Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொன்சேகாவின் விடுதலைக்காக வெள்ளை மாளிகை இணையத்தளத்தில் கையெழுத்து சேகரிக்கிறார் மகள் அப்ஸரா

Featured Replies

பொன்சேகாவின் விடுதலைக்காக வெள்ளை மாளிகை இணையத்தளத்தில் கையெழுத்து சேகரிக்கிறார் மகள் அப்ஸரா

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலையடையச் செய்வதற்கான முயற்சியாக அவரின் மூத்த மகளான அப்ஸரா பொன்சேகா, அமெரிக்க வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலமான மகஜரொன்றில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.

இந்த இணையத்தள மனுவில் 25,000 கையெழுத்துகள் பெறப்பட்டால் தான் தலையிடுவதாக அமெரிக்க அரசாங்கம் உறுதியளித்துள்ளது என சரத் பொன்சேகாவை விடுப்பதற்கான மக்கள் இயக்கம் நேற்று தெரிவித்தது.

25,000 கையெழுத்துகள் பெறப்பட்டால், பொன்கோவை விடுதலை குறித்து இலங்கை அரசாங்கத்துடன் அமெரிக்க அரசாங்கம் பேசும் என எமக்குஅறிவிக்கப்பட்டுள்ளது என மேற்படி இயக்கத்தின் ஏற்பாட்டாளர் குமார அழகியவண்ண கூறினார்.

நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பமான மேற்படி இணைத்தள மனுவில் நேற்றுவரை 15,000 இற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டிருந்தனர். அமெரிக்கப் பிரஜையான அப்ஸரா பொன்சேகா, தனது தந்தையின் விடுதலைக்கு உதவுமாறு அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/32508-2011-12-12-18-57-07.html

Urge the release of former commander of the Sri Lankan Army and Presidential candidate General (Ret.) Sarath Fonseka

https://wwws.whitehouse.gov/petitions/!/petition/urge-release-former-commander-sri-lankan-army-and-presidential-candidate-general-ret-sarath-fonseka/Bc5DNPg2?utm_source=wh.gov&utm_medium=shorturl&utm_campaign=shorturl

பொன்சேக்க தமிழருக்கு வடக்கில் செய்த அட்டூளியங்களை வைத்து அவற்றை தேவையான தகுதியாக கண்டு, இந்த நூற்றாண்டின் பயங்கர பலியேடுப்புகளை செய்ய கோதாவால் தெரிந்தெடுக்கபட்டவர். கையெடுத்து கும்பிட்டு குடும்பம் முழுவதும் கதறியழ அவர்களை பார்க்கவைத்து பெண்களையும் குழந்தைதைகளையும் சித்திரவதை செய்து கொன்ற ஆமியை வழி நடத்தியவர். தனது பிள்ளைகள் அமெரிக்காவில் உல்லாசம் அநுபவிக்கையில் ஆயிரம் ஆயிரம் பிள்ளைகளை அநாதைகளாத்தன்னும் உயிர்காவ விடாமல் இரசயானக் குண்டு போட்ட ஆமியை காட்டி எழுப்பிய கொடிய மனிதர். போருக்கு பின்னும் எப்படி இலங்கை ஆமியைப் பெருக்க வேண்டும் என்று கோத்தாவுக்கு திட்டங்கள் தீட்டி கொடுத்த மூளைசாலி. இந்திய மத்திய அரசைப்பற்றி தெரியாமல், அவர்களின் நட்பை வைத்து குள்ள நரி கருணாநிதி மட்டும் தான் தமிழகத்து தமிழன் என்று நினைத்து, "தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் எல்லோரும் கோமாளிகள். அவர்களைப்ப்ற்றி நாம் கவலைப்பட போவதில்லை என்றவர்".

சிறிமாவோதான் புத்திரகித்திர தேரோவை வைத்து பண்டாரநாயக்கவை கொன்றதாக வழக்கு நடத்தப்பட்டது. ஆனால் அதன் பின் பள்ளி சென்று ஒழுங்காகப் படித்திராத சிறிமாவோ, மேடை மேடையாக கண்ணீர் விட்டு காட்டித்தான் பிரதமரானார். இது சிங்கள அரசியல்வாதிகளினதுமட்டுமல்ல, அவர்களின் குடும்பங்களினதும் கோமாளித்தனம்.

எமது வேதனைகளுக்கு முன் நாம் இந்த புது புது கோமாளிகள் குடும்பங்கள் அரசியலில் நுளைய எடுக்கும் முயற்சிகள் பற்றி கவனத்தில் எடுக்கப்படாது.

  • தொடங்கியவர்

நாமும் இவ்வாறான ஒரு கையெழுத்து வேட்டை நடாத்தினோம், 5000 கேட்டு. அந்தவகையில் இந்த முன்னெடுப்புக்கு கணிசமான ஆதரவு உள்ளது. அத்துடன் இது சிங்கள மக்கள் மத்தியில் வளரும் வேறுபாடுகளை காட்டி நிற்கிறது.

உத்தியோகபூர்வ ரீதியாக தமிழர்கள் இந்த விடயத்தில் தலையிடக்கூடாது. ஆனால், தனிப்பட்ட ரீதியில் இதை மேலும், அதாவது பிளவுகளை, வளர்த்துவிட அமைதியாக உதவலாம்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோகபூர்வ ரீதியாக தமிழர்கள் இந்த விடயத்தில் தலையிடக்கூடாது. ஆனால், தனிப்பட்ட ரீதியில் இதை மேலும், அதாவது பிளவுகளை, வளர்த்துவிட அமைதியாக உதவலாம்.

கையெழுத்து வைத்தால் சிங்களப் பெயரில் (ஐடி முதற்கொண்டு) வருவதாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்..! :unsure: ஆனால் பிடிபட்டால் தமிழரின் நம்பகத்தன்மைக்கு (Credibility) குந்தகம் வந்துவிடும்..! :blink: எல்லோராலும் பிடிபாடாமல் செயற்படுவது கடினம்..! ஆகையால் ஒதுங்கியிருப்பதே மேல்..! :unsure:

மேலே மல்லைக்கு ஒரு பச்சை..! :rolleyes:

  • தொடங்கியவர்

பொன்சேகாவின் விடுதலைக்கு யாழ். தமிழர்களிடமும் கையொப்பம்

சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக யாழ். தமிழர்களிடம் கையொப்பம் பெறப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் ஏனைய பிரதான நகரங்களிலும் இந் நடவடிக்கையினை முன்னெடுத்து 90 நாட்களுக்குள் மகஜர் ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன குறிப்பிடுகையில், “சரத்பொன்சேகா அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார். இவருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பாக ஐ.நா.விடம் நீதி கோரவே பொதுமக்களிடம் இருந்து 10 இலட்சம் கையொப்பம் பெறும் நடவடிக்கையையே ஐ.தே.க ஆரம்பித்துள்ளது” என அவர் மேலும தெரிவித்தார்.

http://www.alaikal.com/news/?p=90545

பொன்சேகாவின் விடுதலையை எதிர்த்து ..கருத்துக்களை பதிவு செய்ய முடியுமாயின் தமிழர்கள் அதை செய்யவேண்டும்....

எங்களின் அளிவுக்கு முக்கிய பங்காளியான இவனையும் வெளியில் வர விடக்கூடாது...-

  • தொடங்கியவர்

பொன்சேகாவின் விடுதலையை எதிர்த்து ..கருத்துக்களை பதிவு செய்ய முடியுமாயின் தமிழர்கள் அதை செய்யவேண்டும்....

எங்களின் அளிவுக்கு முக்கிய பங்காளியான இவனையும் வெளியில் வர விடக்கூடாது...-

அதிகளவில் சிங்களவர்கள் இன்று மகிந்தாவுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால், பொன்சேகா விடயம் ஒட்டுமொத்த சிங்கள ஒற்றுமையை ஒரு சவாலான நிலைக்குள் தள்ளியுள்ளது.

இன்றைய தாயக மக்களின் விடிவுக்கு ஒரு அரசியல் தீர்வு தேவை. அதை சிங்களம் தராது. சர்வதேசம் ஊடாக பெறவேண்டும், அதற்கு சிங்களத்தின் தற்போதைய பலம் நிறைந்த மகிந்த ஆட்சி பலவீனப்படல் வேண்டும். அதற்கு பொன்சேகா விடயம் கூட பயன்படுத்தப்படலாம்.

இன்று மகிந்தவை பொறுத்தவரையில் பொன்சேகாவை வெளியே உயிருடன் விட்டாலும் விடாவிட்டாலும் பிரச்சனை.

தமிழரை பொறுத்தவரையில் பொன்சேகா ஒரு போர்க்குற்றவாளி. மகிந்த கூட்டமும் கூடத்தான். ஆனால், எமக்கு இவர்களை பழி வேண்டுவதை விட அரசியல் தீர்வே மிக மிக முக்கியம்.

Edited by akootha

  • தொடங்கியவர்

பொன்சேகாவின் விடுதலைக்கு யாழ். தமிழர்களிடமும் கையொப்பம்

சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக யாழ். தமிழர்களிடம் கையொப்பம் பெறப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் ஏனைய பிரதான நகரங்களிலும் இந் நடவடிக்கையினை முன்னெடுத்து 90 நாட்களுக்குள் மகஜர் ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

பொன்சேகாவின் விடுதலைக்கு தாயக உறவுகள் (பலவந்தப்படுத்தப்பட்டு ? ) கையெழுத்து வைக்கவுள்ளார்கள். சிங்களவர்களும் பெருமளவில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மகிந்தவின் ஆதரவாளர்களால் எவ்வாறு நடாத்தப்படுவார்கள்?

காவல்துறை மற்றும் இராணுவத்துக்குள் பிளவை ஏற்படுத்துமா?

அரசியல் ரீதியாக எவ்வாறான தாக்கங்களை இது உருவாக்கலாம்?
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பொன்சேகாவும் ஒரு போர் குற்றவாளி என்பதனை மறக்க முடியாது அத்தோடு எமது மக்கள் படுகொலை செய்தது படுகொலை செய்யப்பட்டதக்கு நியாயம் கோரும் போராட்டத்துக்கு எந்த சிங்களவனும் வெளிப்படையாக உதவ வில்லையே என்பது எனது வருத்தம்.

முள்ளிவாக்கால் இறுதி யுத்தம் நடைபெற்ற வேளையில் ஒரு அறிக்கையோ ஆர்ப்பாட்டமோ சிங்கள தரப்பால் போரை நிறுத்த கோரி எதுவும் செய்யவில்லை அப்படியிருக்கையில் நாங்கள் ஏன் உதவ வேண்டும் ?

  • தொடங்கியவர்

முள்ளிவாக்கால் இறுதி யுத்தம் நடைபெற்ற வேளையில் ஒரு அறிக்கையோ ஆர்ப்பாட்டமோ சிங்கள தரப்பால் போரை நிறுத்த கோரி எதுவும் செய்யவில்லை அப்படியிருக்கையில் நாங்கள் ஏன் உதவ வேண்டும் ?

உங்களின் கேள்வி நியாயமானதே. உதவத்தேவையில்லை. ஆனால், முடிந்தால் உதவுவது போல நுழைந்து குழப்பி விடலாம்.

'துன்பத்தை தந்தவனுக்கே அதை திருப்பி கொடு' : அன்று கருணா ஊடாக ஆயுதப்போரட்டத்தை சிங்களவன் குழப்பினான், இன்று சில தமிழரை வைத்து புலம்பெயர் முன்னெடுப்புக்களை குழப்புகிறான். அவனது பாணியில் நாமும் குழப்ப வேண்டும்.

Edited by akootha

பொன்சேக்காவை விடுவிற்பதால் தமிழருக்கு ஏதாவ்து நன்மை கிடைக்குமா என்பது சந்தேகம்.

1. போர் குற்றவாளி பொன்சேக்கா மன்னிக்கப் பட்டால் அதே முறையை மற்றைய குற்றவாளிகளும் தேடுவார்கள்.

2. பொன்சேக்காவை வெளியில் விடுவதற்கு ராசபக்கசாக்கள் தமது போர்குற்றத்தை வைத்துத்தான் வெளிநாட்டு அரசுகளுடன் பேரம் பேசுவார்கள்.

3. பொன்சேக்க ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்டால்த்தான் வெளியில் போகலாம் என்பதுதான் இப்போது நிபந்தனை. இந்த நிபந்தனைக்கு பொன்சேக்கா இணங்கினால் பொன்சேக்கவைத்தண்டித்த குற்றம் RAW மீது மட்டும்தான் விழும். பொன்சேக்க திரும்ப அரசாங்கத்தில் சேர்க்கப் படுவார்.(தேசிய அரசாங்கம் கூட அமைக்க முயல்கிறார்கள்)

4. விடுவிக்க பட்ட பொன்சேக்க தமிழருக்காக சாட்சி சொல்ல வருவார் என்பது நடக்கப் போவதில்லை.

5. அரசுடன் இணைய மறுத்து பொன்சேக்க சரவதேச விசாரணைகளுக்கு ஆயத்தமானாரானால் லசந்தா முதல் மற்றும் எல்லோருக்கும் ஆபத்தில் வந்துதவிய வெள்ளைவான் இவருக்கும் வரும். இவரால் பிறகு ஒருவருக்கும் உபயோகமிருக்காது.

6.இப்படி ஒன்றும் நடவாமல் பொன்சேக்க போர்குற்ற விசாரணைக்கு உதவிவிட்டாராயின் வெளிநாடுகள் சிங்கள மக்களுக்கு கடமை பட்டவராகிறாகளே அல்லாமல் தமிழருக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள். அவர்கள் சீனாவை வெளியில் விட முயல்வார்களே அல்லாமல் தமிழருக்கு உதவமாட்டர்கள்.

7. வெளிநாடுகள் பட்டும் பட்டும் திருந்தாமல் வாக்குறுதிகளைப்பெற்றுக்கொண்டு பொன்சேக்கவை பதவில் அமர்த்தினார்களானால் - சொலெயும், பிளேக், நாரயணன், சிவசங்கர் மேனன், நிரூபம்மா- பஞச மூர்த்திகளின் கதை திரும்ப இன்னொருதடவை தியேடர்களில் ஓடும். ராசபக்சா- பொன்சேக்க அரசுதான் இயக்கத்திற்கு காசு கொடுத்து, இந்தியாவுக்கு இலவச ஆயுதற்திற்கு வாக்குறுதிகள் கொடுத்து, அமெரிக்காவின் பிளெக்குக்கு வாழைத்தோட்டம் செய்ய காடு கரம்பை தருவதாகவும் சொல்லி தங்கள் கருமங்களை கச்சிதமாக நிறை வேற்றியவர்கள். கொடுக்கும் வாக்குறுதியை எப்படி காற்றில் விடுவார்கள் சிங்களவர் என்பதை தமிழருக்கு தெரியாவிட்டால் ரோபேட் பிளேக்கிடம் அல்லது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்க பாலுவிடம் கேட்டால் தெரியும்.

8. பொன்சேக்க சிங்கள அரசின் கைதியாக தொடர்ந்து இருந்தால் அவர்களுக்கு இலங்கையில் தலையிட ஒரு தேவை கூட இருக்கும்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

பொன்சேக்காவை விடுவிற்பதால் தமிழருக்கு ஏதாவ்து நன்மை கிடைக்குமா என்பது சந்தேகம்.

மகிந்தர் சரத்தை இலகுவில் விடுவிக்க மாட்டார். விடுவித்தால் அது தனது அஸ்தமனம் என அவருக்கு தெரியும். அந்த 'விடுவிக்கப்படும் முயற்சிகள்' சிங்கள ஒற்றுமையை பலவீனமாக்கும் என்பது மட்டும் திண்ணம். சிங்களம் பலவீனம் அடைந்தால், சர்வதேச அழுத்தத்திற்கு கூடிய வாய்ப்புக்கள் உள்ளன, எமக்கும் ஒரு தீர்வு கிடைக்க சந்தர்ப்பம் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.