Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் இந்திய இராணுவ அதிகாரிகள் குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Indian_deligation_1-140x140.jpg

சிறிலங்கா படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்ற வன்னிப் பிரதேசத்துக்கு இந்திய இராணுவ அதிகாரிகள் குழுவொன்று பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்திய இராணுவத்தின் உயர் கட்டளை கற்கைநெறியைப் பயிலும் அதிகாரிகள் குழுவே வன்னிக்குச் சென்றுள்ளது.

இந்திய விமானப்படையின் அதிகாரியான எயர் கொமடோர் பி.ஆர்.நவல்கர் தலைமையிலான இந்தக் குழுவில் 16 இந்திய இராணுவ அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

ஆறுநாள் பயணத்தின் ஒரு கட்டமாக இந்தக் குழுவினர் வன்னிப் படைகளின் தலைமையகம், ஆட்டிலறிப் பாடசாலை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகம், மற்றும் பல தொல்பொருள் ஆய்வு, வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் சென்றுள்ளனர்.

நேற்று இந்தக் குழுவினர் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்குச் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளையும் இந்திய இராணுவ அதிகாரிகள் குழு நேற்று சந்திக்கவுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால் நேற்று சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்கு இந்தியப்படை அதிகாரிகள் குழு சென்றபோது, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க இவர்களைச் சந்திக்கவில்லை என்று மற்றொரு தகவல் கூறுகிறது.

சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளர் றியர் அட்மிரல் ஜெயந்த பேரேராவே இவர்களை வரவேற்று கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை சிறிலங்கா கடற்படை எவ்வாறு தோற்கடித்தது என்பது பற்றி, றியர் அட்மிரல் ஜெயந்த பெரேரா விளக்கமளித்துள்ளார்.

http://www.vanakkamnet.com/

என்ன மிகுதியாகவுள்ள தமிழர்களையும் அழிக்கிறதுக்கு பிளான் பண்ணுறாங்களோ பாதகனுகள் ?

  • கருத்துக்கள உறவுகள்

பங்கு கேட்க வந்திருப்பார்கள்!

குறுகிய காலத்தில் இது இவர்களின் இரண்டாவது விஜயம் என்று நினைக்கிறேன். ராசபக்சாக்களின் பீதி அவர்களையும் தொற்ற தொடங்கியிருக்கிறது. அவர்கள் இந்த இக்கட்டிலிருந்து தங்களைத் தாங்கள் காப்பற்ற வேண்டுமாயின் இன்னொரு IPK யை இலங்கைக்கு அனுப்பிவைத்து பார்க்கலாம். எதற்கும் (கச்ச தீவை இலங்கைக்கு கொடுத்த மாதிரி) அருணசலப்பிரதேசத்தை சீனாவுக்கும், கஸ்மீரை பாகிஸ்தானிற்கும் கொடுத்தால் தெற்கே ஒரு படையை தேவைப்படும் போது அனுப்பி பார்க்கலாம். இல்லையென்றால் அவளைத்தொடுவானேன் அவதிப்படுவானேன் என்றுதான் வந்து முடியும்.

மலையாளத்தானுகள் போட்ட பாதுகாப்பு திட்டம் எங்கெங்கோவெல்லாம் உதைக்கிறது. மலையாளத்தார் தென் சீனாக்கடலில் வியட்நாமிற்கு ஓயில் கிண்ட போக அவன் இலங்கைக்கு ஒயில் கிண்டுகிற கதையோடு சிங்களத்துடன் வந்து அணைந்துவிட்டான். சீனா இலங்கைக்கு காபர் கட்ட 100ரூபா கொடுத்தால் 25 ரூபாக்கள் காபர் கட்ட,25 ராச பக்சாகளுக்கு, 25 மலையாளத்தான்களுக்கு, மிகுதி 25யும் வியட்நாமிடம் கொடுத்து புத்தகத்தை சமநிலை படுத்தும் படி சீனாகாரர் சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கு. வியட்நாம் நெல்லுக்கு இறைத்தநீர் புல்லுக்கும் பொசிவது வழக்கம் தானே என்றுவிட்டு ஓயில் கிண்ட வந்திருக்கு. இதில் பாதி பிரச்சனை இந்தியன் கம்பனி காஸ் கண்டுபிடித்ததால் வந்த வினை. என்ன செய்வா சோனியா பாவம்!

ஊரில் ஆபத்து அந்தரம் என்றால் இழவு சொல்ல நாலு திசைக்கும் நாலு பேரை அனுப்புவதுண்டு. அப்படி ராசபக்சா மேற்கை இழவு சொல்லி அனுப்பியவர் ஒரு ஆள் ரூசியாவையும் அழைத்து வந்திருக்கிறார் ஓயில் கிண்ட. கடவுள் மேலேயிருந்துதான் எல்லாவற்றையும் பார்க்கிறவர். முள்ளிவாய்க்காலில் குண்டுகள் அடித்து அப்பாவிகளை கொல்லும் பொதும் மேலே இருந்த்து பார்த்துகொண்டுதானிருந்தவர். அவர் இலங்கையில் இந்திய ராணுவ நடமாட்டத்தையும், சீனாவின் கப்பல்கள் துறைமுகம் கட்டுவதையும், இலங்கை ஓயில் கிண்டுவதையும் கூட மேலேயிருந்த்து பார்த்துகொண்டுதானிருப்பார்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.