Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்போது இலங்கை தொடர்பாக அதிக ஆர்வம் ஏன்?; காரணத்தை விளக்குகிறார் ஆர்மிரேஜ்

Featured Replies

யுத்த காலத்தில் புலிகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு என்ன? இப்போது இலங்கை தொடர்பாக அதிக ஆர்வம் ஏன்?; காரணத்தை விளக்குகிறார் ஆர்மிரேஜ்

விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பென்ற எண்ணப்பாட்டை சர்வதேச சமூகம் கொண்டிருந்தமை நியாயமற்றதும் ஆழ்ந்த சிந்தனையற்ற எண்ணப்பாடுமாகும் என்று அமெரிக்காவின் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் ஆர்மிரேஜ் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பான தகவல்களை ஆர்மிரேஜ் வெளியிட்டுள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்புத் தொடர்பான மீளாய்வு அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆர்மிரேஜ் இந்த விபரங்களை வெளியிட்டிருக்கிறார்.

யுத்த காலப்பகுதியில் இலங்கை தொடர்பான புரிந்துணர்வை விளங்கிக்கொள்ள சர்வதேச சமூகம் உண்மையில் எடுத்திருந்த நிலைப்பாடு இதுவேதான் என்றும் அதுவே நெருக்கடிகளில் ஒன்றாக அமைந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச சமூகம் இலங்கை பற்றி மிக சிறியளவிலேயே விளங்கிக் கொண்டிருந்தது என்பது தனது கருத்தென்றும் அவர் கூறியுள்ளார்.

ஆயினும், நோர்வே சில புரிந்துணர்வைக் கொண்டிருந்தது. மெதுவாக ஏனையயோரும் தமது கண்களைத் திறந்து பார்ப்பதற்கு அதாவது, பிரச்சினைகள் மற்றும் சிக்கலான தன்மை குறித்து மற்றையோரும் அறிந்துகொள்வதற்கு நோர்வே உதவியது என்றும் ஆர்மிரேஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

இலங்கையிலும் பார்க்க 9/11 பின்னரான விடயங்கள் உலகின் நிகழ்ச்சி நிரலில் மிகவும் அழுத்தத்தை ஏற்படுத்தம் விவகாரங்களாகக் காணப்பட்டன. அது மிகவும் உண்மையான விடயமாகும். 9/11 இடம்பெற்றிருக்காவிடினும் கூட இலங்கை தொடர்பாக சர்வதேச சமூகத்தின் ஆர்வம் மிக மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்திருக்கும் என்பது கருத்தாகும். இப்போது வர்த்தக ரீதியாக அதிகளவு ஆர்வம் காட்டப்படுகிறது. ஏனெனில், நாங்கள் பாரிய அதிகாரப் போட்டிகளில் சம்பந்தப்பட்டுள்ளோம். இப்போது அதிகளவுக்கு ஆர்வம் காணப்படுகிறது. நிச்சயமாக இந்தியா எப்போதுமே ஆர்வத்தைக் கொண்டிருந்தது. ஆனால், சீன அமெரிக்க விரோதமானது முன்னரங்கத்திற்கு வந்துகொண்டிருக்கின்றது. அது இலங்கையை மத்திய ஸ்தானத்தில் முன்னணி அரங்கிற்குக் கொண்டுவந்துள்ளது.

இலங்கை போன்ற துன்பியலான விவகாரத்தில் சிக்கலைக் குறைப்பதற்கான முயற்சியை நான் மிகவும் பாராட்டுகிறேன். வெற்றியோ தோல்வியோ நோர்வேயின் அந்த முயற்சியை மெச்சுகிறேன். ஆனால், நிலைவரங்களை சகலருமே புரிந்துகொள்ளவேண்டுமென நான் விரும்புகிறேன். பொறுப்பிலிருந்து நான் வெளியேறி கொள்கை வகுப்பாளராக வந்தபோது என்னிலும் பார்க்க புத்திசாலிகளான சிலர் எனக்கு ஒரு விடயத்தைக் கூறினார்கள். இப்போது இந்த விடயம் அதிகளவு இலகுவதாக இருக்கும். நீங்கள் அமர்ந்திருந்து அதிகளவு சிந்திக்க முடியும். எதிர்பார்ப்புடன் இந்த விடயங்களை சமாளிக்க முடியும் என்று கூறினர்.

வெளிவிவகாரக் கொள்கையை முன்னெடுப்பதோ அல்லது இலங்கையைப் போன்று சமாதானத்தைத் தேடுவதோ கச்சிதமான முறையில் சொசேஜைத் தயாரிப்பது போன்றதென்பதை நான் கண்டறிந்திருந்தேன். அதுவே வெளியுறவுக் கொள்கை தொடர்பான சகல நடவடிக்கைகளிலும் காணப்படும் விடயமாகும். நான் இந்த அறிக்கையை விமர்சிக்கவில்லை. அந்தமாதிரியான மோசமான சூழ்நிலையை எடுத்துக்கொள்வது சாத்தியமற்றது என்பதை நான் சுட்டிக்காட்டுகின்றேன்.

அத்துடன் அந்த நிலைவரத்தைத் தெளிவானதும் கச்சிதமான முறையிலும் தாக்கத்தைக் குறைப்பது என்பது அசாத்தியமானதாகும்.

"யாரை நாங்கள் அனுப்புவோம். எங்களுக்காக யார் செல்வார்கள் என்பதற்கு பதிலானது நான் இங்கே இருக்கிறேன் என்னை அனுப்புங்கள் என்ற வாசகம் கிறிஸ்தவர்களின் பைபிளில் உள்ளது. இந்த பதிலானது நோர்வே இராச்சியத்திலிருந்து வருகின்றது என்று நான் நினைக்கின்றேன். "இங்கு நான் உள்ளேன் என்னை அனுப்புங்கள்' என்பதாகும். இந்த நடவடிக்கைகளை (இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை) நோர்வே முன்னெடுத்துச் சென்றது. சாத்தியமான தீர்வுக்கு அது இட்டுச் சென்றது. ஆயினும் இறுதியில் தீர்வு காணாத பிரச்சினைகள் இருந்தன.

எனது கருத்தின் படி முதலாவதாக இரு பிரதான கட்சிகளுக்கும் (இலங்கையின்) இடையிலான பகைமை ஒத்துழைப்பு குறைவான தன்மை என்பனவற்றிலும் பார்க்க இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கும் இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான தனிப்பட்ட விரோதமே இருந்தது என்பது எனது கருத்தாகும். இது தனிப்பட்ட விரோதமாகும். இந்தப் பிரச்சினையை நீங்கள் எவ்வாறு தீர்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது.

இரண்டாவதாகக் காணப்பட்ட விடயம் பிரபாகரனின் தீர்மானம் எடுப்பது தொடர்பான மோசமான விடயமாகும். அவரிடம் போதிய நவீன நோக்கு இருக்கவில்லை. இந்நிலையில் நீங்கள் இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பீர்கள் என்பது எனக்கு தெரியாமல் இருந்தமை இரண்டாவது விடயமாகும்.

அரசாங்கத்தில் நான் இருந்தபோது நான் முழுக்காலமும் அச்சத்தைக் கொண்டிருந்தேன். அதாவது நோர்வே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அவர்களை பாதிப்பில் கொண்டு செல்வதற்கு வழிவகுக்கும் என்று அச்சம் கொண்டிருந்தேன். அமெரிக்காவிற்கு இடம்பெற்ற விடயம் இங்கும் ஏற்பட்டுவிடுமென அச்சம் கொண்டிருந்தேன். ஆனால், அது ஒருபோதும் நடைபெற்றிருக்கவில்லை.

எவரினதும் உள்நாட்டு யுத்தத்தில் நீங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் போது உடனடியாகவோ அல்லது காலம் தாழ்த்தியோ நீங்கள் ஏதோ ஒரு தரப்பைச் சார்ந்தவர்கள் என்று நோக்கப்படுவீர்கள். லெபனானில் இந்த விடயம் எங்களுக்கு நேர்ந்தது. ஆனால், உள்நாட்டு யுத்தத்தில் நீங்கள் ஒருதரப்பினர் பக்கம் இருக்கின்றீர்கள் என்று நோக்கப்பட்டால் மோசமான விளைவுகள் ஏற்படாது. நோர்வே அரசுக்கு அதிகளவு உதவியை நாங்கள் வழங்கவில்லையென்றே நினைக்கிறேன். நான் உட்பட அமெரிக்காவில் புரிந்துணர்வின்மை அதிகளவுக்குக் குறைவானதாக இருந்தது. காலணித்துவவாதத்தின் உணர்வுகள் நீடித்திருந்தமை தலைவலியாகக் காணப்பட்டது. ஒரு காலத்தில் நாங்களும் காலனித்துவ சக்தியின் கீழ் இருந்துள்ளோம். ஆயினும் 200 வருடங்களாக காலணித்துவ தலையீட்டுத் தலைவலி குறைந்துவிட்டது.

இந்த விடயம் நிச்சயமாக இலங்கையில் இருக்கவில்லை. ஒஸ்லோவில் இடம்பெற்ற மாநாட்டிற்கு நான் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டேன். மாநாட்டில் அமெரிக்காவின் பிரசன்னம் அன்டன் பாலசிங்கத்திற்கு சமிக்ஞையை அனுப்புவதாக அமையுமென அமெரிக்கா ஊகித்திருந்தது. ஆயினும் எனது வார்த்தைகள் நிச்சயமாக அவருக்கு சமிக்ஞையைக்கொடுத்திருக்கவில்லை. உண்மையில் அது தீய்மையான சமிக்ஞையாகவே இருந்திருக்கக்கூடும். 9/11 பின்னர் எமது உணர்வுகள் பயங்கரவாதம் பற்றியதாகவே இருந்தது. ஒஸ்லோவிற்கு வருவதற்கு அந்தத் தருணத்தில் அனுமதியைப் பெற்று அன்டன் பாலசிங்கத்துடன் பிரசன்னமாகி இருப்பதற்கான முயற்சியில் நான் தோல்வியடைந்து விடுவேன் என்று நினைத்தேன். சகலரையும் போன்றே பிரச்சினைக்கு இராணுவத்தீர்வில்லை என்ற எண்ணப்பாட்டை நான் கொண்டிருந்தேன்.

முன்னரங்க நிலைகளுக்கு என்னை ஜெனரல் சரத் பொன்சேகா அழைத்துச் சென்றிருந்தார். கெலிஹொப்டரில் இருந்த போதிலும் முன்னரங்கப் பகுதிக்கு சென்றுகொண்டிருந்த போதிலும் அரசியல் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு கிடையாது என்றும் ஆனால் இராணுவப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வே உள்ளது எனவும் என்னிடம் கூறினார். அங்கு இராணுவப் பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு காணப்பட்டது. இந்த இரு விடயங்களிலும் உள்ள வித்தியாசத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

2006 இல் வாஷிங்டனுக்கு அன்டன் பாலசிங்கத்தை அழைப்பதற்கு எனது தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்துமாறு என்னை அணுகிய தரப்பினர் கேட்டுக்கொண்டனர். அவர் பயங்கரவாதக் குழுவின் உறுப்பினராக அச்சமயம் நோக்கப்பட்டார். நான் தனிப்பட்ட முறையில் அதனைச் செய்தேன். இராஜாங்கத்திணைக்களத்தை அணுகியபோது அவர்கள் எனது தனிப்பட்ட அங்கீகாரத்திற்காக அனுமதியளித்தனர். அனுமதிவழங்கப்பட்ட அன்றைய தினத்தில் இராணுவக் காவலரண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இறுதியில் எவருமே சமாதானத்தை விரும்பவில்லை என்பதை நாங்கள் யாவரும் அறிந்துகொண்டோம். இதுவே இங்குள்ள விடயமாகும்.

http://www.thinakkural.com/news/all-news/local/9618-2011-11-15-07-56-11.html

  • தொடங்கியவர்

Expressing dismay at the “chauvinistic attitude” of the Sri Lankan state, former US Deputy Secretary of State Richard Armitage said on Friday the international community was united in its criticism of Sri Lanka’s conduct in the north and east and that SL President Mahinda Rajapaksa would not be welcomed internationally unless conditions there improved. “I don’t think anyone disagrees that the Tamil people have been mistreated and are continuing to lack – across the board – fundamental freedoms, dignity, etc,” Mr. Armitage told the audience.

“Much to my dismay the government of Sri Lanka is still caught up in a chauvinistic attitude,” Mr. Armitage said.

“I don’t think they’ve been far sighted enough in their approach to the north and east. There has been a somewhat lessening of violence there, somewhat lessening of the abductions and things of this nature, but not sufficient.”

From the US point of view we are quite dismayed at the lack of progress in human freedoms, human rights, etc, and I made that view known [to SL President Rajapaksa].”

“But what to do about it is the question. [Firstly] the international community is generally coalesced around the fact that the north and the east particularly need protections, and the government of Sri Lanka has to move in that direction. … That is the united message the international community gives.

“Second, I don’t think President Rajapaksa is going to be widely welcomed internationally – across the board – until there is some movement. Maybe that’s the wrong strategy, but that’s the way things are going.”

“I think in two conversations with President Rajapaksa he actually understood - better than I had thought – what the government has to do.”

Mr. Armitage speculated that SL President Rajapaksa might be constrained by chauvinist political forces. However, Mr. Solheim suggested otherwise.

“[Rajapaksa] has the strongest position of any Sri Lankan President ever; huge majority in the parliament, huge electoral victory, fantastic – from his point of view – military results,” Mr. Solheim said.

“So why is he not using this opportunity to reach out to [the Tamils] and find a settlement?," the failed peace broker wondered.

Asked about India’s expectations after the end of Sri Lanka’s war, Mr. M.R. Narayan Swamy, Executive Editor with Indo Asian News Service (IANS) said:

“The expectations [of India] are the same as the rest of the international community. Nobody wants Sri Lanka to develop into a state where [the Tamils] feel permanently a minority – politically, culturally, in every sense of the term. If in the past the Sri Lankan state gave the argument there was the problem of the LTTE, they can’t advance that argument anymore,” said Mr. Swamy ignoring the structural genocide against Eezham Tamils since the island got its independence, and which is continues till date within the unitary system of Colombo.

Meanwhile, in a news feature appeared in IANS on Sunday Mr. Narayan Swamy highlighted Solheim revealing a secret meeting between the LTTE and the Indian officials ahead of 2002 CFA.

Solheim declined to say where the meeting took place or who participated in the meeting from the two sides. “Solheim also added that contrary to public knowledge, the Indian government, then led by the Bharatiya Janata Party (BJP), played a key behind-the-scenes role in the framing of the Norwegian-sponsored CFA,” the IANS feature reported.

Discussing the peace process and the evaluation report in a panel meeting conducted at the release of the report on Friday, apart from Messrs Armitage, Solheim and Narayan Swamy, the other speakers were Mr. Milinda Moragoda (former Sri Lankan Minister and government peace negotiator), Prof. Gunnar M. Sørbø, (team leader for the evaluation), Dr Jonathan Goodhand (Reader in Conflict and Development Studies, SOAS and deputy team leader for the evaluation) and Dr Suthaharan Nadarajah (lecturer with Centre for International Studies and Diplomacy, SOAS – who was not involved in the evaluation). The panel was chaired by Ms. Frances Harrison, Head of News at Amnesty International and former senior BBC correspondent.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=34612

  • தொடங்கியவர்

Discussing the peace process and the evaluation report in a panel meeting conducted at the release of the report on Friday, apart from Messrs Armitage, Solheim and Narayan Swamy, the other speakers were Mr. Milinda Moragoda (former Sri Lankan Minister and government peace negotiator), Prof. Gunnar M. Sørbø, (team leader for the evaluation), Dr Jonathan Goodhand (Reader in Conflict and Development Studies, SOAS and deputy team leader for the evaluation) and Dr Suthaharan Nadarajah (lecturer with Centre for International Studies and Diplomacy, SOAS – who was not involved in the evaluation). The panel was chaired by Ms. Frances Harrison, Head of News at Amnesty International and former senior BBC correspondent.

Sri Lanka at 'critical point' post-LTTE, says politician ( Mr. Milinda Moragoda )

"We stand at a critical point. We have an opportunity to make our future," Milinda Moragoda, who has held many cabinet posts in the past, said on the sidelines of an event here.

Sri Lankans could "either lay the foundation for a prosperous Sri Lanka or potentially sow the seeds for another conflict", said the 49-year-old, who in December 2009 founded the Sri Lanka National Congress with a view to promoting national unity, inclusiveness and political reforms.

Moragoda said Sri Lanka remained a divided country, the most visible and major factors factored around religion and ethnicity.

"Political parties have become tribal, there is too much patronage system," said the former MP who is now considered close to President Mahinda Rajapaksa. "A lot of this," he added, "is because of the corrosive impact of the war."

Sharing his insights on Sri Lanka, he said the conflict, which claimed tens of thousands of lives between 1983 and 2009, had destroyed many core values and caused cracks in society.

"We need to come together as a society. We need to feel less insecure. "Our post-independent politics divided rather than united us, demonising one group or the other. Post-war (2009), we need to be less parochial, more visionary."

Moragoda argued that contrary to what many outside Sri Lanka may think, the average Sinhalese was not racist.

"There is nothing wrong with Tamil or Sinhalese nationalism per se. But they should not get destructive." He said "moderate politicians" like him got ambushed from both sides. "The middle ground has become weaker. "Buddhism is about the middle path. If we lead the life of Lord Buddha, we would not be having this debate at all."

Moragoda also called for much stronger relations between India and Sri Lanka, which are set apart physically by a strip of sea. "India is the great opportunity for Sri Lanka, economically, culturally and politically," he said, taking a line shared by many in his country. "We have to integrate with India economically, like Hong Kong has done with China. India can also be a (political) model for us."

He admitted that many Sri Lankans saw India as a threat. "It is very easy to demonise if you are living near a giant." But he underlined that India also needed to reach out to Sri Lanka, a country which no Indian prime minister has visited for years bilaterally. This rankles many Sri Lankans.

http://www.ummid.com..._after_ltte.htm

Edited by akootha

தமிழரின் பிரச்சினைகள் உலகறியாது போனதற்கான பிரதான பொறுப்பை அனைத்து தமிழர் தரப்புமே பொறுப்பெடுக்க வேண்டும். ஆதாரங்களற்ற கண்டன / ஊடக அறிக்கைகளும், கலந்துரையாடலும், பேச்சுவார்த்தைகளும் நீர்க்குமுழி போன்றவை.

இன்றும் கூட நாடுகடந்த அரசு அமிர்தலிங்கம் நடத்திய, சம்பந்தன் நடத்திக்கொண்டிருக்கும் அவ்வப்போது வாய்க் கூச்சலிடும், அறிக்கை விட்டுவிட்டு தூங்கும் அரைவேக்காட்டு அரசியலைப் போன்றதொரு அரசியலையே நடத்த முயலுகின்றது.

ஆங்கிலத்தில் சிங்கள அரசின் தமிழினப் படுகொலைகள் முழு விபரங்களுடன், ஆதாரங்களுடன் பதியப்பட்டு, புத்தகங்களாக வெளிவர வேண்டும். இதைத் தாயகத்திலுள்ளவர்கள் செய்வது தற்போது சிரமமானது. எனவே புலம் பெயர்ந்தவர்கள் ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொண்டால் இது சாத்தியமாகும். மேலும் இவை சர்வதேச அரசியல் தலைவர்களுக்கும் கையளிக்கப்படல் வேண்டும். இதை நாடுகடந்த அரசு, தமிழர் பேரவைகள் போன்ற அமைப்புக்கள் உடனடியாக செய்ய முன்வரவேண்டும்.

எக்காலத்திலும் சேனல் 4 போன்ற உடகங்களை, பரமேஸ்வரன் போன்ற ஓரிருவரை மட்டும் நம்பி நாடுகடந்த அரசை நடாத்த முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.