Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னாள் போராளிகள் வயிற்றில் மண்ணை அள்ளிப்போடும் ஊடகங்கள்

Featured Replies

லண்டன் தமிழீழ புரட்சிகர மாணவர்களும் அதிர்வும் முன்னாள் போராளிகள் வயிற்றில் மண்ணை அள்ளிப்போடும் பாதகச்செயலில் இறங்கியுள்ளனர். கேபியின் கணக்கும் செயலகத்தின் கணக்கும் என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரை பல முன்னாள் போராளிகள் வயிற்றில் மண்ணை கொட்ட உள்ளது. நேர்டோ நிறுவனத்தின் உதவியாளாள் ஒருவருடன் இந்த செய்தி சம்பந்தமாக கேட்டபோது 50மேற்பட்ட முன்னாள் போராளிகள் தற்போது நேர்டோ நிறுவன பணியாளர்களாக பணிபுரிகிறார்கள். இவர்களில் பலர் ஊனமடைந்தவர்கள். ஆனால் இந்த விடயங்கள் எதுவும் தெரியாது இவ்வாறு கேலிசெய்வது இந்த முன்னாள் போராளிகளின் வயிற்றில் மண்ணை வாரும் செயலே. அது மட்டுமல்லாது நேர்டோவின் நிவனத்தில் பல மாவீரர்களின் விதைவைகளும் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் மற்றும் இவர்களின் குழந்தைகள் பற்றி அதிர்விற்கோ அல்லது இந்த தமிழீழ புரட்சிகர மாணவர்களுக்கோ எந்த அக்கறையும் உள்ளதாக தெரியவில்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்து இப்போது மாவீரர் குடும்பங்களைும் முன்னாள் போராளிகள் வாழ்வையும் அல்லவா இவர்கள் பாழாக்குகிறார்கள். ஒரு அரச சார்பற்ற நிறுவனம் தனது கணக்கை முறையாக சமர்ப்பித்து நடாத்த வேண்டும். அவர்கள் முழு செலவையும் தாமே செலவழிக்க வேண்டும். கணக்கு காட்டாது பலகாலம் ஏய்த்தவர்களிற்கு இது புதிதாக தான் இருக்கும் என்று அந்த ஊழியர் அங்கலாய்த்தார்.

  • தொடங்கியவர்

ஊமைக் கனவுகள்........

எங்கள் ஊரில் நடந்தது என்ன? அரசியல் ஆய்வாளர்களாளும் களமுனை விற்பன்னர்களாளும், சர்வதேச கண்காணிப்பாளர்களாலும் எதிர்வு கூறப்படாமலோ, தெரியாமலே அல்ல, உதிர்ந்து போனது இலட்சக்கனக்கான உயிர்கள் பற்றியும்,

கோடிக்கணக்கான சொத்துக்களின் அழிவு பற்றியும் மரணத்துள் வாழ்ந்து மடிந்து போன மனங்களுடன், இருப்பிழந்து உடலுறுப்புக்கள் இழந்து உயிர் வலியுடன் நடை பிணங்களாக வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பு அம்பாறை திருமலை போன்ற இடங்களிலும் அலைந்து கொண்டிருக்கும் மக்கள் பற்றியும்

தற்கொலை செய்து கொள்ள முடியாமலும் விரும்பாமலும் இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று?! மீண்டும் வெளியே வந்த போராளிகள் பற்றியும் இன்னமும் தடுப்பு முகாம்களிலும் சிறைகளிலும் உள்ள இல்லாத போராளிகள் பற்றியும் மெல்ல மெல்ல உலகம் மறைந்து கொண்டிருக்கிறது இந்த வேளையில்……….

ஆறிய புண்னை கீறி பார்க்க விளைகிறேன். நித்தம் நித்தம் இங்கு நெருப்பில் வாழும் தமிழர்களின் பெயரால் சுத்தபத்தமாக உடையணிந்து குளிரூட்டிய அறைகளுள் தீர்வொன்றும், திட்டமொன்றும் பேசிபேசி தின்று குடித்து மெயிலும் இன்ரநெற்றும் மலக்குழிகளாகி போகிறது.

ஒரு மஐpக் போராளி கூறியது போல “எங்களிட்டையும் காசிருந்தா இல்ல அதிகாரமாவது இருந்தா… நானும் வெளிநாடொண்;டில நிண்டு கொண்டு இரண்டு அறிக்கை விட்டு பார்த்திருப்பன். ”

நீங்காத நினைவகளுள் ஆழ்ந்து போய் வெறிப்பிடித்து அலையும் பலரையும் சந்திக்கிறேன். “செத்திருக்கல்லாம் விழுந்த செல்களுக்குள்ள ஒண்டாவது என்ர தலையில விழயில்லயே…” என்று தவிக்கும் இளம் பெண்களை சந்திக்கிறேன்.

திரூமூலர் சொன்ன மந்திரம் இப்ப எனக்கு பொருந்துகிறது.

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி

குருடும் குருடும் குழிவிழுந்தவாறே.

“நான் ஒரு நாறல் மீன் இன்னொரு மீன் மணக்குது” என்று சொல்கிறேன்.

சரி போகட்டும் சொல்ல வேண்டியதை சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லாமல் விடுவது தப்புத்தான்.

நேற்று முன்தினம் வவுனியா இலங்கை வங்கிக் கிளைக்கருகே நடந்து கொண்டிருந்தேன். மிதிவண்டியில் என்னை தொடர்ந்து வந்த நபர் ஒருவர் என்னை மறித்து . “ஒரு நிமிசம் ….நீங்கள் ….உங்கட பேரென்ன?”

“நான் தெருவால போற வாரவைக் கெல்லாம் பேர் சொல்ல வேண்டியது அவசியமா?”

“இல்ல உங்கள கண்டமுகமாக …….தெரியுது……நீங்கள் ……தானே.”

அவனே என் பெயரை சரியாகச் சொல்லிவட்டாடான். இனியென்ன “ஆம்” என்றேன்.

“நீங்க…… எப்ப…… வந்தனீங்க?”

“அஞ்சு மாசமாச்சு’

“ஆ….சுதந்திரமாக திரியிறியல்…… எங்கட பிள்ளையலக் கொண்டே சாகக் கொடுத்திட்டு நீங்கள் ஐhலியாக திரியிறியள்”

“பொறு பொறு நீ யார் உன்ர பிள்ளை யார் ஆர் கொண்டு போனது? என்னட்ட வந்து கேக்கிறாய்?”

“உன்னட்ட கேக்காம……………. நீங்கள் எல்லாரும் புலிதானே……………….

ஓண்டடியாத்தானே திரிஞ்சியள்…………….. பிரச்சாரம் வச்சியள்…………. பிடிச்சிழுத்தியல்………… இப்ப என்ர பிள்ளை இல்ல நீங்க…ங…” “விளங்காம கதைக்கிறீர் நாங்க எங்கட காலம் முடிந்து தான் வெளியால வந்தனாங்கள்”

“செத்து துலைச்சிருக்கலாம் ஏன் வந்தியள். இனி சிங்களவனோட சேர்ந்து கொண்டாடப்போறியளா?”

“உம்மோட கதைக்க நேரமில்ல உனக்கு விளங்க வேண்டிய தேவையும் எனக்கில்ல. என்னை ஆளை விடு” நான் அவனை விலக்கி விட்டு வேகமாக நடந்தேன்.

நான் போன வேலை முடிய சுமார் ஒரு மணி நேரமாயிற்று. திரும்பி வந்த போது அதே நபர் அதே இடத்தில் நின்றான்.

நான் பேசாமல் விலகிச் செல்ல முயன்றேன். அவன் விடுவதாயில்லை.

“எவ்வளவு துணிவாக திரியிறியள் உங்களை … என்றவன் தொடர , நான் பொலீஸ் நிலையத்திற்கு போன் செய்யவேண்டியதாயிற்று”

இதற்குள் என்னைத் தெரிந்த ஒருவர் என்னுடன் பேச்சு கொடுத்த வாறே என்னை அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.

நாம் எங்கே இருக்கிறோம். எங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவர்கள் யார் ?

எல்லோராலும் கைவிடப்பட்டு நிர்க்கதியாக நிற்கும் எங்களுக்கு தமிழர்களுக்கு நேர்ந்தது தென்ன?

சொல்கிறேன் இதுவரை பேசியதிற்கும் இது முற்றிலும் மாறானது. ஆயினும் அது ஒரு ஆறாத ரணமாக என்னுள்ளே இருந்தது.

தெருவில் என்னை திட்டடியவன் மீது எனக்கு கோபமில்லை. அவன் வாயை திறக்க வேண்டிய நேரத்தில் திறந்திருந்தால் ………….. அவன் உயிர் பிழைத்திருக்க முடியாது. அவனும் தனக்கு பாதுகாப்பான இடத்திற்கு வந்த பிறகு தானே வாய் திறக்கிறான். ஒரு சில நிமிடங்கள் நான் புலிகள் அமைப்பில் இருந்ததற்காக இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இதே நபர் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் என்னைக் கண்டிருந்தால் …….. நிச்சையமாக என்னை பணிந்திருப்பார். நான் தன்னோடு பேசியதிற்காக பெருமைப்பட்டிருப்பார். அதை தன் நண்பர்களுக்கும் சொல்லி பெருமைப்பட்டிருப்பார்.

எப்படி மாறியது இந்த கள நிலவரம். போரை இலங்கை அரசு வென்றதாலா? மக்களை புலிகள் கைவிட்டதாலா? போரில் வெற்றி தோல்வி சகஐம் …..ஆனால் மக்களை வென்றிருக்கவேண்டும். மக்களின் மனங்களை வெல்லாத போது போரில் வெற்றி பெற்றாலும் பயனில்லை. க.வே.பாலகுமாரன்.

பல சுவாரசியமான தகவலொடு தொடர்கிறேன்.

நன்றி

அன்புடன் உங்கள் கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னாள்ஆபாராளிகள் 50பேரின் வயிற்றில் மண்அள்ளிப்போடும் அவனங்கள் எதுவும் கேபி ன் கணக்கும் செயலகக்கணக்கும் என்ற கட்டுரையில் இல்லை.

அதுசரி,முழு இனத்தின் வயிற்றில் மண்அள்ளிப்போட்ட கேபி நடாத்தும் நிறுவனத்துக்கு ஏன் உதவவேணும்.அதனைவிட தேசத்தின்பாலம், நேசக்கரங்கள், நும்பிக்கைஒளி,போன்ற உதவும் அமைப்புகளுக்கூடாக அல்லது ஊர்ச்சங்கங்கள்,பாடசாலைஅமைப்புகள் ஊடாக முன்னாள் போராளிகளுக்கு

அனுப்புங்கள்.

பலஆயிரக்கண்கானவர்களை உயிருடன் மண்ணுக்குள் குழிபறித்துமூட காரணமான கேபி உதவும் நிறுவனம் நடாத்துவது அலுகோசுதனமானது.

இதை தான் கூறுகிறீரகள் ஆனால் ஆதாரம் எதையும் கூறவில்லை! கே.பி தமிழ் மக்களின் வயித்தில் அடிடித்தார் என்பதை விட நீங்கள் கூறிய சில அமைப்பின் பொட்டுக்கேடுகள் ஆதாரத்துடன் இந்த இணையத்திலேுயெ வந்ததது தெரியாதா? கே.பி கூறிய சில உண்மைகளை மறுதலித்தவர்கள்தான் மாவீரர் தினத்தையும் வியாபாரமாக்கியவர்கள்! கே.பி நல்லவர் கெட்டவர் என்பதற்கு அப்பால் கே.பியின் கவரில் பலர் ஊத்தைகளையும் ஊழல்களையும் மறைக்கிறார்கள்.!

கேபி நல்லவர் கெட்டவர் என்பதற்கு அப்பால்தான்.அவர் ஒரு இனத்தையே காட்டிக்கொடுத்தவர்.

கேபி ன் கவரில் மற்றவர்கள் ஒழித்துக்கொள்ளும் அளவுக்கு கேபி க்கு என்று எங்காவது ஒரு தமிழனிடம்தன்னும் நல்ல பெயர் இருக்கா?

போர்க்குற்றமோ இனப்படுகொலையோ வன்னியில் நடைபெற இல்லை என்று இப்போது மகிந்த அரசுக்காக அறிக்கைவிடும் கேபி தான் குஞ்சுகள் பிள்ளைகள் பெண்கள் என்று அனைவரையும்

மண்ணுக்குள் புதைய காரணம் ஆனவர்.

கேபி 870 மில்லியன் டொலரை சிங்களஅமைச்சர்களுக்கு குடுத்த கேவலத்தையும் இந்த இணையத்திலை நீங்கள் பார்க்கவில்லையோ?

நீங்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் கேபியை அசிட்ஊத்தி கழுவினாலும் அவரின் காட்டிக்குடுப்புகளை மறைக்கஏலாது.

அப்ப இணையத்தில் வருவதெல்லாம் உண்மை! தலைவர் சரணடைந்த பின் கொல்லப்பட்டார் என்ற செய்தி உண்மையா? கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் பொய் இன்று தீர விசாரித்து அறிவதும் பொய்யே! அனால் உண்மைகள் அதற்காக இறக்கவும் போவதில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை தான் கூறுகிறீரகள் ஆனால் ஆதாரம் எதையும் கூறவில்லை! கே.பி தமிழ் மக்களின் வயித்தில் அடிடித்தார் என்பதை விட நீங்கள் கூறிய சில அமைப்பின் பொட்டுக்கேடுகள் ஆதாரத்துடன் இந்த இணையத்திலேுயெ வந்ததது தெரியாதா? கே.பி கூறிய சில உண்மைகளை மறுதலித்தவர்கள்தான் மாவீரர் தினத்தையும் வியாபாரமாக்கியவர்கள்! கே.பி நல்லவர் கெட்டவர் என்பதற்கு அப்பால் கே.பியின் கவரில் பலர் ஊத்தைகளையும் ஊழல்களையும் மறைக்கிறார்கள்.!

இணையத்திலேயே வந்துள்ளது என்று முதலில்எழுதினது நீங்கள்தான்.

நீங்கள் சுட்டிக்காட்டும் இணையம் மட்டும்தான் உண்மையோ??

கேபி ன் குரலிலேயே அவர் சொன்னது வந்துள்ளது. கோர்க்குற்றம் நடைபெற இல்லை என்று அவரின் நெர்டோ ல் வந்திருக்கு.சிறீலங்காவிலை தேசியநல்லிணக்கத்துக்கு அவர் பாடுபட போகிறாராம் என்று.

முதலில் நெர்டோவை தன்னும் முழுதாக வாசியுங்கள்.

புலம்பெயர்நாடுகளில் முதலில் இந்த களவுகளை அறிமுகம்செய்ததே கேபிதான்.

இவருக்கு படிப்பித்தவரும் இவரின் உறவினருமான கனடா இன்பத்தாருக்கு அம்பிகாநகைக்கடையை ஊர்க்காசிலை போட்டுக்கொடுத்தது கேபிதான்.

இன்றைக்கும் கேபின் மனைவி தாய்லாந்தில் 6 கார் வைத்திருக்கிறா.3 BMW,

எல்லாம் 2008ம் அதற்கு பிறகு வந்த மொடல்கார்கள்தான்.

அவ என்ன எங்கள் தாயகவிடுதலைக்கு சுள்ளிபொறுக்கி போட்டவவோ??

ஊர்க்காசை எடுத்து தானதர்மம் செய்யிற சோம்பேறி குணத்தை ஆரம்பித்தது கேபி தான்.

இந்த இணையம் சொல்வதெல்லாம் உண்மை என்று கூறவில்லை அனால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து கூறியதை மேற்கோள் காட்டியதுடன் அது கூட எவ்வளவு துரம் உண்மை என்பது கேள்விக்குறி! இங்கு கேபியின் மனைவி ஏன் 6 கார் வைத்திருக்கிறார் என்பது கூட ஊகம் தான். தலைவர் சரணடைந்து கொல்லப்பட்டார் என்ற செய்தி பல இணையங்களில் வந்ததது போல் தான் கே.பியின் கதையும்.. நீங்கள் அவருடன் கூட இருந்தது போல் எழுதுவதுதான் இன்று போராட்டத்தை தோல்விகாண வைத்த கொசிப் கலாச்சாரம். கருணா துயெராகியானதும் மாத்தையா துரோகியானதும் இந்த கொசிப் கலாச்சாரத்தால் தான்! இது தமிழ் சனத்திற்கு ஒரு நோய்! இன்று போராட்ட தோல்வியை ஒரு தனி மனிதனிடம் போட்ட விட்டு தமிழ் சமூகத் தப்பிக்க பேசப்படும் கதைகள் தான் இவை! கூட்டாக அதற்கான பொறுப்பை ஏற்க மறுத்து கேபியின் மீதும் கருணா மீதும் பழியை போட்டு விட்டு தப்பிக்க நினைக்கிறது தமிழ் சமூகம். 1990 முதல் மிக இயக்க வெற்றிகளுக்கும் இயக்க வழர்ச்சிகளுக்கும் உதவியவர்கள் திடீர் துரோகியாக மாற புறக்காரணங்களிற்கு வழி சமைத்த இயக்க நடைமுறை ஏன் இங்கு பரிசீலிக்க படவில்லை? இந்த நடைமுறையின் பின்விழைவு தான் இந்த மாவீரர் தினத்தை வியாபாரமாக்கி இன்று குடுமிபிட சண்டையில் முடிந்துள்ளது! சுட்டும் விரலால் எதிரியை காட்டி குற்றம் கூறுகையில் மற்றய மூன்று விரல்களும் உங்களை தான் சுட்டிக்காட்டகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இணையம் சொல்வதெல்லாம் உண்மை என்று கூறவில்லை அனால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து கூறியதை மேற்கோள் காட்டியதுடன் அது கூட எவ்வளவு துரம் உண்மை என்பது கேள்விக்குறி! இங்கு கேபியின் மனைவி ஏன் 6 கார் வைத்திருக்கிறார் என்பது கூட ஊகம் தான். தலைவர் சரணடைந்து கொல்லப்பட்டார் என்ற செய்தி பல இணையங்களில் வந்ததது போல் தான் கே.பியின் கதையும்..

கேபியை ஒரு ஈனப்பிறப்பாக காட்டுவதற்கு அவருடன்கூட இருந்ததாக எழுதவேண்டிய அவசியம் எதுவும் இல்லை.2009 யூன்க்கு பிறகு ரு இன்றுவரை அவர் குடுக்கும் அவரின் சொந்தகுரலிலான பேட்டிகளும், புலம்பெயர்தேசங்களிலிருந்து அவர் கூப்பிட்டு கதைக்கும் கதைகளும்,அவரின் பேட்டிகளும் அவரை அவரின் உண்மையான கேவலத்தை காட்டுவதற்கு போதுமானது ஆகும்.

அவருடன் நேரில் இருந்தேனா இல்லையா என்பது நீங்கள் அவரிடம் கேளுங்கள்.

தலைவர் தனக்கு பிறகு கேபி நீதான் இந்த இயக்கத்தை தலைமைதாங்கவேணும் என்று சினிமா படங்களில் சாகும்கடைசிநேரத்தில் வயதான தந்தை கீரோவின் கைகளை பிடித்து கேட்டதுபொல சொன்னதுமுதல்,

இனிஒரு உரிமைப்போராட்டம் ஆரம்பித்தால் அதனை அழிக்க முன்னிற்கும் முதலாவது ஆள் தான்தான் என்று பத்திரிகைகளுக்கு பேட்டிகொடுத்தது வரை அவரை அவரின் கதைகள்தான் மக்களுக்கு காட்டியது.

கேபியை எனக்கு இங்கு இருக்கும் அநேகரைவிட அதிகமாகவே தெரியும்.

கேபியை துரோகி என்று சொல்லுவதில் எனக்கு ஒப்புதல்இல்லை.

அவன் முழுமானிட இனத்தினதும் அவமானம்.

"அதே ஓநாய் அழுகை, அதே வசனங்கள், அதே தானைத்தேசியத்தலவன் கேபிக்காக அழுகை, ... " ... எங்கேயோ கேட்ட குரல் ... அடிடா அடிடா ... மொட்டை! ... விட்டால் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி சந்தனம் தடவி பூவும் சுற்றி ஆத்தியும் எடுத்துடுவாங்கடோவ்!

... சரி எங்கை மொட்டை ...???????

20111129_LN10.jpg

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: ...

" ஒரு சில நிமிடங்கள் நான் புலிகள் அமைப்பில் இருந்ததற்காக இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இதே நபர் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் என்னைக் கண்டிருந்தால் …….. நிச்சையமாக என்னை பணிந்திருப்பார். நான் தன்னோடு பேசியதிற்காக பெருமைப்பட்டிருப்பார். அதை தன் நண்பர்களுக்கும் சொல்லி பெருமைப்பட்டிருப்பார்.

எப்படி மாறியது இந்த கள நிலவரம். போரை இலங்கை அரசு வென்றதாலா? மக்களை புலிகள் கைவிட்டதாலா? போரில் வெற்றி தோல்வி சகஐம் …..ஆனால் மக்களை வென்றிருக்கவேண்டும். மக்களின் மனங்களை வெல்லாத போது போரில் வெற்றி பெற்றாலும் பயனில்லை. க.வே.பாலகுமாரன்."

இந்த பாலகுமாரனும் மற்றவர்களும் இப்படி ஆசைகாட்டித்தான் மகிந்தாவை வடக்கு கிழக்கு தேர்தலுக்கு அழைத்து சென்று ஏமாற்றியவர்கள். இவர்கள்தான் சம்பந்தரை இப்போ தாயகத்தமிழர்களின் தனிபெரும் தலைவனாகியவர்கள். ந்ன்றி பாலகுமார் அவர்களே உங்கள் சேவை தொடரட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.