Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்ன செய்யலாம்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கள உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், யாழ்க்களத்திலே (புரியவேண்டியவர்களுக்கு பிரியும்) பல *** இருக்கு, அதில சிலர் பல பெயர்களை பதிவு செய்துவருகின்றனர், ஆனால் அந்த பெயர்களில் கருத்துகள் எழுதாமல் நிண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்..

இப்பொழுது வேண்டுகோள் என்னெவென்றால் புதிதாக களத்தில் இனைபவர்கள் களப்பொறுப்பாளர் அனுமதியுடன் களத்துக்குள் உள் நுழையும் முறையை கொண்டு வந்தால் என்ன?

ஒரு கருத்துக்களத்தில் புதிதாக இனைபவர்கள் 3 வழிகளில் இனைந்துகொள்ளலாம்,

1.ஏதேனும் ஒரு (பிழையான) இமயிலை குடுத்து உள் நுழைதல்

2.உண்மையான அல்லது அவரிடமுள்ள இமயில் முகவரியை குடுத்து உள் நுழைதல் (இமயிலிற்கு சென்று அங்கே அதை அக்ரிவிற்றி பன்னுதல்)

3.களப்பொறுப்பாளரின் அனுமதியுடன் (அதாவது ஒருவர் புதிதாக இனைந்தாலும், களப்பொறுப்பாளர் அனுமதித்தால் மாத்திரம் உள் நுழையக்கூடிய முறை)

இதை ஏன் சொல்கிறேன் என்றால், களத்திலே அண்மையில் இனைந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையையும், அவர்களில் ஒரு சிலர் கருத்துக்களை முன் வைப்பது எதற்கு? ஒரு நாளில் மாத்திரம் 100க்குமேற்பட்ட உறுப்பினர்கள் பதிவு செய்து அதில் 2,3 பேர் கருத்து எழுதுறார்கள் என்றால் ஒன்றில் இங்கு இருக்கும் சிலர் (நான் மேலே குறிப்பிட்ட ***) வேனுமெண்டு செய்கிறார்கள் அல்லது இங்கே இருக்கும் அவர்கள் யாழ்களத்தைப்பற்றி விசமத்தனமான கருத்துக்களை பரப்புகிறார்கள், அப்படி பரப்புவர்களின் ஆதரமற்ற செய்திகளை படிப்பதற்காக பல விருந்தினர்கள் அங்கத்தவர்களாக உள் நுழைகிறார்கள் (திரைப்படங்கள் தரவிறக்கம் செய்ய பலர் செய்வது போல), நுழைந்து வாசித்துவிட்டு கருத்துக்களை முன்வைக்காமல் செல்கின்றனர்,,

ஆகவே இதற்கு என்ன முடிவு எடுக்கலாம்,அவ்வாறு களப்பொறுப்பாளரின் அனுமதியுடன் உள் நுழைவதால் ஏதேனும் நன்மை அல்லது தீமை எப்படி அமையும் என்று எதிர்பார்கிறீங்க, இதில் களப்பொறுப்பாளரின் கருத்தையும் எதிர்பார்கிறேன்,, :roll:

***தணிக்கை செய்யப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாளில் மாத்திரம் 100க்குமேற்பட்ட உறுப்பினர்கள் பதிவு செய்து அதில் 2,3 பேர் கருத்து எழுதுறார்கள் என்றால் ஒன்றில் இங்கு இருக்கும் சிலர் (நான் மேலே குறிப்பிட்ட ***

புரியவில்லை.....அங்கத்தவர்கள் எல்லோரும் கட்டாயமாக கருத்து எழ்த வேண்டும் என்று கருத்துக்கள விதிகள் ஏதேனும் உள்ளதா????நானும் ஒரு புதிய உறுப்பினன் என்ற வகையில் நிசயமாக எனக்கு நிறய கருத்துக்களில் நோ கொமெண்ட்ஸ் தான் .சொந்த கருத்து எதுவும் இல்லை. உங்கள் கருத்தாடல்களையே கூர்ந்து கவனித்து வருகிரேன். அவர்களை எப்படி நீங்கள் *** ஆகிறார்கள்..

எதை ஆதாரமற்ற செய்திகள் என்று கூறுகிறீர்கள்??? நான் பார்த்தவரைக்கும் எலோரும் ஆதாரத்தை முன்வைத்தே கருத்துக்களையும் வைக்கிறார்கள்...அப்படி ஆதாரமில்லாத செய்திகள் பார்ப்பதற்கென்றே நிறய இணையத்தளங்கள் இருக்கின்றனவே??

இது ஒரு மனிதனின் கருத்து சுதந்திரத்தை முற்றுமுழுதாக ஒரு தனிமனிதரிடம் அல்லது குழுவிடம் அடகு வைப்பதற்கு சரியானதாகும். தேவையானவற்றை திருத்தவும் தவிர்க்கவும் முடியுமே தவிர யார் கருத்து எழுதலாம் என்பதை கள பொறுப்பாளரே முடிவு செய்தால் அது கடைந்தெடுத்த சர்வாதிகாரம் ஆகும். உங்கள் கருத்துக்களை நான் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றேன்.

என்னை பொறுத்தவரைக்கும் இது தேவையில்லாத விவாதம்.

அப்படி நீங்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொண்டால் அதன் அர்த்தம் இந்த கருத்துக்களம் குறிப்பிட்டவர்களால் குறிப்பிட்டவர்களுக்காகவே நடத்தப்படும் என்பதாகவே அமைகிற்து.

நன்றி.

***தணிக்கை செய்யப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா கறுப்பரே, கறுப்பன் எண்டு பெயரை வைச்சுக்கொண்டு இருட்டுக்கையா இருக்கிறீங்க? எந்தக்காலத்தில இருக்கிறீங்க இப்ப? கி.மு விலையா அல்லது கி.பியிலையா?? இங்கு இருக்கும் பலருக்கு (உம்மையும் சேர்த்து) யாழ்களம் ஒரு கருத்துக்களம் இங்கே வந்து பொழுதுபோக்கா கதைத்துவிட்டு போகலாம் இப்படி கதைப்பதால் எவருக்கும் எந்த தீமையும் ஏற்ப்படாது என்று நினைப்பு போல், நீர் பழைய உறுப்பினரோ புதிய உறுப்பினரோ எனக்கு தெரியாது, ஆனால் யாழ்களத்தை சில *** (இது தொப்பி அளவனாவர்களுக்கு மாத்திரம்) எத்தனை தரம் செயலிழக்க வைத்தார்கள் எண்டு தெரியுமா உமக்கு? பல முறை முயன்று சிலமுறை வெற்றி பெற்றார்கள் தெரியுமா உமக்கு?

யாழ்களத்தைப்பொறுத்தவரை பலருக்கு அது பொழுதுபோக்கும், நன்மை பயக்கும் ஊடகம், ஆனால் சில குள்ள நரிகளுக்கு பிடிக்காத கருத்துக்களம், பல உண்மைச்செய்திகள் அங்கே சூடாக விவாதிக்கப்படுவதால் பலர் சூடாகி களத்தை மூடவைக்க முயன்று தோல்வி அடைந்துள்ளனர், அது இப்பொழுதும் திரை மறைவில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது, அதற்கு அந்த பேடிகள் பல வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர், கனனியுகத்தில் அவர்கள் கையாளும் ஒவ்வொரு கையாலாகத்தனத்தை யாழ்கள அட்மினும் தனி மனிதனாக சமாளித்துவருகிறார்,

யாழ்களத்தை பொறுத்தவரை தற்பொழுது சுமார் 2500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்வாங்கிவிட்டது, இந்த தொகை அண்மை நாட்களாக அதிகரித்து செல்கிறது, இதன் மூலமும் ஏதோ ஒரு வகையில் தீமை ஏற்பட சாத்தியங்கள் உண்டு என்று சிலர் கூறுகிறார்கள்,,

மேலே என்னொமொன்றையும் குறிப்பிட்டு இருந்தேன்,"ஆதரமற்ற செய்திகளை" யாழ்களத்தைப்பற்றி களத்தில் இருக்கும் சில *** மின்னஞ்சல் மூலம் பலருக்கு போலித்தனமான செய்திகளை பரப்பி வருவதாக புலனாய்வு தகவல் தெரிவிக்கின்றது, இப்படி யாழ்களத்தின் மீது கேவலமான கருத்துகளை கூறும்பொழுது பலர் ஆவேசப்பட்டு அதற்கு பதிலடி தர வருகிறார்கள்.

அதைவிட கறுப்பர், ஒருத்தரின் சுதந்திரத்தில் தலையிட ஒருவருக்கோ அல்லது குழுவுக்கோ அதிகாரமில்லை எண்டு, உண்மைதான், ஆனால் சில *** கருத்தை கருத்தால் எதிர்கொள்ள தெம்பில்லாமல் கையாலாகத்தனத்தை காண்பிச்சு (ஏற்கனவே நிகழ்ந்து உள்ளது), அதுக்கப்புறம் யாழ்களத்தை நிரந்தரமாக மூடவைத்திட்டால் உங்க சுதந்திரமான கருத்தை எந்த களத்தில வைப்பீங்க?

நான் மேலே குறிப்பிட்டதன் நோக்கம், எனி களத்திற்கு ஒருத்தரையும் அனுமதிக்க கூடாது எண்ட நோக்கத்தில் அல்ல, களத்தின் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு, சில வேளை அட்மின் ஒரு நாளில் 50, 100 உறுப்பினர்களை அனுமதிக்காமல் 1,2 உறுப்பினர்களை அனுமதிக்கிறது நல்லதாக படுகிறது,,

சிலவேளைகளில் புதிய வழிமுறைகளை அட்மின் கண்டுபிடித்தால் இம் முயற்சியை செயற்படுத்தாது விடலாம்.. :idea:

***தணிக்கை செய்யப்பட்டுள்ளது

How to become special member ?

தென்னிந்தியரே... தமிழில் கருத்தெழுதுங்கள்... இல்லையேல் உமது கருத்துக்கள் நீக்கப்படும்.....

தமிழ்ல் எழுத முதலில் கடினமாக இருக்கும் ஆனால் போக போக மிகவும் எளிதாகி விடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ல் எழுத முதலில் கடினமாக இருக்கும் ஆனால் போக போக மிகவும் எளிதாகி விடும்.

உண்மைதான்,, அது சரி தமிழை வாசிக்க எப்படி இருக்கு ராஜா? சுகமா இருக்கா? அல்லது கல்லு ரோட்டில மாட்டுவண்டில் போறமாதிரி இருக்கா? என்னம் ஒரு வருடம் யாழில இருந்தீங்க எண்டால் தமிழ்ல பண்டிதர் பட்டம் வாங்கிடுவீங்க,,, :wink: :P :P

டங் அண்ணா !! தமிழ் போல் சுகமானது உலகில் வேறு ஏதும் உண்டா ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டங் அண்ணா !! தமிழ் போல் சுகமானது உலகில் வேறு ஏதும் உண்டா ??

உந்த டயலக்கை எனக்கு சொல்லாதேங்க,, சவுத் இடியனுக்கு சா இண்டியனுக்கு சொல்லுங்க,,, :wink: :P :P

என்ன செய்வது !! எங்களில் நிரைய பேர் ( சிறு வயது காரர்கள்) தமிழை விட ஆங்கிலத்தில் தான் எளிதாக எழுத பயிர்ச்சி பெற்றுள்ளோம். இனி தெற்க்கிந்தியர் தமிழ்ல் மட்டும் தான் எழுதுவார் என நம்புவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி...Danklas

.பிரச்சினைகள் சரிதான். அதற்காக நீங்கள் கண்ட தீர்வில்தான் எனக்கு உடன்பாடில்லை என்கிறேன். இதை தொழில்நுட்ப ரீதியாக சரி செய்ய வேண்டுமே ஒழிய கருத்து சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிகாமல் இருக்க வேண்டுமென்ற நோக்கிலே எழுதினேன்.

நீ சொல்வதை நான் ஏற்கவில்லை,

ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன்

-- வால்டேர்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரைக்கும் நிர்வாகம் போதியளவு சுதந்திரத்தை இங்கே தந்திருக்கின்றது. ஆனால் வெளிப்படையாக எவர் எவர் பிழையாக தெரியும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்( நானாக இருப்பினும்) எனென்றால் இங்கே வெளிப்படையாக யார் பிழை செய்கின்றார்கள் என்று தெரிந்த பின்னர், சட்டப் புத்தகத்தை வைத்துப் புரட்டி இத்தனையாம் சட்டம் என்று எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க தேவையில்லை!! விதிகளுக்கு முரண்பாடாக நடப்பவரை கண்டித்தாக வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் வெளிப்படையாக எவர் எவர் பிழையாக தெரியும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

நல்ல கருத்து தூயவன்.. அண்மைக்காலமாக மிகவும் ஈடுபாட்டுடன் எங்கள் சின்னங்சிறுசுகள் செய்யும் தம்மால் முடிந்ததான தாயக சேவையை இங்கு சிலர் கொச்சைப் படுத்தியும், கேவலப் படுத்தியும் வருகின்றனர். விவாத ரீதியாக தாங்கள் தோற்று விடக் கூடாதென்ற ஒரே நோக்கில் எதுவெல்லம் சொல்ல முடியுமோ அவற்றையெல்லாம் சொல்கின்றனர். அவர்களை என்ன செய்யலாம்

நல்ல கருத்து தூயவன்.. அண்மைக்காலமாக மிகவும் ஈடுபாட்டுடன் எங்கள் சின்னஞ்சிறுசுகள் செய்யும் தம்மால் முடிந்ததான தாயக சேவையை இங்கு சிலர் கொச்சைப்படுத்தியும், கேவலப்படுத்தியும் வருகின்றனர். விவாத ரீதியாக தாங்கள் தோற்று விடக் கூடாதென்ற ஒரே நோக்கில் எதுவெல்லம் சொல்ல முடியுமோ அவற்றையெல்லாம் சொல்கின்றனர். அவர்களை என்ன செய்யலாம்

உங்கள் சின்னன்சிறுசுகளின் செயற்பாட்டினை எவரும் கொச்சைப்படுத்தவில்லை..! ஒரு செயற்பாட்டினை உளமார்ந்த ஆர்வத்துடன் செய்விப்பதற்கும்...ஏனோதானோ என்று பப்பிளிசிற்றிக்காக செய்வதற்கும் நிறைய வேறுபாடுண்டு..அதைத்தான் சுட்டிக்காட்டினம்..! எனவே உங்கள் சிறுசுகளை சின்னனிலையே சீராக வழிநடத்துக்கள்...செய்வீர்களா..

??! இல்ல என்ர பிள்ளையும் இன்று "awareness programme போனது..நாங்கள் எவ்வளவு உதவி செய்யுறம்" என்று தம்பட்டம் அடிப்பீர்களா..??! பிறகு இவையும்... சமாதான காலத்தில் புகழிடத்தில் இருந்து தாயம் நோக்கிப் படையெடுத்த சில அநாமதேய நிறுவனங்களால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் பாதியில் கைவிடப்பட்ட நிலையில்...சரியான நிர்வாக நிதி முகாமைத்துவமின்றி இருக்கின்றது போல ஆகாதே..???! :roll: :shock: :idea:

செய்வன திருந்தச் செய்...இப்படி தமிழில் இருக்குது அதை எல்லா மொழியிலும் மொழிபெயர்த்து உங்கள் சின்னஞ்சிறுசுகளுக்கு சொல்லி கொடுங்கோ..! புகழிடத்தில் awareness programme நடத்திறது ஒன்றும் புதிய விடயமல்ல..! பாடசாலைகளிலேயே கற்றுக்கொடுக்கினம்..கற்றதைக் கூட ஒழுங்காக நடைமுறைப்படுத்த உங்கள் சின்னஞ்சிறுசுகளை சீராக வழிகாட்டுங்கள்..! ஒன்றைச் செய்வதற்கு முதல் அதை ஏன் எதற்காக செய்யுறம் என்ன விடயத்தைச் சொல்ல செய்யுறம் எப்படி வெளிப்படுத்த வேண்டும் போன்ற அடிப்படைகளை விளக்குங்கள்..! விளக்கமில்லாமல் உங்கள் சின்னஞ்சிறுசுகள் செய்வது எதுவும் பின்னாடி பயனளிக்காது..! மற்றும்படி புகழிடத்தில் உள்ள மற்றைய சின்னஞ்சிறுசுகளின்ர போல..உங்கள் சின்னஞ்சிறுசுகளின் extra curriculum activities நல்லாத்தான் இருக்குது..! இல்லை என்றில்லை..! இன்னும் உங்கள் சின்னஞ்சிறுசுகளை...அவர்களின் சிந்தனைகளை தாயகம் நோக்கி கொண்டுவர நிறையச் செய்ய இருக்குது...அதையாவது ஏற்றுக் கொள்வீங்களோ...இல்லை இதுவே போதும் என்று விட்டிருவீங்களோ..??! :shock: :idea:

எனவே உங்கள் சின்னஞ்சிறுசுகளின் நடவடிக்கைகளை இங்கு பிரசுரிக்கும் போது அல்லது பிரச்சாரப்படுத்தும் போது வரும் விமர்சனங்களையும் உள்வாங்கக் கற்றுக்கொள்ளுங்கோ..அதுக்குத்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமர்சனங்களையும் உள்வாங்கக் கற்றுக்கொள்ளுங்கோ

கண்டிப்பாக.. விமர்சனங்களை உள்வாங்கியே தீர வேண்டும். தலிர.. சிலர் சுயதம்பட்டம் அடிப்பதனை பொறுத்துக்கொண்டும், அவர்கள் முட்டைகளில் பிடுங்கும் மயிர்களையும் எண்ணிக்கொண்டும் இருக்க தேவையில்லை.

சரி.. உங்கள் கருத்தக்கள் அத்தனையும் தூக்கியெறியப்பட்டிருக்கின்

தென்னிந்தியரே, தமிழிலை இங்கு பதிய வேண்டும் என்று தானே விதி, அதை நீங்கள் எழுதியிருக்க வேண்டும் என்று இல்லை.

மற்றவர்கள் எழுதியதிலிருந்து வசனங்கள் பந்திகளை வெட்டி ஒட்டுங்கோ. அதுவும் உந்த அரட்டை அடிக்கிறவையின்ரை பதிவுகளில் இருந்து வெட்டி ஒட்டினா இன்னும் பொருத்தமாகவும் இருக்கும் கண்டு பிடிக்கிறதும் கடினம்.

100 பதிவுகள் எட்டுறதுக்கு அதிகாலம் எடுக்காது, ஆனா 50 தே காணும் எல்லா இடமும் புகுந்து விளையாட.

தென்னிந்தியரே, தமிழிலை இங்கு பதிய வேண்டும் என்று தானே விதி, அதை நீங்கள் எழுதியிருக்க வேண்டும் என்று இல்லை.

மற்றவர்கள் எழுதியதிலிருந்து வசனங்கள் பந்திகளை வெட்டி ஒட்டுங்கோ. அதுவும் உந்த அரட்டை அடிக்கிறவையின்ரை பதிவுகளில் இருந்து வெட்டி ஒட்டினா இன்னும் பொருத்தமாகவும் இருக்கும் கண்டு பிடிக்கிறதும் கடினம்.

100 பதிவுகள் எட்டுறதுக்கு அதிகாலம் எடுக்காது, ஆனா 50 தே காணும் எல்லா இடமும் புகுந்து விளையாட.

அருமையான யோசனை. இது எனக்கு தோண்றாது போயிட்டுதே. :lol:

எனவே உங்கள் சின்னஞ்சிறுசுகளின் நடவடிக்கைகளை இங்கு பிரசுரிக்கும் போது அல்லது பிரச்சாரப்படுத்தும் போது வரும் விமர்சனங்களையும் உள்வாங்கக் கற்றுக்கொள்ளுங்கோ..அதுக்குத்

புத்திஜீவதம் கூட நெகழ்வுதன்மை வாயந்ததுங்க... அது கிழே மாதிரி கலவைங்க ....நினைச்சால் குரங்கும் பிடிக்கலாம்... பிள்ளையாரும் பிடிக்கலாம்....... அதனாலே சில்வர் லைனிலை இருக்குதுங்க...சம்பந்த பட்டவை புரிந்தால்...நல்லது.... புரிந்தால்... நாரதர் ஏனுங்க வம்புக்கு வாறார்... ... இது இந்த சேரி பயலின் அபிப்பிராயமுங்க பிழையிருந்தால் மன்னிச்சிக்கிங்க... :lol:

குருவிகளின் கருத்துப்படி அவர் யாரையும் எதிர்த்து பெரிய ஆக்கள் ஆக்கும் எண்ணம் இல்லையாம். ஆதலால் மக்கள் எல்லாம் குருவிகளை எதிர்த்து குருவிகளை முக்கியமானவர் ஆக்க வேண்டாமாம்.

குருவிகளின் கருத்துப்படி அவர் யாரையும் எதிர்த்து பெரிய ஆக்கள் ஆக்கும் எண்ணம் இல்லையாம். ஆதலால் மக்கள் எல்லாம் குருவிகளை எதிர்த்து குருவிகளை முக்கியமானவர் ஆக்க வேண்டாமாம்.

சொல்லாதேங்கோ செய்யுங்கோ.. உங்கள் மத்தியில் பெரியாக்களா இருக்கிறதைவிட சிறு துரும்பா இருக்கிறது பல மடங்கு உசத்தி..! :wink: :lol: :idea:

சொல்லாதேங்கோ செய்யுங்கோ.. உங்கள் மத்தியில் பெரியாக்களா இருக்கிறதைவிட சிறு துரும்பா இருக்கிறது பல மடங்கு உசத்தி..! :wink: :lol: :idea:

கருத்துக்கு நண்றி. :wink: வணக்கம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் பற்றிய எனது கருத்து என்னவென்றால் பார்வையாளராக இருந்தால் களஉறுப்பினர்களுக்கு மட்டும், வேறு சில பகுதிகள் பலருக்குத் தெரியாது. ஆனால் உறுப்பினராக பதிவு செய்தால் மட்டும் தான் தெரியும். எனவே தான் பலர் அவ்வாறு பதிவு செய்துள்ளதாக எனக்குத் தோன்றுகின்றது. எனவே நிர்வாகம் குறைந்தபட்சம் 5கருத்துக்களுக்கு மேல் எழுதினால் தான் அப்பகுதிகளை பார்வையிடக்கூடிய வகையில் செய்தால் கட்டாயம் பதிவு செய்தவர்கள் கருத்தெழுத வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோ கொமென்ட்ஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.