Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா நாடாளுமன்றில் இலங்கைக்கு எதிரான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா நாடாளுமன்றில் இலங்கைக்கு எதிரான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது!

resize_20111201184654.jpg

இலங்கைக்கு எதிரான அறிக்கையொன்று கனடா நாடாளுமன்றில், மனித உரிமை கண்காணிப்பகத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையை இலங்கைக்கு பாதகம் ஏற்படும் வகையில் மனித உரிமை கண்காணிப்பகம் கனடாவிற்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் எலியன் பியர்சன் என்பவரே இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் திவயின குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் இலங்கைக்கு எதிராக பல போலிக் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thedipaar.com...ws.php?id=37653

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரம்பம். பலர் கனடாவை குறை சொன்னாலும்... தமிழர் மீது கனடாவுக்கு, ஒரு அனுதாபம் உள்ளதை மறுக்க முடியாது.

குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்கு உள்ளது: கனடா

25 வருடகால யுத்த நடவடிக்கைகளின்போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மிக மோசமான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயட் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில்; இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பிரதமர் ஸ் ரீபன் ஹார்பர் விமர்சித்திருந்தார். இதனையடுத்தே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயட் இதனைக் கூறினார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த சில நாடுகள்; 10 வருடங்களை எடுத்துள்ளன. சில நாடுகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேயில்லை. ஆனால் இது மிக முக்கியமானது என ஜோன் பயட் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புப் படையினர் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள இலங்கை அரசாங்கம், இது தொடர்பான விசாரணையை நடத்துவது குறித்தும் மறுப்புத் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிரான ஐ.நா.வின் அண்மைய அறிக்கையை ஜோன் பயட் பாராட்டியுள்ளார்.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, யுத்தக் குற்றச்செயல்கள் குறித்து விசாரணையை முன்னெடுக்கப்பட வேண்டுமென இலங்கைக்கு மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களானபோதிலும்; தமிழ் சமூகத்தவருடனான அர்த்தமுள்ள நல்லிணக்கமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை காணவில்லை என அமைச்சர் ஜோன் பயட்; தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் வளர்ந்து வரும் ஏதேச்சாதிகாரப் போக்கையே நாங்கள் கண்டுள்ளோம் என அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/31868-2011-12-02-08-18-30.html

இது போன்று ஏனைய நாடுகளும் செயற்படவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.