Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது பயோனிக் யுகம்..! ஆனால் நாமோ.. சித்திரத் தேரோட்டும் யுகத்தில்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவயவங்களை இழந்துள்ள மேல்நாட்டு இராணுவ வீரர்களுக்கு மற்றும் நோயாளிகளுக்கு என்று நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை அவயவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொருத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 35 ஆண்டு கால போரியலை சந்தித்து நின்ற எங்கள் தமிழீழ தேசத்திலும் மக்களும் அவர்களின் பிள்ளைகளான போராளிகளும்.. எதிரிகளுடனான போரில் சாவுக்கு அப்பால் அவயவங்களையும் இழந்து தவிக்கின்றனர்.

எதிரி தன் சார்ந்தோருக்கு..தனது வரவுசெலவுத் திட்டம் மூலம் எமது வரிப்பணத்தையும் சேர்த்து ஒதுக்கி.. பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறான். 3ம் பிள்ளை பெறும் ஒரு சிங்களப் படைவீரனுக்கு 1,00,000 ரூபா பரிசளிக்கிறான்..!

எங்கள் மக்களுக்கு இன்றைய இந்த உலகின் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த மறுவாழ்வு கிடைக்குமா..??!

கடந்த 35 ஆண்டு காலப் போரால் அதனை ஒரு காரணியாக்கி.. வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து அங்கு வசதியாகவும் கல்வி அறிவும் பெற்று வாழும் நம்மவர்கள்.. எதிரியின் புறக்கணிப்புக்களுக்கு மத்தியில் ஏக்கங்களையே வாழ்வாக்கிக் கொண்டு வாழும் எங்கள் மக்களுக்கு ஒரு வளமான வாழ்வை ஏற்படுத்த ஏதேனும் நீண்ட கால அல்லது குறுகிய கால திட்டங்கள் செய்து வைத்திருக்கின்றனரா..????! நான் அறிய இல்லை என்பதே பதில்..!

ஆனால்.. இதையும் ஒருக்கா பாருங்கள்... இப்படியான சிந்தனைகளை முயற்சிகளை ஏன் நம்மவர்கள் இயல்பாகக் கொண்டிருப்பதில்லை.

ஒரு ஆடம்பர திருமணத்திற்கும்.. பிறந்த நாளுக்கும்.. சாமத்திய வீட்டுக்கும்.. பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கும்.. தென்னிந்திய சினிமா நட்சத்திர நிகழ்வுகளிற்கும்.. ஆளாளுக்கு கோயில் கட்டி.. ஒன்றுக்கு மூன்று நாலு என்று.. அலங்காரத் தேர் இழுக்கவும்..செலவு செய்யும் பணங்களை மீதப்படுத்தி.. இப்படியான நலத்திட்டங்களை ஆரம்பிக்கவும் செயற்படுத்தவும் உதவலாமே.

http://www.youtube.com/watch?v=y0_a_sbEglw

Edited by nedukkalapoovan

நல்ல சிந்தனைதான். ஆனால் இதெல்லாம் எங்கட சனத்திடம் எடுபடாது.

சாதாரண கலியாணம் நடாத்துவதற்கே ஐம்பதனாயிரம் பவுண்ட்களுக்கு மேல் செலவழிக்கிறார்கள். மற்றவர்கள் நடத்திய வைபவங்களை விட திறமாகவும், தங்கள் பெருமையை காட்டுவதற்காகவும் நிறையச் செலவு செய்கிறார்கள். பெரும்பான்மையினர் முன்பு 'தமிழ்த் தேசியம்' தங்கள் உயிர்மூச்சென்று படம் காட்டியவர்கள். இப்பெல்லாம் அதைப் பற்றியே கதைப்பதில்லை.

புலிகள் பலமாக இருக்கும் பொழுது, தங்களின் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.

இந்தக் கூட்டத்தை அடித்து திரும்பவும் நாட்டுக்கு அகதியாக திரத்தினால்தான் புத்தி வரும்.

போராடப் போனவர்கள்தான் பாவம்.

கடந்த 35 ஆண்டு காலப் போரால் அதனை ஒரு காரணியாக்கி.. வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து அங்கு வசதியாகவும் கல்வி அறிவும் பெற்று வாழும் நம்மவர்கள்.. எதிரியின் புறக்கணிப்புக்களுக்கு மத்தியில் ஏக்கங்களையே வாழ்வாக்கிக் கொண்டு வாழும் எங்கள் மக்களுக்கு ஒரு வளமான வாழ்வை ஏற்படுத்த ஏதேனும் நீண்ட கால அல்லது குறுகிய கால திட்டங்கள் செய்து வைத்திருக்கின்றனரா..????! நான் அறிய இல்லை என்பதே பதில்..!

நியாயமான ஆதங்கம்.

அப்படி ஒரு திட்டம் இருந்தாலும், போர்குற்றவாளிகளே ஆளுகின்ற காரணத்தாலும், அங்கே ஒரு அரசியல் தீர்வு இல்லாத காரணத்தாலும், யாருமே நியாயமாக ஒன்றும் செய்யமுடியாது.

தனிப்பட்ட ரீதியில் காத்து காதும் வைத்தால்போலவே ஏதும் செய்யமுடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான ஆதங்கம்.

அப்படி ஒரு திட்டம் இருந்தாலும், போர்குற்றவாளிகளே ஆளுகின்ற காரணத்தாலும், அங்கே ஒரு அரசியல் தீர்வு இல்லாத காரணத்தாலும், யாருமே நியாயமாக ஒன்றும் செய்யமுடியாது.

தனிப்பட்ட ரீதியில் காத்து காதும் வைத்தால்போலவே ஏதும் செய்யமுடியும்.

இதில் நாங்கள் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்ற முடியும் தானே. சிங்கள அரசினூடாகவோ.. இல்ல அதற்கு நேரடியாகவும்.. மறைமுகமாகவும் உதவும் அரசுகளைத் தவிர்த்து.. தொண்டு நிறுவனங்களை இதற்கு நாடலாம் தானே..!

அதற்கு முதலில் எங்களிடம் இந்த உதவித் திட்டங்களை செயற்படுத்தக் கூடிய வலுவான நிறுவன மயப்படுத்தப்பட்ட அமைப்பு அவசியம். எதுவுமே இல்லாமல் இருந்து கொண்டு.. என்ன செய்ய முடியும்..!

வெண்புறா.. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்ற அமைப்புக்கள் மீதும் பயங்கரவாத முத்திரை குத்தி விட்டுள்ளார்கள்.. இந்த நிலையில்.. என்ன மாற்று திட்டங்களை நாங்கள் வகுத்திருக்கிறோம். அரசியல் களத்தில் தான் எங்களின் நிலை வக்குரோத்து என்றால்.. சமூகத் தளத்திலும்.. அப்படி இருப்பது.. இந்த இனம் எப்படி சுதந்திரம் பெற்று தன்னை தற்காத்துக் கொள்ளும் என்ற வினாவையும் சர்வதேச அளவில் எழுப்பவே செய்யும்..! இப்படிப்பட்ட ஒரு பலவீனமான இனத்திற்கு சுதந்திரத்தை எவர் பெற்றுக் கொடுக்க முன் வருவார்..???!

விடுதலைப்புலிகள் இருந்த போது.. தேசிய தலைவர் தனது சொந்த நல உதவித் திட்ட நிதியம் ஒன்றை வைத்திருந்தார். சுனாமி பாதிப்பின் போது அந்த நிதியத்தினூடாக நிதிப்பங்களிப்பும் செய்திருந்தார். அப்படி ஏதாவது இன்று புலம்பெயர் தமிழர்களிடம் தாயகம் நோக்கிய இலக்கோடு உண்டா..??!

இருந்த காசை எல்லாம் தாங்கள் வாழவும்.. தங்கள் குடும்பம் வாழவும்.. தங்கள் புகழ் வாழவும் செலவழிக்கினம்.. இன்னும் கொஞ்சப் பேர்.. சிங்களவனோட கூடி நின்று தாங்கள் தப்ப அவனை வாழ வைக்கினம்.. இந்த நிலையில்.. இருக்கும் ஒரு இனம்.. சுதந்திர வாழ்வைப் பற்றி எப்படி உலகின் முன் நிறுவி நிற்க முடியும்.

சுனாமியின் போது விடுதலைப்புலிகள்.. உலகிற்கு ஒன்றை உணர்த்தி நின்றனர்.. நாங்கள் எங்கள் மக்களின் மீட்புப்பணியைக் கூட சர்வதேச எதிர்பார்ப்புக்களுக்கு நிகராக செய்து முடிப்போம் என்று. அது ஒரு இனம் சுதந்திரம் பெற்றுக் கொண்டு வாழ அவசியமும் கூட..! இன்று அந்த நிலை இருக்கா..?????! ஆளாளுக்கு உதவி செய்யுறம் என்று சொல்லி காசு வாங்கினம்.. அவை சரியான வழில போய் சேர்வதைக் கூட எம்மால் உறுதி செய்ய முடியாத நிலை..???! இது துஸ்பிரயோகங்களுக்கு மட்டுமன்றி. எமது இனத்தை சர்வதேச அரங்கில் பலவீனப்படுத்தும் ஒரு காரணியும் கூட..!

Edited by nedukkalapoovan

புலம்பெயர்ந்த மக்களை 'அன்பு இல்லத்துடன்' இணைந்து உதவி செய்யக்கேட்கிறது சிங்களம் :(

இதில் நாங்கள் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்ற முடியும் தானே. சிங்கள அரசினூடாகவோ.. இல்ல அதற்கு நேரடியாகவும்.. மறைமுகமாகவும் உதவும் அரசுகளைத் தவிர்த்து.. தொண்டு நிறுவனங்களை இதற்கு நாடலாம் தானே..!

பல சர்வதேச தன்னார்வ மனிதநேய அமைப்புக்களுக்கும் கூட சிங்களம் பதிவு செய்யவேண்டும், முன்கூட்டியே திட்டங்களை சமர்ப்பிக்கவேண்டும் போன்ற நெருக்கடிகளை கொடுக்கின்றது. அதுவும் தமிழர் பிரதேசத்தில், கூடிய நெருக்கடிகள். ஆனாலும் முயற்சிக்கவேண்டும்.

இங்கே உள்ள ஒரு வைத்தியர் தான் கல்விகற்ற யாழ் போதனா வைத்தியசாலைக்கு, மகப்பேறு நிலையத்திற்கு பணம் சேர்த்து வருகிறார். அதன் மூலம் நவீன முறையில் அதை முன்னேற்ற முயலுகிறார்.

அதேவேளை பல ஊர் அமைப்புக்களும் தாமாக பாடசாலைகளை, வைத்தியசாலைகளை மீளமைக்க உதவுகிறனர்.

இன்றுள்ள நிலைமையில் இதுவே சாத்தியம் என்பது எனது கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன்.. இதில் நம்மவர்கள் அதிகம் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்று. ஒரு சிலர் சுய ஆர்வத்தின் பொருட்டு செய்வது.. சமூகத்தின் ஒரு குறுகிய வட்டத்திற்கு நன்மையை தர முடியும். ஆனால் பாதிப்பு என்பதோ பரந்து பட்டது.

இப்போ வணங்கா மண் போன்ற ஒரு சர்வதேச கவன ஈர்ப்பைச் செய்யக் கூடிய உதவி நலத்திட்டம் பற்றிய செயற்பாடுகள் எம்மவர்களிடம் கிடையாது. சிறீலங்கா அரசுக்கூடாக புலம்பெயர் மக்கள் உதவி செய்ய விருப்பப்படவில்லை என்பது சர்வதேசத்தை சென்றடைந்ததாகத் தெரியவில்லை. அப்படி தெரிய வருகின்ற போது.. சர்வதேசம் மாற்று வழியில் யோசிக்கும்.. ஆலோசனைகளை முன் வைக்கும்..!

இந்திய அரசு இதனை ஓரளவுக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசின் வீடமைப்புத் திட்டங்களை அது நேரடியாக முன்னெடுக்கிறது. அதேவேளை மேற்கு நாடுகளின் மேற்பார்வையில் பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அவற்றினூடான எமது பங்களிப்பு என்பது இருக்கிறதா..???! என்பது பற்றிய தெளிவு இன்னும் இல்லை..!

ஏன் நாம் இவ்வாறான சமூக நலத்திட்டங்களை.. சர்வதேச சுகாதார அமைப்புக்களின் ஒத்துழைப்போடு கொண்டு செல்ல முடியாது. அதை சிங்களம் தடுக்க முடியுமா..??! ஏன் நாம் ஐநாவை.. இணைத்தலைமை நாடுகளை.. நோர்வேயை இது தொடர்பில் அணுகக் கூடாது. எமக்கு சிங்கள அரசினூடு உதவி கொண்டு செல்ல விருப்பமில்லை.. அது எம் மக்களைச் சென்றடையாது என்பதை புலிகள் சொன்னது போல.. நாம் தற்போது சொல்லி இருக்கிறமா. புலிகள்.. சிங்கள அரசின் ஊடாக தமிழ் மக்களுக்கு உதவி போகாது என்பதை உறுதி செய்து இணைத்தலைமை நாடுகள் சிங்கள அரசுக்கு வழங்க முன் வந்த உதவியை நிறுத்தி வைத்திருந்தனர்.

இன்றைய சூழ்நிலையில்.. சிங்களத்தினூடாக அன்றி வேறு வழியில்.. எமது மக்களை உதவிகள் சென்றடைய ஏன் நாம் சர்வதேசத்தின் உதவியை நாடக் கூடாது. அது நாம் சிங்களத்தோடு இணைந்து செயற்பட விருப்பப்படவில்லை என்பதையும் சொல்லுமல்லவா. அதுமட்டுமன்றி எம்மால் சிங்கள அரசின் உதவி இன்றி சர்வதேசத்தின் பங்களிப்போடு எம் மக்களை மீட்சிப்படுத்த முடியும் என்பதையும் சொல்லும் அல்லவா. சிங்களத்தினூடாக கொண்டு செல்லும் உதவிகள் அனைத்தும் சிங்கள அரசின் கொள்கைகளையே பலப்படுத்தும். எம்மை பலவீனப்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரத் தேருக்கு விளக்கம் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.