Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாமக முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் கட்சியில் இருந்து நீக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

printButton.png| emailButton.png

பாமக முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் கட்சியில் இருந்து நீக்கம்

velmurugan.jpg

var zflag_nid="1185"; var zflag_cid="767/186"; var zflag_sid="209"; var zflag_width="300"; var zflag_height="250"; var zflag_sz="9";

பாமக மாநில இணை பொதுச்செயலாளராக இருந்தவர் வேல்முருகன். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் இவர் பாமகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில் அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உட்கட்சி பிரச்சனையால் அவர் நீக்கப்பட்டதாக தெரிகிறது.

நெய்வேலியில் தொமுச மிகப்பெரிய சங்கம். அதற்கடுத்ததாக பாமக தொழிற்சங்கத்தை வளர்த்தவர் வேல்முருகன். மேலும் நெய்வேலியில் ஒப்பந்த தொழிலாளர்களை, நிரந்தரம் செய்யக்கோரியும், நிலம் கொடுததவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து தரக்கோரியும் பல போராட்டங்களை நடத்தியவர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களை அதிகமாக கவர்ந்து கட்சியில் இணைத்ததால், பாமக நிறுவனர் ராமதாசுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் வேல்முருகன். இந்நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பாமகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேல்முருகன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அவருடைய ஆதரவாளர்களும் பாமகவில் இருந்து வெளியேறுவார்கள் என்று கூறப்படுகிறது.

- நக்கீரன்

ஈழத்தமிழர்களுக்கு பல உதவிகளைச் செய்து வருபவர் வேல்முருகன் அவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டாளி மக்கள் கட்சியில், கடைசியாக அன்புமணியும், டாக்டர் ராமதாசும் தான் மிஞ்சுவார்கள் போலுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

03.jpg 10.11.11 ஹாட் டாபிக்

.ம.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகனை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு வன்னியர் பகுதிகளில் தொண்டர்கள் கொந்தளித்திருக்கிறார்கள். இதன் உச்சகட்டமாக, கடலூர் மாவட்ட கட்சி அலுவலகத்தை வேல்முருகன் ஆதரவாளர்கள் அதிரடியாகக் கைப்பற்றி ‘டாக்டருக்கு’ அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கும், அன்பு மணிக்கும் மிக நெருக்கமாக இருந்தவர் வேல்முருகன். இதனால், இவருக்கு எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பும், கட்சியில் இணை பொதுச்செயலாளர் பதவியும் கிடைத்தது.

கடலூர் மாவட்டத்தில் வேல்முருகன் தனிப்பட்ட முறையில் தன்னை முன்னிலைப்படுத்தி வருவதாகவும், கட்சியை வளர்ப்பதைவிட தன்னை வளர்த்துக் கொள்ளவே அதிக ஆர்வம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டி கட்சிக்குள்ளேயே பனிப்போர் நடந்து வந்த நிலையில், வேல்முருகனை அதிரடியாக நீக்கியிருக்கிறது கட்சித் தலைமை.

இது குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

‘‘வேல்முருகனுக்கு ‘செக்’ வைப்பதற்காக காடுவெட்டி குருவை கட்சி களம் இறக்கியது. குருவின் ஆதரவாளரான மண்ரோடு சந்திரனை வன்னியர் சங்கத் தலைவராக்கினார்கள். இவர் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர். இதேபோல் குருவின் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதால் வே ல்முருகன் அமைதியாக இருந்தார்.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

எம்.எல்.ஏ.வாக இருந்தபோது தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல் முக்கிய தலைவர்கள் வரை எல்லோரிடமும் வேல்முருகன் நெருக்கமாக இருந்ததை கட்சித் தலைமை விரும்பவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் 3 நகராட்சிகளிலும் பா.ம.க. போட்டியிடவில்லை.

தேர்தலின் போது வேல்முருகன் அமைதி காத்ததும், கடலூர் மாவட்டத்தில் வேட்பாளர்களை களம் இறக்காமல் இருந்ததும் தலைமையை கோபப்படுத்தியது. இதுவே, வே ல்முருகன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துவிட்டது’’ என்றனர்.

இந்நிலையில், பா.ம.க.விலிருந்து நீக்கப்பட்டார் வேல்முருகன். இந்தத் தகவல் தெரிந்ததும் கடலூர் மாவட்ட பா.ம.க.வினர் கொந்தளித்தனர். மாவட்ட கட்சி அலுவலகத்தைக் கைப்பற்றினர். இதையடுத்து காடுவெட்டி குரு கடலூர் வருவதாக தகவல் வெளியானது. உடனே வேல்முருகன் கடந்த 2-ம் தேதி கடலூர் வந்தார். அவர் வருவதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் கடலூரில் குவிந்தனர்.

இந்நிலையில் பா.ம.க..வினர் போலீஸில், “பா.ம.க.வுக்கு சொந்தமான அலுவலகத்தில் கட்சியை விட்டு நீக்கப்பட்ட வேல்முருகன் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்துள்ளதைத் தடுக்கவேண்டும்’’ என்று புகாரில் கூறியிருந்தனர்.

‘இளம்புயல் பாசறை’ என்ற பெயரில் பேனர்களை கட்டிக்கொண்டு ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்தும் ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.

இதனால் காலையில் இருந்தே பா.ம.க., அலுவலகத்தின் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனால் வேல்முருகனின் அண்ணனும் பா.ம.க.வின் மாநில துணைத்தலைவ ருமான திருமால்வளவன் தனது ஆதரவாளர்களுடன் அலுவலகத்துக்கு வந்து “நாங்கள்தான் இந்தக் கட்டடத்தைக் கட்டினோம். வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது’’ என்று கூறி அலுவலகத்தைத் திறந்துகொண்டு உள்ளே சென்றார்.

இதன் பிறகு வெளியே நின்றிருந்த தொண்டர்களும் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். புகார் கொடுத்த பா.ம.க..வினர் யாரும் அலுவலகம் பக்கம் எட்டிப்பார்க்கவே இல்லை. எந்த அலுவலகம் தங்களுக்குச் சொந்தம் என்று பா.ம.க.வினர் சொன்னார்களோ, அந்த அலுவலகத்துக்கு தொண்டர்கள் புடைசூழச் சென்றார் வேல்முருகன். பிறகு அலு வலகத்தின் மொட்டை மாடியில் நின்று கையசைத்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

அதன்பிறகு, தலைமை அலுவலகத்தின் அருகே கூட்டம் நடக்க இருந்த டவுன் ஹாலுக்கு நடந்தே சென்றார்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான பா.ம.க. நிர்வாகிகள் மேடையில் அமர்ந்திருந்தனர். மாவட்டச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாள ர்கள், கவுன்சிலர்கள், முன்னாள் நிர்வாகிகள் என கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான நிர்வாகிகள் கூடியிருந்தனர்.

தலைவர்கள் பேச ஆரம்பிப்பதற்கு முன்பே மைக்கைப் பிடித்த வேல்முருகனின் அண்ணன் திருமால்வளவன், ‘தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள்’ என்று கட்சியினருக்கு வாய்ப்பூட்டுப் போட்டார். வேல்முருகன் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு செயல்படப்போவதாக அறிவித்துவிட்டு நிர்வாகிகள் அமர்ந்தனர்.

இதன் பிறகு பேச ஆரம்பித்தார் வேல்முருகன். எப்போதும் ஆவேசம் பொங்க அதிரடியாகப் பேசக்கூடிய வேல்முருகன் நிதானமாகவும் உருக்கமாகவும் பேசினார். அன் புமணி பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் உணர்ச்சி வசப்பட்டார். அழுகையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பா.ம.க.வில் தனக்கு ஏற்பட்ட அவமானங்களை உள்ளக் குமுறல்களை தொண்டர்களிடம் கொட்டித் தீர்த்தார்.

“பத்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றினேன். சட்டசபையில் நான் செயல்பட்ட விதத்தைப் பார்த்து அப்போது முதல்வராக இருந்த அம்மா, ‘வேல்முருகனைப் போன்றவர்கள் நம்மோடு இல்லையே’ என்று வருத்தப்பட்டார்.

அப்போதே என்னை அம்மாவுக்கு நெருக்கமானவர்கள் சந்தித்து அ.தி.மு.க.வில் சேர அழைப்பு விடுத்தனர். ஆனால் பாட்டாளிச் சொந்தங்களை விட்டு வர முடியாது எ ன்று மறுத்துவிட்டேன். அ03a.jpgதே போல் தி.மு.க. ஆட்சியின்போது நானும், குருவும் தி.மு.க.வுக்குப் போகப்போவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதைப் படித்த ராமதாஸ் என்னை அழைத்துப் பேசினார்.

ஆனால் எல்லா எம்.எல்.ஏ.க்களையும் அவர் முன்பு அணிவகுக்கச் செய்து வெற்று பாண்டு பத்திரங்களில் கையெழுத்தும் வாங்கிக்கொடுத்தேன். இப்படியெல்லாம் விசுவாசமாக இருந்ததற்கு எனக்குக் கிடைத்த பரிசுதான் இது.

சட்டசபையில் நான் சிறப்பாக செயல்பட்டதற்காக எனக்கு ‘பாரத ஜோதி’ பட்டத்தை கவர்னர் கொடுத்தார். இதை வாங்குவதற்காக நான் டெல்லி சென்றேன். ‘என்னிடம் சொல்லாமல் வேல்முருகன் எப்படி டெல்லி சென்று பட்டம் வாங்கலாம்?’ என்று ராமதாஸ் ஆத்திரப்பட்டார். இதற்காக என்னை தோட்டத்துக்கு வரச்சொல்லி குற்றவாளிபோல் நிற்க வைத்து விசாரணை நடத்தினார்.

இயக்குநர் சீமான் எடுத்த படத்தில் நடித்ததற்காக என்னைத் திட்டினார்கள். எல்லா எம்.எல்.ஏ.க்களின் முன்னிலையில் ராமதாஸ் என்னையும் சீமானையும் கேவலமாகத் திட்டினார். இதற்கும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

எந்த நிர்வாகியிடமும் ஒரு பைசா கூட வாங்காமல் என் சொந்தப் பணம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து கடலூரில் நான் ஒன்றரை லட்சம் இளை ஞர்களை ஒன்று திரட்டி இளைஞர் மாநாடு நடத்தினேன்.

கூட்டத்தில் ராமதாஸ் பேச ஆரம்பித்தபோது கூட்டம் கலைந்தது. அப்போது மைக்கைப் பிடித்த நான், ‘அய்யா, சின்ன அய்யா பேசி முடிக்கும் வரை யாரும் எழுந் துபோகக் கூடாது’ என்று சொன்னேன். என் பேச்சுக்குக் கட்டுப்பட்டு அத்தனை பேரும் அமர்ந்தனர். இதைப் பார்த்த ராமதாஸ் அன்றைக்கே என்னை கட்சியை விட்டு நீக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்.

‘ராமதாஸ் கலந்து கொள்ளும் கூட்டங்களில் நான் பேசும்போது, யாரும் கைதட்டக் கூடாது’ என்று தொண்டர்களிடம் கூறிய சம்பவங்களும் பல முறை நடந்திருக்கிறது. அவர்கள் இதுபோன்று ஆர்வத்தால் செய்யும் செயல்கூட ராமதாஸுக்கு என் மீது கோபத்தை ஏற்படுத்தியது. இதனை மனதில் வைத்துக் கொண்டு என்னை உதாசீனப்படு த்துவார். இப்படி பல்வேறு அவமானங்களையெல்லாம் தாங்கிக்கொண்டுதான் நான் பா.ம.க.வில் இருந்தேன். நான் அன்புமணியிடம் நெருக்கமாக இருந்தது பலருக்குப் பிடிக்கவில்லை.

‘சின்ன ஐயாவை வேல்முருகன் தவறாக வழி நடத்துகிறான். அவரிடம் இருந்து வேல்முருகனைப் பிரியுங்கள்’ என்று சொன்னார்கள். அந்த சதிகாரக் கும்பலின் பேச்சைக் கேட்டு என்னை நீக்கிவிட்டார்கள்’’ என்று தொண்டர்களிடம் தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார் வேல்முருகன்..

கூட்டம் முடிந்ததும் வேல்முருகனைச் சந்தித்துப் பேசியபோது, “நான் இப்போதும் பா.ம.க.வில்தான் இருக்கிறேன். கட்சியின் இணை பொதுச்செயலாளரான என்னை கட் சியை விட்டு நீக்க வேண்டும் என்றால் பொதுக்குழுவைக் கூட்டித்தான் நீக்க முடியும். இன்னும் ஒரு வார காலத்துக்குள் பொதுக்குழுவைக் கூட்டி வேல்முருகனை நீக்கியது சரியா, தவறா? என்று முடிவெடுக்க வேண்டும்.

என்னை நீக்கியது சரிதான் என்று பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டால் பா.ம.க. பெயரை பயன்படுத்த மாட்டேன். நான் எந்த அரசியல் கட்சிக்கும் போக மாட்டேன். சமுதாய நலன் தான் எனக்கு முக்கியம். பா.ம.க.விலிருந்து நீக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசி பா.ம.க.வுக்குப் போட்டியாக ஒரு இயக்கமாகவோ அல்லது கட்சியாகவோ நடத்துவேன்.

என்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு, முதல்வருக்கு நெருக்கமானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்கள். அதேபோல, முன்னாள் முதல்வர் க ருணாநிதி தரப்பில் இருந்தும் எனக்கு ஆறுதல் கூறினார்கள். எல்லா கட்சியிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆறுதல் கூறியதால் நான் அந்தக் கட் சிகளுக்குப் போய்விடுவேன் என்று அர்த்தம் அல்ல’’ என்றார்.

வேல்முருகன் நீக்கம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘கட்சியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கட்சி ஆரம்பித்த பலர் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டனர். ஆனால், வேல்முருகனைப் பொருத்தவரை தலைமை தவறாக கணித்துள்ளது. அவரது இழப்பு கட்சியில் நிச்சயம் அதிர்வை ஏற்படுத்தும். தனி இயக்கம் ஆரம்பித்தால் பா.ம.க.வுக்கு பெரும் சவாலாக வேல்முருகன் இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஏற்கெனவே, கட்சித் தலைமை மீது மேல் மட்டத் தலைவர்கள் முதல் கீழ்மட்டத் தொண்டர்கள் வரை கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். தாங்கள் பா.ம.க.வால் ஏமாற்றப்பட்டதாகவே வன்னிய சமுதாய மக்களும் நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், வேல்முருகன் தனி இயக்கம் கண்டால் அவர் பின்னே இளைஞர்கள் கூட்டம் சென்றுவிடும். ஐயா, சின்ன ஐயா, காடுவெட்டி குரு போன்றவர்கள் மட் டுமே கடைசியில் மிஞ்சி இருப்பார்கள். டாக்டர் ஐயா பெரிய அரசியல் தவறைச் செய்துவிட்டார்’’ என்றனர் ஆவேசமாக.

கட்சி ஆபீஸ் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பா.ம.க. மாநில துணைச் செயலாளர் சண்முகத்திடம் பேசினோம்.

‘‘கடலூர் மாவட்ட கட்சி ஆபீஸ் பா.ம.க.வுக்குச் சொந்தமானதுதான். எங்கள் நிறுவனர் ராமதாஸ் பெயரில்தான் அந்த இடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் கொடுத்த போது இது தொடர்பான ஆவணங்களையும் கொடுத்திருக்கிறோம். சப் கலெக்டர் விசாரணைக்குப் பிறகுதான் முடிவு தெரியும் என்று எஸ்.பி.யும் கூறியிருக்கிறார். பெ ரும்பாலான நிர்வாகிகள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்’’ என்றார்.

ஃபேஸ்புக்கில் குவியும் ஆதரவு

சமூக இணையதளங்களைப் பயன்படுத்தும் வெகு சில அரசியல்வாதிகளில் வேல்முருகனும் ஒருவர். அவருடைய ஃபேஸ்புக்கில் தான் பா.ம.க.வின் உறுப்பினர் பதவியிலி ருந்து நீக்கப்பட்டதாக பதிவு செய்ததும், அவருக்கு ஆதரவு தெரிவித்து செய்திகள் குவிந்துள்ளன. ‘‘தமிழுக்கும், தமிழினத்துக்கும் என் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டு ள்ளேன். இதுவே கடைசிவரை தொடரும். தலைவர் பிரபாகரன் வழியில் தொடர்ந்து பயணிப்போம்’’ என்கிற வேல்முருகனின் பதிவிற்கும் வாழ்த்துக்கள் குவிகிறது.

‘‘பா.ம.க. என சிறிதாக இருந்த உங்கள் வட்டம் உலகத்தமிழர் என்கிற பெரிதான வட்டமாக மாறியிருக்கிறது’’ என ஆரம்பித்து, ‘‘பிற கட்சிகளில் இணையாமல் உலகத் தமிழர்கள் நலனுக்காகப் பாடுபடுங்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் பின்னால் இருக்கிறோம்’’ என இருநூறுக்கும் மேற்பட்டோர் ஃபேஸ்புக்கில் வேல்முரு கனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

‘‘கட்சி அரசியல் கடந்து தமிழர்கள் நலன் காக்கும் தலைவர்களுக்கான இடம் தமிழகத்தில் காலியாக இருக்கிறது. அந்த இடம் உங்களுக்குத்தான்’’ எனவும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஈழத் தமிழர்கள் அதிகம் பேர் வேல்முருகனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ்.கலைவாணன் - குமுதம் ரிப்போட்டர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12.jpg 13.11.11 மற்றவை

பா.ம.க.விலிருந்து எத்தனையோ பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். வெளியேறியும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் ஏற்படாத ‘அதிர்வு’ இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆம்! பா.ம.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. பண்ருட்டி வேல்முருகன் நீக்கப்பட்டது தொண்டர்கள் மத்தியில் சுனாமியையே ஏற்படுத்தியிருக்கிறது. சில நாட்களாக பரபரப்பு செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கும் வேல்முருகனை சந்தித்துப் பேசினோம்.

உங்களுக்கும் ராமதாஸுக்கும் என்ன பிரச்னை?

‘‘என்னுடைய வளர்ச்சியைப் பிடிக்காத ஐயாவைச் சுற்றியுள்ள எடுபிடிகள், குறுக்கு வழியில் பதவிக்கு வந்த சிலர் என்னைப் பற்றி தவறான தகவல்களை அவரிடம் கூறி என்னை கட்சியிலிருந்து ஓரங்கட்ட எடுத்த முயற்சியின் விளைவுதான் இது. அதேபோல் கட்சியில் தவறு செய்பவர்களை அடையாளம் கண்டு ஐயாவிடமும், அவர் கு டும்பத்திலுள்ள மற்ற நபர்களிடமும் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன்.

சட்டமன்றத் தேர்தலில் தோல்வி குறித்து கடலூரில் நடந்த ஆய்வரங்குகளில் நான் பேசிய பேச்சைப் பதிவு செய்து ஐயாவிடம் போட்டுக் காட்டி நான் பேசாததையும் அதில் சேர்த்து சதி செய்துவிட்டார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் நான் வேலை செய்யவில்லை என்று பழி சுமத்துகிறார்கள். என் வீட்டிலுள்ள நகைகளை அடமானம் வைத்து தேர்தல் பணிக்கு செலவிட்டேன். கடந்த 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்தபோது இரண்டு முதல்வர்களுடன் நெருக்கமாக இருந்தேன். அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி என்னுடைய சுயலாபத் திற்காக அவர்களிடம் சென்று நான் நின்றது கிடையாது. என்னுடைய தொகுதி வளர்ச்சிக்கு என்ன வேண்டுமோ அதைத்தான் அவர்களிடமிருந்து கேட்டுப் பெற்றேன்.’’

கடலூர் பா.ம.க. அலுவலகத்தைக் கைப்பற்றியது நியாயமா?

‘‘இது ஒன்றும் கட்சியின் மாவட்ட அலுவலகம் இல்லை. இந்த இடம் ஸ்ரீனிவாச படையாச்சி, கோவிந்தசாமி படையாச்சி ஆகியோருக்குச் சொந்தமானது. வன்னிய மக்களின் பயன்பாட்டிற்கு இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர்கள் தானமாகக் கொடுத்தது.

நான் மாவட்டச் செயலாளராக இருந்தபோது அந்த அலுவலகத்தில் 25 லட்ச ரூபாய் செலவிட்டு குளிர்சாதன வசதி செய்து கொடுத்தேன். இதே இடத்தில்தான் வன்னிய இளைஞர்களுக்கு குரூப் ஒன் கோச்சிங் கிளாஸ், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மையங்களை நடத்தி வருகிறேன். பல சாதனையாளர்களை உருவாக்கி இருக்கிறது அந்த பயிற்சி மையம்.

மேலும் நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது அந்த அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று வருவதால் அப்படியே பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகமாக மாறியது.’’

இந்த இடம் ராமதாஸ் பெயரில் உள்ளதாகக் கூறுகிறார்களே?

‘‘டாக்டர் ஐயா பெயரில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் கொடுத்தால், இன்றே அவரிடம் அந்த இடத்தை ஒப்படைத்து விடுகிறேன். அந்த இடம் ஸ்ரீனிவாச படையாச்சி பெயரில் பதிவாகியிருக்கிறது. அவருடைய மகன் எனக்குக் கொடுத்திருக்கிறார். அந்த இடம் வன்னிய மக்களுக்குச் சொந்தமானது.’’

அன்புமணி ராமதாஸிடம் நெருக்கமாக இருந்தீர்கள். இவ்வளவு பெரிய பிரச்னையில் அவர் உங்களுக்குத் துணையாக இல்லையா?

‘‘எனக்காக பலமுறை வாதாடினார். ஆனால் ஐயா யாருடைய பேச்சையும் கேட்கவில்லை. ஆனால் அங்கேயுள்ள ஜி.கே.மணி பேச்சையும், 12a.jpgகுரு பேச்சையும் மற்றும் பேராசிரியர் என்று சொல்லிக் கொள்ளும் செல்வக்குமார் பேச்சையும் மட்டுமே கேட்டார்.

என்மேல் உள்ள கோபத்தில் ஏனோ அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துவிட்டார் என்று நினைத்தேன். நிச்சயமாக என் தரப்பு விளக்கத்தைச் சொல்ல ஐயாவிடமிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். ‘மக்கள் தொலைக்காட்சி’க்காக வன்னிய மக்களிடமிருந்து பல கோடி ரூபாய்களை வசூல் செய்து கொடுத்தேனோ, அதே தொலைக்காட்சியில் என்னை பா.ம.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக செய்தியைக் கேட்டவுடன் நொந்து போனேன்.

என்னை மட்டும் அல்ல, கட்சியில் கேள்வி கேட்டவர்களை எல்லாம் இன்று கட்சியிலிருந்து தூக்கி எறிந்துள்ளார்கள். பா.ம.க.வின் முதல் எம்.எல்.ஏ.வான போரூர் சண் முகம்தான் கட்சியின் பொருளாளர். அவர்தான் ஐயாவிற்கு கார் வாங்கிக் கொடுத்தார். ஒருமுறை ஐயாவின் கிளினிக் ஏலம் வரும்போது அவரின் சொந்தப் பணத்திலிருந்து அந்த கிளினிக்கை மீட்டுக் கொடுத்தார். இப்படிப்பட்டவர்களை எல்லாம் கட்சி உதாசீனப்படுத்தியது.’’

பா.ம.க.வை உடைக்க உங்களை அ.தி.மு.க. இயக்குகிறது என்று பேசப்படுகிறதே?

‘‘என் உயிர் உள்ளவரை இந்த சமுதாயத்திற்காக மட்டுமே பாடுபடுவேன். அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ, தே.மு.தி.க.வோ என்னை இயக்க முடியாது. நிச்சயமாக யாருடைய கைப்பாவையாகவும் இயங்க மாட்டேன்.’’

ராமதாஸ் கட்டுப்பாட்டில் பா.ம.க. இல்லை என்று சொல்லப்படுகிறதே?

‘‘கட்சிக்காகவும், சமூகத்திற்காகவும் 27 ஆண்டுகளாக உழைத்த என்னை எந்த விசாரணையும் இல்லாமல் நீக்கியது எந்த வகையில் நியாயம்? என் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்ல வாய்ப்பு எதுவும் கொடுக்காமல் சில கைக்கூலிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு என்னை நீக்கினார்கள். ஐயாவைச் சுற்றியுள்ள ஜால்ராக்களின் கட் டுப்பாட்டில்தான் இப்போது கட்சி உள்ளது.’’

பா.ம.க.வைக் கைப்பற்ற திட்டமிடுவதாக குற்றச்சாட்டு இருக்கிறதே?

‘‘வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கான இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்னைப் போலவே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இயக்கத்திற்காக சொத்துக்களை இழந்தவர்கள் பலர் உள்ளனர். வீட்டிலுள்ள தாலி, அண்டா குண்டாக்களை அடகு வைத்து கட்சிக்காகப் பாடுபட்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள்..

உண்மையான பாட்டாளி மக்கள் கட்சி என்பது என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் சேர்ந்ததுதான். பாட்டாளி மக்கள் கட்சியைப் முழுமையாக கைப்பற்றி பாட் டாளிகளுக்கான கட்சியாக தமிழகத்தில் வலம் வரச்செய்வோம். ஜனநாயக முறையில் நியாயமாக தேர்தலை நடத்தி முடிவெடுப்போம் . இது தொடர்பாக, தமிழகம் முழுவ தும் சென்று நான் மக்களைச் சந்திக்க இருக்கிறேன்.’’

தி.மு.க. கூட்டணிக்குச் செல்ல நீங்கள்தான் காரணம். அதனால்தான் பா.ம.க. இவ்வளவு பெரிய தோல்வியைச் சந்தித்ததாகக் கூறுகிறார்களே?

‘‘சின்ன ஐயாவிற்கு ராஜ்சபா ‘சீட்’ வேண்டுமென்று கலைஞரிடமும், ஸ்டாலினிடமும் கெஞ்சியது உண்மைதான். அவர்களும் ‘ஆலோசனை செய்துவிட்டு சொல்கிறோம்’ எ ன்றார்கள். இதனால் தி.மு.க. மீது அதிருப்தி இருந்தது. இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று ஒரு கூட்டம் போட்டுப் பேசியபோது, நான் உட்பட பல பேர் தி.மு.க. கூட்டணியில் சேர சம்மதித்தோம். தொகுதிப் பங்கீட்டின் போது ஸ்டாலினால் நான் அவமானப்படுத்தப் பட்டேன். முடிவில் தேர்தல் பணிக்குழுவிலிருந்த என்னை விட்டு, இவர்கள் மட்டும் தனியாகச் சென்று ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு கலைஞருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு வந்தார்கள். அப்போதே இவர்கள் என்னை ஓரங்கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.’’

உங்கள் சமுதாய மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

‘‘கடந்த முப்பது ஆண்டுகளாக வன்னிய மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிலிருந்து அவர்களை மீட்பேன். இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த 21 குடும்பங்களுக்கும் சமூக பாதுகாப்பை ஏற்படுத்தித் தரவேண்டும். அந்த குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு அரசு வேலை வாங்க முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்க உள்ளோம். வன்னியர்களுக்கு நலவாரியம் அமைக்கப் போராடியிருக்கிறோம். அனைத்து வன்னிய அமைப்புகளையும் ஒன்று சேர்த்து இந்த சமூகத்திற்காக என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்தியுள்ளோம்.’’

வன்னியர் சங்கத்தையும் மீட்கும் திட்டம் உள்ளதா?

‘‘வன்னியர் சங்கத் தலைவரான குரு வன்னியர்களுக்காக என்ன செய்தார்? மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நிர்வாகிகளை மிரட்டி ‘10 லட்சம் கொடு, 20 லட்சம் கொடு’ எனக் கேட்பார்.

இந்த இனத்தை இவர்கள் சுரண்டியது போதும். பட்டாளி மக்கள் கோவணம் கட்டும் நிலைமைக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளனர். இப்போது அந்த கோவணமும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்று முடித்துக்கொண்டார் வேல்முருகன்.

படங்கள்: கணேஷ்

ப. ரஜினிகாந்த்

விசுவாசத்துக்கு அங்கீகாரம் இல்லை!

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு பா.ம.க. கூடாரம் காலியாக ஆரம்பித்திருக்கிறது. ஒரு பக்கம் வேல்முருகன் நீக்கம் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, சத்தமே இல் லாமல் அ.தி.மு.க.வில் இணைந்திருக்கிறார்கள் பா.ம.க.வின் மதுரை நிர்வாகிகள்.

பா.ம.க.வின் துணை பொதுச்செயலாளர் ஆர்.கே.ரமேஷ் தலைமையில் அக்கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர், தலைமைச்செயற்குழு உறுப்பினர் போன்ற முக்கிய நிர்வாகிகளும் மதுரை மேயர் ராஷன் செல்லப்பா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்திருக்கிறார்கள்.

இவர்கள் அ.தி.மு.க.வில் சேர்ந்த விஜயம் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் ஷெயலலிதா தலைமையில் ஏராளமான தொண்டர்களுடன் அ.தி.மு.க.வில் சேருவது தான் இவர்களது திட்டமாக இருக்கிறது. பா.ம.க.வில் இருந்து வெளியேறிய ரமேஷ் மிகவும் நொந்துபோய் பேசுகிறார்.

‘‘நல்லவர்களையும், கட்சிக்காக உழைத்தவர்களையும் பா.ம.க. படிப்படியாக இழந்து கொண்டிருக்கிறது. விசுவாசமாக இருந்து உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் மறுக்கப்படு கிறது. பா.ம.க, வளர்ச்சிக்காகப் பாடுபட்டேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றினேன். அதே மனநிலையில் தான் அ.தி.மு.க.வில் இணைகிறேன்’’ என்கிறார் ரமேஷ்.

- பதி

-குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.