Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை அழிக்கவும், தமிழ் மக்களை கொன்றொழிக்கவும் இலங்கை அரசுக்கு எல்லா உதவிகளையும் அமெரிக்காவும் சேர்ந்தே செய்தது: அமெரிக்காவை மட்டும் கூட்டமைப்பு நம்பக் கூடாது..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Vikramabahu_Karunaratne_150JKL.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கும் சென்று பல்வேறு சர்வதேச நிறுவனங்களையும் சந்தித்து தமிழர்களது பிரச்சினைகள் குறித்து பேசுவதும், உண்மைகளை வெளிக்கொண்டுவருவதும் விரும்பத்தக்கது. ஆனால் அவர்கள் அமெரிக்க அரசை மாத்திரம் நம்பியிராது பொது மக்களிடம், தொழிலாளர்களிடம், தொழிற்சங்கங்களிடம், அரசியல் கட்சிகளிடம், சமூக அமைப்புக்களிடம், ஊடகங்களிடம் பேச வேண்டும்.

அவ்வாறு செயற்பட்டால்தான் ஏதாவது நன்மைகள் விளையக்கூடும். என தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஏனெனில் புலிகள் இயக்கத்தை இல்லாதொழிக்கவும், தமிழ் மக்களை கொன்றொழிக்கவும் இலங்கை அரசுக்கு எல்லா உதவிகளையும் அமெரிக்காவும் செய்தது என்பதை விக்கிலீக்ஸ் தகவல்கள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.

அமெரிக்க அரசுக்குத் தேவையானது தமிழ் மக்களை பாதுகாப்பதல்ல, அவர்களை நிச்சயமற்ற தன்மைக்கு ஆளாக்கி, அவர்கள் பொருள் காணி ஆகியவற்றைக் கைப்பற்றிக்கொண்டு தனது மூலதனத்தை விஸ்தரித்து பன்னாட்டு நிறுவனங்களை இங்கு அமைப்பதே. இந்த நிலையில் அமெரிக்க அரசை மட்டும் நம்பியிருப்பதால் த.தே.கூ.யினர் அடையப் போகும் நன்மை ஒன்றும் இல்லை. அமெரிக்க அரசின் மூலமாக மட்டும் சர்வதேச நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடாது. தமிழ் மக்களைக் கொன்றொழிக்க உதவிய அமெரிக்க அரசினதும் இலங்கை அரசினதும் உறவுகள் சுமுகமாகவே இருக்கின்றன. அமெரிக்கா இலங்கை மீது சில நிர்ப்பந்தங்களை விதிப்பதாகக் காட்டுவது வெறும் பம்மாத்தே ஆகும்.

சர்வதேச சதிக்கு த.தே. கூட்டமைப்பினர் துணை போகின்றார்கள் என்று அரசு புலம்புவதெல்லாம், இவர்களுடைய சதி வெளியே தெரிந்து விடப் போகின்றதே என்ற அச்சத்தினால் தான் இலங்கை அரசிடம்தான் சதி இருக்கின்றதே தவிர சர்வதேசத்தில் எங்கும் சதி இல்லை. இலங்கை அரசு அஞ்சுவது எல்லாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஒபாமாவோடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதினால் அல்ல. நான் முன்னே குறிப்பிட்டது போல் ஏனையவர்களுடன் பேசி உண்மைகளை வெளிப்படுத்தி விடுவார்களோ என்பதினால் தான்.

அமெரிக்கா சென்றிருக்கும் த.தே.கூ. தலைவர்கள் மேற்கண்டவாறு செயற்படுவார்கள் என்ற கேள்விக்கு பதிலாக அவர்கள் அவ்வாறு செய்தால் அல்லது அவ்வாறு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறுவேன். அமெரிக்க அரசு இதற்கு ஒரு தீர்வைத் தரும் அல்லது தீர்வின் பாதைக்கு நகர்த்திச் செல்லும் என்று நான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.

சர்வதேச சமூகம் தலையிடுவதனால் உள்நாட்டில் பிரச்சினை ஏற்படும் வெளிநாட்டுத் தலையீடு ஏற்படும் என்பதெல்லாம் முற்று முழுதாகவே அவ்வாறு ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. எந்த ஒரு நாட்டிலும் ஏற்படும் பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் தன் பங்களிப்பை வழங்கி அதனை தீர்த்து வைப்பது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரம்பரியமாகும்.

http://www.seithy.com/breifNews.php?newsID=51450&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசு கூட்டுசேரும் வல்லரசுகளால் அமெரிக்காவிற்குப் பாதிப்புள்ளது. என்பதினால் தான் இன்று தமிழரின் ஒரு கை அமெரிக்காவிற்கு ஒரு ஆயுதமாகத்தேவைப்படுகின்றது என்பது தான் நிதர்சனம். தன் காரியம் முடிக்க எதிரி என்றாலும் தன் கைக்குள் போட அமெரிக்கா என்றுத் தயாh. நண்பனென்றாலும் போட்டுத்தள்ளத்தயார். அமெரிக்காவுடன் பேசுவது சரி. ஆனால் கூட்டு வைத்தவர்களின் முடிவைக் கடந்த காலம் தெளிவாகச்சொல்லியுள்ளது. இதைவிட சிங்களவனுடன் இருந்துவிட்டுப்போகலாம் என்றுதான் எனக்குத்தோன்றுகின்றது. இலங்கையில் இன்னொரு இரத்தக்களரி ஏற்பட்டால் தமழனும் அழிந்து சிங்களவரும் அழிந்துபோக வாய்ப்பு மிக அதிகம். சீனாவை இலங்கையிலிருந்து புறம்தள்ளும்பொருட்டு அமெரிக்கா செய்யும் சதி முயற்சிதான் கூட்டணி இங்கு அழைக்கப்பட்டது.

மகிந்தவும் கடாபியை போன்று சீனாவின் பக்கம் அதிகம் சாய்ந்துள்ளார். இலிபியாவில் 6-7 பில்லியன்களை முதலிட்டு பல்லாயிரம் சீனர்களை இறக்கி காடபியின் ஆதரவுடன் ஆழமாக வேரூன்ற முயன்றது சீனா. அதிலிருந்து சீனா இன்று முற்று முழுதாக அகற்றப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவிலும் பல பில்லியன்கள் முதலீட்டுடன் சீனா ஆழமாக வேரூன்ற முயலுகின்றது. இங்கு மசகு எண்ணெய் இல்லாவிட்டாலும் ஒரு கேந்திர முக்கியமான பகுதியில் சீனா ஆழமாக வேரூன்றுவதை அமேரிக்கா உட்பட்ட மேற்குலகம் விரும்பாது.

அகுதா:

அமெரிக்கா நண்பர்களுக்கு நண்பன். ஸ்ரேல் அணுவாயுத வல்லரசு அதனால்த்தான். சவுதி ஈரானை அடிக்க வேண்டும் என்று நினைப்பது அதனால்த்தான். யப்பான் இரண்டாது பொருளாதார நாடாக இருந்தது அதனால்த்தான். பிரான்ஸ், இங்கிலாந்து இரண்டாம் உலக யுத்தத்தின் பின் தள்ளாடிக்கொண்டிருக்க யேர்மனி மேலே போனது இதனால்த்தான். வட கொரியா வெடிகுண்டுகள் மட்டும் செய்ய தென் கொறியா அறிவியல் வளர்சியில் உலக பிரசித்தி பெற்ற நாடாக இன்று வளந்து கொண்டு வருவது அதனால்த்தான்.

அமெரிக்கவின் எதிரிகள் ஆயுதம் வாங்குவதற்கு சிலகாலம் மட்டும் நண்பராக நடித்து உதவி வாங்கி விட்டு பின்னர் தப்பலாம் என்று நினைப்பதுண்டு. பழமொழி முழுக்க பொருந்தாவிடாலும் இதுவும் ஒரு வகை தலையாரி வீட்டுக்குள் ஒளிக்கும் மடைத்தனம். ஒருவர் பட்டதைப்பார்த்து மற்றவர் திருந்தாத குணம். அமெரிக்கா உதவமுதல் நன்கு அவர்களைப்படித்து இவர்கள் ஆயுதங்களை வாங்கி முடிய என்ன செய்வார்கள் என்றெல்லாம் கணக்கு பார்த்துதான் ஆயுதம் கொடுக்கும். அநாவசியமாக பூதத்தை போத்தலிலிருந்து திறந்து விட்டு விட்டு அலறி அடித்து கொண்டு இதுவரையில் ஓடியது கிடையாது. ராச பக்சா பக்கத்து இந்தியாவை பேக்காட்டுமாப்போல் நினைத்து ஆயுதம் வாங்கியவர். எல்லாவற்றையும் கூட்டி கழித்து பிரித்து பெருக்கி பார்த்தால் ராசபக்சாவின் நேரம் வந்துவிட்டது போலத்தெரிகிறது. கேள்வி எனவென்றால் கூட்டமைப்பு சூத்திரத்தை விளங்கி சமன் பாட்டைத்தீர்த்து அலுவலை முடிக்குமா? இந்த பயணத்தையோ அல்லது அடுத்த பயணத்தையோ அல்லது போன பயணத்தையோ பற்றி நாம் பேசவேண்டியதில்லை. பரவலாக எல்லவற்றையும் தான். இவ்வளவு பயந்து நடுங்கும் அரசாங்கம், மகிந்தா-சம்பந்தர் ஒப்பந்தம் செய்ய தயங்காது. அந்த நிலையில் சம்பந்தர் வடக்கும் கிழக்கும் இணைந்து ராணுவம் வெளியேறி, சிங்களக்குடியேற்றங்கள் மீளப்பெற்று.,...,...,........ அல்லாவிடில் என் கை பேனாவைத்தொடாது என்று சொல்வாரா.

எதற்கும் போர்குற்ற விசாரணை ஆரம்பித்து விட்டால் குற்றவாளி கூண்டில் நிற்பவருடன் ஒப்பந்தம் செய்ய வேண்டி வராது.

Edited by மல்லையூரான்

உலகில் உள்ள நாடுகள் சிலவற்றுடன் சேர்ந்துதான் நாம் எம்மை மீட்கலாம், பாதுகாக்கலாம். அந்த வகையில் எம்மை அழித்த ஒரு நாட்டுடன் (அமெரிக்கா, இந்தியா, சீனா ...)

புலிகளை அழிக்கவும், தமிழ் மக்களை கொன்றொழிக்கவும் இலங்கை அரசுக்கு எல்லா உதவிகளையும் அமெரிக்காவும் சேர்ந்தே செய்தது: அமெரிக்காவை மட்டும் கூட்டமைப்பு நம்பக் கூடாது.."

ஜப்பான் மீது அமெரிக்கா அணுக்குண்டு போட்டது, பல மில்லியன்கள் மக்கள் இறந்தனர். அந்த அமெரிக்காவே இன்று ஜப்பானை ஒரு பொருளாதார வல்லரசாக மாற்றி அதற்கு இராணுவ பாதுகாப்பையும் தருகின்றது. ஜப்பானிய மக்கள் தமக்கு அருகில் உள்ள சீனாவை விட்டுவிட்டு அமெரிக்காவையே நம்பினார்கள். அது அவர்களுக்கு பலன் தந்தது.

Edited by akootha

உலகில் உள்ள நாடுகள் சிலவற்றுடன் சேர்ந்துதான் நாம் எம்மை மீட்கலாம், பாதுகாக்கலாம். அந்த வகையில் எம்மை அழித்த ஒரு நாட்டுடன் (அமெரிக்கா, இந்தியா, சீனா ...)

ஜப்பான் மீது அமெரிக்கா அணுக்குண்டு போட்டது, பல மில்லியன்கள் மக்கள் இறந்தனர். அந்த அமெரிக்காவே இன்று ஜப்பானை ஒரு பொருளாதார வல்லரசாக மாற்றி அதற்கு இராணுவ பாதுகாப்பையும் தருகின்றது. ஜப்பானிய மக்கள் தமக்கு அருகில் உள்ள சீனாவை விட்டுவிட்டு அமெரிக்காவையே நம்பினார்கள். அது அவர்களுக்கு பலன் தந்தது.

இந்தியாவை நாம் நம்பவேண்டிய தேவை இல்லை. எம்மை அழிக்க துணை போன அமெரிக்காவுக்கு எம்மை மீட்டெடுக்க வேண்டிய தார்மீக கடமை உள்ளது.

நல்ல கருத்து. பச்சை முடிந்து விட்டது. நாளை பார்க்கலாம்.

போரின் பின் எஞ்சி இருந்தவர்களுக்கு தெளிவான சிந்தனை இருந்திருக்கு.

இன்று பச்சை குத்தியுளேன்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.