Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைளில் யுத்தம் முடிந்த பின்னரும் அதிகமான படையினர் தப்பி ஓட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ttt-150x150.jpg

நாட்டில் யுத்தம் முடிந்த பின்னரும் 60,000படைச்சிப்பாய்கள் தப்பி ஓடியுள்ளனர்.தங்களுக்கு ஏற்படத்தப்பட்டிருக்கும் அவமானங்களை சகித்துக்கொள்ள முடியாமலே அவர்கள் ஓடுகின்றனர்.நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய படைச் சிப்பாய்கள் இன்று மலசலகூடம், வாய்க்கால்கள் துப்பரவு செய்யவும், புல்லு நடவும், பாதை வெட்டவும் கூலிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

இது படையினருக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் அவமானமாகும்- என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் குற்றஞ் சாட்டினார். பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஓதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

இந்த அரசின் இணையத்தளம் ஒன்றில் 1952 ஆம் ஆண்டு தொடக்கம் இறுதி யுத்தம் வரைக்கும் கடைமையாற்றிய இராணுவத் தளபதிகளின் பெயர் பட்டியல் வரிசைப்படி வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால், நாட்டை பயங்கரவாத பிடியில் இருந்து மீட்டெடுக்க அர்ப்பணிப்புடன் செயலாற்றி புலிகளை முற்றாகஒழித்துக் கட்டிய சிறந்த தளபதி என்று ஜனாதிபதியாலேயே பாராட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பெயர் அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.ஒரு படைத்தளபதி இன்றியா நீங்கள் பயங்கரவாதத்தை ஒழித்தீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

முன்பு கிராமப்பறங்களிலிருந்து பொலிஸ் மற’றும் முப்படைகளிலும் கடைமையாற்றச் சென்றவர்கள் தமது கிராமங்களுக்குச் செல்லும் போது அந்தக் கிராமமே திரண்டு மேடை அமைத்து மலர் மாலை அணிந்து வரவேற்றது. ஆனால் இப்பொழுது யுத்தத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பிய படையினர் வயல்வெட்டவும், பாதை போடவும், குப்பை அகற்றவும், மலசலகூடம் துப்பரவு செய்யவும், புல்லு நடவும் கூலிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர்.

யுத்தம் நடந்தபோது தப்பி ஓடியவர்கள் உயிருக்கு பயந்து ஓடினார்கள். ஆனால் இப்போது அவமானம் தாங்க முடியாமல் தப்பி ஓடுகின்றனர்.கடந்த 3 மாதங்களில் 342 கடத்தல்கள்:

யாழ்ப்பாணத்தில் கடைமையாற்றும் படையினருக்கு குளிக்க கூட தண்ணீர் இல்லை. அடிப்படை வசதிகள் கூட இல்லை. நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீரழிந்துவிட்டன. கடந்த 3 மாதத்தில் 342 கடத்தல்களும் துஸ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளன.

இவற்றுள் ஆக 27 விடயங்கள் மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளன. அமைச்சின் அதிகாரி ஒருவர், அமைச்சர் ஒருவரது வாகனத்தில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

இந்த கடத்தலுக்கு இராணுவ ஜீப் ஒன்று பாதுகாப்பு வழங்கியுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொலிசார் கடத்தல்காரர்களுக்கும், போதைவஸ்து கடத்தல்காரர்களுக்கும் பாதுகாவலர்களாகவே இயங்குகின்றனர்

கடத்தல்களில் ஈ.பி.டி.பி?:

இன்றைய அரசியற் கலாசாரத்தில் மக்கள் பலமற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.மக்கள் எல்லா விடயங்களுக்கும் அரசியல்வாதிகளின் பின்னால் செல்ல வேண்டிய நிலை. ஒருபிள்ளையை பாடசாலையில் சேர்க்கக்கூட அரசியல்வாதியின் அனுசரணை தேவைப்படுகிறது.

மணல் ஏற்றிச் செல்லவும், பஸ்பாதை(ரூட்) பெறவும் பத்து லட்சம் ரூபா வழங்க வேண்டும். லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகிறது. வடபகுதியில் இன்னமும் சிவில் நிர்வாகம் இல்லை. இராணுவக்கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. உங்களால் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு வடபகுதியில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரல் சம்பவங்களில் ஈ.பி.டி.பி இனரின் தொடர்பு இருப்பதாகவும், இதுகுறித்து விசாரிக்கப்ட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இதனையும் அவதானிக்க வேண்டும்- என்றார்.

http://www.tamilthai...ewsite/?p=2130#

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.