Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டென நனைந்தது இரத்தம்

Featured Replies

யாழ்ப்பாணம் வழமை போலவே அதிகாலையிலேயே விழித்திருந்தது. வெளிச்சம் இன்னும் பரவலாக படரத் தொடங்கவில்லை. மார்கழி மாத பருவமழையில் திருநேல்வேலி சந்தை சாக்லட் தொழிற்சாலையாக காட்சியளித்தது. வியாபாரிகள் சைக்கிளில் கட்டிக்கொண்டுவந்திருந்த மரக்கறி மூட்டைகளை இறக்கி அன்றைய ஏலத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தனர். Special Task Force officer குமரன் Splender Motorbike இல் வந்து இறங்கும் போது நேரம் சரியாக நான்கு மணி. யாழ்ப்பாணம் ASP திலீபன் spot இல் ஏற்கனவே காத்துகொண்டிருந்தார்.

“எப்பிடி தெரியும் திலீபன்?”

“சந்தைல தேங்காய் கடை வச்சிருக்கிற சண்முகம் தான் inform பண்ணினவர்”

“வரச்சொல்லுங்க”

“நான் தான் அய்யா சண்முகம், காலைல சந்தைக்கு பின்னால ஒதுங்க…”

“எத்தினை வருஷமா இங்க கடை வச்சிருக்கிறீங்க?”

“இருவது வரியமா இங்க தான், வாசாவிளானால இடம்பெயர்ந்து வந்தா பிறகு வச்ச கடை அய்யா, குத்தகைக்கு தான்”

“எப்ப பார்த்தீங்க?”

“சவத்தையா கேட்கிறீங்க? மூண்டு மணி இருக்கும்”

“அந்த நேரம் இங்க என்ன வேலை? வீடு வாசல் இல்லையா?”

“வீடு கொக்குவில்ல, நான் வெள்ளி எண்டா சந்தைல தான் படுப்பன். வெள்ளன கடை திறக்கிறத்துக்கு… காலம கக்குசுக்கு போன இடத்தில தான் சவத்த கண்டனான்”

“திலீபன், நீங்க எத்தனை மணிக்கு spotக்கு வந்தீங்க?”

“மூண்டரைக்கு வந்திட்டன்”

“Forensic க்கு inform பண்ணியாச்சா”?

“ஓம்”

“வீட்ல யார் யாரு?”

“அம்மா மட்டும் தான், மனிசி Doctor, கண்டில ”

“Then keep it secret, அம்மாக்கும் தெரிய வேண்டாம், உதயனுக்கு news போயிட்டா?”

“Press க்கு இன்னும் தெரியாது Sir”

That's good. கொலையாளி alert ஆகக்கூடாது …சண்முகத்த warn பண்ணுங்க …வெளிய சொன்னா இங்க கடை இனி வைக்க ஏலாது எண்டு சொல்லுங்க”

“Done”

“Spot எல்லாம் full ஆ check பண்ணீட்டீங்களா?”

“தேடினதுல போன் மட்டும் தான் கிடச்சுது, Post-mortem இண்டைக்கே செய்ய சொல்லணும்”

“சொல்லாதீங்க .. செய்யுங்க”

S P கோகுலின் சடலம் சந்தையின் பின்புறத்தில் உள்ள குப்பைத்தொட்டி அருகே அழுகிய வாழைப்பழங்கள் நடுவில் கழுத்திலும் மார்பிலும் வெட்டுக்காயத்துடன் மல்லாக்க கிடந்தது.

நல்லூர் கோயில்மணி நேரம் மணி ஐந்து என்றது.

----------------------------------&&&&&&&----------------------------------------

“என்ன திலீபன் இண்டைக்கும் அதே நேரத்தில call பண்ணுறீங்க? நீங்க என்ன morning person ஆ?”

குமரன் திலீபனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது நேரம் காலை ஐந்து மணி.

முந்தைய தினம் முழுதுமான கோகுல் கொலை விசாரணையின் அசதி குமரனின் குரலில் தெரிந்தது. குடும்பம் எல்லாம் மலேசியாவில் குடியேறிவிட இவன் மட்டும் இங்கேயே தங்கிவிட்டான்.

வவுனியாவில் வேலை செய்யும்போது அங்கே உள்ள படை அதிகாரியுடன் நடந்த தகராறில் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டவன். சுடுதண்ணி என்று சக பொலிசாரால் அழைக்கபடுபவன்.

“Sir, இன்னொரு துன்பியல் சம்பவம்!”

“Don’t say its a murder”

“I am afraid, It is sir!”

“என்னய்யா நடக்குது யாழ்ப்பாணத்தில, நான் இங்க posting ஆகியே இருக்க கூடாது …ஏதோ கிரீஸ் பூதம் வருது, control பண்ணுங்க எண்டு அனுப்பினாங்க.. இங்க பார்த்தா காலைல கோயிலுக்கு போற மாதிரி கொலை நடக்குது!”

“நிறைய para military groups இயங்குது Sir… Hard to control”

““யாருன்னு தெரியுமா?”

“I can only guess sir”

“யாரு?“

“Sure இல்ல, ஆனா எண்ட guess சரியா இருக்கும் எண்டா…"

“Will you just cut the crap and tell who is it?”

“விஷ்ணு எண்டு நினைக்கிறன்”

“யாரு அந்த Informer ஆ?”

“That’s what I think, கோகுல் phoneல இருந்த Informer விஷ்ணுவோட முகத்தோட இந்த முகம் ஒத்துப்போகுது

“You Sure?”

“இங்கயும் Jeans pocketல அதே மாதிரி ஒரு துண்டு கிடச்சுது

“திரும்பவும் துண்டா? என்ன எழுதியிருக்கு?

Sir,

எஸ்.பி .கோகுலிடம் நான் தவறான

குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்.

கவலை வேண்டாம்

– விஷ்ணு

”இப்ப எந்த துண்டு உண்மை? தப்பான குறியீட்டை வச்சு நேற்று நாள் முழுக்க மண்டைய பிச்சது தான் மிச்சமா? இப்ப புதுசா ஒரு Sir வந்திருக்கிறார். Atleast ஒரு lead ஆவது கிடச்சுது, அங்கேயே இருங்க .. நான் பத்து நிமிஷத்துல வாறன்““ம்..ஒ ஓகே ..”

“என்ன தயங்கிறீங்க? வேற news ஏதாவது?”

“ Erggh… check பண்ணினதில… விஷ்ணுக்கு ஒரு girl friend இருக்கோணும் போல கிடக்கு”“Great, makes our life easy!”

----------------------------------&&&&&&&-----------------------------------------

“மொனவட ஒனே”

“முறைப்பாடு ஒண்டு செய்யோணும் அய்யா ..

கம்ப்ளைன் யு நோ …

ஐ கம் அண்ட் கிவ்"

“சிங்கள கதகரன்ன பாய்ட?"

“நோ சேர், டிக்க டிக்க”

யாழ்ப்பாண போலீஸ் நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. ஓரத்தில் பல தாய்மார்கள் கவலையுடன் எதற்கோ காத்துகொண்டிருந்தனர். ஒருபக்கம் சிங்களம் தெரியாதவர்கள் தங்களுடைய முறைப்பாட்டை விவரிக்க சிரமப்பட்டுக்கொண்டு இருக்க இன்னொரு பக்கம் மொழிபெயர்ப்பாளர்கள் முறைப்பாடு ஒன்றுக்கு 5000 ருபாய் வரை பேரம் பேசிக்கொண்டு இருந்தனர். ஒரு சிலர் குமரன், திலீபன் போன்ற தமிழ் போலீசாரின் உதவியை தெரிந்தவர்கள் ஊடாக முயற்சித்துக்கொண்டு இருந்தனர்.

“கோகுல் case சாதாரணமானது இல்ல திலீபன். Very Sensitive, Communal Riots கூட வரலாம், சீக்கிரம் கண்டுபிடிச்சு case அ close பண்ணனும்”

“விளங்குது … இந்த விஷ்ணு யாருன்னு கண்டு பிடிச்சா போதும்”

“Postmortem த்தில இந்த துண்ட விட வேறு ஏதும் தடயம் கிடைச்சுதா?"

“இல்ல சார்.. இது கூட கோகுலின் underwear க்குள் இருந்தது, so தனக்கு வர இருந்த ஆபத்து கோகுலுக்கு முன்னமேயே தெரிஞ்சிருக்கு…”

“I see, விஷ்ணு இந்த கொலையை செய்திருக்க சான்ஸ் இருக்கா?”

“நான் நினைக்கேல்ல, விஷ்ணு கோகுலின் secret informer… அவனோட numberஉம் படமும் கோகுலின் phone ல இருக்கு. விஷ்ணுவுக்கும் தன்னுடைய நம்பர் கோகுலின் போனில் இருப்பது தெரியும். So விஷ்ணு இதை செய்து இருந்தா, நிச்சயம் தன்னோட number ஐ delete பண்ணி இருப்பான், இல்ல phone ஐ அப்பிடியே spotல விட்டிட்டு போயிருக்கமாட்டான்.

அத்தோட அவன் கொலை செய்வதற்கு இந்த நிமிஷம் வரை எங்களால் ஒரு காரணமும் கண்டுபிடிக்க முடியேல்ல”

“விஷ்ணுவுக்கு இந்த போனில் இருந்து call பண்ணி பாத்தீங்களா?”

“Phone switched Offல இருக்கு, Dialog operator SIM, customer service ல சொல்லி நம்பர் எந்த பெயரில register ஆகி இருக்கு எண்டு பார்க்க சொல்லியாச்சு”

“Mobile ஓட location ஐ trace பண்ணலாமா?”

“அவன் phone ஐ switched on பண்ணினா முடியும்னு தான் நினைக்கிறன், Secret Audit enable பண்ணணுமாம் … Defence ministry approval வேணும்… மெதுவா தான் செய்வாங்க, சொல்லியிருக்கு, இன்னைக்குள்ள அனுமதி எடுக்க சொல்லி இருக்கிறன்”

“Good Job, So இந்த Phone ஆல ஒரு பிரயோசனமும் இல்ல”

“இருக்கு சார், கோகுல் இறந்தது இன்னும் public க்கு தெரியாது, So விஷ்ணு கொலையாளி இல்லை எண்டா சிலவேளை,அவன் கோகுலுக்கு call பண்ண சான்ஸ் இருக்கு”

“Brilliant thinking … எங்க படிச்சீங்க?”

“Jaffna University”“No Wonder”

திலீபன் சிரிக்கும்போது சிறிய பெருமை தெரிந்தது. திலீபன் கிளிநொச்சியை சேர்ந்தவன். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது புலிகள் இயக்கத்தில் சேர்ந்து பின்னர் படையினரிடம் பிடிபட்டு approver ஆக மாறி இப்போது ASP வரை வளர்ந்திருப்பவன்.

அவன் எது செய்தாலும் ஒரு புத்திசாலித்தனம் இருக்கும். இயக்கத்தில் இருக்கும்போதே ஆங்கிலம் கற்றவன். இப்போது சிங்களமும் நன்றாக பேசுவான்.

Mr கோகுல்--

S W H2 6F - இது தான் குறியீடு. கவனம்.

-விஷ்ணு

மீண்டும் அந்த துண்டு சீட்டை வாசித்தான் குமரன்.

“இது என்ன குறியீடாக இருக்கும் எண்டு நினைக்கிறீங்க திலீபன்?”“

No idea at all. எனக்கென்னவோ “Mr கோகுல்” எண்டு சொல்லி இருக்கிறதால விஷ்ணு படிச்சவனா இருக்கணும். ஒரு மணித்தியாலம் அவகாசம் தாங்க. கொஞ்சம் Googleல தேடிப்பார்க்கிறன்”

“Go ahead திலீபன் .. அப்படியே கோகுலின் Profile Copyய ஒருக்கா Forward பண்ணி விடுங்க”

“Sure”

என்று சொல்லிக்கொண்டே திலீபன் தன்னுடைய அறைக்கு விரைந்தான்.

திலீபன் எப்படியும் ஒரு துப்பாவது பிடித்துவிடுவான் என்று நினைத்துகொண்டே குமரன் மீண்டும் அந்த துண்டுச்சீட்டை வாசித்தான்.

Mr கோகுல்--

S W H2 6F - இது தான் குறியீடு. கவனம்.

-விஷ்ணு

"விஷ்ணு நீ எங்கு இருக்கிறாய்?"

----------------------------------&&&&&&&-----------------------------------------

நாவலர் வீதியில் இருக்கும் விஷ்ணுவின் வீட்டை குமரன் அடையும் போது நேரம் ஐந்தரை ஆகி இருந்தது. வீடு பிரதான வீதியில் இருந்து இறங்கிய ஒரு குச்சு ஒழுங்கைக்குள் இருந்தது. பத்து வீடுகள் தள்ளி ஒரு இராணுவ முகாம் இருக்கவேண்டும் போல. ஒருவித இராணுவ பிரசன்னத்தை அந்த பிரதேசத்தில் உணரக்கூடியதாக இருந்தது.

“Good .. So அந்த “Sir" யாருன்னு கணடுபிடிக்கணும், விஷ்ணு double game ஆடி இருக்கிறான்.

Dangerous fellow!ிஷ்ணுவின் தலையும் மார்பிலுமாய் இரண்டு குண்டுகள் பாய்ந்திருந்தன. கைகலப்பு நடந்ததுக்கான எந்த அடையாளமும் இல்லை. சுவற்றிலே நயினாதீவு நாகபூஷணி அம்மன் calendar தொங்கியது.

“நான் அப்பிடி நினைக்கேல்ல”“என்ன சொல்றீங்க, வேற கோணம் இருக்கா?”

“கோகுல் underwear ல இருந்த துண்டுச்சீட்டு நான்கா மடிச்சு இருந்திச்சு. ஆனா விஷ்ணு pocketல இருந்த துண்டுச்சீட்டு எட்டா மடிச்சு இருந்திச்சு”

“அடடா நல்ல observation… but அத வச்சு ஏதாவது சொல்ல முடியுமா.."

“முடியும், ரெண்டு சீட்டுமே கிட்டத்தட்டஒரே அளவு… So ஒருத்தரே மடிச்சு இருந்தா அநேகமாக ஒரே மாதிரி தான் மடிச்சு இருந்திருக்கணும். So ரெண்டையும் விஷ்ணுவே செய்திருக்க chance இல்ல , எனக்கென்னவோ விஷ்ணு கோகுலுக்கு நம்பிக்கையானவனாத்தான் இருந்து இருக்கணும்”

“Makes sense, but proceed பண்ணுறத்துக்கு இது போதாது திலீபன்”

“I know, ஆனா என்னட்ட இன்னொரு தடயம் இருக்கு”

“தடயமா? come-on Thileepan .. என்ன அது? சொல்லவே இல்ல, யாரு அந்த விஷ்ணுவின் காதலி?”“விஷ்ணுக்கு காதலி இருக்காளானு தெரியாது. But கொலையாளியை பற்றி கொஞ்சம் ஊகிக்க முடியுது”

"என்ன திலீபன் குழப்புறீங்க, நீங்க தானே காதலி இருக்காள்னு சொன்னீங்க"

"அது உங்கள divert பண்ணுரத்துக்கு சொன்னது...."

என்ற திலீபன் தயங்கியபடியே சொல்லியபோது அங்கே ஒருவித அசாதாரண சூழ்நிலை உருவாகத்தொடங்கி இருந்தது.

"திலீபன் ... என்னை ஏன்"

....“எண்ட guess சரின்னா ..... நீங்க தான் குமரன் இந்த ரெண்டு கொலையையும் செய்திருக்கவேண்டும் !!!!”“What? ..... Come again?” -- அதிர்ந்தான் குமரன்.“

You heard it right Mr Kumaran .. You are the prime suspect”

“திலீபன், விசரா உனக்கு? நேற்று முழுக்க நான் உன்னோட தானே இருந்தன், நான் எப்படி?”

“Except of that one hour! நான் Google ல தேடிக்கிட்டிருந்த சமயம் நீங்க என்னோட இருக்கவில்லை… நேற்று இரவே எனக்கு சந்தேகம் வந்திட்டு… ஆனா இன்னிக்கு confirm ஆயிட்டுது”

மூளை குழம்பி போச்சா திலீபன், You are out of your mind”

“Nope, நேற்று இரவு எனக்கு Dialogல இருந்து information வந்தது. விஷ்ணு numberல இருந்து கோகுல் phoneக்கு call பண்ணியிருக்கிறதா சொன்னாங்க. முதல்ல எனக்கு ஆச்சரியம். உங்களை உடனே contact பண்ண முயற்சி பண்ணினேன். ஆனா phone off ல இருந்திச்சு. விஷ்ணு நேற்று call பண்ணின சமயம் தான், நான் Googleல தேடிக்கிட்டு இருந்திருக்கேன் எண்டு அப்புறம் புரிஞ்சுது. So நீங்க விஷ்ணுவோட பேசியிருக்கிறீங்க. ஆனா நான் நேற்று பின்னேரம் திரும்பவும் check பண்ணும் போது phoneல புதுசா ஒரு call detailsம் இருக்கவில்லை!”

குமரனுக்கு அந்த யாழ்ப்பாண காலைப்பனியிலும் மெதுவாக வியர்க்க ஆரம்பிச்சது

“அந்த குறியீடு இப்ப கோகுல் கைக்கு போனது தெரிஞ்சு நீங்க தான் கோகுலை மிரட்டி கொலை பண்ணி இருக்கணும். ஆனா கோகுல் underwearக்க துண்டுச்சீட்டை மறைச்சு வச்சிருப்பார் எண்டு நீங்க யோசிக்கவில்லை, Am I right?”

“Its silly திலீபன், நீங்க என்ன சொல்றீங்க என்றே எனக்கு புரிய இல்ல”

DSC_3075.JPG

“இப்ப எனக்கும், department க்கும் தெரிஞ்சிட்டு எண்டதால, என்ன செய்யலாம் எண்டு நீங்க குழம்பி போய் இருந்த நேரம் தான் விஷ்ணு call பண்ணி இருக்கிறான். அந்த நேரம் அவனோட பேசி தந்திரமா நேற்றிரவு சந்திக்க திட்டம் போட்டு இருக்கிறீங்க. அப்பிடியே விஷ்ணு கோகுலுக்கு தப்பான குறியீடு குடுத்ததா ஒரு துண்டு சீட்டையும் print பண்ணி இருக்கிறீங்க. நேற்று இரவு விஷ்ணுவ இங்க கொலை பண்ணீட்டு அந்த சீட்ட அவன் pocketல வச்சிட்டு போயிருக்கீங்க. எனனை திசை திருப்பலாம் எண்டு ஒரு set-up....எவ்வளவோ கண்டுபிடிக்கிறம், இதை கண்டுபிடிக்க மாட்டமா? Its so childish Kumaran!”

“திலீபன், இது எல்லாமே உங்கட கற்பனை தான், உங்களிட்ட எந்த ஆதாரமும் இல்ல”

"ஹா ஹா, இன்னும் சொல்லப்போனா, I think நீங்க ரெண்டு தடவை நேற்று விஷ்ணுவோட பேசியிருக்கணும், சரியா குமரன்?"

என்றான் திலீபன் சிரித்துக்கொண்டே. குமரனின் முகத்தில் இப்போது ஈயாடவில்லை.

“எல்லாத்துக்கும் மேல, காலைல நீங்களே ஒத்துகிட்டீங்க! விஷ்ணு வீடு எங்கே இருக்கு எண்டு நான் எந்த இடத்திலையும் உங்களுக்கு சொல்ல இல்ல.. But சரியான timeல spotக்கு வந்திட்டீங்க.. தப்பு மேல தப்பு குமரன்”

"!@#$ …!@#$ …!@#$" --கெட்ட வார்த்தையால் தன்னை தானே திட்டினான் .

குமரன்“ஒண்டு மட்டும் புரியவில்ல, அந்த குறியீட்டுக்கு என்ன அர்த்தம்?… அது ஒரு iron cabinet ஆக இருக்கலாம் எண்டு Google சொல்லுது”

“You are so close திலீபன் .. ஆனா "உதவி போலிஸ் அத்தியட்சகர் திலீபன் கோகுல் கொலையாளியை தேடிப்போன சமயத்தில் நடந்த சண்டையில் பலியானார்” என்ற நியூஸ் நாளைக்கு பார்க்கப்போறத நினைக்க தான் பாவமா இருக்கு”என்றான் குமரன் ஒரு உதட்டோர ஏளனச்சிரிப்போடு...

“என்ன சொல்றீங்க குமரன்?”

திலீபன் முகத்தில் இப்போது சிறு கலவரம் தோன்றியது.சர்ரென்று அவனுடைய கை jeans pocket இல் இருந்த pistol ஐ தேடியது.

“Hands Up திலீபன், Too late, இவ்வளவு யோசிக்கிறீங்க... இதையும் யோசிச்சு இருக்கணும்… பெரிய தப்பு”“

No Sir, Its Over …நீங்க தான் தப்பு மேல தப்பு பண்ணுறீங்க, நான் ஏற்கனவே IG க்கு morning inform பண்ணீட்டன்”

“ஹா ஹா, Good Try .. But I am sorry திலீபன்!”

என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே குமரனின் கையில் இருந்த pistol “சட், சட்” என இரண்டு குண்டுகளை திலீபன் மார்பில் பாய்ச்சியது.

“Rest In Peace திலீபன்!”என்று அவனின் உயிர் பிரியும் வரை காத்திருந்து சொல்லிவிட்டு திரும்பிய குமரன் .... எதிரே வந்த நின்ற உருவத்தை பார்த்து விக்கித்து போய் நின்றான்

...

....

....

...“SIR...நீங்களா?!”

“சட் சட் சட்”

முற்றும்

Edited by pirasan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை எனக்குப் புரியவேயில்லை <_<

கதை நன்றாக இருக்கின்றது பிறசன் . எழுதியவர் இளையதலைமுறை என்று நினைக்கின்றேன் , ஆங்கிலமும் சரிசமனாகக் கதையுடன் ஓடுகின்றது . இணைப்புக்கு நன்றிகள் :) :) :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.