Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சென்னையில் மாவீரர்களுக்கு வீரவணக்கம்

Featured Replies

இன்று சென்னையில் தமிழர் பண்பாட்டு நடுவம், தமிழர் முன்னேற்ற கழகம் மற்றும் முகநூல் நண்பர்கள் ஏற்பாடு செய்த மாவீரர் நாள் நிகழ்வு எளிமையான முறையில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி நடைபெற்றது .

சென்னையில் பல இடங்களில் தமிழக அரசு தீவிர கண்காணிப்பில் பல மாவீரர் நகழ்ச்சியை ரத்து செய்தது இருந்தும் சில இடங்ககளில் உள் அரங்கங்களில் மாவீரர் நாள் தமிழ் உணர்வாளர் களினால் உணர்வோடு அனுசரிக்கப்பட்டது .

மாவீரர் கையேட்டில் கொடுத்துள்ளபடி அகவணக்கம் மலர் வணக்கம் உறுதி மொழி மற்றும் வீரவணக்க உரைகள் நடத்தப்பட்டது. கலந்து கொண்ட தோழர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.

380863_325774184104105_100000145796525_1456744_1965825636_n.jpg

389436_325772620770928_100000145796525_1456710_308040320_n.jpg

316497_325772687437588_100000145796525_1456711_877501468_n.jpg

- முகநூல் ஊடாக

கடலூரில் ......

313695_10150609376309128_722674127_11858765_1427123770_n.jpg

383770_10150609359694128_722674127_11858718_1691933111_n.jpg

  • தொடங்கியவர்

தமிழர் கூட்டமைப்பின் சார்பில் குவைத்தில் மாவீரர் நினைவெழுச்சி நிகழ்வு

ஆயிரம் கைகளை விரித்துப் பறந்துகொண்டிருந்த பாலைவனக் காற்றின் குளிரின் நடுக்கத்திற்கிடையே அந்த இதயங்கள் விடுதலையின் வெப்பத்தையே முழுக்கச் சுமந்துக்கொண்டு மாவீரர்களைப் பற்றிய நினைவுகளையெல்லாம் அலசி, மீண்டும் கேட்போர் மனங்களில் விதைத்துக் கொண்டிருக்க, உணர்வுகளில் தகித்துத் தகித்து ஈழக் கனவினை எல்லோர் எண்ணத்திலும் சமைத்துக் கொண்டிருந்தது அந்த நிகழ்வு.., அந்த அரங்கம்

குவைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில், நேற்று முன்தினம் மாலை (25.11.11) ஐந்து மணியளவில் துவங்கப்பட்டு இரவு ஒன்பதரை மணிவரை சகோதரி செங்கொடி நினைவரங்கத்தில், மாவீரர்களின் நினைவெழுச்சி நாள் நிகழ்த்தப்பட்டது.

நிகழ்ச்சியின் முதலாக கவிஞர் திரு.விருதைப் பாரி அவர்கள் வரவேற்புரையாற்றித் துவங்கிவைக்க, அய்யா திரு. தமிழ்நாடன் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மாவீரர்களை நினைவுக் கூர, கவிஞர் திரு. முனு சிவசங்கரன் அவர்கள் மாவீரர் உரையாற்றி அமர நேரம் மெல்ல மெல்லக் கடந்து மனதில் விடுதலைத் தீபமென ஒளி வீசிக் கரைந்தது. இறுதியில் பேச எண்ணியவருக்கெல்லாம் உணர்வு பகிரும், கருத்துப் பகிரும் வாய்ப்பினை அளித்த ஒரு மேடையாக நிறைவுற்றது அந் நிகழ்வு.

அரசியல் போக்கு குறித்தும், ஈழ விடுதலைப் போரில் நிகழ்ந்த போர்க்குற்றம் பற்றியும், இழப்புப் பற்றியும், எழுச்சி குறித்தும், இனி செய்யவேண்டியது குறித்தும் பேசப் பேச சுடர்விட்டெரிந்த எண்ண அலைகளில் கைக்கோர்த்துக் கொண்டது அந்த ஒற்றுமையென்னும் ஆயுதம்.

இடையே, தமிழர் ஆங்காங்கே சீர்குலைந்துக் கிடப்பதற்கான காரணங்களை ஒற்றுமையின்மை குறித்து எடுத்துரைத்தார் ஐயா திரு. தியாகு அவர்கள். இனம் குறித்த அக்கறையும், தமிழர் விடுதலை குறித்த உணர்வுப் பெருக்கும், ஈழமக்களின் வலியும் வலிக்கான காரணமுமென்ன என்பதை தொலைதூரத்திலிருந்து இணையம் வழி வந்து சிந்திக்கச் சொல்லி மாவீரர்கள் தின சிறப்புரையாற்றி விடை பெற்றார். அவரின் ஒவ்வொரு எண்ணமும் வார்த்தைகளாய் சிதறி எல்லோரின் மனதிலும் பதிந்து கொண்டதை வரிக்கு வரி எழுந்த கரவொலி சப்தம் சாட்சிசொல்லிப் போனது.

அடுத்து இணையம் ஊடாகப் பேசிய சர்வதேச தமிழீழ அரசின் துணைப் பிரதமர், ஐயா திரு. உருத்திரபதி சேகர் அவர்கள் ஈழத்தில் நிகழ்ந்த பேரிழப்பு குறித்தும், ஒரேயொரு நம் வீரர்கள் கூட நம்மிடமிருந்து பிரிந்துச் சென்றிடவில்லை, மாறாக நமக்குள்ளேயே உணர்வுகளாய் உறைந்து கிடக்கின்றனர், அவ்வுணர்வினை மீட்டு அடுத்த பயணத்தை நம் விடுதலை நோக்கி நடைபோடுவோம். காற்று உடன் வருவதுபோல் அவர்களும் நம்மோடு நெருங்கியே இருப்பார்கள் என்று குரல் நெருடிச் சொல்லி விடைக் கொண்டார். வந்த உறவுகள் அவரின் வார்த்தையின் ஈரத்தில் சற்று மனம் நெகிழ்ந்து போயினர்.

அடுத்தடுத்து.., தோழர்கள் திரு.ராமன், திரு.மணிகண்டன், திரு.முத்து, திரு.ரகுநாதன், திரு.செந்தில்குமார், திரு.மாதவன், திரு.சேகர், திரு.வின்சென்ட், கவிஞர் திரு.சிவமணி, கவிஞர் திரு. முனு.சிவசங்கரன், கவிஞர் திரு.சத்யா, கவிஞர் திரு.வித்யாசாகர், கவிஞர் திரு.பகலவன் என அவரவர் சார்ந்த இன உணர்வினை, கோபத்தை, உள்ளே அழுது கொண்டிருக்கும் தன் இனத்தின் மீதான பற்று கொண்ட அக்கறையினை உரையாகவும் கவிதையாகவும் பகிர்ந்து, வந்தோர் போய் ஒரு நூறு பேரிடமேனும் சொல்லி அவரவர்க்கான உணர்வை அவரவருக்குத் தரத்தக்க சிறப்பாக பேசி மாவீரர்களை நினைவு கூர்ந்தனர். விடுதலை உணர்வை உதிர ஆழம்வரைப் பதித்தனர்.

இறுதியில், எந்த ஒரு அரசியல் கட்சிசார் வாசனையோ, எவரின் சுயநலப் பொருட்டோ இன்றி ஒற்றை மனிதரின் மொத்த முயற்சியில் சேர்ந்த ஒரு இனத்தின் ஒற்றுமைக்கான கூட்டம் நாங்களென தங்களைப் பற்றிப் பேசிக் கொள்ளாமல் பதிவுசெய்த விதமாய் நிறைவுற்றது இம் மாவீரர்களின் நினைவெழுச்சி நாள் கூட்டம்.

இதற்கிடையே தினமலர் நாளிதழைப் புறக்கணிப்போம் என்று உறுதியேற்று கவிஞர் விருதைப் பாரி முழங்க, அதை ஏற்றுக் கொள்ளும் விதமாக தமிழச்சி செல்லம்மா வித்யாசாகர் தன் முதல் கையெழுத்தினையிட, அரங்கம் அதையும் பின்தொடர்ந்து, மீண்டும் நாளை விடியப் போகும் சூரியன் மறையும் விதமாகக் கூட்டம் கலைந்து. அங்கே வெற்றிடத்தையும், அந்த வெற்றிடத்தில் கறைபடியா எம் உறவுகளின் என்றோ வடிந்த ரத்தங்களின் ஈரத்தையும் பூசிப் பூசி, விடுதலையின் உயிர்ப்பை அங்கே மிச்சம் வைத்துக்கொள்ள எல்லோரும் அங்கிருந்து தமிழரென்னும் இனமான உணர்வோடு விடைக் கொண்டோம்!

(மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்ற செய்தி. அனுப்பியர்: கவிஞர் வித்யாசாகர்)

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=f0e5f2bf-6a70-4f8a-b5c8-25c710b0680e

  • கருத்துக்கள உறவுகள்

printButton.png| emailButton.png

ஞாயிற்றுக்கிழமை, 27, நவம்பர் 2011 (21:49 IST)

இலங்கை தமிழர் முகாமில் மாவீரர் தினம் (படங்கள்)

1111.jpg

2222.jpg

4444.jpg

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொள்ளை இலங்கை தமிழர் முகாமில் மாவீரர் தினம் மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டாடப்பட்டது. அகல் விளக்கு ஏற்றி சுமார் 500க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=66024

  • கருத்துக்கள உறவுகள்

tamilmakkalkural_blogspot_maaveerar%2Bnaal_chennai1.jpg

tamilmakkalkural_blogspot_maaveerar%2Bnaal.jpg

tamilmakkalkural_blogspot_maaveerar%2Bnaal2.jpg

tamilmakkalkural_blogspot_annan1.jpg

கொலர் தங்கவயல்,கர்நாடகம்

tamilmakkalkural_blogspot_maaveerar_nal_kolarKolar%2BGold%2BFields%252C%2BKarnataka1.jpg

tamilmakkalkural_blogspot_maaveerar_nal_kolarKolar%2BGold%2BFields%252C%2BKarnataka2.jpg

tamilmakkalkural_blogspot_maaveerar_nal_kolarKolar%2BGold%2BFields%252C%2BKarnataka3.jpg

tamilmakkalkural_blogspot_maaveerar_nal_kolarKolar%2BGold%2BFields%252C%2BKarnataka4.jpg

tamilmakkalkural_blogspot_maaveerar_nal_kolarKolar%2BGold%2BFields%252C%2BKarnataka.jpg

மும்பை ,காமராஜர் நினைவு ஆங்கில உயர்நிலைப்பள்ளி, தாராவி

tamilmakkalkural_blogspot_maaveerar_nal_mumbai.jpg

tamilmakkalkural_blogspot_maaveerar_nal_mumbai1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெண் கற்புக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை விடுதலை செய்ய பிரபாகரன்: கவிஞர் அறிவுமதி

kolathurmani-1.jpg

kolathurmani-2.jpg

kolathurmani-3.jpg

kolathurmani-4.jpg

kolathurmani-5.jpg

சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகில் உள்ள புலியூர் என்ற இடத்தில் 1984 வருடம் முதல், 1986 வரையில் விடுதலைபுலிகளின் பயிற்சி முகாம் இருந்துள்ளது. இங்கு நான்கு பருவங்களில் 2,800 விடுதலைபுலிகள் இங்கு பயிற்சி எடுத்து விட்டு சென்றுள்ளார்கள்.

இங்கு பயிற்சியாளராக இருந்த பொன்னம்மான் வீரமரணமடைந்த பின்னர் அவரது நினைவாக இங்குள்ள பொதுமக்கள் தங்களின் ஊர் பிரிவில் பொன்னம்மான் நினைவு நிழற்கூடம் ஒன்றை அமைத்துள்ளார்கள்.

இந்த நிழற்கூடத்தில் 1989 வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ல் மாவீரர் நாளை கொண்டாடிவரும் கொளத்தூர் பகுதியில் உள்ள ஈழவிடுதலை ஆதரவாளர்கள், நேற்று பெய்த கடும் மலையிலும் மாலை 5.00 மணி முதலே, புலியூர் பிரிவில் கூடத்துவங்கிவிட்டனர். விடாமல் பெய்து கொண்டிருந்த மழை மாலை சரியாக 6.00 மணிக்கு நின்றுவிட்டது.

மாலை 06.05 மணிக்கு மாவீரர்களின் நினைவாகவும், அவர்களின் வீரத்தையும், புகழையும் போற்றி பாடப்படும் பாடல்கள் ஒலிக்க வந்திருந்த பொதுமக்கள் மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்கள்.

var zflag_nid="1185"; var zflag_cid="767/186"; var zflag_sid="209"; var zflag_width="300"; var zflag_height="250"; var zflag_sz="9"; அதற்கு பின்னர், சமர்ப்பா குமரன் குழுவினரின் புலிகளின் வீரம் பற்றி பாடிய இசை நிகழ்ச்சியும், பாவலர் அறிவுமதி அவர்கள் எப்படியிருந்தது ஈழம் என்ற தலைப்பில் விடுதலை புலிகளின் ஆட்சி ஈழத்தில் எப்படி நடைபெற்றது என்பதை பற்றி விளக்கி பேசினார்.

கொளத்தூரில் இருந்த பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த ஒரு புலிவீரன், அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றுள்ளான். அப்போது அந்த வீட்டில் இருந்த பெரியம்மா விருந்தினராய் வந்த அந்த வீரனுக்கு இரண்டு பிஸ்கட் துண்டுகளை கொடுத்து உபசரித்துள்ளார்.

அந்த வீரன் முகாமுக்கு சென்று பெரியம்மா கொடுத்த இரண்டு பிஸ்கட் துண்டு பற்றி பொன்னம்மானிடம் சொன்னபோது, உனக்கு மட்டும் இரண்டு துண்டு பிஸ்கட் கிடைத்தால் போதுமா..? அதே பிஸ்கட்டை மற்றவர்களுக்கும் நீ கொண்டுவந்து கொடுத்திருக்க வேண்டாமா..? அவர்களுக்கும் அந்த பிஸ்கட் மீது ஆசை இருக்காதா...? என்று கேட்டுள்ளார். தவறை உணர்ந்த அந்த புலிவீரன் தான் பிஸ்கட் உண்டதுக்காக மன்னிப்பு கேட்டுள்ளான்.

புலிகளின் இயக்கத்தில் மன்னிப்பு என்பதே கிடையாது என்பதால், முகாமில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் அதே அளவுக்கு பிஸ்கட் வாங்கிவரும்படி சொல்லி அதற்கான பணத்தையும் கொடுத்துள்ளார் பொன்னம்மான்.

அந்த வீரன், வாகனத்தில் சென்று பிஸ்கட் வாங்கிவர தயாராகியுள்ளார், இந்த வாகனம் இயக்கத்துக்கு சொந்தமானது அதை இப்போது நீ உன்னுடைய சொந்த வேலைக்கு பயன்படுத்த கூடாது என்று வாகனத்தில் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டார் பொன்னம்மான்.

பின்னர் அந்த வீரன் நடந்தே சென்று அனைத்து வீரர்களுக்கும் தேவையான பிஸ்கட்டுகளை வாங்கிக் மூட்டையில் கட்டி தூக்கிக்கொண்டு வந்துள்ளார். தனது பிள்ளைகளிடம் பொன்னம்மான் எப்படி நடந்து கொண்டார் என்பதற்காக நான் இதை சொல்லுகிறேன், பொன்னம்மான் அப்படி நடப்பதற்கு காரணம்... என்ன...? அவருக்கு வழிகாட்டியான தலைவர் அப்படிப்பட்டவர்.

வீரம் அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துறையிலும் இல்லாத மனித நேயங்களை நாம் விடுதலை புலிகள் இயக்கத்தில் மட்டும் பார்க்க முடியும்.

திருமணமான சிலமாதங்களில் போருக்கு வந்த ஒரு சிங்கள் வீரன், விடுதலைபுலிகளிடம் சிறைபட்டுவிட்டான். கைது செய்யப்பட்ட அந்த வீரன் புலிகளின் சிறையில் சிலவருடங்கள் இருந்தபோது அவன் தன்னுடைய இளம் மனைவியை சந்திக்க வேண்டும் என்று இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கு கடிதம் எழுதினான், அந்த கடிதம் தலைவரிடம் சென்றது... தலைவரிடம் அதற்கு அனுமதியும் கிடைத்தது.

குறிப்பிட்ட ஒருநாளில், சிங்கள் வீரனின் மனைவி அனுராதபுரத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்தார். தந்து கணவனை சந்தித்து பேசினாள், மாலை வரை இருவரும் குடும்ப வியங்களை பேசினார்கள். மாலையில் அனுராதபுரத்துக்கு செல்லும் தொடர்வண்டிக்கு அந்த பெண்ணை புலிகள் அழைத்து சென்றனர்.

ஏதோ காரணத்தால் அன்று அந்த தொடர்வண்டி வரவில்லை... என்ன செய்வது ஒரு பெண்ணை அதுவும் சிங்கள இனத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் மனைவியை எங்கு தங்க வைப்பது என்று பொறுப்பாளர்கள் தடுமாறினார்கள்.

தகவல் தலைமைக்கு சென்றது, அந்த பெண் தனக்கு எந்த இடம் பாதுகாப்பானது என்று கருதுகிறாளோ அந்த இடத்தில் தங்க வையுங்கள் என்று தலைவர் சொல்லிவிட்டார். அந்த பெண் தன் கணவனுடன் தங்க விரும்பினாள்.... அவளின் விருப்பப்படியே கணவனும் மனைவியும் தங்கினார்கள்.

இரவு முழுவதும் கணவனுடன் தங்கிய அந்த பெண், மறுநாள் மகிழ்ச்சியுடன் தன்னுடைய உறவினர்கள் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டாள். ஆனால், மூன்று மாதத்திற்கு பிறகு புலிகளின் தலைமைக்கு ஒரு கடிதம் வந்தது.

அதில், தான் கணவனை சந்திக்க வந்தபோது மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டமைக்கு நன்றி தெரிவித்து எழுதியிருந்தாள் அந்த பெண், கூடவே தான் கருவுற்று இருப்பதாகவும், ஆனால் இந்த கரு எப்படி உருவானது என்று உறவினர்கள் கேட்டால் நான் என்ன செய்யட்டும், நானும்... எனது கணவனும் சேர்ந்து இருந்ததால் தான் இந்த கரு உருவானது என்று சொன்னால் இந்த உலகம் நம்புமா...? இதனால் என் நடத்தையின் மீது கெட்டபெயர் உருவாகுமோ...? என்று தான் பயப்படுவதாக சொல்லி கடிதம் வந்தது.

அந்த பெண்ணின் கடிதம் தலைவரின் பார்வைக்கு போனது, ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கல் சாதாரணமானதல்ல.... இதை தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்த தலைவர் மீண்டும், அந்த பெண்ணுக்கு கடிதம் எழுதினார்.

நீ, உனது மாமியார் மற்றும் உங்கள் ஊரின் பவுத்தமதகுரு மூவரும் குறிப்பிட்ட இந்த நாளில் கிளிநொச்சிக்கு வாருங்கள் என்று அந்த கடித்தத்தில் எழுதப்பட்டிருந்தது.

அதன்படி கிளிநொச்சிக்கு வந்த அந்த மூவரையும் அழைத்து சென்று அந்த சிங்கள் வீரனிடம் விட்டார்கள், தாங்கள் இருவரும் ஒருநாள் இரவு சேர்ந்திருந்தது உண்மை என்றும் தன்னுடைய மனைவியின் வயிற்றில் வளரும் கரு என்னுடையதுதான் என்றும் தான் தாயிடமும், மதகுருவிடமும் சொன்னான் அந்த சிங்கள ராணுவ வீரன்.

என் கணவன், மாமியார், மதகுரு மூவரும் உட்கார்ந்து பேசி விட்டாதால் எனக்கு குடும்பத்தில் ஏற்ப்பட்ட களங்கம் தீர்ந்துவிடும். ஆனால், ஊரில் உள்ளவர்கள் எப்படியும் என்னுடைய நடத்தையை தவறான கண்நாட்டத்தில் தான் பார்ப்பார்கள், பேசுவார்கள் நான் என செய்யட்டும் என்று அந்த சிங்கள பெண் கண்ணீரோடு நின்றாள்.

அந்த சிங்கள பெண்ணின் கற்புக்கு களங்கம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் தலைவர். உலகின் எந்த நாட்டு இராணுவத்திலும் செய்யாத ஒரு காரியத்தை செய்தார். ஆமாம், அந்த இராணுவ வீரனை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்தார்.

பெண்ணின் கண்ணீருக்கும் கற்புக்கும், நெரிக்கும், மதிப்பளிக்கும் வழக்கம் தமிழில் உள்ள புறநானூற்று பாடல்களில் மட்டுமே நான் கண்டுள்ளேன், ஆனால் பிரபாகரன் என்ற தலைவரிடம் அதை நேரில் கண்டுள்ளேன் என்று பாவலர் அறிமதி அவர்கள் பேசினார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=66035

  • கருத்துக்கள உறவுகள்

கரூரில் நடைபெற்ற மாவீரர் நினைவெழுச்சி நாள்!

28-maveerar-day300.jpgகரூரில் தமிழர் களம் அமைப்பின் சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழர் களத்தின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் சீவானந்தம் தலைமை தாங்கினார். தமிழ் உணர்வாளர்கள் அதிக அளவில் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர் நிகழ்ச்சியில் கருத்துரை வழங்கிய பலரும் கூறியதாவது,

இந்த மாவீரர் நாளில் தமிழினம் இனப்படுகொலையால் கொல்லப்பட்ட துயரத்தை எந்த விதத்திலும் ஈடு செய்ய முடியாது. ஈழம் பிறக்க தமிழர்கள் ஒரே இனமாய் ஒன்றிணைந்து களம் கண்டால்தான் தீர்வு கான முடியும். இந்தியாவும், திராவிடமும் தமிழர்களுக்கு எதிரிகள் தான். தமிழக அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காணும் தருணம் இதுவே, என்றனர்.

அவர்களை தொடர்ந்து வழக்குரைஞர் ராஜேந்திரன், அரசு, செந்தில், சதாசிவம், குறழகன் உள்ளிட்ட பலரும் தங்களது மாவீரர் சிந்தனைகளை எடுத்துரைத்தனர். முடிவில் தமிழர் களம் ஊடகப் பிரிவு முருகானந்தம் நன்றி தெரிவித்தார்.

- eelampress

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.