Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரத்தில் கனடா வெறுமனே வார்த்தைகளினால் கருத்துக்களை வெளியிட்டு அமைதி காக்காது: மனித உரிமை மீறல்கள் குறித்து கனடா மீண்டும் எச்சரிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Deepak_Obhrai_canadaMP_150.jpg

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து கனடிய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமை மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் கனடா அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2013ம் ஆண்டில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், அந்த மாநாட்டிற்கு முன்னதாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரத்தில் கனடா வெறுமனே வார்த்தைகளினால் கருத்துக்களை வெளியிட்டு அமைதி காக்காது என கனேடிய வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக செயல் ரீதியான பங்களிப்பினை கனடா வழங்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பிலான கனடாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் குறிப்பி;ட்டுள்ளார்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமர்வுகளில் பங்கேற்பது குறித்து மீள சந்திக்க நேரிடும் எனவும் கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தில் கனடா வெறும் வார்த்தைகளினால் மட்டும் எதிர்ப்பை வெளியிடுவதில் அர்த்தமில்லை என கனேடிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே இலங்கையில் ஆளும் தரப்பினருக்கு கனடாவின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தீபக் ஒபராய் தெரிவித்துள்ளார். உலக மனித உரிமைகளுக்காக கனடா உரக்கக் குரல் கொடுக்கும் எனவும், குறிப்பாக இலங்கை விவகாரத்தில் கனடா தனியான கரிசனை காட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=51447&category=TamilNews&language=tamil

2013 இல் சிங்கள நாட்டில் பொதுநலவாய அமைப்புக்களின் மாநாடு நடந்தால், அதை கனடா நிச்சயம் புறக்கணிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைகட்டி, கண்மூடி, செவிடாகி வாய்பொத்தி தமிழினம் கொடூரமாக அழிக்கப்பட்டபோது பார்த்திருந்த உலகம் இன்று எல்லாம் முடிந்தபின்பும் 3 வருடங்களாக தொடர்ந்தும் தமிழினத்தை அழித்துக்கொண்டிருக்கும்போது போர்க்குற்றம் என்று கதைத்துக்கொண்டிருக்கின்றது. யாரும் மிகவும் சகயீனமாக இருந்தால் விசாவிற்கு விண்ணப்பித்தால் விசாக்கொடுப்பதில்லை. பின்னர் அவர் இறந்தபின் விசா கொடுப்பார்கள். இது போலத்தான் கனடாவும் சர்வதேசமுமம் தமிழன் எல்லாம் அழிந்தபின் தமிழனுக்கு விஎவு பற்றிப்பேசும் என்று நினைக்கின்றேன். இது தான் நிதர்சனமாக அமையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.