Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் படைத்தரப்பினர் மீது நேட்டோ படையினர் தாக்குதல்

Featured Replies

பாகிஸ்தான் படைத்தரப்பினர் மீது நேட்டோ படையினர் தாக்குதல்!

-26 பாகிஸ்தான் படையினர் உயிரிழப்பு!!

பாகிஸ்தான் படைத்தரப்பினர் மீது நேட்டோ படையினர் இன்று மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 26 பாகிஸ்தான் படையினர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் படையதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் பாகிஸ்தான் படைத்தரப்பைச் சேர்ந்த இரு உயரதிகாரிகளும் அடங்குவதாகவும், இச்சம்பவத்தில் மேலும் ஏழு பாகிஸ்தான் படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மொஹ்மான்ட் பிராந்தியத்தில் இருந்த பாகிஸ்தான் காவலரண் ஒன்றின் மீது நேட்டோவின் உலங்கு வானூர்திகள் தாக்குதலை மேற்கொண்டதாக பாகிஸ்தான் படையதிகாரிகள் கூறியுள்ளனர்.

அத்துடன், எவ்வித ஆத்திரமூட்டல்களும் இடம்பெறாத நிலையில் பாரபட்சமான முறையில் இத்தாக்குதல் நேட்டோ படைத்தரப்பினரால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தையடுத்து, ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைத்தரப்பினருக்கான விநியோகங்கள் இடம்பெறும் பாதையை பாகிஸ்தான் மூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இத்தாக்குதலுக்கான பதிலடியாக நேட்டோ படைத்தரப்பினருக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை பாகிஸ்தான் படையதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.

40 தாங்கிகள் மற்றும் பாரவூர்திகளை ஜம்ருத் பாத் சோதனைச் சாவடியிலிருந்து தாம் திருப்பி அனுப்பியுள்ளமாக பாகிஸ்தானின் சிரேஷ்ட அதிகாரி முதாஹிர் ஸெப் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு கூறியுள்ளார்.

அதேவேளை, நேட்டோ படையினரால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்தை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு அமெரிக்கா மற்றும்  நேட்டோவுடன் கடுந்தொனியில் முறையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இத்தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானின் கைபர் புக்துன்க்வா மாகாண ஆளுநர் மசூத் கௌஸர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவம் குறித்து தமக்குத் தெரிய வந்துள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதாகவும் நேட்டோ கூறியுள்ளதுடன், இறந்த படைத்தரப்பினரின் குடும்பங்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது.

அல் கைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லாடன் கடந்த மே மாதம் பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க படையித்தரப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில், நேட்டோ படையினரால் இன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மேலும் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.pongutham...57-2c6f113745a4

Edited by akootha

  • தொடங்கியவர்

அப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு பல வழங்கல்களுக்கு நாடியா இருப்பது பாகிஸ்தான் ஊடான பாதை.

அதை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது?

Edited by akootha

  • தொடங்கியவர்

பதினைந்து நாட்களில் வெளியேறு அமெரிக்காவுக்கு பாக் உத்தரவு

பலுசிஸ்தானில் உள்ள தனது விமானப்படை தளத்திலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் ஆப்கான் எல்லையையொட்டி அமைந்துள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் மீது, ஆப்கானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையின் ஹெலிகாப்டர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 25 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர்.

இது பாகிஸ்தானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு பொருட்கள்,இராணுவ தளவாடங்களை கொண்டு செல்லும் பாதைகளை பாகிஸ்தான் அடைத்து விட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் அமைச்சரவையின் கூட்டம் அவசரமாக நேற்றிரவு நடைபெற்றது.

பிரதமர் யூசுப் ரசூல் கிலானி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில்,பாகிஸ்தான் மீதான நேட்டோ படையினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தை தொடர்ந்து, பலுசிஸ்தானில் உள்ள தனது விமானப்படை தளத்திலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

http://www.alaikal.com/news/?p=89113

Edited by akootha

  • தொடங்கியவர்

சீர்கெடும் அமெரிக்க - பாகிஸ்தான் உறவுகள்

பாகிஸ்தானில் எல்லைப் பகுதியில் நேட்டோ படைகளின் தாக்குதலில் 25 பாகிஸ்தானிய சிப்பாய்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானால் குற்றஞ்சாட்டப்படும் நிகழ்வானது அமெரிக்க- பாகிஸ்தான் உறவுகளில் மீண்டும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கான பதிலடியாக நேட்டோவுக்கான விநியோகங்கள் எதுவும் பாகிஸ்தானின் ஊடாகச் செல்லக்கூடாது என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள தளத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இதனை ஒரு கடுமையான பதிலடியாக ஆய்வாளர்கள் பார்க்கிறார்கள்.

அமெரிக்காவுடனும், நேட்டோவுடனும் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள சர்வதேச பாதுகாப்புப் படையினருடனுமான, இராஜதந்திர, அரசியல், படைத்துறை மற்றும் உளவுத்துறை சம்பந்தமான உறவுகளை மறுபரிசீலனை செய்யப்போவதாகவும் பாகிஸ்ததான் அறிவித்துள்ளது.

தெற்காசியாவில், குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தமது நடவடிக்கைகளை வெற்றிகரமாகத் தொடருவதற்கு பாகிஸ்தானின் அனுசரணை அவசியம் என்ற காரணத்தால், இந்த பதற்ற நிலையை தணிப்பததற்கு அமெரிக்க அதிகாரிகளின் சார்பில் சில சுமூக முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சுகளினால் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கை பாகிஸ்தான் அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு தனது அனுதாபங்களை கூறியுள்ளது.

அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன், பாதுகாப்புச் செயலர் லியோன் பனெட்டா, மற்றும் ஆப்கானில் உள்ள நேட்டோ படைகளின் தளபதி ஆகியோர் தொலைபேசி மூலம் பாகிஸ்தானிய தரப்பினருக்கு தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த அனுதாப கூட்டு அறிக்கைக்கோ அல்லது தொலைபேசி அழைப்புகளுக்கோ பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்தவிதமான பதில் கருத்தும் வெளியிடப்படவில்லை.

பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளைப் பொறுத்தவரை அவை இரண்டுக்கும் ஒன்றுக்கு அடுத்தது மிகவும் அவசியம் என்று கூறியுள்ள இராணுவ ஆய்வாளரான டாக்டர் ஹசன் அஸ்காரி றிஷ்வி அவர்கள், ஆனால், இந்த தாக்குதலானது, அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் பாகிஸ்தானின் செயற்பாட்டை சிரமாக்கியுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், இப்படியான அமெரிக்க நடவடிக்கைகளால் பாகிஸ்தான் பாதிக்கப்படுவதும், அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் கடுமையான பதில் நடவடிக்கையை எடுப்பதும் இது ஒன்றும் முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் இப்படியான சூழ்நிலைகள் உருவாகி, பின்னர் தணிந்துள்ளன.

குர்ரான் பழங்குடியின பகுதியில் 2010 இல் அமெரிக்க ஹெலிக்கொப்டர்கள் இரு சிப்பாய்களை கொன்றபோதும் இப்படியான நிலை ஏற்பட்டிருந்தது.

அப்போது 11 நாட்களுக்கு விநியோகப் பாதையை பாகிஸ்தான் தற்காலிகமாக மூடியிருந்தது.

ஆனால் தற்போது உருவாகியுள்ள நிலைமையை இந்த இரு நாடுகளும் எவ்வாறு சமாளிக்கப்போகின்றன என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.

நேட்டோ படைகளுக்கான 40 வீதமான விநியோகம் பாகிஸ்தானின் ஊடாகவே செல்வதாக அதிகாரிகள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.

மத்திய ஆசியாவினூடாக ஒரு விநியோகப் பாதையை ஏற்படுத்துவது குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது மிகவும் கடடினமான. இடையூறுகள் மிக்க பாதையாகும் .

இது பாகிஸ்தானுக்கும் தெரியும். இதன் காரணமாகத்தான் ஒருவேளை, இது குறித்த முடிவுகளுக்காக பாகிஸ்தானின் அமைச்சரவை கூடிய போது, விநியோகப்பாதையை நிரந்தரமாக மூடாமல், காலவரையின்றி இடைநிறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கலாம்.

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை வெளியேறச்சொல்வது கூட புதிய விசயமல்ல.

அரசியல், இராஜதந்திர, படைத்துறை உறவுகளை மீளாய்வு செய்யப்போவதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.

ஆப்கான் பிரச்சினைக்கு சமரச தீர்வு காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் இருந்தும் பாகிஸ்தான் வெளியேற முடிவு செய்யலாம்.

அதன் மூலம் பொண் நகரில் நடக்கவிருக்கும் மாநாட்டை பாகிஸ்தான் பகிஸ்கரிக்கலாம். தான் செல்வாக்குச் செலுத்தும் ஆயுதக்குழுக்களையும் அந்த மாநாட்டுக்கு கொண்டுவருவதையும் அது தவிர்க்கலாம்.

அதற்கு பதிலாக அமெரிக்காவும் பாகிஸ்தானுக்காக இராணுவ உதவிகளில் மேலும் வெட்டை செய்ய முடியும். ஏனெனில் பாகிஸ்தான் பெரும்பாலும் முழுதாகவே அமெரிக்க பாதுகாப்புத்துறை தயாரிப்புகளிலேயே தங்கியிருக்கிறது.

மொஹ்மண்டில் நடந்த இந்தத்தாக்குதலைப் போன்றவை பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க ஆதரவு சக்திகள், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற விடயத்துக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்குவதை சிரமமாக்கும் அதேவேளை, அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த விடயத்தில் அமெரிக்கா தனது தர்மசங்கடத்தை எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பதிலேயே தங்கியிருக்கப்போகிறார்கள்.

http://www.bbc.co.uk/tamil/global/2011/11/111128_uspakrelation.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.