Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம் இனி - ஈழத்தின் கோலம் மாறும்! - காசி ஆனந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

35.jpg 09.11.11 மற்றவை லங்கையில் தமி ழர்கள் சுதந்திரப் போராட்டம் முழுதாக நசுக்கப்பட்டு விட்டது. இனி அங்கே தமிழர்கள், சிங்களர்கள் தருவதை ஏற்று இரண்டாம் தர பிரஜைகளாக வாழ வேண்டியதுதான். மீண்டும் ஒரு போராட்டம் சாத்தியமில்லை’ என்கிறார்கள் ஈழத் தமிழர்கள் சிலர். ‘இல்லை போராட்டம் மீண்டும் தொடங்கும், வரும் காலத்தில் தமிழீழம் மலர்ந்தே தீரும்’ என்கிறார்கள் வேறு சிலர். உண்மை நிலை என்ன? ஈழக் கவிஞர் காசி ஆனந்தனிடம் பேசினோம்.

‘‘தமிழீழத்தில் அழிவை மட்டுமல்ல இன்று இழிவையும் சுமந்தே வாழ்கிறோம். அழிவைத் தாங்கலாம் - இழிவைத் தாங்கலாமா?

வெள்ளைக்காரன் இலங்கையை விட்டு வெளியேறிய 194835a.jpg தொடக்கம் முதல் இன்றுவரை 63 ஆண்டுகள், வெட்கம் சுமந்த வாழ்க்கைதான். அரசியல் மேடைகளில் தமிழன் சிங்களவர்களால் இன்றும் ‘கள்ளத்தோணி’ என்றே அழைக்கப்படுகிறான்.

இனவெறி பிடித்த சிங்களவர்களின் பேரணிகளில் ஒருவன் ‘வடை தோசை’ என்று முழங்குவான். கூட இருப்பவர்கள் ‘அப்பிட்ட எப்பா’ என்று தொடர் முழக்கம் செய்வார்கள். ‘வடையும் தோசையும் எங்களுக்கு வேண்டாம்’ என்று இதற்குப் பொருள். தமிழர்களை ‘வடை தோசை’ என்று அவர்கள் இழிவுபடுத்து கிறார்கள்.

சிங்களத்தில் ‘வள்ளோ’ என்றால் நாய் என்று பொருள். ‘தமிழனை ‘தமிழவள்ளோ’ (தமிழ்நாயே) என்று சிங்களத்தில் அழைப்பது அவர்களிடையே ஒரு காலத்தில் வழக்கமாக இருந்தது. பிரபாகரனின் வருகைக்குப் பின்பு ‘தமிழ கொட்டியா’ என்று அழைத்தார்கள். சிங்களத்தில் ‘கொட்டியா’ என்றால் புலி என்று பொருள். அவர்கள் வாயில் நாயாக இருந்த தமிழனை பிரபாகரன் புலியாக மாற்றினார். இருந்தும் என்ன? முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு மீண்டும் இன்று சிங்களவர்களின் வாயில் தமிழன் நாயாகவே தொடர்கிறான்...

இன்று கொழும்பில் தமிழீழப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கக்கூடாது. பொட்டு வைத்த பெண்கள் தமிழ்ப் பெண்கள் என அடையாளம் காணப்பட்டு சிங்களவர்கள £ல் தாக்கப்படுகிறார்கள். தமிழர்களின் வீடுகள் சிங்களப் படைகளால் முற்றுகை இடப்படுகின்றன. ஒவ்வொரு முற்றுகையிலும் தமிழர்கள் மிரட்டப்படுவதும் தாக்கப்படுவதும் நடுங்கி ஒடுங்குவதும் தலைகுனிவாக இருக்கிறது.

சிங்களப் படை முகாம்களுக் குத் தமிழ்ப் பெண்கள் அழைக்கப் படுவதும் கட்டாயப் பாலியல் வன்முறைக்கு இலக்காவதும் கசக்கிப் பிழிந்து வீசப்படுவதும் சிதைத்து அழிக்கப்படுவதும் நடக்கிறது.

தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திச் சாகடிப்பது மட்டுமல்ல - அவர்கள் பிணங்களை ஆடை களைந்து அம்மணக் கோலத்தில் வீசுவதும் - அவ்வு டல்களை நிழல்படம் ஆக்கி பார்த்துப் பார்த்து மகிழ்வதும் சிங்களவர்களின் தசை வெறியாக இருக்கிறது. தமிழ்ச் செய்தி அறிவிப்பாளர் இசைப்பிரியாவின் ‘அம்மண உடல் நிழல்படத்தை’ உலகம் பார்த்துக் கண்ணீர் விட்டது ஞாபகம் இருக்கலாம். தமிழினம் இத்தகைய இழிவை வரலாற்றில் இதற்கு முன்பு சந்தித்ததே இல்லை.

தமிழர் கல்லறைகளைப் பிளந்து தூள் தூளாய் உடைத்தெறிகிறார்கள். சிலைகளாகக் கூடத் தமிழீழத்தில் நாங்கள் நிற்க முடிய வில்லை. தமிழ் மாவீரன் திலீபனின் சிலை - நஞ்சுண்டு தமிழர் விடுதலைப் போருக்கு உயிரூட்டிய சிவக்குமாரின் சிலை அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கற்குவியல்களாய்க் கிடக்கின்றன.

அங்கே இன்று சொல்ல முடியாத இழிவுகளைத் தாங்கி தமிழன் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கல்லாய் கிடக்கிறான்.

இன்னொரு பக்கம், என் தாயகத்தைக் காப்பாற்ற முடியாத கோழையாகத்தானே நான் என் மண்ணை விட்டு ஓடிவந்தேன் என்னும் இழிவு சுமந்த பெருமூச்சு ஒவ்வொரு புலம்பெயர் ஈழத் தமி ழனையும் எரித்துக் கொண்டே இருக்கிறது.

பிரபாகரன் விடுதலையை வாங்கித் தராவிட்டாலும் தமிழர்களுக்கு மானத்தை வாங்கித் தந்திருந்தார். அந்த அழகான தமிழீழம் மூன்று இலட்சம் சிங்களப் படையினரின் இரும்புச் செருப்புகளின் கீழ் அமுங்கிக் கிடக்கிறது.

குனிந்த தலையோடு தமிழீழத் தேசிய இனம் இழிவு சுமந்து குமுறி நிற்கிறது. இதனால், விடுதலைக்கான தேவை தமிழீழத்தில் முன்பை விடக் கூடுதலாக விரிவடைந் திரு ப்பதையே பார்க்கிறோம்.

எனவே, காலம் மாறும் - ஈழத்தின் கோலம் மாறும்’’ என் கிறார் கவிஞர் காசி.ஆனந்தன், நம்பிக்கையுடன்..

- குமுதம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காற்றை அடக்க அடக்க இயலுமானவரை அடைபட்டுக்கிடக்கும். இனி இல்லை என்ற கட்டம் வரும் போது வெடிக்கும. தவிர்க்கமுடியாதது. ஈழக்கனவு தமிழர்கள் மனதில் சாகவில்லை. தமிழரின் துடிப்பு அடங்கவில்லை. ஈழம் காணும் வரை அடங்காது என்பது உண்மை. தமிழீழத்தைவிட ஸ்ரீலங்காவையே தமிழ் ஆக்குவது தான் பொருத்தமான விடயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.