Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் இலங்கை அகதிகளுக்கும் – ஜெயா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jayalalitha-150x150.jpg

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்பட முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் 21,000 முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வர சிரமப்படுவதை தவிர்க்க தமிழகத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, ஆகிய துறைகளால் நிர்வகிக்கப்பட்டு வரும் அனைத்து மாணவர், மாணவியர் விடுதிகளிலும், அவர்கள் தங்கி கல்வி பயில ஆணையிட்டுள்ளார்.

இதன்படி, தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் 1,294 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர், மாணவியர்களுக்கான விடுதிகளில், ஒவ்வொரு விடுதியிலும் தற்போது அனுமதித்துள்ள எண்ணிக்கைக்கு கூடுதலாக 5 இடங்கள் வீதம் மொத்தம் 6,470 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்.

இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 3 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் தொடரும் செலவினம் ஏற்படும். இதேபோன்று, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 1238 விடுதிகளில், ஒவ்வொரு விடுதியிலும் தற்போது அனுமதித்துள்ள எண்ணிக்கைக்கு கூடுதலாக 5 இடங்கள் வீதம் மொத்தம் 6,190 இடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 4 கோடியே 25 லட்சத்து 64 ஆயிரத்து 620 ரூபாய் தொடர் செலவினம் ஏற்படும்.

இந்த நடவடிக்கைகள் மூலம், அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் 12,660 குழந்தைகள் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, இலங்கைத் தமிழர்கள் தங்கள் படிப்பினை இடையில் நிற்காமல் தொடர்ந்து படிப்பதினால், அவர்களின் வருங்கால வாழ்விலும் வளம் ஏற்படும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.saritham.com/?p=43290

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.