Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் உயிரிழந்தவர்களின் சட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்ள உதவுங்கள் – மக்கள் கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

resettled-families-in-vanni-le-150x150.jpg

வன்னி யுத்தத்தின்போது உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் தொடர்பான சட்ட ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் வன்னி மக்கள் பெரும் இடர்களை எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சட்ட ஆவணங்கள் பெற்றுக்கொள்வதற்காகப் பல இடங்களுக்கு அலைந்து திரிந்தும் பயனேதும் கிட்டவில்லை எனவும் அவர்கள் கூறினார்கள்.

இந்த விடயத்தில் அரசு கூடிய கவனம் செலுத்தி பாதிக்கப்பட்டோர் இந்த ஆவணங்களை விரைவாகப் பெறுவதற்கு உதவ வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களிலேயே இந்தப் பிரச்சினை தலை தூக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்ற வேளையில் பெரும் உயிரிழப்புக்கள் இடம்பெற்றன. பலர் குடும்பம் குடும்பமாகவும் கொல்லப்பட்டனர்.

வேறு பல குடும்பங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோரும் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் மோசமான எறிகணை வீச்சு, பதற்ற நிலைஇருந்தமையால் உயிரிழந்தவர்களின் மரண விசாரணைகளை மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது.

அந்தவேளையில் மரண விசாரணை அதிகாரியையோ அல்லது கிராம அலுவலரையோ தேடிப் பிடிப்பது இயலாத காரியமாக இருந்தமையால் பலர் தமது உறவுகளை தாங்களே குழிகளை வெட்டிப் புதைத்து விட்டுச் சென்ற சம்பவங்களும் நடந்தன.

இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு மரணப்பதிவுகள் எதுவும் அந்த வேளையில் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் இப்போது தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்ந்து வருகின்றனர். அவர்கள் தமக்கான பல்வேறு தேவைகளுக்காக யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் சட்ட ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனினும் அந்த ஆவணங்கள் அவர்களிடம் கைவசம் இல்லை. இதனால் அவற்றைப் பெறுவதற்காக மக்கள் தற்போது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தாம் பல்வேறு இடர்களைச் சந்தித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

உறவுகள் உயிரிழந்த நேரத்தில் நாம் எந்தவிதமான பதிவுகளையும் மேற்கொள்ளவில்லை. உயிரைக் கையில் பிடித்தபடி இடம்பெயர்ந்து கொண்டிருந்தோம். உயிரிழந்த பலரை புதைக்கக் கூட கால அவகாசம் கிடைக்கவில்லை.

இவ்வாறான அவல நிலையில் இடம்பெயர்ந்த நாம் இப்போது உயிரிழந்தவர்களின் மரணச் சான்றிதழ்களை பெறுவதிலும் அவலங்களை எதிர்நோக்குகின்றோம். மரணச் சான்றிதழைப் பெறுவதற்கு மரண விசாரணை அதிகாரி, கிராம அலுவலர் ஆகியோரின் அறிக்கைகள் எம்மிடம் கோரப்படுகின்றன. எனினும் அவை எதுவும் எம்மிடம் இல்லை என்கின்றனர் வன்னி மக்கள்.

இதேநிலைமை தான் சில பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதிலும் உள்ளது. இவற்றைப் பெறுவதற்காக நடமாடும் சேவைகள் நடைபெறுகின்றபோதும் அவை மூலம் எமக்குப் பயன் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்த ஆவணங்களை தாம் பெறுவதற்கு அரசு உரிய வழிவகைகளை செய்து தரவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடமாடும் சேவைகள் மூலம் இந்த சட்ட ஆவணங்களை உடனடியாக வழங்க முடியாத நிலை உள்ளதாகவும் அவற்றை பெற்றுக்கொடுப்பது குறித்து தாம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் நடமாடும் சேவைகளை ஏற்பாடு செய்யும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

http://www.tamilthai...newsite/?p=1376

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.