Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயத்தில் அரசின் அக்கறையற்ற மனோபாவம்

Featured Replies

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயத்தில் அரசின் அக்கறையற்ற மனோபாவம்

தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக் கான அரசில் தீர்வு காண்பதற்கு மன்மோகன் சிங் அரசாங்கம் கைகொடுக்கும் என்று இலங்கைத் தமிழ் தலைமைகள் தரப்பினர் பலர் நம்பி நம்பியிருந்து நீண்டகாலம் கடந்து விட்டது. முடிவு இலவு காத்த கிளியின் கதையாகிவிட்டது.

முன்பு 3 தசாப்தங்களாக தமிழ்த் தலைமைகள் நடத்திவந்த சாத்வீகப் போராட்டங்கள் விழலுக்கிறைத்த நீராகிப் போய்விட்டது. மற றும் தமிழர் சார்பாகக் குரல் கொடுத்துவந்த ஜாம்பவான்களாகக் கருதப்பட்டவர்களாகிய பழைய அல்லது பாரம்பரிய இடதுசாரிகள் 1960 களில் குத்துக் கரணமடித்து பேரினவாத ஆளும் வர்க்கங்களோடு சங்கமித்துவிட்டனர்.

அடுத்து தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழர் சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் அர்த்தமுள்ள அரசியல் காணப்படவேண்டுமென்று விடாப்பிடியாகக் குரல் கொடுத்து வந்தவராகிய வாசுதேவ நாணயக்காரவும் காலைவாரி ஏறத்தாழ 2 சதாப்தங்கள் கடந்துவிட்டன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு பதவியேற்ற காலம் முதல் ஜனாதிபதியின் விசேட ஆலோசகர்களில் ஒருவராகச் செயற்பட்ட வாசுதேவ தற்போது அமைச்சர் பதவியை வகித்துக் கொண்டிருக்கின்றார். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படாத நிலையில் அதனை உருப்படியாக நோக்கிச் செய்வதற்கு தற்துணிவோடு ஆவனö சய்யாது வாழாவிருந்து வாசுதேவ இன்று சமூக ஒருங்கிணைப்பு அமைச்சராகவிருந்து எவ்வாறு தனது பணியை செவ்வனே இதய சுத்தியாக ஆற்றமுடியும் என்ற கேள்விக்கு அவரிடம் பதில் கிடையாது.

இதனிடையே சென்றவாரம் 2012 வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதமொன்றின் போது அவர் அடிக்கடி தரக்குறைவான குறுக்கீடுகள் செய்ததையடுத்து சோசலிசத்தின் சவப்பெட்டிக்கு கடைசி ஆணி அடிப்பவரே வாசுதேவ நாணயக்கார என்று ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சஜீவ சேனசிங்க சாடியிருந்தது ஆச்சரியப்படுவதற்குரியதொன்றல்ல.

மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் கால் நூற்றாண்டு காலமாக நடத்திவந்த ஆயுதப் போராட்டமானது தோற்கடிக்கப்பட்டு 2 வருடங்கள் கழிந்துவிட்டன. பிரதானமாக இந்தியா மற்றும் அதøனைத் தொடர்ந்து பாகிஸ்தான். சீனா,ரஷ்யா,அமெரிக்கா போன்ற பல நாடுகள் அளித்த ஆதரவு கொண்டுதான் விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்காலில் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டனர்.

அவர்கள் தக்க அரசியல் பாதையில் பயணிப்பதைத் தவிர்த்து வெறுமனே ஆயுதப்போராட்டத்தின் மூலம் அதுவும் மரபு வழிப்போரியல் முறையில் போரிடத் தலைப்பட்டதன் காரணமாகவே வினை வலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் எனத் திருக்குறளில் பொதிந்துள்ளது போன்ற அற்புதமான வேதவாக்குகளைக் கவனத்தில் கொள்ளாது செயற்பட்டதன் காரணமாக இறுதியில் படுதோல்வியைத் தழுவும் நிலை ஏற்பட்டது. அத் தோல்வியை அடுத்து நாட்டுக்கு நிரந்தர சமாதானம் வந்துவிட்டதென்று குறிப்பாக அரச தரப்பினர் பேரினவாதத்திற்கு முரட்டுத்தனமாக பறை சாற்றிவருவது தான் பரிதாபமான தாகும்.

இவையாவற்றுக்கும் அப்பால் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் சிந்தனை சக்தியானது அரசியல் விவகாரங்களையும் ஆக்கிரமித்துவிட்டது. விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாதிகள் ஒழித்துக் கட்டுப்பட்டுவிட்டதால் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை.தற்போதைய அரசிலமைப்பிலுள்ள ஏற்பாடுகளை விட அரசியல் தீர்வு என்று ஒன்று அவசியமில்லை என்று கோதாபய முன்னர் கூறிவைத்ததை 19871990 காலப் பகுதியில் இலங்கை வடகிழக்கில் இந்திய அமைதிப்படை (IPKF) நிலைகொண்டிருந்த போது பணியாற்றியவராகிய மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா மேற்கோள்காட்டியதோடு இலங்கையில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் சொல்லுக்கும் செயலுக்கும் அளவு கடந்த செல்வாக்கு இருக்கிறது.அவர் உண்மையை மிக எளிதாகவே கூறியிருக்கிறார் என்று அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையும் இந்தியஅமெரிக்க அரசுகளின் வகிபாகமும் என்ற தலைப்பில் 03.11.2011ஆம் திகதி வெளியிடப்பட்டதாகிய எனது தினக்குரல் வாராந்த கட்டுரை யில் இன்று ஜனாதிபதிக்கு அடுத்ததாக (ஒரு வேளை அவருக்கும் மேலாக)பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஷபக்ஷ விளங்குகின்றார்... தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது (த.தே.கூ.)நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலாக அமைவதாக அண்மையில் டெய்லி மிரம் ஆங்கில நாளிதழின் "ஹாட் ரோக்" பத்திக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார் என்று கூறியிருந்தேன்.

மேலும் அண்மையில் கோதாபய கொழும்பு பேராயர் இல்லத்தில் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி மாவட்ட கத்தோலிக்க ஆயர்களைச் சந்தித்து குறிப்பாக இதுவரை மீள்குடியமர்த்தப்படாத மக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதல்லவா? அப்போது த.தே.கூட்டமைப்பினர் ஐ.நா.வுக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பிவைத்த செய்திகள் சரியானவையல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு த.தே.கூட்டமைப்பினர் இனிமேல் விடுதலைப் புலிகளை மறந்துவிட்டு மக்களுடன் சேர்ந்து மக்களுக்காக உழைக்க வேண்டுமென்று கோதாபய எச்சரிக்கையொன்றும் விடுத்திருந்தார்.இது அதிகார மிடுக்கின்வெளிப்பாடே ஒழிய வேறல்ல. வடக்கு,கிழக்கு இராணுவமயப்படுத்தப்பட்ட நிலைமைக்குச் சிகரம் வைத்தாற் போல் மக்களால் தெரிவுசெய்யப்படாத சிங்கள இனத்தவர்களான இரு முன்னாள் இராணுவத் தரப்பு அதிகாரிகளே ஆளுநர்களாக்க கோலோச்சுகின்றனர். குறிப்பாக வடக்கில் எங்கும் எதிலும் இராணுவத்தின்ஆக்கிரமிப்பும் ஆதிக்கமும் உள்ளதே தவிர மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களோடு மக்களாகச் செயற்படமுடியாத நிலைதான் காணப்படுகின்றது.

அதாவது அங்கே ஜனநாயகமானது குற்றுயீராயுள்ளது. ஏன் நாடு முழுவதிலும் ஜனநாயகம் கேள்விக்குறியாயுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தோனேசிய நாட்டு பாலிக நகரில் சென்ற வாரம் நடைபெற்றதும் 50 ஆசிய பசுபிக் நாட்டுத்தலைவர்கள் கலந்து கொண்டதுமான ஜனநாயக மன்றம் மாநாட்டில் ஆற்றிய உரையினை நோக்க வேண்டியுள்ளது.

ஜனநாயகம் அர்த்தமுள்ளதாயிருக்க வேண்டுமாயின் மக்களை நாளாந்த வாழ்க்கையோடு நேரடியாகத் தாக்கம் செலுத்தி அவர்களது நன்மதிப்பை சம்பாதிக்க வேண்டுமாயின் அரசாங்கத்திற்கும் மக்களுக்குமிடையில் மிக நெருக்கமான தொடர்பாடல் மிக அவசியமாகும். ஜனநாயகம் காக்கும் நிறுவனங்களின் பாங்கு மக்களின் வாழ்க்கை அனுபவத்தோடு இணக்கமானதாயிருக்க வேண்டுமே ஒழிய அழகான ஏட்டுச் சுரைக்காயாக இருக்க முடியாதென்பது எமக்கு என்றும் முக்கிமானதாயிருந்து வந்தது என்பதே அங்கே ஜனாதிபதி ராஜபக்ஷ ஆற்றிய உரையின் சுருக்கமாகும்.

இவை யாவும் உதட்டளவில் நின்றுவிட்டால் போதுமா என்பது தான் இன்று இராணுவ ஆட்சியின் கீழ்வாழும் வடபகுதி மக்கள் எழுப்பும் கேள்வியாகும்.

விடுதலைப்புலிகள் 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர் என்பதை அன்று ஜனாதிபதி ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியிருந்தார். எவ்வாறாயினும் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கமானது பலமான நிலையில் தக்கவைக்கப்பட்டிருப்பதாகவும் அது இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அச்சுறுத்தலாயிருப்பதால் அது களையப் படவேண்டுமென்றவாறான பிரசாரத்தினை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது.

தாக்குப்பிடிக்க முடியாத வாழ்க்கைச் செலவு மற்றும் இன்னோரன்ன சமூகபொருளாதார ரீதியான கஷ்டநஷ்டங்களுக்கு முகம் கொடுத்துவரும் பரந்துபட்ட சிங்கள மக்களைத் தொடர்ச்சியாகத் திசைதிருப்பி வைப்பதற்காக அரசாங்கம் ஒருவகையான பயப்(புலி) பிராந்தியைக் கட்டவிழ்த்துக்கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் கடன்வாங்கிக் கல்யாணம் என்ற இலட்சணத்தில் எடுத்ததற்கெல்லாம் கடன்பட்டு குறிப்பாக அம்பாந்தோட்டை மாவட்டத்தை தலைநகர் கொழுப்புக்குச் சமமாகக் கட்டியெழுப்பும் கைங்கரியம் அதிரடியாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.

அம்பாந்தோட்டை மாகம்புர மகிந்த ராஜபக்ஷ துறைமுகம் வீரவில விமானத்தளம், சூரியவௌ கிரிக்கெட் மைதானம்,தெற்கில் அதிவேக நெடுஞ்சாலை, நெடுஞ்சாலையை இணைக்கும் ஏனைய பல நெடுஞ்சாலைகள், பற்பல மேம்பாலங்கள் எல்லாமே குறிப்பாக சீனாவிடமிருந்து கடன்மேல் கடன்பட்டே நிர்மாணிக்கப்படுகின்றன. இந்தப் பட்டியலில் கொழும்பில் 15-12-2011 ஆம் திகதி திறப்பு விழா செய்யப்பட்டதாகிய "தாமரைத் தடாக" மகிந்த ராஜபக்ஷ கலையரங்கம் ,நூதனத்தையும் உள்ளடக்குவோம்.

மற்றும் வரலாறு காணாத வீண்விரயங்கள், ஊழல்கள் முதலியன சர்வசாதாரணமாகி வருகின்றன.ஒரு உதாரணம் சூரியவௌ கிரிக்கெட் மைதான நிர்மாணம், ரூபா 3.2 பில்லியன் பணம் செலவீனாமாகுமென ஆரம்பிக்கப்பட்டு அதனைப் பூர்த்தியாக்குவதற்கு ரூபா 7 பில்லிய னுக்கு மேலான தொகை தேவைப்படுகின்றதென அறியக் கிடக்கின்றது.

தேசிய இனப்பிரச்சினை

இத்தனை செயற்பாடுகளும் விரைந்து விரைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயத்தில் ஏனோ தானோ என்ற மனோபாவத்திலேயே அரசாங்கம் இருக்கிறது. நாட்டின் ஆட்சி அதிகாரம் சிங்கள பேரினவாத சக்திகளின் ஏகபோகம் என இடம்பிடித்த பச்சையான ஜனநாயக விரோத சிந்தனை காரணமாகவே இந்தநிலை நீடிக்கிறது.

இவ் வருடம் ஜனவரி 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 17 சுற்றுப்பேச்சுகள் அரசு த.தே.கூ தரப்பினருக்கிடையில் நடந்தேறியுள்ள நிலையிலும் அரசாங்கம் அலட்சியப்போக்கிலேயே நடந்து வருகின்றது. இப்போது வடக்கு ,கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் ஆகிய விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லையென செய்தி வெளியாகியுள்ளது.

அதேவேளை த.தே.கூ சமர்ப்பித்த பேச்சுவார்த்தைப் பத்திரத்தை அரச தரப்பினர் முற்றாக நிராகரிக்கவில்லையெனவும் வடக்கு கிழக்கு இணைப்பு விடயம் மற்றும் காணிவிடயம் மாகாண சபைகளுக்கு ஒப்படைத்தல் தொடர்பாக பிரச்சினைகள் இருப்பதாகவும் அத்தோடு பொலிஸ் அதிகாரம் வழங்குவதை அரசாங்கம் எதிர்க்கவில்லையாயினும் சமூகபொலிஸ் செயல்முறை என்றொரு மாயமான் யோசனையை அரச தரப்பினர் வழங்கியதாகவும் த.தே.கூ. தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செய்தி வெளியிட்டுள்ளார்.(சன்டே லீடர்11-12-2011) ஆயின் ஒட்டு மொத்தமாக பார்க்குமிடத்து அரசாங்கமானது இதுவிடயமாக எதையும் மழுப்புவதிலும் நழுவிக்கொள்ளும் போக்கிலும் உள்ளது. நிதர்சனமானது.காலம் கடந்தும் கையாலாகத தனத்தையே அரசாங்கம் வெளிப்படுத்தி வருகிறது.

இந்த இலட்சணத்தில்தான் த.தே.கூ.,பேச்சு வார்த்தைகளை பயன்படாததாக முன்னெடுக்க விரும்புகிறதா அல்லது முறித்துக் கொள்ள விரும்புகிறதா என்று சென்ற புதன் பாராளுமன்றத்தில் வெளிநாட்டமைச்சர் ஜீ.எஸ். பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். த.தே.கூ. தலைவர் இரா.சம்பந்தன் வெளிநாட்டமைச்சின் வரவு செலவுத்திட்டக் குழுநிலை விவாதத்தின்போது அரசாங்கத்தின் பொருட்டுக் கேடுகள் தொடர்பான சில உண்மைகளை ஒழிவுமறைவின்றி சற்று உறைப்பாகக் கூறியதும் வெளிநாட்டமைச்சர் பதற்றப்பட்டு ஓரவஞ்சனையான பாணியில் பதில் அளித்துள்ளதைக் காணலாம்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கென இடம்பெற்று வரும் பேச்சு வார்த்தைகள் முறிக்க முனைவது அரசாங்கமா?தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா?

மூலம்: தினக்குரல் - மார்கழி 20, 2011

பிரசுரித்த நாள்: Dec 20, 2011 18:54:43 GMT

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.