Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்ற விசாரணைக்கு ஐ.நா உத்தரவிட்டால் சிறிலங்கா ஒத்துழைக்குமாம்

Featured Replies

[ சனிக்கிழமை, 05 நவம்பர் 2011, 01:50 GMT ] [ கனடா செய்தியாளர் ] srilanka%20flag.jpgபோர்க்குற்றச்சாட்டுகளால் சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை கனடா நிறுத்திக் கொண்டால், சிறிலங்காவுக்குப் பாரிய இழப்பு ஏற்படும் என்று சிறிலங்காவின் மூத்த அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஒட்டாவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் கனேடிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆனால் கனடாவின் உதவிகள் தடைப்பட்டு, இழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடன் நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ள கனடா, 1950ம் ஆண்டில் இருந்த நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது.

சிறிலங்காவில் போர் முடிவுகள் வந்த பின்னர் 35 மில்லியன் டொலரை கனடா உதவியாக வழங்கியுள்ளது.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் கனேடியப் பிரதமர், அடுத்த கொமன்வெல்த் மாநாடு சிறிலங்காவில் நடைபெற்றால் அதைப் புறக்கணிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஒட்டாவா தூதரகத்தில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,

“சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் கனடா எம்மைக் கைவிட்டு விடக் கூடாது.

எமக்கு எல்லா நாடுகளினது ஆதரவும் தேவைப்படுகிறது. குறிப்பாக கனடாவின் உதவி அவசியமானது.

அவர்கள் பொருள் உதவி செய்துள்ளார்கள். வழமைக்குத் திரும்புவதற்கு அவர்கள் எமக்கு உளரீதியான பலத்தைக் கொடுக்க வேண்டும்.

கனடா உதவிகளை வெட்டினாலோ, அடுத்த கொமன்வெல்த் கூட்டத்தை புறக்கணித்தாலோ அதை நாம் இல்லாமல் செய்ய வேண்டும்.

சிறிலங்காவில் நடக்கும் கொமன்வெலத் கூட்டத்தில் கனடாவின் பங்கு இல்லையென்றால் மோசமாக இருக்கும்.

ஐ.நா நிபுணர்குழுவின அறிக்கை பாரபட்சமானது. ஒருபக்க சாட்சியங்களைக் கொண்டது.

அறிக்கையை இறுதி செய்வதற்கு முன்னர் நிபுணர்குழுவுக்கு முன்பாக எமது ஆலோசனைகளை கூறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உத்தரவிடுமானால், சிறிலங்கா அரசாங்கம் அதற்கான கதவுகளைத் திறந்து விடத் தயாராகவே உள்ளது.

ஆனால் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படுவது சிறிலங்காவின் இறைமையை மீறுகின்ற செயலாகும்.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரும், கனடாவில் வாழும் சுமார் 300,000 பேரைக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் அழுத்தங்களுக்கு அடி பணிந்தே கனேடிய அரசாங்கமும், கனேடியப் பிரதமர் ஹார்பரும் அடிபணிந்து விட்டதாகவும் வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் சிறிலங்கா அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் இந்தக் குற்றச்சாட்டை கனேடிய தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை நிராகரித்துள்ளார்.

மனிதஉரிமைகளின் சார்பிலேயே கனடா இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“கனேடியப் பிரதமரின் உறுதியான நிலைப்பாடு குறித்து கனடாவிலுள்ள தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20111105104992

இது முழு உலகையும் எமாற்ற போடுகிற தந்திரம். இப்படி கூறினால் உலகம் இவர்கள் மீது குற்றம் இல்லை என்று நம்பும் என்று நினைக்கிறாரகள்.

கனடா வினது முதல் கோரிக்கை ஐ நா அறிக்கையை நடைமுறைப்படுத்துவது. உள்நாட்டு விசாரணை ஆக்கபூரவமாக முன்னேடுக்கப்படாவிட்டால்த்தான் சர்வதேச விசாரணை. எனவே இவர்களின் உள்நாட்டு விசாரணை பிசு பிசுத்து போய்விட்டதால்த்தான் சர்வதேச விசாரணை நிச்சயம் என்று தாங்களே இப்பொழுது நம்ப தொடங்கியிருக்கிறர்கள்.

Edited by மல்லையூரான்

எனவே இவர்களின் உள்நாட்டு விசாரணை பிசு பிசுத்து போய்விட்டதால்த்தான் சர்வதேச விசாரணை நிச்சயம் என்று தாங்களே இப்பொழுது நம்ப தொடங்கியிருக்கிறர்கள்.

எல்லாம் இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் அதை வைத்து சிங்களம் செய்யவிருக்கும் பிரச்சாரத்திலும் தங்கியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்போரை இலக்கு வைத்து தமிழர் தரப்பும் தமக்கு ஆதரவானவர்களை இணைத்து முறியடிக்கவேண்டும்.

அப்போது ஐ.நா. ஊடாக அடுத்த மாசிமாத மனித உரிமைகள் அமர்வில், ஒரு சுயாதீன விசாரணைக்குழு அமைக்கப்படலாம்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.