Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏகாதிபத்திய அமெரிக்காவும் உலகநாடுகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏகாதிபத்திய அமெரிக்காவும் உலகநாடுகளும்

அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று சொல்வார்கள். அதென்னவோ சரியான கணிப்புத்தான். இருந்தாலும் சாக்கடை இல்லாமல் ஒரு நாடு இருக்க முடியாது. இது போல அரசியல் இல்லாமலும் ஒரு நாடு இயங்க முடியாது,

ஆனாலும் அரசியலில் நீதி என்ற வார்த்தை வெளிப்படையாகப்பேசப்பட்டாலும் உள்ளார்ந்த ரீதியில் அவ்வார்த்தைக்கு இடமில்லை. அதாவது ஆட்சியைப்பிடிக்கவும் அவர்களது கொள்கைகளை நிறைவேற்றவும் சகல துஷ்பிரயோகங்களும் பாவிக்கப்படுகின்றன.

உலகில் அமெரிக்கா என்பது உலகச்சண்டியன் வரிசையில் முதலாம் இடத்தில் இருப்பவர். இவர்கள் சொல்வது தான் நியாயம். அதன்படி தான் எல்லோரும் நடைமுறையில் இருக்கவேண்டும். என்பது தான் இவர்களது தாரக மந்திரம்.

உலக்pன் எந்தப்பாகங்களில் இருந்தும் எந்த நாட்டை எவர் ஆண்டாலும் அமெரிக்காவினது நடைமுறைகளுக்கும், அவர்களது வெளிநாட்டுக்கொள்கைகளுக்குக் குந்தம் விளைவிக்காது தங்களது சட்டங்களை நடைமுறைப்படுத்திஆட்சியைக்கொண்டு செல்லவேண்டும் என்பது அந்த அந்த நாட்டு அதிபர்களுக்கு மறைமுகமா எச்சரிக்கை செய்கின்றது. அப்படி இல்லையேல் அவர்கள் அமைதியான ஆட்சியை அவர்களது ஆட்சியை நடைமுறைப்படுத்தவிடாது குழப்பி விடுவார்கள் என்பது கடந்த கால வரலாறுகளின் நிதர்சனம். அரசியல் என்பது காலநிலைகளுக்கேற்ப சட்டை மாற்றுவது போலத்தான். அரசியல் சூழ்நிலைகள் மாறும்போது அதற்கேற்ப அரசியல் மாற்றங்களை எற்படுத்தி ஆளவேண்டும். நீதி, மனிதவுரிமை என்பவற்றிற்கு இடம் கிடையாது.

ஓடும் மீன் ஓடி உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு என்பதிற்கு அமெரிக்கா மிகவும் பொருத்தமானவர்கள். ஒரு நாட்டை அல்லது ஒரு ஆட்சியாளரை அழிக்கவேண்டுமெனின் காலம் கனியும் வரை திட்டத்துடன் காத்திருந்து அழிப்பதில் மிகவும் சமத்தர்கள்.

அணுநிலையங்களை மற்றைய நாடுகள் உருவாக்குவதை அமெரிக்கா வலுவாகத்தடுக்கின்றது. ஆனால் தானும் தனது நண்பர்களும் வைத்திருப்பதை விரும்புகின்றது. ஊருக்கெல்லோ உபதேசம் உனக்கல்லடி என்பது போல. தனக்கொரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டம். இது தான் சண்டியனின் சட்டம். நீ கத்தியைக் கீழே வைத்தால் நான் உன்னை வெட்டமாட்டன். என்பது போல. நான் கத்தியைக்கீழே போடுகின்றேன் நீயும்போடு என்பதல்ல.

முதன் முதலில் அணுகுண்டு உருவாக்கி அதைவீசியவர்களும் இவர்கள் தான். அதற்கான தண்டனையை இவர்களுக்கு எவரும் விதிக்கவில்லை. ஏனெனில் இவர்கள் உலகின் முதற்பயங்கரமான சண்டியர்கள்;.

அமெரிக்காவின் வெளிநாட்டுக்கொள்கை என்பது, மற்றைய நாடுகளை தன்னிலையிலிருந்து எப்போதும் கீழ்நிலையில் வைத்துக்கொள்வது. அதற்கான வேலைத்திட்டப்படிநிலைகள் பின்வருமாறு அமைந்துள்ளது.

ஒரு நாட்டில் உள்ள சகல விடயங்களையும் ஆராய்ந்து, அதாவது பலம் பலவீனம், பொருளாதாரம் என்பதை ஆராய்வதற்கான சபை ஒன்றை அமைத்து நாளுக்கு நாள் அதைப்பற்றிய ஆவணக்கோர்ப்புகளை தயார் நிலையில் வைத்திருத்தல்.

தன்னுடைய கொள்கைகளுக்கு எதிராகச்செல்லும் நாடுகளுக்குள் அவர்களின் பலவீனத்தை வைத்து பிரச்சனைகளை உருவாக்குதல். அல்லது அவர்களின் எதிராளிகளுக்கு ஒத்தாசையாக இருந்து பிரச்சனைகளை வலுப்படுத்துதல் அல்லது போரை உருவாக்குதல்.

பின்னர் அந்த நாட்டிலுள்ள படித்தவர்கள், பணக்காரர்கள் அல்லது நாட்டின் முதுகெலும்புபோன்ற மக்களுக்கு நாட்டைவிட்டு வெளியேறும் மனநிலைகளை உருவாக்கி, அவர்களுக்கு இமிக்கிரன் விசா வழங்கி அவர்களை நாட்டிலிருந்து அகற்றுதல். இதனால் நாடு பின்னடைவை நோக்கிச் செல்வதால் அந்த நாடு வெளிநாடுகளில் தங்கிருக்கும் நிலையை நிரந்தரமாக உருவாக்குதல். பின்னர் உதவிஎன்ற பெயரில் பொருளாதாரத்திற்கு இணக்க அடிப்படையில் உதவி வழங்;குதல். இதனால் தன்னாட்சியை அங்கு மறைமுகமாக நிலைப்படுத்திக்கொள்ளுதல். இது ஒருவருக்கு அடி போட்டுவிட்டு சாப்பாடு கொடுப்பது போன்றது.

தங்களுக்குத் துணையாக இருந்த அரச அதிபர் தங்களுக்கு எதிராக மாறிவிட்டால், அவர் ஒரு சர்வாதிகாரி என்றால் அந்த நாட்டில் வேறு எதிரானவர்கள் தோன்ற இடமளிக்கமாட்டார். எனவே இந்தச்சர்வாதிகாரி அதிபரை அவருடைய போக்கில் விட்டுப்பிடித்தல். சர்வாதிகாரியை அவருடைய போக்கில் விட்டுவிட்டால் நாட்டில் சகலருக்கும் எதிராகவும் அண்டைநாடுகளுக்கு எதிராகவும் நீதிக்குப்புறம்பான வேலைகளைச் செய்து கொடுமைப்படுத்துவார். அதைக்கண்டிக்காமலும் காணாமலும் இருப்பது. மேலும் இந்தச்சர்வாதிகாரியின் அட்டகாசங்கள் மலிந்து செல்ல ஒட்டுமொத்த மக்களும் அவரை வெறுப்பார்கள். பின்னர் மனிதவுரிமை மீறல் என்ற கோட்பாட்டின் படி அவரைப்பற்றி விளம்பரங்கள் செய்து உலகமக்களின் மனங்களில் இவன் கூடாதவன் என்ற பெயரை ஒவ்வொரு மக்களின் வாயிலாகவும் வெளிவரச்செய்து, மக்கள் மனதில் இவரை அழிப்பது சரி என்ற எண்ணக்கரு தோன்றியவுடன் தனது படைகளை அனுப்பி அவர்களைக் கொடூரமாக அழித்தல்.

அப்போது தான் நல்லவன் என்ற பெயரைத்தட்டிக்கொள்வது மல்லாமல் அந்த நாட்டிலுள்ள செல்வங்களைக் கொள்ளையும் அடித்துவிடுகின்றனர். இத்துடன் போரை நீண்டகாலமாக்கி அந்த நாட்டைச்சிதைத்துப் பின் அந்த நாட்டை அபிவிருத்தி செய்யும் பணியைத் தன்கையில் எடுத்து அதையும் தனதாக்கிக் கொள்ளுதல்;. மக்கள் மன ஒற்றுமையுடன் நடத்தியதால் இவர்கள் மீது எதுவித பழியும் வராது.

எனவே அமெரிக்காவின் உலகக்கரிசனை ஆடு நனைகிறதென்று ஓநாய்; அழுத கதைதான். அமெரிக்காவின் ஆதரவில் துப்பாக்கி தூக்கியவர்கள் எல்லோருமே பின்னர் அமெரிக்காவால் கொல்லப்பட்டதும் கொல்லப்படுவதும் கடந்த கால வரலாறுகளின் நிதர்சன உண்மை. உதாரணமாக சதாம், அன்வர் சதாத், கடாபி, மனுவல் நொரிஜேகா, பின்லாடன், முபாரக் ஆகியோர் மிகவும் பொருத்தமான உதாரணபுருஸர்கள்.

;

உண்மையில் இவர்கள் ஒரு பெரிய கண்கட்டி வித்தைக்காரர்கள். நடத்துவதையும் நடத்தி முடிப்பதையும் மக்கள் நம்பிவிடுகின்றார்கள். ஆனால் அது உண்மையானவை அல்ல என்பதும் அவர்களுக்குத்தெரியும்.

உதாரணமாக ஒரு காலத்தில் அமெரிக்காவின் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் கடாபி, சதாம், முபாரக், மனுவல் நொரியேகா, பின்லாடன் இன்று இவர்கள் கொல்லப்பட்டது யாரால்? இவ்வரிசையலி ராஜபக்ஷவும் அடங்குவார். இவரது அட்டூழியங்கள் காணப்படாதவை போல விடப்பட்டுள்ளன. காலம் வரும்போது கணக்கில் இடப்படும்.

தங்களுக்கு உரிய சாதகமான சூழ்நிலை வரும் வரைக்கும் எந்தத் தோல்வியைச் சந்தித்தாலும் பொறுமையுடன் இருந்து கடமையாற்றி பழிக்குப்பழி வாங்கும் ஏகாதிபத்தியம் அது தான் அமெரிக்கா. கண்கட்டி வித்தையில் வித்தை முடிந்தவுடன் எல்லோரும் கைதட்டி போற்றுவார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியும் இது சுத்துமாத்து விளையாட்டு என்று. அது போலத்தான் அமெரிக்காவும் நல்ல பெயர் வாங்கிக் கொள்கின்றது. மக்கள் ஏமாளிகள் ஆகி விடுகின்றனர்.

ஏமாளிகள் இருக்கும் வரை கோமாளிகளுக்குக் கொண்டாட்டம் தான்;. அன்று சமாதான காலத்தில் முக்கிய அங்கத்துவம் வகித்த புலிகளைப்புறம் தள்ளி, அமெரிக்காவில் சமாதான உடன்படிக்கையில் இல்லாத இந்தியாவையும் அழைத்து புலிகளை அழிப்பது பற்றி விரிவான திட்டம் தீட்டப்பட்டது. அதைத்தான் இறுதியில் நிறைவேற்றினார்கள்.

இப்போது மகிந்த கூட்டத்திற்கு வேட்டு வைக்க தமிழர் கூட்டமைப்பை அழைத்து பேசுகின்றார்கள். தன் சொல்லுக்குள் அடங்கவில்லையென்றால் வேட்டு வைப்பதே அமெரிக்காவின் அடக்குமுறை.

சீனாவின் செல்வாக்கு இலங்கையில் வேரூன்றியிருப்பது மேற்குலகத்திற்கும், அமெரிக்காவிற்கும் ஏன் இந்தியாவிற்கும் பெரிய தலையிடியாக இருக்கின்றது. சர்வதேச கடற்பரப்பில் தெற்காசிய கடற்பயணத்திற்கு மத்தியாக உள்ள நாடு இலங்கை. எனவே இலங்கையை கைக்குள் வைத்திருக்க அமெரிக்கா பிரயத்தனம் செய்யும். கைக்குள் கிடைக்கவிட்டால் அடித்துடைக்கும் வேலையை ஆரம்பிக்கும். பலவழிகளிலும் இலங்கை அரசாங்கத்தை விரட்டிப்பார்தாயிற்று இலங்கை இசையவில்லை. இப்போது தமிழர் கூட்டணியை அழைத்து ஆபச்சு என்றரீதியிலும் ஒரு மிரட்டல் நடக்கின்றது.

ஈலங்கை இசைந்தால் தமிழர் கூட்டணி கரையொதுக்கப்படுவார்கள். இலங்கை மிரளவில்லை எனில் இவர்களுக்கு

அந்தஸ்து பலமாக இருக்கும். எதிர்கால வல்லரசான சீனாவின் பலத்துடன் ராஜபக்ஸ இருப்பதால் இலேசில் அசைந்து கொடுக்கமாட்டார். அரபு நாடுகளில் விரலைவிட்டு ஆட்டும் அமெரிக்காவிற்கு, இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் விரல் விட்டு ஆட்டுவது ஒரு சவாலாக அமையும். ஏனெனில் அங்கு ஒரு வல்லரசு குடிகொண்டு விட்டது. எது எப்படியாயினும் மூன்றாம் உலகப்போருக்கு இலங்கை மையமாக அமையலாம். தமிழர்களைக்கொடூரமாகக் கொன்றதற்கான சாபத்தால் இந்தப்பேரழிவு இற்கு நடைபெறச்சாத்தியங்கள் நிறைவே உண்டு.

அப்போ என்ன உத்தேசம் Mr.லோகன். ராசபக்சாவை விட்டு விட்டு அமெரிக்காவை கவனிசுக்கோவோமா. தமிழரை ராசபக்கா என்ன செய்தாலும் பரவாயில்லை. இந்த கேடி அமெரிக்கா தன் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் கடாபி, சதாம், முபாரக், மனுவல் நொரியேகா, பின்லாடன் எல்லரையுமே கொன்னுட்டாங்கள். இன்று இவர்கள் கொல்லப்பட்டது யாரால்? இதற்கு அமெரிக்காவை பழி வாங்காமல் விட்டு விடலாமா?

அமெரிக்காவுக்கு பேர்ள் காபரை தாக்கியவுடனேயே யப்பானை சுட்டு பொசுக்கியிருக்கலாம். அவர்களுக்கு யப்பானை விட ஐரோப்பாவில் நடந்தவை தான் முக்கியமானைவை. தேவையோ இல்லையோ, கிழக்கு ஐரோப்பாவாவில்

ஸ்ரலினின் வெற்றி அவர்களுக்கு பிடிக்காத விடயம். 2ம் உலகப்போர் முடிந்து எல்லோரும் அடங்கிய பின்னரும் அப்போதய யப்பானிய அக்காசிகளுக்கு என்ன நடகிறது என்பது தெரியாமல் வெடி கொளுத்தி விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஸ்ரலின் சந்தர்பத்தை பயன் படுத்தி கிழக்கே திரும்பினார். ஸ்ரலினிற்க்கு, "யப்பான் பேர்ள் காபருடன் விளையாடியதால் வருவதை பார். நீயும் தேவை இல்லாதது எதையாவது செய்து என்னிடம் வாங்கி விடாதே" என்று சொல்லவே யாப்பானுக்கு அடி நடந்தது. இது ஒரு கல்லில் பல மாங்காய்கள் விழுத்திய விடம் மிஸ்டர் லோகன். எனவே ஒரு பக்கத்தை மட்டும் கவனிக்க வைக்காமல் அதை போக விட்டு விடும்.

எதிர்கால வல்லரசான சீனாவின் பலத்துடன் ராஜபக்ஸ இருப்பதால் இலேசில் அசைந்து கொடுக்கமாட்டார். அரபு நாடுகளில் விரலைவிட்டு ஆட்டும் அமெரிக்காவிற்கு, இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் விரல் விட்டு ஆட்டுவது ஒரு சவாலாக அமையும். ஏனெனில் அங்கு ஒரு வல்லரசு குடிகொண்டு விட்டது. எது எப்படியாயினும் மூன்றாம் உலகப்போருக்கு இலங்கை மையமாக அமையலாம்.

நல்ல ஆரூடம் பணடிதர் லோகன். ஆனாலும் யாரோ ஒருவர், மூன்றாம் உலக போரை விரும்பாமல் தான் காலூன்றியிருந்த லிபியா, சூடானை விட்டு சீனா பெட்டி கட்டிக் கொண்டும் போனதாக இன்னொரு இடத்தில் இந்த யாழில் எழுதியிருக்கிறார். அதற்கும் உமது பதிலை எழுதும்.

பாகிஸ்த்தான் அதிபர் பேவேஸ் முகராவும், எகித்திய அதிபர் முபராக்கும் அமெரிக்காவின் கூட்டிலிருக்கும் போதே அவர்களை விலக்க அமெரிக்கா உதவியது. சதாம் சோவியத்துறவுக்காரன். (ஈரான் அமெரிக்க உறவுக்காரர்). புதிய ரூசியாவுடன் சதாம் முழுதொடர்புகளை ஆக்க முடியாமல் போனதால் அடிவாங்கினார். கியுபாவின் நிலையும் இதுதான் என்றாலும், அதிபர் காஸ்டோ சாதுரியமானவர். சிறிய அயல் நாடென்பதால் அமெரிக்காவுக்கு அடிக்கும் அவமானம் வரும் நனமைகளை விட சிறியது. ஆனால் தாய்வானுக்கு அமெரிக்கா இல்லாவிட்டால் நிலைமை வேறு. இந்தியாவின் அருணாசலப்பிரதேசம் படும் பாட்டிற்கு, தாய்வான் எங்கே?.

ரோ கொடுக்கிற பணத்திலை சீனாவை எல்லாம் நன்னா எழுத.....?

Edited by மல்லையூரான்

மேற்குலத்திற்கு எதிராக வல்லரசுகளான உருசியா, சீனா கூட ஒரு தெளிவான கொள்கையை இல்லாமல் இருக்கின்றன.

அதேவேளை பாகிஸ்தான், ஈரான், வட கொரியா போன்ற நாடுகள் 'பயங்கரவாதம்' என்று மேற்குலகால் கூறப்படும் ஆயுதம் மூலம் ஓரளவுக்கு தலையிடி தந்தவண்ணம் உள்ளனர். இன்றும் கூட அப்கானில் பதின்நான்கு நேட்டோ படையினரை கொன்று ஒரு செய்தியை பாகிஸ்தான் (ஹக்கானி வலையமைப்பு ஊடாக) ஒரு செய்தியை சொல்லியுள்ளது. ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை ஈரான் வெற்றியாக பார்க்கிறது. வட கொரியா மீது மேற்குலம் ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.