Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்போதைய இலங்கையில்............

Featured Replies

தற்போதைய இலங்கையில்............

கோத்தபாயா என்ற பெயர் இருக்கும்வரை தமிழனுக்கு சாபக்கேடுதான்.தமிழர் தரப்புக்கு மட்டுமல்ல தனக்கெதிரானவர் யாராகவிருந்தாலும் அவர்மீது நடவடிக்கைதான்.இது மூன்று விதமாக அரங்கேறுகிறது.முதல் கட்டமாக மறைமுக நடவடிக்கை,பின்னர் சட்ட நடவடிக்கை,அதற்கும் ஈடு கொடுத்தால் வெள்ளைவான் கடத்தல்.இவருக்கு இலங்கையில் உள்ள ஜனாதிபதி முதல் அத்தனை அமைச்சர்களும் பயம்.இப்படியான ராட்சத கிஸ்டீரியா எனும் வியாதியால் பாதிக்கபட்டுள்ளார். நேற்று ஒரு அமர்வில் ஒருவரை சந்திக்க நேர்ந்தது.அவர் கூறிய தகவல் மிகவும் வேதனையானது.வெளி நாடுகளில் வாழும் புலம் பெயர் மக்களில் ஒரு பகுதியினர் மிகுந்த சிரமத்தின் மத்தியில் மூன்று கொள்கலன்களில் ஊனமடைந்தவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை அனுப்பியிருக்கிறார்கள்.இது ஒரு வருடமாகியும் இதுவரை சுங்கத்திணைக்களத்தால் தடுத்துவைக்கபட்டுள்ளது.இதன் பின்ணணியில் கோத்தபாயா தான் இருக்கிறாராம்.எனக்கு தெரிந்த சுங்க திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரை உடனே தொடர்புகொண்டு விசாரித்ததில்.இன்னும் பல உண்மைகள் தெரிய வந்தது.சுங்க திணைக்களத்திற்குள் பல புலனாய்வு அதிகாரிகள்,அதிகார துஸ்பிரயோகங்கள்,தகுதி நிலையில்லாத அதிகாரிகள்,வேண்டபடாதவர்களுக்கு வரும் பொதிகளை காலாவதியாகும்வரை காரணமின்றி தடுத்துவைத்தல்(இதில் தமிழ் அகதிகள்,தமிழ் வியாபாரிகள்,மாற்று கட்சி ஆதரவாளர்கள் அடங்கும்)தமிழருக்கு கிடைக்கவிருக்கும் உதவி பொருட்களை கூட செல்ல விடாது களஞ்சியங்களில் தடுத்தும் தாமதமாக்கியும் கிடைக்கச் செய்தல்.காலாவதியாக்கிவிட்டு வீசுதல்.ராணுவத்தின் தேவைக்காக பயன்படுத்தல்.மொத்தத்தில் சுங்க அதிகாரியாக கோவணத்துடன் வேலை செய்வதாக கூறிமுடித்தார்.ஒரு முறை ஜனாதிபதியின் சிபார்சு கடிததுடன் ஒருவர் வருவதாக இவருக்கு தகவல் தெரிவிக்க பட்டிருந்தது இவர் போய் அவரை சந்திக்க முன்பே புலனாய் வு பிரிவினர் சிபார்சு கடிதத்தை கைப்பற் றி சென்று விட்டனர்.அந்த கடிதம் கொண்டு வந்தவர் வெகு நேரமாக காத்திருந்துவிட்டு அங்குள்ளவர்களிடம் விசாரித்தால் அக்கடிதத்தை யாரும் பெறவில்லையாம் என தெரிவிக்க பட்டதாம். இப்படி பல சம்பவங்கள் இலங்கை பூராக நடக்கும் என்றார்.அவர்பேசியதுகூட மகளின் கணவரின் தொலைபேசியில் தான்.பெரும்பான்மை இன மாயினும் மனச்சாட்சியுடன் இவ்வளவையும் உதிர்த ஜீவனுக்கு நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.