்திகளியும்போடால் எவன்தான் முழுசா வாசிப்பான்?

செய்தியைப் போடுங்கோ அனால் தயவுசெய்து சாரத்தைப் போடுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.