Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைக்கான பொறிமுறையை வகுக்காமல் தோல்வியில் முடிவுற்ற கொமன்வெல்த் மாநாடு

Featured Replies

மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்காக இந்தமுறை பொதுநலவாய மாநாட்டின்போது ஆக்கபூர்வமான பொறிமுறையொன்று மேற்கொள்ளப்படுமென்று மனித உரிமை ஆர்வலர்கள் வைத்திருந்த நம்பிக்கை தவிடு பொடியாகியுள்ளது.

மனித உரிமைகளுக்கான சுயாதீன ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை, நேற்றுடன் நிறைவடைந்த பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டில் பெரும்பான்மை ஆதரவின்றி நிராகரிக்கப்பட்ட மையே இதற்கான காரணமாகும்.

பொதுநலவாய அமைப்பு உறுப்புநாடுகளில் மனித உரிமை துஷ்பிரயோகங்கள் எந்த ஒரு நாட்டில் இடம்பெற்றாலும், அந்நாட்டுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென நிர்ப்பந்திக்கும் முக்கிய பரிந்துரையைத் தடுக்க பொதுநலவாய அமைப்பின் தலைவர்கள் சனிக்கிழமை பகீரதப் பிரயத்த னத்தில் ஈடுபட்டார்கள்.இந்தப் பரிந்துரை நிராகரிக்கப்பட்டால், இந்தமாநாடு தோல்வி கண்டுவிட்டது என்ற கருத்து தலைதூக்கிவிடும் என்றும், இது ஒரு பயனற்ற மாநாடாக அமைந்துவிட்டது என்ற விரக்தி ஆட்கொண்டுவிடும் என்றும் எச்சரிக் கைகள் முன் கூட்டியே விடுக்கப்பட்டிருந்தன. எனினும், இந்த எச்சரிக்கைகளை துச்சமாகக் கருதி, தலைவர்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைந்தார்கள்.

முன்னாள் பிரிட்டிஷ் காலனித்துவ நாடுகள் உட்பட 54 நாடுகளின் தலைவர்கள் பங்கு பற்றும் பொதுநலவாய அமைப்பின் மாநாடு ஆஸ்திரேலியாவின் பின்தங்கிய நகரான பேர்த்தில் நடைபெற்றது.

காலத்துக்கேற்ற மறுசீரமைப்புகள் தொடர்பாக பரிந்துரைக்க 2009ஆம் ஆண்டு நவம்பரில் டிரினாட் டொபாகோவில் நடந்த பொதுநலவாய மாநாட்டில் 11 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நிறுவப்பட்டது.

இக்குழுவின் பரிந்துரைகளில் பொதுநலவாய நாடுகளுக்கென தனியாக மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்பதும் ஒன்று.இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளிப்பட தொடங்கின. இதையடுத்தே ஆணையாளர் நியமனம் அவசியம் என பொதுநலவாய அமைப்பு கருதியது.

எனினும், இந்தப் பரிந்துரைக்கு மாறாக, மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாக இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்கத் தலைவர்கள் தயக்கம் காட்டியுள்ளார்கள். துஷ்பிரயோகங்களுக்கு எதிராக பரீட்சார்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவே அவர்கள் முன்வந்துள்ளார்கள்.

மலேசிய முன்னாள் பிரதமரும், நிபுணர்கள் குழு உறுப்பினருமான அப்துல்லா அகமது படாவி, இது குறித்து அளித்துள்ள பேட்டியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ஆணையாளர் ஒரு பொலிஸ் அதிகாரியாக செயற்படமாட்டார். அவருடைய நடவடிக்கைகளும் கடுமையாக இருக்கமாட்டா. பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்கள், நடவடிக்கைக் குழுவினர், பொதுச் செயலர் ஆகியோரின் நடவடிக்கைகளில் இயல்பாக விடுபடுபவற்றை நிரப்பவே இந்தப் பதவி.

இந்நியமனம் பொதுநலவாய நோக்கங்களை உறுப்புநாடுகள் பின்பற்ற உதவிசெய்யும். இதுபோன்ற அர்த்தமுள்ள மறுசீரமைப்புகளை பொதுநலவாய அமைப்பு நடைமுறைப்படுத்தவேண்டும். இல்லையேல், இந்த மாநாடும் பயனற்று, தோல்வியில் முடிந்த ஒன்றாகவே கருதப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள், எச்.ஐ.வி. ஒழிப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், வேலையில்லா இளைஞர்கள் விவகாரம், பருவநிலை மாற்றம் ஆகிய பிரச்சினைகளை பொதுநலவாய நாடுகள் எதிர்நோக்குகின்றன. இந்த வகையில் நிபுணர் குழு சனிக்கிழமை 106 பரிந்துரைகளை அளித்தது. எனினும், இந்தப் பரிந்துரைகளை வெளிப்படையாக அறிவிக்க பொதுநலவாய அமைப்பு அனுமதியளிக்கவில்லை.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=50813619731787056

Amnesty slams ‘disgraceful’ Commonwealth inaction on Sri Lanka

“It is an absolute disgrace that Commonwealth leaders have agreed to hold their next meeting in Sri Lanka in spite of its appalling human rights record,” said Amnesty International's National Director Claire Mallinson.

“They are allowing war crimes to go uninvestigated, unpunished and unaccounted for. The Australian Government as host and other members of the Commonwealth have missed a crucial opportunity to show leadership on human rights,” said Ms Mallinson.

http://www.amnesty.o...comments/27123/

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.