Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் குழுவினர் தமிழினத்திற்கு மாத்திரமல்ல நாட்டுக்கே துரோகிகள் - பாதிக்கப்படப்போவது எஞ்சியுள்ள அப்பாவி தமிழ் மக்களே! இனவாதி சம்பிக்க ரணவக்கே பேச்சு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ChampikaRanawaka_150MM.jpg

நல்லிணக்க ஆணைக்குழுவின் அரசியல் தீர்விற்கான பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அதிகாரப்பகிர்வின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இதற்கு ஒருபோதும் இடமளிக்கவும் போவதில்லை என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் இனவாதியுமான சம்பிக்க ரணவக்கே தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இவர்கள் இந்தியாவுடன் இணைந்து இலங்கைத் தமிழர்களை அழித்தனர். தற்போது மேற்குலகத்துடன் இணைந்துகொண்டு எஞ்சியுள்ள தமிழர்களையும் அழிக்க முயற்சிக்கின்றனர் என குற்றஞ் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்கரணவக்க மேலும் கூறியிருப்பதாவது:

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் உயர்மட்ட சட்டக் குழு ஆராய்ந்து வருகின்றது. எவ்வாறாயினும் அரசியல் தீர்விற்கு அதிகாரப் பகிர்வை பரிந்துரைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் தற்போது தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் அதிகாரப் பகிர்வை மையப்படுத்தியவை அல்ல. பொதுவான பொருளாதார பிரச்சினைகள் மாத்திரமே அவர்களுக்கு தற்போதுள்ளது.

எனவே, அதிகாரப் பகிர்வை வழங்கி ஏனைய இனங்களுக்கு அப்பால் சென்று தீர்வு ஒன்றை தமிழ் மக்களுக்கு வழங்குவது நியாயமானதொன்றல்ல. இதற்கு ஜாதிக ஹெல உறுமய ஒருபோதும் இடமளிக்காது. கூட்டமைப்பு தொடர்ந்தும் நாட்டிற்கு எதிரான துரோகத்தையே செய்து வருகின்றது. 1980களில் இந்தியாவுடன் இணைந்துகொண்டு தமிழீழ கொள்கையுடன் முன்னோக்கி சென்று தமிழினத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியது.

தற்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சரியில்லை. எனவே, சர்வதேச விசாரணை ஒன்று தேவை எனக் கூறி மேற்குலக நாடுகளுடன் இணைந்து நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளில் அது ஈடுபடுகின்றது. இதனால் பாதிக்கப்படப்போவது எஞ்சியுள்ள அப்பாவி தமிழ் மக்கள் மாத்திரமே.

எனவே சம் பந்தன் குழுவினர் இனியாவது நாட்டு அரசி யலை பின்பற்ற வேண்டும். வெளிநாடுக ளின் அரசியலை பின்பற்றி பந்தம் பிடிப்பதால் தேசிய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியாது என்றார்.

http://www.seithy.co...&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.