Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் தமிழ் வர்த்தகர் கூலிக்கும்பல்களால் கடத்தல்!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் முதல்தர கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்ந்த ஆணந்தசிவா கொழும்பில் கருணா குழுவால் கடத்தல்.

வியாழக்கிழமைஇ 9 பெப்ரவரி 2006

பிரபல கோடீஸ்வரனான வர்த்தகர் ஆணந்தசிவா கருணா குழுவால் கொழும்பில் கடத்தபட்டுள்ளார். கோழும்பின் பிரபல வெஸ்ரேன் மற்றும் றஞ்சனாஸ் நகைகடைகளின் உரிமையாளரும்; லண்டனிலும் கொழும்பிலும் பல சொத்துகளின் பங்களானாக செயற்பட்டு வந்த இலங்கையில் முதல்தர கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்ந்த கரவெட்டி துன்னாலை என்ற இடத்தை சோர்ந்த ஆணந்த சிவா கருணா குழுவால் கடத்தப்பட்டுள்ளார். இந்த கடத்தல் கருணா குழுவின் முக்கியஸ்தர் முஸ்தபாவின் உத்தரவிற்கமைய நடைபெற்றதாக சந்தேகிக்கபடுகின்றது.

http://www.nitharsanam.com/?art=15127

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தமிழ் வர்த்தகர் லண்டனில் "ரூட்டிங், வெம்லி ஈலிங் றோட்" பகுதிகளில் பாரிய நகைக்கடைகளை "வெஸ்ரேன் யுவலர்ஸ்" எனும் பெயரில் வைத்திருக்கிறார். இந்த "வெம்லி ஈலிங் றோட்" வெஸ்ரேன் யுவலர்ஸ்ஸுக்கு அருகாமையில்தான் உண்டியலான் இன்று உரிமை கொண்டாடும் ஈழ்பதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த உண்டியலானின் செயல்கலை பகிரங்கமாக எதிர்த்தவரே இந்த வர்த்தகர். அதுமட்டுமல்லாது லண்டனிலுள்ள தமிழ்க் வாணர கும்பல்களை கட்டுப்படுத்த பெரும் பிரயத்தனங்களை எடுத்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்விரு நடவடிக்கைகளும்தான் மேற்படி வர்த்தகர் கடத்தப்பட்டதற்கு காரணங்களென கூறப்படுகிறது!! இந்த உண்டியலானுக்கும், வாணரக்கும்பல்களுக்கும் "கூலி கருணாவின்" பின்னனியில் இயங்கும் தூள்மன்னன் முஸ்தப்பாவுடன் நெருக்கமான, வெளிப்படையான தொடர்புகள் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tamil businessman abducted in Colombo

[TamilNet, February 08, 2006 20:09 GMT]

A Tamil Jewellery shop owner was abducted by an unknown armed gang Wednesday night at 11.30 p.m. near his residence at Alexander Road in Wellawatte Colombo, sources said.

Eyewitnesses said that men speaking Tamil and armed with handguns came in two vans and forced Mr Vadivel Ananthan Siva, 53, from Jaffna, into one of the vans before driving away.

Mr Siva had closed his jewellery shop and was going back to his residence when he was abducted.

The motive for the abduction is not clear, police sources said.

Wellawatte Police is conducting investigations.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17143

இரு வெள்ளைநிற வான்களில் பொலிஸ் உடை தரித்து வந்தவர்களால் கடத்தப்பட்ட இவ்வர்த்தகர், கொண்டு செல்லப்படும்போது எந்த தடை முகாம்களிலும் சோதனைக்காக மறிக்கப்படவில்லையாம்!!! இக்கடத்தலுக்கு சிங்கள அரசியல்/இராணுவ உயர்மட்டத்தில் தொடர்புகள் இருக்க வேண்டுமென நம்பப்படுகிறது!! இக்கடத்தல் சம்பந்தமான செய்திகளை கொழும்பு சிங்கள ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தும் வருகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Businessman's kidnappers demand 20 million rupees ransom

[TamilNet, February 10, 2006 07:14 GMT]

The kidnappers of a Tamil businesman, Vadivel Anandan, who was abducted Wednesday night in Colombo, have demanded a 20 million Lankan rupees ransom for his release, family members told media Friday. The abductors, who allowed the businessman to call his family members for two minutes on Thursday, have threatened not to divulge any information to the Police.

Tamil millionaire businessman Vadivel Anandan (54) was abducted Wednesday night near his residence at Alexandra Road, Wellawatta, in Colombo.

His brother Vadivel Arul who witnessed the abduction said there were at least four kidnappers, two of them clad in military fatigues.

The kidnappers came in two vehicles.

The men in the first vehicle wanted to check the identity of Vadivel Anandan. When Vadivel got off from the first vehicle, the kidnappers in the second vehicle, forced him into their van before driving away.

Vadivel Arul has made a compliant with the Wellawatta Police following the incident on Wednesday.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17155

கொழும்பு வர்த்தகரை விடுவிக்க ரூ. 20 மில்லியன் பிணைத் தொகை கேட்கும் கடத்தல்காரர்கள்!

கொழும்பில் கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகரான வடிவேல் ஆனந்தனை (வயது 54) விடுதலை செய்ய ரூ. 20 மில்லியன் பிணைத் தொகையாகத் தர வேண்டும் என்று கடத்தல்காரர்கள் மிரட்டியுள்ளனர்.

கொழும்பு வெள்ளவத்தை அலெக்சாண்டரா பிளேசிலுள்ள அவரின் வீட்டிற்கு அருகில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு நகைக்கடை வர்த்தகரான வடிவேல் ஆனந்தன் கடத்தப்பட்டார். இந்த நிலையில் வடிவேல் ஆனந்தனின் குடும்பத்துக்கு தொலைபேசியில் 2 நிமிடம் பேசிய கடத்தல் குழுவைச் சேர்ந்த ஒருவர் ரூ 20 மில்லியன் பிணைத் தொகை கேட்டுள்ளார்.

இது தொடர்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த வடிவேல் ஆனந்தனின் சகோதரர் வடிவேல் அருள் கூறுகையில்இ இரு வான்களில் வந்த 4 பேர் கொண்ட குழுவினரால் தனது சகோதரர் கடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

முதலாவது வானில் வந்தவர்கள் வடிவேல் ஆனந்தனின் அடையாள அட்டையை சோதித்தனர் என்றும் 2 ஆவது வானில் வந்தவர்கள் அவரை வானிற்குள் இழுத்து போட்டுச் சென்றனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பாக உடனடியாக வெள்ளவத்தை காவல் நிலையத்தில் வடிவேல் அருள் முறைப்பாடு செய்தார்.

புதினம்

கொழும்பு வர்த்தகரை விடுவிக்க ரூ. 20 மில்லியன் பிணைத் தொகை கேட்கும் கடத்தல்காரர்கள்!

இவர்களை யார் கடத்தி இருப்பார்கள் என்பது ஒரளவு எல்லோருக்கும் தெரியும், எங்கே பேச்சில் சிங்கள அரசு

தங்களை பிடித்து கொடுத்து(புலிகளிடம் தான்) விடுவார்கள் என்று பயந்து விட்டார்கள் கிடைக்கிறதை சுருட்டி கொண்டு ஒட தான்

:P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் கடத்தப்பட்ட தமிழ் வணிகர் விடுதலை!

Written by Paandiyan - Saturday, 11 February 2006 14:36

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பின் வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து கடந்த புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத அயுதக்கும்பலினால் கடத்தப்பட்ட பிரபல தமிழ் வணிகர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளவத்தை அலெக்ஸ்சாண்ரா வீதியில் வைத்து கடந்த புதன்கிழமை இரவு வெஸ்ரன் நகைக் கடையின் உரிமையாளராகி ஆனந்தன் சிவா எண்மர் அடங்கிய அடையாளம் தெரியாத ஆயுதக்கும்பலினால் கடத்தப்பட்டிருந்தார்.

இவரை விடுவிப்பதற்கு 20 மில்லியன் ரூபா தரப்படவேண்டுமென கடத்தல்காரர்களால் கேட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வணிகர் விடுதலையாகியுள்ளார். இவர் தற்போது மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் என்ன காரணத்திற்காக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை.

சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூல்கிங் முஸ்தப்பா அன்ட் கும்பலின் உத்தரவில் கடத்தப்பட்ட இவ்வர்த்தகரின் விடுதலைக்கு 2 கோடி ரூபாக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இக்கடத்தல் நாடகத்தின் உண்மைகள் இவ்வர்த்தகர் விடுவிக்கப்பட்ட நிலையிலும் வெளிவர மாட்டது என்றே அவரது உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்!! இவ்வர்த்தகரின் உறவினர்களும் கொழும்பில் இருக்கும் நிலையில், இவர் லண்டன் வந்த பின்பும் செய்திகளை பகிரங்கப்படுத்த மாட்டாரென்றே தெரிகிறது!! காரணம்.. கடத்திய கும்பல் கொலை அச்சுறுத்தல்களை அவருக்கு மட்டுமல்ல அவரது குடும்ப உறவினர்களிற்கும் விடுத்திருக்கிறதாம்!!

இதுவரை காலமும் தூள் கடத்திய பணத்திளும், இந்திய "றோ"க்கடவுள் வழ்ங்கும் பணத்திலும் வாழ்க்கையை ஓட்டிய முஸ்தப்ப கும்பல், பின் ஈழ்பதிஸ்வர உண்டியலானினதும் கடைக்கண் பார்வை பட்டிருந்தான். இவற்றிற்கெல்லாம் என்ன நடைபெற்று விட்டது??? திடீரென இந்திய இராணுவ காலங்களில் செய்த ஆட்கடத்தலுக்கு போவதற்கு???

எல்லாம் "றோ"கராவிற்குத்தான் வெளிச்சம்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடத்தப்பட்ட தொழிலதிபர் ஈ.பி.டி.பியினரால் விடுதலை.

சனிக்கிழமை 11 பெப்ரவரி 2006 ஞானேஸ்வரன்

கடந்த புதன்கிழமை வெள்ளவத்தை அலெக்ஸ்ட்ஸான்ரா வீதியில் வைத்து ஈ.பி.டி.பியினரால் கடத்திச் செல்லப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகரான வடிவேல் ஆனந்தன் சிவா, நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை விடுவிப்பதற்கு 20 மில்லியன் ரூபா தரப்படவேண்டுமென கடத்தல்காரர்களால் கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வணிகர் விடுதலையாகியுள்ளார். இவர் குறித்த தொகை பணத்தை கொடுத்திருக்கலாம் என்று பலராலும் சந்தேகிக்கபடுகின்றது. நேற்றிரவு 10 மணியளவில் வாகமொன்றில் கொண்டுவரப்பட்டு இவரது வீட்டுக்கருகே இறக்கி விடப்பட்டுள்ளார். இவரது உடல்நிலை பலவீனமாக உள்ளதால், இவர் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அறியமுடிகிறது.

http://www.nitharsanam.com/?art=15207

அது சரி அடுத்தது யாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.