Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் சடுதியான உயர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Crime001_CI.jpg

வடக்கில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் சடுதியான உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக போதைப் பொருள் கடத்தல், பாலியல் தொழில், பாலியல் வன்முறை மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை போன்ற சம்பவங்களின் எண்ணிக்கையில் சடுதியாக அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த எட்டு பெண்கள் கைது செய்யப்பட்டதுடன், ஹெரோயின் போதைப் பொருளைப் பயன்படுத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

வடக்கிற்கு அதிகளவான உள்நாட்டு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதாகவும் இதனால் குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண பிரதிக் காவல்துறை மா அதிபர் வீ.இந்திரன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வடக்கிற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாண ஹோட்டல்கள் மற்றும் விதிகளில் அதிகளவு தங்குவதனால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

காலை ஒன்பது மணிக்கே மதுபான கடைகளில் அதிகளவானவர்கள் திரண்டு விடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தேவையான சகல முயற்சிகளிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கில் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் சிரமம் இருக்காது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு மக்களுக்கு போதியளவு வருமானம் இல்லாத காரணத்தினால் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட முனைப்பு காட்டுவதாகவும், சிலருக்கு உணவு உட்கொள்ளக் கூடிய வசதிகள் கூட கிடையாது எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தேவையான சகல முயற்சிகளிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

உண்மை இது தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி போனபின் தமிழர் பகுதியில் ஸ்ரீ லங்கா பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுகிறது.

குற்ற கணக்கை விட்ட ஆனந்த சங்கரிக்கு "ஆமைச்சர்" மேர்வின் சில்வா அசிட் போத்தல் அனுப்புவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.