Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா மனித உரிமைகள் தினத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் வேண்டுகோள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

human-rights-image1.jpg

இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் அவசரகால மற்றும் பயங்கரவாத சட்ட விதியின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 800 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பாகக் தமிழ் அரசியல் கைதிகளின் சார்பில் அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதன் முழு விபரம் வருமாறு:

ஐநா மனித உரிமைகள் தினத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் வேண்டுகோள்

இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் அவசரகால மற்றும் பயங்கரவாத சட்ட விதியின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 800 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம்.

காலம் காலமாக எமது விடுதலையை வலியுறுத்திப ல வழிமுறைகளில் எமது நியாயமான வேண்டுகோள்களை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். அந்த வகையில் ஐநாவின் மனித உரிமைகள் தினமாகிய இன்று காலத்தின் தேவை அறிந்து இவ்வேண்டுகோளை விடுக்கிறோம்.

சிறைச்சாலைகளில் இருக்கின்ற அரசியல் கைதிகளின் கணிசமான பகுதியினர் இறுதி யுத்தத்தின்போது உடல் ஊனமுற்ற நிலையிலும், இன்னும் பலர் குண்டுத்துகள்களை உடல்களில் தாங்கியபடியும், நாளாந்தம் ‘வலிப்பு’ போன்ற வியாதிகளால் அவஸ்தைப்படுகின்றார்கள்.

மற்றுமொரு பகுதியினர் மிக நீண்டகாலமாக வழக்கு விசாரணை முன்னேற்றங்களின்றி, சிறையில் வாடுகின்றனர். சில சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் ஏனைய கைதிகளுடன் அல்லாமல் வேறுபடுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், காலம் காலமாகப் பலதரப்பட்டவர்களாலும் வன்முறைகளுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்தே வருகின்றனர்.

அப்படியான சந்தர்ப்பங்களில் வழமைபோல் துறைசார் அதிகாரிகளால் வெறும் உறுதிமொழிகள் வழங்கப்படுவதும், பின் அதை உதாசீனம் செய்வதுமே நடைமுறையில் இருக்கின்றது. ஆகவே, இப்படியான கசப்பான சம்பவங்கள் நடைபெறுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, நிரந்தரத் தீர்வுகள் எட்டப்படுவது அவசியமாகும்.

தமிழ் அரசியல் கைதிகளின் சமய அனுஸ்டானங்களையும் கலாசார நிகழ்வுகளையும் மேற்கொண்டு உளவியல் ரீதியான தாக்கங்களில் இருந்து விடுபடுவதற்கு சிறைச்சாலை நலன்புரி கிளையினரால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவது, மற்றும் மேலதிகக் கல்விச் செயற்பாடுகளில் ஆர்வமுடையவர்களுக்கு அதனை மேற்கொள்வதற்கான ஒழுங்கினையும் செயற்படுத்தி, உறுதி செய்ய வேண்டும்.

அத்துடன் அரசியல் கைதிகளின் நலன்களில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகத் தலையிட்டு, சுழற்சி முறையில் அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் சென்று குறைபாடுகளைக் கேட்டறிந்தால், அனேகமான விடயங்களுக்குத் தீர்வுகளை எட்ட முடியும் என்று நம்புகின்றோம்.

அரசியல் கைதிகளும், அவர்களது குடும்ப உறவுகளும் யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களை அண்மித்துக் கொண்டிருக்கும் நிலையில் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார, கலாசார பிரச்சினைகளைப் புதிதாகச் சொல்வதற்கில்லை.

இன்று அநேகமாக வடக்கு கிழக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளமை பற்றியும், அதற்கான சட்ட திருத்தம் பற்றியும் பெண்கள் மற்றும் சிறுவர் அமைப்புக்கள் ஊடகங்களின் மூலம் கண்டனங்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றன.

ஆனால் அவ்வாறான வன்முறைகளை எதிர்கொள்ளும் குடும்பத்தின் தலைவனோ அல்லது பாதுகாவலனோ பெரும்பாலும் சிறைச்சாihலகளிலும், தடுப்பு முகாம்களிலுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த விடயத்தை சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் சுட்டிக்காட்டுவதாகத் தெரியவில்லை. அத்துடன் இந்த அமைப்புக்கள் எங்கு இருக்கின்றன, அவற்றுடன் எப்படி தொடர்பு கொள்வது என்பதுகூட மக்கள் மத்தியில் தெளிவற்ற நிலைமையே காணப்படுகின்றது.

எனவே, சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய டிசம்பர் 10 ஆம் திகதியான இன்றைய (நாளை சனிக்கிழமை) சந்தர்ப்பத்தில் இன மத கடசி பேதங்களை மறந்து, மனித உரிமை அமைப்புக்கள், அனைத்துத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், பெண்கள் மற்றும் சி;றுவர் அமைப்புக்கள், சர்வமதத் தலைவர்கள், சட்ட உதவி நிறுவனங்கள், சகோதர இன கட்சிப் பிரமுகர்கள் அனைவரும் இவ்வி;டயத்தில் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து, சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 800 ஆண், பெண், வயோதிப தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிசமைத்து, அவர்களையும் இயல்பு வாழ்க்கையில் இணைப்பதற்கு கைகோர்த்துச் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு தமிழ் அரசியல் கைதிகளின் சார்பில் அனுபவன்

human-rights-image2.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.