Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை -இந்திய ஒப்பந்தத்திற்கு பொறுப்பு கூறுவது யார் ?

Featured Replies

அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இன விவகாரத்திற்கான தீர்வு குறித்த பயணத்தில் இரு வேறு பாதைகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளன.

அரச தரப்பினரும் கூட்டமைப்பினரும் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளைக் கடந்த ஒரு வருடமாக நடத்தி முடித்த நிலையிலேயே முரண்பட்ட போக்குகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அப்படியானால் ஒரு வருடமாக இரு பகுதியினரும் என்ன பேசினர் என்பது தெரியவில்லை. இது பற்றிப் பேசப் போனாலோ அல்லது மக்கள் கேள்வி எழுப்பினாலோ இது கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவதற்கானதும், பலவீனப் படுத்துவதற்குமான சதி என்று முத்திரை குத்தி விடுவர்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை இன விவகாரத்துக்கான தீர்வினைக் காண தான் தயாராக இருப்பதாக தொடர்ந்தும் கூறி வருகின்றது. ஆனால் எத்தகைய தீர்வு என்பது குறித்து அரசாங்கம் வெளிப்படையாகப் பேச மறுக்கின்றது.

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்று வதற்காகத் தமது சார்பில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் பெயர்களை வழங்க மறுக்கின்றது என்பதே அராங்கத்துக்குள்ள பெரும் மனக் குறையாகும்.

அரசாங்கம் தனது தரப்பில் 19 பேர்களின் பெயர்களை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்குச் சிபாரிசு செய்துள்ளது.

ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்றுவது குறித்து இன்னும் பச்சைக் கொடி காட்டவில்லை.

அரசாங்கத்தைப் பொறுத்து கூட்டமைப்பினரை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் இழுத்து விட்டால் எதிர்க்கட்சிகளை வழிக்குக் கொண்டு வருவதில் அவ்வளவு சிரமம் இருக்காது என்ற நிலையிலேயே காய்களை நகர்த்தி வருகின்றது.

இன விவகார தீர்வுக்கென அமைச்சரும் பேராசியருமான திஸ்ஸ வித்தாரன தலைமையில் சர்வகட்சி குழுவை அமைத்து தீர்வுக்கென அறிக்கையையும் பெற்றுக் கொண்ட அரசாங்கம் அதைக் கிடப்பில் போட்டு விட்டு கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் இறங்கியது. ஒரு வருட காலப் பேச்சுவார்த்தைக்கு பிறகு இன விவகாரத் தீர்வுக்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவே சிறந்த இடம் எனக் கூறி கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமாறு நிர்ப்பந்தித்து நிற்கின்றது.

அத்துடன் இதுவரை நடை பெற்ற பேச்சுவார்த்தையானது சுதந்திரக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு வார்த்தை என்றும் இந்தப் பேச்சுவார்த்தைகளால் பலனில்லை. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் கலந்து கொண்டு பேசுவதே பயன் என்றும் அரசாங்க தரப்பு கூறுகின்றது.

மொத்தத்தில் அரசாங்கத்தின் போக்குகளை கணக்கிடுவதற்கு தமிழ் மக்களுக்கு அவ்வளவு ஒன்றும் சிரமம் இருக்காது.

கூட்டமைப்பு கோரி நிற்கின்ற காணி, பொலிஸ் அதிகாரங்கள், வடக்கு கிழக்கு இணைப்பு என்பன சாத்தியமற்ற விடயங்கள் என ஜனாதிபதியும், அரசாங்கத் தரப்பும் தொடர்ந்து கூறிக் கொண்டு வருகின்றனர்.

அண்மையில் இந்தியப் பத்திகையான ““டெக்கான் குரோனிகே'' பத்திரிகையின் பகவான் சிங் அவர்களுக்கு ஜனாதிபதி அளித்த பேட்டியில், *சாத்தியமற்ற விடயங்களை கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

*பிராந்திய சுயாட்சி என்பது பயங்கரவாதிகள் பயன்படுத்திய சுலோகங்களே.

*புலம்பெயர் தமிழர்கள் சமாதானத்தை விரும்பவில்லை.

*இன விவகார தீர்வுக்கு தான் தயாராக இருப்பதாகவும், கூட்டமைப்பு ஒத்துழைப்பதில்லை என அடுக்கடுக்காக தமிழர் தரப்பு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

உண்மையில் கூட்டமைப்பு தற்பொழுது கோரி நிற்கின்ற காணி, பொலிஸ் அதிகாரங்கள், வடக்குகிழக்கு இணைப்பு என்பன 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவைகள் அரசியல் அமைப்புக்கு முரணானவை அல்ல.

அதேவேளையில் காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த மாகாண சபை முறைமை தமிழ் மக்கள் கேட்டுப் பெற்றதல்ல. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் இலங்கையின் அன்றைய ஜனாதிபதியான ஜே.ஆர். ஜயவர்தன அவர்களும் இணைந்து கையெழுத்திட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் சரத்துகளாகும்.

அந்த வகையில் இலங்கை இந்திய அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தத்தின் மூலம் பிரசவித்ததே மாகாண சபை முறைமையாகும். ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டவைகளை இலங்கையின் அரசியல் அமைப்புக்குள் சட்ட ரீதியாக உள்வாங்கப் பட்டவைகளையே இன்றைய அரசாங்கம் கேள்விக் குறியாக்கியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இந்தியத் தரப்பே தமிழ் மக்களுக்கு இதற்கான உரிய பதிலை வழங்க வேண்டும். ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தலைவர்கள் இன்று இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது ஒரு சர்வதேச ஒப்பந்தம் என்ற வகையில் இதற்கான முழுப் பொறுப்பையும் இரு நாட்டு அரசாங்கங்களுமே ஏற்க வேண்டும்.

தமிழர்கள் மத்தியில் எழுந்த ஆயுதப் போராட்டத்தை ““பயங்கரவாதம்'' என்று கூறி ஆட்சியாளர்கள் அடக்கினர்.

இதற்குத் தேவையான அனைத்துத் தீர்மானங்களையும் அரசாங்கத்தின் உயர்பீடமே மேற்கொண்டது. இதற்கென சர்வகட்சி மாநாடோ அல்லது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவோ அமைக்கப்படவில்லை. ஆயுதப் போராட்டத்துக்கு வழி வகுத்த அரசியல் பிரச்சினைக்கும் அராங்கத்தின் உயர்பீடம் ஏன் இதே வழியில் தீர்வினைக் காண இயலாது என்று தமிழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். என்று தமிழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நீண்ட காலமாகப் புரையோடிப் போயிருந்த பல பெரும் பிரச்சினைகளுக்கு நான்கு சுவர்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பெரும் திருப்பு முனையை உருவாக்கியுள்ளன என்று கலாநிதி குமார் ரூபசிங்க ஒரு முறை குறிப்பிட்டதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.

அந்த வகையில் நாட்டின் நன்மை கருதி அராங்கம் இன விவகாரத் தீர்வுக்கென அதிகாரம் கொண்ட ஐந்து அல்லது பத்துப் பேர் அடங்கிய உயர் பீடத்தை அமைத்து ஐ.நா.வின் மேற்பார்வையின் கீழ் தீர்வினைக் காண முன்வர வேண்டும்.

தமிழர் விவகாரம் குறித்துப் பேசினால் அது இனவாதமாகவும் தனி நாட்டுக் கோரிக்கையாகவும் தென்னிலங்கை பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், தமிழர் தரப்பில் ஒரு பகுதியினரும் தமிழர் விவகாரம் குறித்துப் பேசுவதானது தமிழ்த் தலைமைகளைப் பலவீனப் படுத்துவதாகவும், கூட்டமைப்பை சிதைப்பதாகவும் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

உண்மையில் தமிழர் விவகாரம் குறித்துப் பேசுவது தமிழ்த் தலைமைகளுக்கு எதிரானதோ அல்லது கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்காகவோ அல்ல. தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு ஆயுதக் கலாச்சார சிந்தனை உருவாகி விடக் கூடாது. அதற்கு வழிசமைத்து விடக் கூடாது என்ற எதிர்பார்ப்பிலாகும். இதற்கும் அப்பால் தென்னிலங்கை அரசியல் சக்திகள் விரித்துவைத்துள்ள வலைக்குள் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் மீண்டும் வீழ்த்தப்படக் கூடாது என்ற எதிர்பார்ப்பிலுமே கருத்துகள் தமிழ் மக்களிடம் இருந்து வெளி வருகின்றன.

தமிழ்த் தலைமைகள் விட்ட தவறுகளினால் தான் 1978-1982 காலப் பகுதியில் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தப் புறப்பட்டனர். பிறகு 1983 இனக் கலவரத்தையடுத்து இந்தியாவுக்குச் சென்ற தமிழ்த் தலைமைகள் 1990 வரை செய்த அரசியல் ஆயுத சிந்தனையை மேலோங்கச் செய்தது. இவ்வாறான ஒரு நிலை மீண்டும் உருவாகி விடக் கூடாது என்று சிந்திப்பது தவறா? கூட்டமைப்புக்கு வாக்களிக்கலாம்.ஆனால், வாக்களித்தவர்கள் கருத்துக் கூறக் கூடாது என்பதெல்லாம் எந்தளவுக்குச் சரியென்பது தெரியவில்லை.

வி.தேவராஜ்

http://akkinikkunchu.com/new/

399495_353274834698903_100000491695282_1550496_284109961_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.