Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி

Featured Replies

பல்பொருள் சில்லறை வர்த்தகம்:

நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி

110620193652_sp_walmart_304x171_getty_nocredit.jpg

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு

சில்லறை வர்த்தகத்தில், பல்வேறு நிறுவனத் தயாரிப்புக்களை விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டில் 51 சதத்தை அனுமதிக்க இந்திய அமைச்சரவை இன்றிரவு முடிவு செய்திருப்பதாக, அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது.

அதன் மூலம், வால்மார்ட், டெஸ்கோ, கேர்ஃபோர் உள்ளிட்ட பன்னாட்டு வணிக நிறுவனங்கள் இந்தியாவின் பெரும் நுகர்வோர் சந்தையில் நுழைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை மட்டும் விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 51 சதமாக உள்ளது. அது இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் 100 சதமாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தூர்தர்ஷன் செய்தி தெரிவிக்கிறது.

ஏற்கெனவே, கேபினட் செயலர் அஜித்குமார் சேத் தலைமையிலான கமிட்டி, சில்லறை வர்த்தகத்தில் பல்பொருள் நிறுவன தயாரிப்புக்கள் விற்பனையில் 51 சதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க பரிந்துரை செய்துள்ளது. அதே நேரத்தில், அது அதிகபட்சமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

தற்போது, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால், அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் நாளை விளக்கமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

http://www.bbc.co.uk/tamil/india/2011/11/111124_retailfdicleared.shtml

India opens door to foreign retailers

India threw open its $450-billion retail market to global supermarket giants on Thursday, approving its biggest reform in years that may boost sorely needed investment in Asia’s third-largest economy.

The world’s largest retail group, Wal-Mart Stores Inc., and its rivals see India’s retail sector as one of the last frontier markets, where a burgeoning middle-class still shops at local, family-owned merchants.

http://www.theglobeandmail.com/report-on-business/international-news/india-opens-door-to-foreign-retailers/article2247429/

  • தொடங்கியவர்

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு கடும் எதிர்ப்பு

பல்வேறு பொருட்களை விற்கும் சில்லரை வியாபாரத்தில் சர்வதேச சூப்பர் மார்க்கெட்கள் 51 சதவீதம் வரையில் முதலீடு செய்ய இந்திய அமைச்சரவை முடிவெடுத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு உருவானது.

மத்திய அரசின் முக்கிய கூட்டணிக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளோடு இணைந்து இம்முடிவை எதிர்த்து கோஷமிட்டதோடு, பதாதைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி காரணமாக மக்களவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அமைச்சரவையின் முடிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறி திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையில் ஆர்ப்பாட்டம் செய்தபோது பாரதீய ஜனதா கட்சியினரும், இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் அதில் சேர்ந்துகொண்டனர்.

மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் வர்த்தக அமைச்சர் ஆனந்த் ஷர்மா, அமைச்சரவையின் தற்போதைய முடிவை விளக்குவதற்காக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

இந்தியாவின் நன்மை கருதி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வெளிநாட்டு முதலீட்டுத் திட்டத்தால் இந்தியாவில் கோடிக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

வால்மார்ட்

இந்த திட்டத்தின் விளைவாக டெஸ்கோ, வால்மார்ட் போன்ற சர்வதேச சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள் இந்தியாவில் கடைகளை ஆரம்பிக்க முடியும்.

இதுநாள்வரை இந்த நிறுவனங்கள் மொத்த வியாபாரிகளுக்குத்தான் பொருட்கள் விற்க முடிந்ததே ஒழிய நேரடியாக வாடிக்கையாளர்களிடம் இவர்கள் பொருட்கள் விற்க முடிந்திருக்கவில்லை.

இந்த முடிவு ஒரு நிர்வாக முடிவென்பதால், இதனை அறிவிப்பதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் அவசியம் கிடையாது.

கருத்து வேறுபாடுகள்

இந்த திட்டத்தால் இந்தியாவில் வியாபாரப் போட்டி ஏற்படும் அதன் விளைவாக பொருட்களின் விலை குறையும் தரம் உயரும் என்று இந்தியாவில் பணவீக்கமும் விலையேற்றமும் மிக அதிகமாக இருந்துவரும் சூழ்நிலையில் இத்திட்டம் நன்மை தரும் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

ஆனால் பெரும் சர்வதேச நிறுவனங்கள் போட்டிக்கு வந்தால் இந்தியாவின் சிறிய வர்த்தகர்களும் ஏழை வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள். தமது உற்பத்திப் பொருட்களுக்கு இந்திய விவசாயிகளுக்கு கிடைத்துவந்த விலை மேலும் குறையும் என்று இன்னொரு பக்கத்தில் வாதிடப்படுகிறது.

http://www.bbc.co.uk/tamil/india/2011/11/111125_retailfdiprotest.shtml

  • கருத்துக்கள உறவுகள்

அன்னிய முதலீடு: டிச.1 ல் கடை அடைப்புக்கு வணிகர் சங்கம் அழைப்பு

சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை எதிர்த்து டிசம்பர் 1-ம் தேதி தமிழகத்தில் வியாபாரிகள் அனைவரும் கடைகளை அடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சில்லறை வணிகத்தில் அன்னீய முதலீடு அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் 20 லட்சம் வணிகர்களும் அதனை சார்ந்த 1 கோடி தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வியாபாரிகள் ஒட்டு மொத்தமாக 1 ஆம் தேதி முழுமையாக கடைகளை அடைத்து நமது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அரசியல் பாகுபாடின்றி அனைத்து கட்சியினரும் வியாபாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். 1 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த சில்லறை வணிக நிறுவனங்கள் மற்றும் மார்க்கெட் உள்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும் என மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1111/27/1111127020_1.htm

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது: ஜெ.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட மாட்டாது என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சில்லரை வணிகத்தில் 51 விழுக்காடு அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று மத்திய அமைச்சரவை அவசரமாக முடிவு செய்துள்ளது. இந்த முடிவினால் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.

சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பாரம்பரிய சில்லரை வர்த்தகர்களை பாதிக்கும்.இந்த முடிவை எடுக்கும் முன்பு மாநில அரசுகளின் கருத்துக்களையும் கேட்டிருக்க வேண்டும்.

ஆனால் அதை செய்யாமல் தன்னிச்சையான முடிவை எடுப்பதன் மூலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிடிவாத போக்கையே வெளிப்படுத்துகிறது.

நாட்டில் 40 கோடி பேர் இன்னும் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். மேலும் 40 கோடி பேர் சில்லரை வர்த்தகத்தைதான் சார்ந்து இருக்கின்றனர்.அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் சில்லரை வணிகர்கள் தங்களது தொழிலில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.

சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வணிகர்களில் பெரும்பாலானோர் நன்கு படித்தவர்கள் அல்ல. எனவே அவர்கள் மாற்றுத் தொழிலுக்கு செல்ல முடியாது. நாட்டில் நிலவும் இரட்டை இலக்க பணவீக்க வீதத்தை கட்டுப்படுத்தவே அன்னிய முதலீடுகள் நாட்டில் அனுமதிக்கப்படுவதாக காரணம் கற்பிக்கப்படுகிறது.

சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இது உதவும் என்றும் சொல்லப்படுகிறது.ஏன் பணவீக்கத்தையும், சந்தைப் பொருளாதாரத்தின் மற்ற பிரச்னைகளையும் கையாள நம்மிடம் போதிய தொழில் நுட்பமும் திறமையும் கிடையாதா? எனவே அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து மத்திய அரசு கூறும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. ஏற்றுக் கொள்ளவும் முடியாது.நாடாளுமன்ற கூட்டுக்குழு எடுத்த இந்த முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடை பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் அனுமதிக்க மாட்டோம் என்று அக்கட்சித் தலைவர் நிதின் கட்கரி அறிவித்துள்ளன.இதனால் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ள 11 மாநிலங்களில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க முடியாத நிலை உள்ளது.

அத்துடன் தற்போது தமிழகத்தில் ஜெயலலிதா,உத்தரபிரதேசத்தில் மாயாவதி போன்ற இதர கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், விரும்புகிற மாநிலங்கள் மட்டும் சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை ஏற்றுக் கொள்ளலாம் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1111/27/1111127017_1.htm

  • தொடங்கியவர்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு: ஜெயா கண்டனம்

பன்பொருள் சில்லரை வணிகத்தில் (multi brand retail) அந்நிய முதலீட்டை 51 சதவீதமும், ஒரு பொருள் சில்லரை வணிகத்தில் (single brand retail) அந்நிய முதலீட்டை 100 சதவீதமும் அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது. இதனால் சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பறிபோகும்’ என்றும் அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையொன்றில் கூறியிருக்கிறார்.

நாட்டில் 40 கோடிப்பேர் இன்னும் வேலைவாய்ப்பு இன்றி தவித்துவரும் வேளையில், 40 கோடி பேர் சில்லரை வர்த்தகத்தைதான் சார்ந்து இருக்கும் நிலையில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் சில்லரை வணிகர்கள் தங்களது தொழிலில் இருந்து வெளியேறும் நிலை உருவாகும் எனவும் ஜெயலலிதா எச்சரித்திருக்கிறார்.

தவிரவும் மாநில அரசுகள் எதனையுமே கலந்தாலோசிக்காமல் சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்தது அரசின் எதேச்சாதிகாரப் போக்கையே காட்டுவதாக ஜெயலலிதா அவ்வறிக்கையில் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

எப்படியும் மாநிலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட தான் அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.

சர்வதேச உணவுப்பொருள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, உற்பத்தியாகும் பொருட்களை சரிவர சேமிக்க வசதிகள் இல்லாமையால் 45 முதல் 50 சதவீதம் வரையிலான உணவுப்பொருள்கள் விற்கப்படாமல் வீணாகிவிடுகிறது என்று மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா நேற்று சனிக்கிழமை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில், இன்று மத்திய அரசு தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்திருக்கிறது.

ஆனால் தமிழக வர்த்தகர்கள் எவரும் அத்தகைய வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை, தொடர் போராட்டங்களில் இறங்கவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

மத்திய அரசின் முடிவின்படி பத்து லட்சத்திற்கும் அதிகமான் மக்கட் தொகையுடைய 53 மாநகரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபடலாம், ஆனால் பாரதீய ஜனதா, மதச்சார்பற்ற் ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், இப்போது அ இஅதிமுக, மேலும் காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திரிணாமூல் ஆகியவை கடுமையாக எதிர்ப்பதன் விளைவாக 28 மாநகரங்களில் அம்முடிவை அமல்படுத்தமுடியாமல் போகும் என நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

http://www.bbc.co.uk/tamil/india/2011/11/111127_jayalalitharetail.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.